காதல் அணுக்கள் -21 (Last Episode)

Advertisement

Kalki

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Successful ah oru story eluthi mudichutane. Intha kadaiyai porumaiyai wait panni paditha anaivarukum enathu manamarntha Nandri. oru Novel eluthuvathu one of my bucket list athai naan successful ah niraivetha karanama intha thalathil enaku Story Thread amaithu kodutha Mallika mam ku My Heart felt Thanks. Thina sari velaikaluku naduvil oru kathai eluthave enaku romba tuff ah irunthathu inga niraiya writers ore time niraiya kadahaigal eluthuranga innum silar continuous ah epi kudukuranga avangaluku ellam Hats off. Oru nalla decent ana story ungaluku koduthatha niraikurane. Antha magilchiyoda ungalidam irunthu vidai perukirane.

Thanks
Kalpana Hariprasad





காதல் அணுக்கள் -21

வீடே கோலாகலமாக இருந்தது. விஷயம் கேள்வி பட்டு பாலாஜி சந்தியா ஸ்ரீராம் என்று மாற்றி மாற்றி அழைத்தனர். சாரதாவும் சித்ராவும் பேசி 3 மாதம் முடிந்த பின் மற்ற உறவுக்கெல்லாம் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தனர். சுபி அருணுக்கு மட்டும் சொல்லியே ஆகவேண்டும் என்று அழைத்து கூறினாள். விஷயம் கேள்வி பட்டவனோ சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். ஹே மச்சி காங்கிராட்ஸ் . நம்ம கேங்கில் சேரத்துக்கு ஒரு நியூ என்ட்ரி வரப்போறாங்கனு சொல்லு .
அதே அதே . பையன் பொறந்தா உனக்கு போட்டியா மாமி பொண்ண சைட் அடிக்க அனுப்பபோறேன் பாரு என்று வம்பிழுத்து கொண்டிருந்தாள்.

அவளை பத்தி பேசாத மச்சி செம காண்டாவுது .
ஏன் என்னாச்சு ?
நான் சாயந்திரம் வீட்டுக்கு வரும் போது டீடைலா சொல்றேன்.
சரி சரி டென்ஷன் ஆகாத . எனக்கு பொண்ணு பொறந்தா உனக்கே கட்டிவெச்சுறேன். நான் பாத்து உனக்கு பொண்ணு குடுத்த தான் உண்டு .
ஹ்ம்ம் போறபோக்க பாத்த அது தான் நடக்கும் போல என்றான் அருண் .

இவர்கள் உரையாடையாளை சின்ன சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த சந்தீப் "ஹே உங்க இரண்டு பேத்துக்கும் என் பொண்ண பாத்த எப்படி இருக்கு ? கேட்க ஆளில்லைனு நினைச்சீங்களா ? என்றான் வேண்டும் என்றே .
வாங்க பாஸ் நல்லவரே . உங்க பையன எனக்கு போட்டியா சைட் அடிக்க அனுப்புறேன் சொன்னப்ப எல்லாம் அமைதியா இருந்துட்டு இப்போ உங்க பொண்ண பத்தி பேசும் போது மட்டும் விரிஞ்சு கட்டிட்டு வரீங்க ? உங்க பொண்ணுக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும் . இப்படியே கொஞ்ச நேரம் மாத்தி மாத்தி வம்பிழுத்து கொண்டிருந்தனர்.

பின் சுபியும் சந்தீப்பும் தங்கள் மகவை பற்றிய கற்பனையில் ஆழ்த்திருந்தனர். எனக்கு எந்த குழந்தைனாலும் ஓகே ஆனா அவங்க அப்பா மாதிரி பொறுமையா பொறுப்பா இருக்கனும் என்றால் சுபி . அதெல்லாம் இல்ல நல்ல சுட்டியா குறும்பா உன்னை டென்ஷன் பண்ணிட்டே இருக்கனும் அப்போ தான் ஜாலியா இருக்கும் என்றான் நமட்டு சிரிப்புடன் . அவன் எதிர்பார்த்தது போலவே மனையாள் பொங்கியெழுந்தாள் ஆனால் அதை அணைக்கும் வித்தை கற்றவன் ஆயிற்றே செவ்வனே அதை செய்தும் முடித்தான் . உங்கள வெச்சுட்டு ஒரு கோவம் கூட படமுடியலே என்று வெட்கத்துடன் அலுத்து கொண்டாள் .

