காதலில் உள்ளங்கள் கரைந்ததே - 7

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Thank u for your comments friends and i come with next update read this update also tell your wonderful comments to me it helpful for improve myself friends


உள்ளம் – 7

அம்மு, அர்ஜுன் இரண்டு பேருக்கும் விசியம் தெரியுமா கேட்ட படி உள்ளே வந்தார் ராஜன்

அர்ஜுன் “என்ன அங்கிள் விசியம்”

ரவிக்கு இருதயவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

அர்ஜுன் “ நானும் ஒரு மருத்துவராக இருந்து இதை சொல்வது தவறு இருந்தாலும் மனது என்ற ஒன்று உள்ளது தானே அதை கொண்டு சொல்கிறேன் நம்முடைய முதல் அடிக்கே மருத்துவமனை வரை சென்றுவிட்டாரா. அடுத்து என்ன செய்ய போகிறோம் அம்மு”

இப்பொழுது செய்தி வந்தது அங்கிள் அடுத்து என்ன செய்வது என்றே யோசித்து கொண்டிருக்கிறேன்.

அம்மு இன்னும் ஒரு செய்தி உள்ளது அது உனக்கு உதவாது இருந்தாலும் சொல்கிறேன் ரவி அவருடைய மகள் வர்சநந்தினிக்கும்- அபைசரண்க்கும் இன்னும் பத்து நாட்களில் திருமணம் செய்ய போவதாக தெரிகிறது

அர்ஜுன் “அம்மு இது உனக்கு தெரியுமா”

இல்லை அச்சு இதை பற்றி நமக்கு அங்கு நடப்பதை தெரிவிப்பவர் சொல்லவில்லை. அங்கிள் இந்த செய்தி உண்மை தானே

இது உண்மை. ரவி மருத்துவமனையில் இருந்து வந்ததும் அனைவருக்கும் அறிவிக்க போவதாக தெரிகிறது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.இன்னும் இரண்டு நாட்களில் நிச்சியம். ஆனால் இந்த தகவல் உனக்கு பயன்படாது

அங்கிள் நீங்கள் எவ்வளவு முக்கியமான விசியத்தை சொல்லி இருக்கீங்க. அவரின் செல்ல மகள் திருமணம் எப்படி நடைபெறுகிறது என பாருங்கள்

அச்சு “அம்மு என்ன செய்யலாம் என இருக்கிறாய்”

அம்மு தனது திட்டத்தை விவரிக்க.அதை முழுவதும் கேட்ட அர்ஜுன், ராஜன் இருவரும் வேண்டாம் அம்மு நாம் வேற ஏதாவது செய்யலாம் நான் இதற்க்கு ஒரு போதும் ஒத்து கொள்ளமாட்டேன். அம்மாவிடம் என்ன பதில் சொல்வேன். அவர் இங்கு நாம் செல்கிறோம் என சொன்ன போதே என்னை அழைத்து அம்மு முழுக்க முழுக்க உன்னுடைய பொறுப்பு என கூறினார்

ஆமாம் அம்மு எனக்கும் இது சரியாக படவில்லை. இந்த பேச்சை இதோடு விடு இதை செயல் படுத்தும் எண்ணம் கொள்ளாதே என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்

அம்மு கோவமாக அறைக்கு சென்று கதவை அடைத்து கொள்ளவும் அவளை சமாதானம் செய்ய அர்ஜுன் முயன்றான்.

அம்மு,அம்மு கதவை திற மா ரொம்ப நேரம் கூப்பிட்டதும் கதைவை திறந்தவள் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள் அவளை தொடர்ந்து அர்ஜுனும் உள்ளே சென்றவன். அம்மு நீ செய்வது உனக்கே சரி என படுகிறதா. இவ்வாறு செய்து மட்டும் அவங்களை விழ்த்த முடியுமா நம்மிடம் என்ன இல்லை. நீ நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அவர்களை ஒன்றும் இல்லாமல் தெருவில் நிறுத்த முடியும். அதை விட்டு நீ ஏன் இவ்வாறு செய்ய முடிவெடுத்து உள்ளாய்.

