காதலில் உள்ளங்கள் கரைந்ததே - 6

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends' i come with next update and thanks for your comments on the previous update paa. i will waiting for your wonderful comments friends enjoy to read and tell your comments to me...................

உள்ளம் – 6

அம்மு “ நீ என்ன பிளான் வைத்திருக்க நாம சென்னை வந்து ஒரு மாதம் ஆக போகுது நான் ஏதாவது செய்யலாம் என்றால் கூட நான் சொல்றேன் என்று சொல்கிறாய். வந்ததில் இருந்து பிஸ்னஸ் மட்டுமே பார்த்து கொண்டு இருக்க இதில் என்னை வேற புதிதாக மருத்துவமனை கட்ட இடம் பார்க்க சொல்ற என்னதான் நினைக்கிறாய்”

அச்சு எதுக்கு இப்ப போவ படர முதலில் இங்க வந்து உட்காரு இந்த ஜூசை குடி நான் சொல்றேன் என்ன செய்ய வேண்டும் என்று. அச்சு இதை பாரு

அம்மு என்ன இது டாகுமென்ட் மாதிரி இருக்கு என்ன டாகுமென்ட்

இதுல ரவி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் அவங்களோட ஷேர் பற்றிய எல்லா விவரமும் இருக்கு அவங்களோட 48 சதவிதம் ஷேர் வெளியில் இருக்கு அது யார் கிட்ட இருக்கு எனது பற்றிய விவரம் இதில் இருக்கு நீ என்ன செய்வையோ எனக்கு தெரியாது இந்த மொத்த ஷேர்ரும் நம்ம கிட்ட வரணும்

அம்மு அப்படியும் நம் எல்லாத்தியும் வாங்கிட்ட கூட அவங்ககிட்ட 52 சதவிதம் இருக்குமே அவங்கதானே அப்பவும் லீடிங் ஆக இருப்பாங்க நமளால் ஏதும் செய்ய முடியாதே

அம்மு “இதை வைத்து ஒரு பங்காளராக பிரச்சனையை உருவாக்க முடியும் தானே இப்போதிக்கு அது போதும் மெல்ல மெல்ல பிரச்சனையை உருவாக்குவோம் அம்மாவை எல்லோ கஷ்ட படித்திருப்பாங்கா அவங்களை ஒரே அடியில் விழ்த்திட கூடாது ஒவ்வொரு நிமிடமும் பயப்படனும் அடுத்து என்ன நடக்கும் என்று நம்மிடம் எல்லாம் இருக்குமா இல்லை பறிபோகுமா தவிக்கணும்”

ஓகே அம்மு நீ சொல்வது படியே செய்கிறேன். இன்னும் இரண்டு நாளில் இந்த ஷேர் எல்லாம் உன்னுடைய பெயரில் வாங்கிடுறேன்

இல்லை அச்சு வேண்டாம் உன்னுடைய பெயரில் 3௦ சதவிகிதமும் என்னுடைய பெயரில் 1௦ சதவிகிதமும் அத்தை பெயரில் 8 சதவிகிதமும் வாங்கு அப்பொழுதான் அவங்களுக்கு சந்தேகம் வராது. ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் அந்த ரவி சும்மா இருக்க மாட்டாங்க

அம்மு அப்பாவையே பெயர் சொல்லற

அச்சு அந்த ஆளை என்னோட அப்பா என சொல்லாதே இருந்தாலும் பிஸ்னஸ்ல அந்த ஆளு சாதாரணம் இல்லை நல்ல மூளை சரியாக திட்டமிட்டு அனைத்தையும் செய்திருக்கிறார் அதனால் சொல்கிறேன் ரொம்ப கவனமாக செய் விசியம் வெளியே தெரிய கூடாது அப்படி தெரியும் போது நம்மிடம் அனைத்து வந்திருக்கணும்

அம்மு “எல்லாத்தியும் நான் பார்த்து கொள்கிறேன் நீ அடுத்து என்ன செய்யணும் என யோசி மத்ததை நான் பார்த்து கொள்கிறேன்”