சந்தீப் எத்தனை வேலையாக இருந்தாலும் அவளை ஆஃபீஸிற்கு தினமும் பிக் அப் ட்ரோப் செய்து உணவு இடைவேளையின் பொழுது மறக்காமல் கால் செய்து ஒரு காதல் கணவனாக நடந்து கொண்டான் .

இதற்கிடையில் சந்தீப் வீட்டில் பேசி தன் தம்பி ஸ்ரீராமின் காதலுக்கு பெற்றோரிடம் சம்மதம் வாங்கினான் . சுபிக்கு 5 மாதம் முடிந்தவுடன் கல்யாணம் திருப்பதியில் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர் . சந்தீப் தான் சுபியை செகண்ட் ஹனிமூன் போலாமா திருப்பதிக்கு என்று கடுப்பேத்திக்கொண்டிருந்தான் . நானும் இந்த மாதிரி நேரத்துலே சாந்தமா இருக்கணும்னு பாக்குறேன் பேசாம போங்க என்று விரட்டிக்கொண்டிருந்தாள் .


சுபியும் சந்தீப்பும் தங்கள் குழந்தையின் அசைவை 5 மாதம் முதல் ரசித்து வந்தனர் . அதிலும் சந்தீப்பின் குரல் கேட்டால் வயிற்றுக்குள்ளே ஒரு நாட்டிய அரங்கேற்றமே நடத்திவிடும் குழந்தை . பார்ரா இப்போவே அப்பா செல்லமா இருக்கு என்று சுபி தான் முறிக்கிக்கொள்வாள் . நாட்கள் அதன் போக்கில் உருண்டன. ஸ்ரீராமிற்கு முடிவு செய்தபடி திருப்பதியில் திருமணம் முடிந்து மணமக்கள் பெங்களூர் சென்று தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக தொடங்கினர்.

சுபிக்கு ஏழாம் மாதம் சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடந்து எதிர் வீடான தன் வீட்டிற்கு சென்றாள் . இதற்கே தன் கணவனை ஏக்கமாக பார்த்து கொண்டே இருந்தாள். இருவரும் பகலில் தங்கள் வேலையில் பிஸியாக இருப்பதால் இரவு தான் மனம் விட்டுப்பேச சந்தர்ப்பம் அமையும் . அதனாலே இந்த ஏக்கம் .


சந்தீப்பும் முடிந்த வரை அவளுடன் நேரம் செலவளித்தான். அருணும் அடிக்கடி பிள்ளைத்தாச்சி நண்பிக்கு வகை வகையாக சமைத்து கொடுத்தான். அப்பொழுது மாமியின் மகள் ரேணு இவனையே முறைத்த வண்ணம் சுபியின் அருகில் வந்து அமர்ந்தாள் . அருண் சுபியிடம் இவ எதுக்கு இங்க வந்துருக்கா ? நான் தான் வரச்சொன்னேன். கேள்வியாக பார்த்தவனிடம் நீயும் வாயத்தொறந்து உன் மனசுல இருக்குறத சொல்லமாட்டே பின்ன அவளுக்கு எப்படி தெரியும் .