அச்சு நீ சொல்வது போல் என்னால் செய்ய இயலும் ஆனால் அப்படி செய்தால் அவர்களை பொருளாதார அளவில் மட்டுமே கீழ் இறக்க முடியும். அம்மா அந்த வீட்டில் உள்ளவர்களால் நிறைய துன்பங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தவர். அவர் பட்டதில் சிறிது கூட இவர்கள் அனுபவிக்க வேண்டாம், அதனலே நான் நன்றாக யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன் அதோடு இந்த முடிவை எடுக்க இன்னும் ஒரு முக்கிய காரணம் உள்ளது அதை நேரம் வரும்போது நானே சொல்கிறேன் அதுவரை இது குறித்து கேட்காதே.

நீ என்ன சொன்னாலும் இதில் எனக்கு சம்மதம் இல்லை உனக்காக மட்டுமே இதற்க்கு சம்மதிக்கிறேன். ஏனென்றால் என்னுடைய அம்மு எதை செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்

அச்சு நாம் இனி செய்ய போவது அங்கிளுக்கு தெரிய வேண்டாம் அவருக்கு தெரிந்தால் ஏதாவது ஒரு வழியில் நம்மை தடுக்க பார்ப்பார்.

சரி அம்மு, நீயும் எதற்கும் உன்னுடைய இந்த முடிவு சரிதானா என்று யோசித்துகொள். இந்த ஒரு முடிவால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

___________________________________________________________________________________

அன்று ரவியின் இல்லமே விழாகோலம் பூண்டிருந்தது மாவிலை தோரணங்கள் அலங்கார விளக்குகள், சரசரக்கும் பட்டுபுடவையில் விருந்தினர் வரவு என அந்த மாளிகையே அல்லோல பட்டு கொண்டிருந்தது. அதற்கு காரணம் ரவி மருத்துவமனையில் இருந்து வந்ததும் வர்ஷா-அபையின் நிச்சியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இன்றே நிச்சியம் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்

அந்த மாளிகையே பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க விழாவின் நாயகனோ தனது அறையில் இந்த வித பரபரப்பும் இன்றி அமைதியா காணப்பட்டான். அவனின் முகத்தில் திருமணத்திகான பொலிவும் இல்லை அவனுக்கு இன்று நிச்சயாமா என்று கேட்கும் அளவில் இருந்தது அவனின் செயல்கள்.

அபை அவ்வாறு இருக்க வர்ஷா தனது அறையில் தாயின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள். லக்ஷ்மி எவ்வளோவோ சமாதானம் சொன்னாலும் அவளின் அழுகை நின்றபாடில்லை அப்போது அங்கே வந்த யாதவ் “அத்தை எதற்கு வர்ஷா அழுகிறாள்”

அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அபையோடு திருமணம் வேண்டாம் என்கிறாள்.

அத்தை நீங்கள் கொஞ்ச நேரம் வெளியே வந்தவர்களை கவனிகள் நான் இவளிடம் பேசுகிறேன்.

லஷ்மி தயங்கி நிற்கவும் செல்லுங்கள் அத்தை நான் பார்த்து கொள்கிறேன் என்றான். அவர் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் வர்ஷா நிமிர்ந்து என்னை பார், அவள் நிமிராமல் இருக்கவும் திரும்பவும் வர்ஷா என்னை பார் என சொன்னேன் அழுத்தி வார்த்தையை உச்சரிக்கவும் நிமிர்ந்து யாதவை நோக்கினாள்.

