காதலில் உள்ளங்கள் கரைந்ததே - 4

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends very very sorry for the delay. in my exam and job joining that process i am little bit busy so i am not able to update the story there after i will give regular updates friends


உள்ளம் – 4

தனது அன்னை இறந்ததிலிருந்து ஒரு வித யோசனையிலே இருந்த அம்மு இப்பொழுது அவளது முகம் தெளிவுடன் இருப்பது கண்டு அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதை உணர்ந்து கொண்டனர் இருந்தும் அவள் எதற்கு ராஜனை (நந்தினியின் MD) வரவழைக்க சொன்னாள் என தெரியால் இருக்க அவர் வந்ததும் அதை பற்றி தெரிந்து கொள்ள காத்திருந்தனர் அம்முவின் அத்தை சுபத்ராவும், அச்சுவும்

தன்போலே இரண்டு நாள் கழிய ராஜன் அம்முவை பார்க்க வந்தார். சுபத்திரா ராஜனை அறிமுகம் செய்து வைக்க அம்முவும், அச்சுவும் அவரை வணங்கினர் பின் அவர் அம்முவை நோக்கி என்ன அம்மு என்னை பார்க்க வேண்டும் என வரசொன்னதாக சுபத்திரா சொன்னார். எப்படியும் நந்தினி உன்னிடம் அனைத்தையும் சொல்லி இருப்பாள் என எனக்கு தெரியும் இல்லையெனில் என்னை உனக்கு தெரிய வாய்ப்பில்லை அதோடு நீ என்னை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை

அம்மு “ஆமா அங்கிள் அம்மா எல்லாம் சொல்லி என்னை விட்டு சென்றுவிட்டார்கள் ஆனால் நான் உங்களை பார்க்க வர சொன்னதற்கு காரணம் இருக்கு”

என்ன காரணமாக என்னை அழைத்தாய்

அங்கிள் எனக்கு இப்ப அந்த ஆளு எங்க இறுக்கறாரு என்ன பண்றாரு எல்லாம் தெரியனும்

சுபத்திரா “அம்மு நீ அத தெரிந்து என்ன செய்ய போற”

அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க அவங்களா எல்லாம் தெரிந்தும் என்னை சும்மா இருக்க சொல்றிங்களா அத்தை இதுக்கு முன்னாடி எப்படியோ இப்ப எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது தானே. அவங்க செய்த துரோகத்தை நினைத்து நினைத்தே அம்மா என்னை விட்டு போய்ட்டாங்க அவங்க யாரையும் இனி நான் நிம்மதியா இருக்க விடமாட்டேன்

அர்ஜுன் “அம்மு செய்ய போறது சரி. அத்தை என்றாவது சந்தோசமா நிம்மதியா சிரித்து இருந்திருக்காங்களா அவங்க சிரிக்கும் போதும் அவங்க சிரிப்பு கண்ணுக்கு எட்டாது உதட்டில் மட்டுமே இருக்கும் நான் கூட பல முறை அதை பற்றி யோசித்து இருக்கேன் ஆனால் அத அத்தைய கேட்டு அவங்கள கஷ்ட்ட படுத்த கூடாது என்று விட்டுவிட்டேன்

எனக்கு அத்தை பத்தி முன்பே தெரிந்து இருந்தால் அவங்களை எப்பொழுதோ ஒரு வழி ஆக்கிருப்பேன். அம்மு நீ எது வேண்டுமானாலும் செய் உனக்கு பக்க பலமா நான் இருப்பேன்”

சுபத்திரா “அர்ஜுன் நீ வேற ஏன்டா அவளை ஏத்தி விடற நமக்கு எதுக்கு இந்த பழிவாங்கற வேலை நம்மல நம்பி ஆயிரகணக்கான குடும்பம் இருக்கு அவங்க வாழ வைத்தாலே கடவுள் நமக்கு தேவையானதை தருவரு”

அம்மு “அத்தை பிளிஸ் இந்த ஒரு விசியத்தில் மட்டும் என்னை விட்டுவிடுங்கள் மற்றது நீங்க எது சொன்னாலும் நான் கேட்கிறேன்”