அதெல்லாம் அவளுக்கு நல்லாவே தெரியும் . அவங்க வீட்லே மாப்பிள்ளை பாக்குறாங்கனு கேள்வி பட்டப்போ எனக்கு எப்படி இருந்துருக்கும் . இவ பாட்டுக்கு எனக்கென்னன்னு இருக்கா என்று பொரிந்து தள்ளினான்.
உங்களுக்கு தெரியுமா நான் எதுவும் செய்யலன்னு இல்ல நீங்க தான் சொன்னேலா என்கிட்ட என்னை புடிச்சிருக்குனு ? நீங்க எதுவுமே பண்ணமாட்டேள் சொல்லமாட்டேள் உங்களுக்காக நான் தான் வீட்டுலே தினமும் திட்டும் அடியும் வாங்கிண்டருக்கேன். போங்கோனா உங்களுக்கு என் மேல அன்பே இல்ல என்று கண்ணீர் வடிக்க ஆரமித்து விட்டாள் .


இதற்கு மேல் அன்பு கொண்ட நெஞ்சம் தாங்குமா அருண் அவள் அருகில் அமர்ந்து அவள் கண்ணீரை துடைத்து விட்டு ஹே பட்டு மாமி ஏண்டி அழுகுறே, விடு பார்த்துக்கலாம் . என்னை மீறி உன்னை யாராவது கல்யாணம் பண்ண விற்றுவேனா ? நீ என் ரசகுல்லா டி என்று கொஞ்ச ஆரம்பித்தான். அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல் ஹுக்கும் நானும் இங்க தான் இருக்கேன் என்றால் சுபி . நீ இன்னும் போகலையா என்றான் அருண். அவனை முறைத்து விட்டு ரேணுவிடம் என் பிரெண்ட் அப்டிங்கிறதுக்காக சொல்லலே உண்மையிலே அருண் கிடைக்க நீ ரொம்ப லக்கி . அவன் உன்மேல ரொம்ப பிரியம் வெச்சுருக்கான் ஆன என்ன ப்ரொபேர் ஆஹ் எக்ஸ்பிரஸ் பண்ண தான் வராது . போன வாரம் கூட புதுசா ஒரு ஸ்வீட் செஞ்சு கொண்டுவந்தான் அதுக்கு ரேணு னு தான் பேருவெச்சான். அதை கேட்டதும் ரேணுவிற்கு வெட்கமாகவும் சந்தோசமாகவும் இருந்தது . ஏன்னா உங்களுக்கு என்னை அவ்வளவு புடிக்குமா என்று ஆசையாக கேட்டாள் . புடிக்கும் ஆன போனவாரம் உன் பேருவெச்சதுக்கு ரீசனே வேற நான் நினைச்ச அளவுக்கு வராம அந்த ரெசிப்பி என்னை ரொம்ப கடுப்பேத்திடுச்சு அப்போ நீ வேற என்னை கண்டுக்காம கடுப்பேத்துணியா அது தான் உன் பேரு வெச்சேன் என்றான் . சுபியோ தலையில் அடித்து கொண்டு நீ தேறாத கேசு டா என்று நினைத்து கொண்டு ரேணு இதெல்லாம் ஆரம்பத்துலேயே சரி பண்ணிடனும் வளர விடக்கூடாது அவனுக்கு நல்லா மண்டையில் ஒரைக்குறே மாதிரி அடிச்சு சொல்லு நான் போய் உனக்கு காபி எடுத்துட்டு வரேன் என்று சென்று விட்டாள் . துரோகி கோத்து விட்டுட்டா போற உன்னை அப்புறம் கவனிச்சுக்குறேன் என்று புலம்பிக்கொண்டிருந்தான் .

பின் சந்தீப் மற்றும் சித்ராவின் உதவியுடன் அருண் மற்றும் ரேணு வீட்டில் பேசி சமாதானம் படுத்தி திருமண நாளையும் குறித்தனர் . இப்படி எல்லோர் வாழ்வும் மகிழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தது . சுபிக்கு 9 மாதம் முடிவடைந்து 10 நாட்கள் சென்று சுபிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது . குடும்பமே மஹாலக்ஷ்மி பிறந்து விட்டாள் என்று கொண்டாடி மகிழ்ந்தது. சுபியும் சந்தீப்பும் மகிச்சியின் உச்சத்தில் இருந்தனர் .

