காதல் நூலிழை_என் பார்வையில்.......

Advertisement

Joher

Well-Known Member
இந்த கதையை படிச்சிட்டு நான் சந்தித்த கேட்ட அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. பெரும்பாலும் பெண்கள் இப்படி பட்ட திருமண வாழ்க்கை தான் வாழறாங்க. வன்கொடுமை னால் அடிச்சு physical abuse தான் என்று அரத்தம் இல்லை. இதுவும் வன்கொடுமை தான். எனக்கு தெரிஞ்சு ஒரு பெண் இந்த நிலையில் தூங்காமல் ஆறு மாதங்கள் இருந்தா. அதனால் தான் பெண்கள் சுபமான முடிவு அன்பான ஹீரோ இருக்கும் கதையை தேடி படிக்கிறாங்க. கொஞ்ச நேரம் கனவுலக வாழ்க்கை. அருமையான கதை கார்த்திகா

Mental torture கூட physical abuse விட மோசமாதான் இருக்கும்.....

எங்க ஊரில் இப்போ நிறைய கேஸ் இந்த மாதிரி....... அதுவும் சின்னவயசு பொண்ணுங்க கையில் பிள்ளைகளோடு பார்க்கிறப்போ இவங்க எதுக்கு பையனுக்கு கல்யாணம் பண்ணிவைக்குறாங்கனு தோணும்.......
கல்யாணம் பண்ணி 1 மாசத்தில் விட்ட கேஸ் கூட இருக்கு.....
 

jeevaranjani

Well-Known Member
ரொம்ப பாதிச்சிடுச்சு...இவங்களோட மத்த கதைகள்ல எல்லாமே காதல் அழகாவும் இனிமையாவும் சந்தோஷமாவும் இருக்கும்..

அப்டி தான் இதையும் எடுத்தேன்.தாயம்மா வீட்ல சிந்து இருக்கும்போது இவ ஏன் இவ்ளோ பொறுமையா போறா சித்தார்த் லூசு தாயம்மா டிசைனே இதுதானா னு லாம் நிறைய தோனுச்சு...

ரொம்ப இரிடேட் ஆச்சு எல்லாக் கேரக்டரும்....(சித்தார்த் தாயம்மா சுந்தரம்)
தலைப்பை பாத்துட்டு அந்த நூலிழை அறுந்திடுமா இல்ல ஸ்ட்ராங் ஆகுமா னு பாக்க தான் இடைல விடாம படிச்சேன்....கடைசில அந்த நூலிழைக் கூட சித்தார்த்கு வேஸ்ட் னு தோனிடுச்சு...

ஆனாகடைசி எப்பிஸோட்லாம் ரத்தக்கண்ணீர் தான்.....உண்மை கதை னு சொன்னதும் அந்த சிந்துக்காக இறைவன்கிட்ட வேண்ட தான் தோனுது.....
 

fathima.ar

Well-Known Member
My review:

Thank you for this wonderful comment... Niraiya perukku intha kathai santhosaththai kodukkalai enbathu enakku theriyum... Unmai kathai enbathal mattume ithai ezuthinen... Yaravathu ithai padichittu manasu kasta patturuntha nan avanga kita mannippu kettukuren.... Intha kathaila nan panna periya mistake intha kathaiyoda thalaippu... Kaathale illatha idaththil kaathalukku enna velai....



Intha kathaiyil ullavai vaarththaigal alla... Oru pennin valigal... Intha kathai live shownnu kooda sollalam... Ithil varum kathaa paathirangal vaazkaiyil nalla maatram iruntha nan solren friends....

Niraya per sinthu pesurathu romba harsa irukkunnu sonnanga... Yaarume intha ulagathula thappanavanga illai.. Santharpam than avangalai maaththuthu... Sinthu kobaththin velipadu than antha varththaigal.. Ava pesurathu sarinnu nan solla varala.. Kandipa thappu than... Chinna vayasula irunthu ellarukkum mariyathai koduththa ponnu marirukkannaa yaru karanam....



Thank you for your support friends.. Ini ipadi soga kathai ezutha maten... Ennaiye intha kathai aza vachchiruchchu.....

Naanum padichennnn marriage ku apram two episodes kooda padikka mudila..

May be யதார்த்தை மீறுன கனவு கதைகள் தான் எங்களோட நிஜ வாழ்க்கையை கடக்க வைக்குது..
இவ்வளவு உண்மை ரொம்ப சுடுதே..
முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சும் லாஸ்ட் எபிசோட் முழுசா படிக்கலை..
லாஸ்ட் பார்ட் மட்டும் படிச்சேன்..
 

Daya

Well-Known Member
முகத்திரைக்கு முன்னும் பின்னும் முரணான மனிதர்கள் வாழும் உலகமிது. சித்தார்த்தையோ, மாரியம்மாவையோ, சுந்தரத்தையோ மாற்ற நினைப்பதை விட்டு சிந்து தன்னை ஸ்திரப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். படித்த படிப்புக்குத் தான் வேலை பார்ப்பேன் என்று இல்லாமல் அதுக்கு சற்று குறைவான வேலை என்றாலும் செய்யலாம். அப்படி செய்யும் பொழுது சிந்துவின் மனத் தைரியம் கூடும்.மற்றவரைச் சார்ந்து வாழ தேவை இல்லையெனும் நிலை வந்தால் துணிந்து நிற்கலாம். நான் சிந்துவை உறவுகளை முறிக்க சொல்லவில்லை, நிமிர்ந்து நிற்கவே சொல்லுகின்றேன்.
 

Joher

Well-Known Member
முகத்திரைக்கு முன்னும் பின்னும் முரணான மனிதர்கள் வாழும் உலகமிது. சித்தார்த்தையோ, மாரியம்மாவையோ, சுந்தரத்தையோ மாற்ற நினைப்பதை விட்டு சிந்து தன்னை ஸ்திரப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். படித்த படிப்புக்குத் தான் வேலை பார்ப்பேன் என்று இல்லாமல் அதுக்கு சற்று குறைவான வேலை என்றாலும் செய்யலாம். அப்படி செய்யும் பொழுது சிந்துவின் மனத் தைரியம் கூடும்.மற்றவரைச் சார்ந்து வாழ தேவை இல்லையெனும் நிலை வந்தால் துணிந்து நிற்கலாம். நான் சிந்துவை உறவுகளை முறிக்க சொல்லவில்லை, நிமிர்ந்து நிற்கவே சொல்லுகின்றேன்.

எஸ்......... பெண்களுக்கு தேவையான ஒன்று.....
ஆண்களுக்கும் மனைவியின் முக்கியத்துவத்தை உணர்த்தனும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top