உனக்கு ஏன் அண்ணாவை மணந்து கொள்ள விருப்பம் இல்லை அண்ணன் அன்றும் கேட்டவர் இல்லையே, என்ன சிறிது கோவம் வரும் அவ்வளவே இதற்காக மட்டுமே நீ விருப்பம் இல்லை என்று சொன்னாள் உன்னை யாரும் விட போவது இல்லை. நான் கண்டிப்பாக சொல்வேன் அண்ணன் உன்னை நன்றாக பார்த்து கொள்வர்

நான் அத்தானை நினைத்து பயம் கொள்ளவில்லை அவருக்கு கோவம் வரும் ஆனால் அந்த கோவத்தில் ஒரு நியாயம் இருக்கும். அதற்காக மட்டும் இந்த திருமணத்தை வேண்டாம் என மறுக்க வில்லை மனதில் ஒருவரை வைத்து கொண்டு எப்படி அத்தானை மணந்து கொள்வது ஒரு வேகத்தில் மனதில் இருந்தது அனைத்தையும் யாதவிடம் கொட்டிவிட்டாள் அதன் பிறகு அவன் அப்பாவிடம் இல்லை வேறு யாரிடமாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்துடன் அவனை பார்க்க அவனோ இவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்தான்

பின் தன்னை தானே சமாளித்து அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த யாதவ் “வர்ஷா நீ சொல்வது உண்மையா” அவள் தலையை குனிந்து கொள்ளவும் உண்மை உணர்ந்து யாரை விரும்புகிறாய் எனக்கு தெரிந்து நீ அதிகமாக வெளியில் சென்றது இல்லை பின் எப்படி காதல்? அவர் யார் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார்

அவர் ஒரு மருத்துவர் அவரை ஸ்.A என்று கூபிடுவார்கள் அவரின் முழு பெயர் எனக்கு தெரியாது

யாதவ் “என்ன தெரியாதா நீ அவரை எங்கு சந்தித்தாய்”

நான் அவரை இரண்டே இரண்டு முறை மட்டுமே பார்த்துள்ளேன். அவரை பார்த்த உடனே என்னுளே இவர்தான் உனக்கானவர் என்று மனம் கூறியது

நீ என்ன பைத்தியம்மா வர்ஷா யார் என்றே தெரியாது வெறும் இரண்டு முறை மட்டுமே பார்த்து உள்ளாய் அவரை நினைத்து திருமணம் வேண்டாம் என்கிறாய்

என்னுடைய காதல் உண்மை என்றால் நிச்சியம் அந்த கடவுள் என்னை அவருடன் சேர்த்து வைப்பர், நீ எனக்கு இந்த திருமணத்தை நிறுத்த மட்டும் உதவி செய் கெஞ்சு கேட்க யாதவினால் ஒரு முடிவற்கு வர இயலவில்லை பின் மனதை ஒருமுக படுத்திவிட்டு “வர்ஷா ஒருவரை காதலிக்கிறேன் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை அதோடு நான் இந்த திருமணத்தை நிறுத்த போவது இல்லை நீயே சொல்றாயே உன்னுடைய காதல் உண்மை என்னும் போது கடவுள் சேர்த்து வைப்பார் என்று அதையே நானும் நம்புகிறேன்

உனக்கு வித்தித்தவர் அண்ணாவோ இல்லை உன்னுடைய காதலனா என கடவுளே முடிவெடுக்கட்டும். அப்பொழுது யோரோ வரும் அரவம் கேட்க கண்களை துடைத்து கொண்டாள் வர்ஷா, உள்ளே நுழைந்த தேவி யாதவை பார்த்து நீ இங்கே என்ன செய்கிறாய்

ஒரு பெருசாளி இங்க வரும் சொன்னாங்க அதை அடிக்க காத்திருக்கேன்

டேய் என்ன கொழுப்பா

ஆமா நீ தினமும் சமைத்து கொடுத்து நான் சாப்பிட்டேன் அதனால் கொழுப்பு ஏறிவிட்டது. நீ எதுக்கு இப்போ இங்க வந்த

வர்ஷாவை கூட்டி வர சொன்னாங்க அதுக்காக வந்தேன்

அழைத்து போக வேண்டியது சும்மா என்னிடம் எதுக்கு வம்பு இழுக்கற

அவனை முறைத்து வர்ஷாவிடம் திரும்பினாள். வர்ஷா முகத்தை பார்த்து ஏன் உன்னுடைய முகம் ஒரு மாதிரி இருக்கு வினவ