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு


கிரேடில் என்னும் குழந்தைகள் இல்லதின் முன்பு சுபியும் சந்தீப்பும் தங்கள் 5 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் அமர்ந்திருந்தனர் . இவர்களுடன் பாலாஜி சந்தியா தம்பதியினர் தங்கள் 3 வயது மகனுடனும் ஸ்ரீராம் தம்பதியினர் தங்கள் 4 வயது மகளுடனும் காத்திருந்தனர் . சந்தீப் தன் அருகில் இருந்த மனைவியுடன் 1 மாதத்திற்கு முன்பு நடந்த உரையாடலை நினைத்து கொண்டிருந்தான். அவன் தன் திட்டப்படி 3 வது குழந்தை வேண்டும் என்று சுபியுடன் அடம்பிடித்துக்கொண்டிருந்தான் . அப்பொழுது சுபி "உங்களுக்கு என்ன 3வது பெண் குழந்தை வேணும் அதுக்கு தானே இந்த அடம் . அப்படியே பொறந்தாலும் அது பெண் குழந்தை தான் பிறக்கும்னு என்ன நிச்சயம் . நம்ம நாட்டுலே எத்தனையோ பெண் குழந்தைகள் நிராகரிப்பட்டு பாதுகாப்பில்லாமல் இருகாங்க . வீ ஆர் பைனான்சியல்லி சவுண்ட் டு மேனேஜ் 3 கிட்ஸ் சோ நாம ஏன் ஒரு குழந்தையை தத்தெடுத்து ஒரு நல்ல எதிர்காலம் கொடுக்கக்கூடாது ?

இதெல்லாம் ப்ராக்டிகலா ஒத்து வருமா சுபி . எல்லாரும் அந்த குழந்தையை வேற மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க . ஏன் நம்ம பெரெண்ட்ஸே நம்ம குழந்தையை ட்ரீட் பண்ணுற மாதிரி அந்த குழந்தையை பண்ணுவாங்களா ? அந்த குழந்தை மனச காயப்படுத்துற மாதிரி எதுவும் நடந்திட்டா அந்த கில்டெ நம்மளை ஒரு வழி பண்ணிரும் . வேணும்னா அந்த குழந்தைகளுக்கு படிக்க ஹெல்ப் பண்ணலாம் .

கண்டிப்பா ஹெல்ப் பண்ணலாம் பட் அது தனி . என்ன தான் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு குடும்ப அமைப்பும் பாதுகாப்பும் கிடைக்குறது பெரிய விஷயம் தானே . முதல்ல உங்களுக்கு ஓகே வா னு சொல்லுங்க.

தன் மனைவியின் பேச்சில் இருந்த தெளிவும் உண்மையும் அவனுக்கு விளங்கவே செய்தது . நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமைகளிலிருந்து தங்களால் ஒரு குழந்தையை காக்க முடியும் என்றால் ஏன் செய்யக்கூடாது என்றே தோன்றியது . இதை தனக்கு உணர்த்திய மனைவியின் மீது மரியாதை கூடியது . அம்மா ஆயிட்டாலே இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் பொறுப்பு வந்துருது என்று அவள் தலையை செல்லமாக ஆட்டினான் . பின் பாலாஜி ,சந்தியா மற்றும் ஸ்ரீராமின் உதவியுடன் தங்கள் பெற்றோரை சம்மதிக்க வைத்தனர் . எந்த காரணம் கொண்டும் அந்த குழந்தையிடம் வேறுபாட்டை காட்டவேண்டாம் என்று மிகவும் வலியுறுத்தினர். பின்பு நண்பன் ஒருவன் மூலம் அவர்களுக்கு இந்த கிரேடில் அமைப்பில் குழந்தைகள் இருப்பதாக செய்தி வந்து அணைத்து பார்மாலிட்டீசும் முடித்து இன்று தத்தெடுக்கவும் வந்துவிட்டனர் .