________________________________________________________________________________

என்னை எதற்கு அவசரமாக வர சொன்னாய் வர்ஷினி கோவமாக கேட்டு கொண்ட அபை உள்ளே நுழைய

அத்தான் அப்பாவுக்கு நெஞ்சு வலிக்கிறது என சொல்றார் விட்டில் வேற யாருமே இல்லை அதனால் அப்பா தான் உங்களை கூப்பிட சொன்னார் எனக்கு ரொம்ப பயமாக இருக்கு அத்தான் என வர்ஷினி அழுதுகொண்ட சொல்ல

எங்க இருக்கார் மாமா

அப்பா அவருடைய அறையில் இருக்காரு

அபை வேகமா அறையை அடைய நெஞ்சை பிடித்து கொண்டு வழியில் துடித்து கொண்டிருந்தார் ரவி. அபை வேகமாக செயல்பட்டு அவருக்கு செய்ய வேண்டிய முதலுதவியை செய்ய அபையின் பின்னே வந்த வர்ஷினி அழுது கொண்டே நின்றிருந்தாள்

அபை அம்புலன்ஸ் வரசொல்லி தகவல் அனுப்பி விட்டு ரவியை மருத்துவ,மனைக்கு கொண்டு செல்லுவதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க அப்பொழுதும் வர்ஷினி அழுகை குறைந்த பாடில்லை அதில் கோவமடைந்த அபை

இப்பொழுது எதற்கு அழுதுகொண்டு இருக்க போ போய் உங்க அம்மாவுக்கு தகவல் கொடு இந்த மருத்துவமனைக்கு வரசொல்லி என நான் வேலை செய்யும் மருத்துவமனையின் பெயரை சொல்ல அபை அதட்டிய அதட்டலில் அவளின் அழுகை அதிகமானதே தவிர குறையவில்லை

அதில் எரிச்சலடைந்த அபை அவளை மீண்டும் திட்ட நினைக்கும்போது அவனின் போன் அடித்தது அதில் ஆம்புலன்ஸ் வந்து விட்டதாக தகவல் கூற இவளை முறைப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது மாமாவை அழைத்து கொண்டு சென்றான்

அவனின் பின்னே அழுதுகொண்டே வர்ஷினியும் வர அவளையும் அழைத்து கொண்டு மருத்துவமனையை சென்று அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தான்

வர்ஷினி “போனிலிருந்து தனது அன்னைக்கு தகவல் தர உடனே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்”

அவர் வந்ததும் வர்ஷினி அம்மா “அப்பாக்கு நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னார் மா இப்போ எப்படி இருக்கு என்றே தெரியவில்லை அத்தான் இன்னும் வெளியே வரவில்லை”

சரி வர்ஷினி அழாதே அப்பாக்கு ஒன்னும் ஆகாது. அபை நலபடியாக பார்த்து கொள்வான் என்றார். ஏன்னெனில் லஷ்மிக்கு தெரியும் அபைக்கு தன்னை தான் பிடிகாதே தவிர அவனின் மாமாவை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என எனவே அவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது

அபை சிகிச்சைகளை முடித்து வெளியே வந்தான். வந்தவன் லஷ்மி இருப்பதை பார்த்தும் பாராதது போல் இந்த இடத்தை விட்டு நகர அவனை வழிமறைத்த லஷ்மி “இப்போ அவர்க்கு எப்படி இருக்கு”

அபை லக்ஷ்மியின் முகத்தை கூட பார்க்காமல் வெளியே வெறித்து கொண்டு “மாமாக்கு முதல் அட்டக் வந்திருக்கு இதுக்கு பிறகு அவரை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் மீண்டும் ஒரு அட்டக் வந்தால் சிரமம். இப்பொழுதாவது வெளிய சுற்றாமல் உடனே இருந்து கவனித்து கொள்ளுங்கள்”

அதை கேட்டு லஷ்மிக்கு கோவம் வந்தாலும் கோவத்தை காட்டி கொள்ளாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்

அபை சொல்லுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை அவனின் சிறு வயதில் லஷ்மி அடிக்கடி மாதர்சங்கம், மீட்டிங், பார்ட்டி என வெளியதான் அதிக நேரத்தை செலவிடுவார், இப்பொழுது அது குறைந்து உள்ளாலும் அபையின் எண்ணம் மட்டும் மாறவில்லை