வர்ஷா பதிலளிக்க தொடங்கும் முன் முந்திகொண்ட யாதவ் “அவ என்ன உன்ன மாதிரியா மேக்கப் போட்டு பேய் மாதிரி நிற்க உண்மையான முகம் அதனால் உனக்கு வித்தியாசமா தெரியுது

தேவி “உன்னை கேட்டேனா நீ எதுக்கு பதில் சொல்ற நான் அவளை தானே கேட்டேன்”

நீ இப்படியே பேசிட்டு இரு அம்மா வந்து திட்டட்டும் அப்புறம் வர்ஷாவை அழைத்து கொண்டு போ

உன்னிடம் எல்லாம் பேசினால் நான் எதுக்கு வந்தேன் என்பதையே மறந்துவிடுவேன். முதலில் வழியை விடு என வர்ஷாவையும் அழைத்து சென்றாள்

இங்கே இவ்வாறு இருக்க அறையில் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த அபையின் மொபைல் தன் இருப்பை உணர்த்த இசைத்தது. யார் இப்பொழுது போன் செய்கிறார்கள் யோதித்து கொண்டே அபை செல்லை பார்க்க ப்ரைவேடே நம்பர் என்று கட்ட அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா ஒருகணம் சிந்தித்த அபை பின் அழைப்பை ஏற்றான்

அழைப்பை ஏற்றதும் எதிர்புறம் ஒரு நிமிடம் அமைதி நிலவ கட்டாகி விட்டதோ பார்க்க இல்லை என்றவுடன் மீண்டும் காதில் வைத்தான். அந்த நிமிட அமைதிக்கு பின் என்ன டாக்டர்.அபைசரண் மாமாவை நல்ல படியாக காப்பாற்றிவிட்டோம் என்கிற நிம்மதியில் இருகீங்களா சிங்கமென ஒரு பெண்ணின் குரல் ஒலிக்க அந்த குரலை கேட்டு அதிர்ந்த அபை ஒன்றும் பேசாது அமைதி காக்க மறுபுறமோ அவனின் அமைதியை கண்டுகொள்ளது நீங்கள் நிம்மதியாகவே இருங்கள் ஆனால் உங்களுடைய மாமா ரவீந்தர் இனி நிம்மதி இன்றியே இருப்பார்

அவரே நிம்மதியாக இருக்க வேண்டும் என எண்ணினாலும் நான் நடக்க விடமாட்டேன். அதோடு இன்று ரவீந்தரின் மகளுக்கும் உங்களுக்கும் நிச்சியம் அல்லவா அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் கூறி அழைப்பு முடிந்தது

அபையோ யார் இந்த பெண் இவளின் குரலை கேட்கும்போதே ஒரு ராணியின் தோரனை தெரிகிறது இவளுக்கும் மாமாவிற்கும் என்ன பிரச்சனை யோசிக்க அவனை கீழே அழைப்பதாக யாதவ் கூற அவனுடன் சென்றான்

அதன் பின் அவனுக்கு சிந்திக்க நேரமில்லை.நிச்சிய சடங்குகள் நடைபெற வர்ஷா- அபை இருவருமே கடமையே என செய்ய ஒருவழியாக நிச்சியம் முடிவடைந்தது.

உள்ளம் கரையும்..........................
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்த சுமலா மூதேவியினால் விருப்பமில்லாத இரண்டு பேருக்கும் திருமண நிச்சயம் நடந்து விட்டது
இனி கல்யாணமும் நடந்து விடுமா?
தேவி யாதவ்வின் சகோதரிதானே
வர்ஷா விரும்புவது அர்ஜுன்தானே
அபை சரணை திருமணம் செய்ய
அபிதா முடிவு எடுத்திருக்கிறாளா?
இது நடக்குமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top