Mr அண்ட் Mrs சந்தீப் என்று பெயர் அழைக்க படவும் சந்தீப் அவன் நினைவுகளில் இருந்து வெளிவந்து அனைவரையும் அழைத்து சென்றான் . நீங்க 1 வயசுக்குள்ள பெண் வேணும்னு கேட்டிங்க தானே அங்கு 3 குழந்தைகள் இருகாங்க பாருங்க என்றனர் .
சுபியும் சந்தீப்பும் குழந்தையை தேர்வு செய்யும் பொறுப்பை தங்கள் பிள்ளைகளிடம் அளித்தனர் அப்பொழுது தான் அவர்களுக்கும் அந்த குழந்தையின் மீது பிடிப்பும் பாசமும் வரும் என்று . சுபி வீட்டில் இருந்து வரும் பொழுதே அவர்களுக்கு சொல்லித்தான் அழைத்து வந்திருந்தாள் ரெண்டு பேரும் ஒரே குழந்தையை தான் சூஸ் பண்ணனும் அங்க வந்து சண்டை போட்டுக்கிட்டிங்க அப்புறம் குட்டி பாப்பாவை வீட்டுக்கு குடுக்க மாட்டாங்க என்று . அதனால் இருவரும் சண்டை போடாமல் மூன்று குழந்தைகளையும் அருகில் சென்று பார்த்தனர் . அதில் ஒரு குழந்தை அந்த மாய கண்ணனை போல் மயக்கும் புன்னகை ஒன்றை அவர்களை பார்த்து தன் பொக்கைவாய் காட்டி சிரித்தது . அது இருவருக்கும் பிடித்து போக அவளையே தங்கள் இளைய சகோதிரியாக தேர்வு செய்தனர் .

அனைவருக்கும் அந்த குழந்தையை மிகவும் பிடித்து போக அவளையே அவர்கள் வீட்டின் இளவரசியாக அழைத்து வந்தனர் . அன்று வீடே கோலாகலமாக இருந்தது . குழந்தைகள் எல்லாம் நானு நானு என்று போட்டி போட்டு கொண்டு மடியில் வைத்து கொண்டனர் . சந்தீப்பின் பெற்றோர் குழந்தையை பார்த்தவுடன் சின்ன வயசில் நம்ம சந்தியாவை பார்த்த மாதிரியே இருக்கு என்று ஆசையாக அள்ளி கொண்டனர் .

சித்ரா மற்ற பேரக்குழந்தைகளுக்கு சீர் செய்தது போலவே இந்த குழந்தைக்கும் செய்து அரவணைத்து கொண்டார் . அருண் தனது மனைவி ரேணு மற்றும் மகனுடன் வந்து குழந்தையை பார்த்து விட்டு சுபியிடம் எப்படியோ என் மருமகளை கொண்டுவந்துட்டே என்றான் . அதை கேட்ட பாலாஜி ஹலோ பாஸ் குழந்தை என்னோட வைப் மாதிரி இருக்குனு எல்லோரும் சொல்லிட்டாங்க அதனாலே பெரிய சந்தியா சின்ன சந்தியா ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு தான் சொந்தம் . என் பையனுக்கு நான் ஆல்ரெடி ரிசெர்வ் பண்ணிட்டேன் என்று வம்பு செய்து கொண்டிருந்தான் . அடடா போறபோக்க பார்த்த என் பேத்திக்கு சுயம்வரம் தான் நடத்தணும் போலிருக்கே என்று சாரதா குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தார் . தங்கள் குடும்பம் குழந்தையை அன்போடு அரவணைத்ததை கண்டு சுபியும் சந்தீப்பும் மனமகிவுடன் ரசித்து இருந்தனர் . இன்று போலே என்றும் இந்த குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்தி விடை பெறுவோம் .

-நன்றி
கல்பனா ஹரிபிரசாத் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top