விசியம் கேள்விபட்டு வீட்டில் உள்ள அனைவரும் வந்தனர் சுமலாவும் அவளின் அம்மாவும் ஒரு ஆர்பாட்டத்தையே செய்துவிட்டனர். யாதவ் “ அம்மா மாமாக்கு இப்ப நல்லதனே இருக்கு எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறாய்”

டே என் அண்ணாக்கு இப்படி ஆகிவிட்டதே என நானே கவலைபட்டு கொண்டிருக்கிறேன் என்னை பார்த்து நீ நான் கத்தி கொண்டிருக்கிறதா சொல்ற

அதற்குள் ரவிக்கு நினைவு வந்து விட்டதாக நர்ஸ் சொல்ல அவரை பரிசோதிக்க அபை உள்ளே சென்றான். அவனுக்கு தனது மாமா மீது அன்பு இருந்தாலும் வெளிய இவர்கள் செய்யும் அலப்பறை எப்ப இங்கிருந்து கிளம்புவோம் என்றாகிவிட்டது.

ரவியை பரிசோதித்து வெளியே வந்தவன் “ உள்ளே சென்று பாருங்கள் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்” அப்பொழுது அங்கே வந்த வெற்றி “ஒன்னும் பிரச்சனை இல்லையே அபை என வினவ “

அபை மனதில் இவருக்கு மாமாவை பிடிக்காதே இப்பொழுது எதற்கு இவளோ அக்கறையாக கேட்கிறார் மனதில் நினைத்து கொண்டு வெளியே “இல்லை என பதிலளித்தான்”

வெற்றி மனதில் இவன் நல்ல இருக்கணும் அப்பொழுது தான் என்னுடைய தங்கையை கண்டுபிடித்த உடன் அவள் கைகளினாலே இவனுக்கு தண்டனை கிடைக்க செய்வேன் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் இவர்களுக்கு அடிமை போல் ஆக்கிவிட்டார்கள். நிச்சியம் இதற்க்கு இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்

நந்தினி நீ இப்ப எங்கே இருக்க உன்னை நான் தேடாத இடம் இல்லை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன் எனக்கு நம்பிக்கை உள்ளது ஒரு நாள் உன்னை கண்ணு பிடிப்பேன் என்று.

அனைவரும் உள்ளே சென்று ரவியை பார்க்க இதுதான் வாய்ப்பு என நினைத்த சுமலா “அண்ணா இப்பொழுது உனக்கு எப்படி இருக்கு நான் ரொம்ப பயந்து விட்டேன் தெரியுமா எங்கே நீ நம்ம அபை-வர்ஷினி கல்யாணத்தில் எதுவும் செய்யமல் இருந்து விடுவாயோ”

ரவியும் அப்பொழுது உணர்ந்தார் சீக்கிரம் அபையிடம் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதை

லக்ஷ்மிக்கு இவ்வளவு காலங்களில் சிறிது சிறிதாக தனது நாத்தனார் சுயருபத்தை உணர ஆரம்பித்து இருந்தார்.இப்பொழுது முழுவதும் உணர்ந்து கொண்டார். உணர்ந்த பின் சுமலா மீது வேருப்படிய செய்தது. முதன் முதலில் இன்று சிந்திக்க தொடங்கினார் நாம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டோமே. முதலில் இருந்தே அவரின் மனதில் சிறு உறுத்தல் இருந்தது அதனாலே தனது மகளிர்க்கு வர்ஷா நந்தினி என பெயர் வைத்தார்.

மறுநாள் காலை ரவி உள்ள அறையில் அபை நுழைய அரவம் கேட்டு கண்விழித்த ரவி “அபை உன்னிடம் நான் சிறிது பேச வேண்டும் என் அருகே வந்து உட்கார் என்றார்”

என்ன மாமா பேசவேண்டும் எதுவாக இருந்தாலும் நீங்கள் வீட்டிற்கு வந்த பின்பு பேசி கொள்ளலாம் நீங்கள் இப்பொழுது ஓய்வு எடுங்கள். மனதில் எதையும் போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்

அபை நான் இப்பொழுதே இதை பற்றி உன்னிடம் பேசியாக வேண்டும் என்னுடைய மகனை விட உன்னிடமே நான் அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் கேட்பதை நீ செய்வாய் என்ற நம்பிக்கையில் உன்னிடம் கேட்கிறேன் வர்ஷாவை நீ திருமணம் செய்து கொள்கிறாயா முடியாது என மட்டும் சொல்லி விடாதே. நான் இருக்கும் நிலைமையில் உன்னைவிட ஒரு நல்ல மாப்பிள்ளையை என்னால் வெளியே தேட முடியாது

மாமா நான் எப்படி ப்ளீஸ் மாமா இதை தவிர நீங்கள் இது வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் செய்கிறேன்

அபை எனக்கு உன்னிடம் இருந்து சரி என்கிற பதிலே வேண்டும் இல்லை எனக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம். நான் எப்படியோ போகிறேன் என்னை கண்டு கொள்ளாதே

ஏன் மாமா இப்படி பேசுறீங்க என்றுவிட்டு ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு சரிமாமா நான் வர்ஷாவை திருமணம் செய்து கொள்கிறேன்.

ரவி “எனக்கு தெரியும் அபை நீ எனக்காக சம்மதிப்பாய். இன்னும் பத்து நாட்களில் உனக்கும் வர்ஷாக்கும் திருமணம்”

மாமா இப்ப என்ன அவசரம் முதலில் நீங்கள் நன்றாக குணமடைந்து வீடிற்கு வாங்கள் பிறகு இதை பற்றி பேசலாம்

ரவி மனதில் “இல்லை அபை நமக்கு கண்ணுக்கு தெரியாத எதிரி யாரோ புதிதாக உருவாகி இருக்காங்க. நான்றாக வேலை போய் கொண்டிருந்த இடங்களில் ஏகப்பட்ட பிரச்சனை. வெளியே இருந்த நம்ம கம்பனி ஷேர் வேற யாரோ கைக்கு போகிருக்கு அவங்க வேற கம்பனி ஆரம்பித்தில் இருந்த வந்த லாப- நஷ்ட கணக்கு கேட்டு வெளியே உள்ள பிரச்சனையை கவனிக்க விடாமல் செய்றாங்க அதனால் உடனே உங்க கல்யாணம் நடந்தாகணும்” நினைத்து கொண்டு அபையிடம் “ நீ திருமணத்திற்கு ஒத்துகொண்டாய் தானே பிறகு திருமணம் எப்பொழுது நடந்தால் என்ன என்றார்”

அதன் பிறகு அங்கே அபைக்கு இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க வெளியே வந்தான்

அபை சம்மதித்த விசியத்தை கேட்டு சுமலா,பாட்டி [ரவி அம்மா] இருவர்க்கும் மகிழ்ச்சியை தர, வர்ஷாக்கு பயத்தையும், லஷ்மிக்கு கவலையையும், வெற்றிக்கு வருத்தத்தையும் தந்தது.

அபை சம்மத்தித்த பின் வேலைகள் வெகு வேகமாக நடைபெற அவன் இன்னும் தன்னுள்ளே இறுகி காணப்பட்டான்

உள்ளம் கரையும்..........................
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அம்முவின் ஆட்டம் ஆரம்பித்ததும் அவளோட அப்பனுக்கு நெஞ்சு வலி வந்து விட்டதே
அபிதா சொன்னது போல ரவி கில்லாடிதான்
ஷேர்ஸ் கை மாறியதை கண்டு கொண்டானே
அபிதா நினைத்தது நடந்து ரவியின் இறங்கு முகம் வரும் வரை அம்முவை
ரவி இனம் காணாமல் இருப்பானா?
அடக் கண்ராவியே
இப்பவும் சுமலா அவளோட ஆத்தா இந்த இரண்டு மூதேவிங்களும் நினைச்சதுதானே நடக்குது
அப்போ அபை அபிதாவைக் கல்யாணம்
செய்ய மாட்டானா?
ஊரு உலகமெல்லாம் தங்கச்சியைத் தேடின வெற்றிக்கு பெங்களூருவில் நந்தினியை கண்டுபிடிக்க முடியலையா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top