சரி அம்மு ஆனால் ஒரு கண்டிசன் உனக்கோ அர்ஜுனுக்கோ அவங்களால எந்த ஆபத்தும் வரகூடாது அப்படி ஒரு சின்ன விசியம் எனக்கு வந்தது என்றால் நீங்க இரண்டு பேரும் அங்க இருந்து இங்க வந்திடனும் அதற்கு மேல பழி வாங்கறேன் அது இது என்று எதுவும் செய்ய கூடாது ஏற்கனமே நந்தினி இல்லை என்பதையே என்னால் தாங்க முடியல இதில் உங்களுக்கும் ஏதாவது என்றால் என்னால் முடியாது `

சரி அத்தை நீங்க நினைக்கற மாதிரி எதும் நடக்காது “அங்கிள் அவங்க பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா”

உன்னுடைய அப்பா ரவீந்தர்ருக்கு இப்பொழுது தமிழ்நாட்டில் நல்ல பெயர் இருக்கு தொழிலில் மற்றும் அந்தஸ்தில்

அங்கிள் அந்த ஆளை என்னுடைய அப்பா என சொல்லாதிர்கள் உயிர் கொடுப்பதால் மட்டும் ஒருவர் அப்பா ஆகிவிட முடியாது அம்மு கோவமாக சொல்ல

சரி மா நான் சொல்லவில்லை ரவி முன்பை விட இப்பொழுது பெரிய இடத்தில் உள்ளான் அவனுக்கும்- லக்ஷ்மிக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கு பெரியவன் வர்ஷன், இரண்டாவது பெண் அவள் பெயர் வர்ஷநந்தினி

அர்ஜுன் “அவர் எதுக்கு அத்தை பெயரை அவருடைய பெண்ணிற்கு வைத்துள்ளார் செய்த பாவத்திற்கு பிராய்சித்தம் செய்ய எண்ணி தம் பொண்ணுக்கு அத்தை பெயரை வைத்துள்ளாரோ”

அச்சு அமைதியா இரு அங்கிள் முழுவதாக சொல்லட்டும் அதன் பிறகு என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம். அங்கிள் நீங்க சொல்லுங்க

அம்மு ரவிக்கு சுமலாவின் மூத்தார் பிள்ளை அபைசரண் என்றால் உயிர் அவனும் ரவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வன் அவ்வளவு அன்பு, மரியாதையை ரவி மேல் அதோடு சுமளாவிற்கும்- வெற்றிக்கும் இரண்டு பிள்ளைகள் முத்தவள் தேவி இவளை ரவியின் மகனுக்கு திருமணம் முடித்து வைத்து உள்ளனர் சுமளவும்,ரவியின் அம்மாவும். அடுத்தவன் யாதவ்.

அந்த விட்டிலே அனைவராலும் பாதிக்க பட்டவர் உன்னுடைய மாமா வெற்றி மட்டுமே அவர் அங்கே ஒரு அடிமையை போலதான் உள்ளார் அவர் எது பேசினாலும் உன்னுடைய தங்கை ஓடி போனதால் தான் நீ இங்கு இருக்கிறாய் இல்லை என்றால் எங்களுடைய அந்தஸ்திற்கு உன்னை போய் என்னுடைய மகளுக்கு கட்டி வைப்பேனா என கேட்டு அவரை ஒரு நாள் கூட நிமதியாக இருக்க விட மாட்டார்கள்

அம்மு “அங்கிள் அப்ப மாமா இன்னும் அங்கே அந்த வீட்டில் தான் இருகாங்களா, என்னுடைய அம்மா குடும்பத்தையே ஆட்டி படைத்து உள்ளாங்கா இதுக்கு அவங்க தகுந்த தண்டனை அனுபவித்தே ஆகா வேண்டும்”

அர்ஜுன் “ அங்கிள் அவங்களை பற்றி சொன்னிக்க ஓகே அவங்க பசங்க என்ன செய்றாங்க “

அபைசரண் உன்னை மாதிரியே அவனும் ஒரு மருத்துவர் வர்சநந்தினி MBA படித்திருக்கிறாள். தேவி பேஷன் டிசைன் படித்துவிட்டு சும்மா இருக்கா. யாதவ் MBA முதலாம் வருடம் படித்து கொண்டிருக்கிறான் ஆன் வர்ஷன் MBA முடித்து ரவி கம்பனியில் வேலை பார்க்கிறான்

அங்கிள் போதும் அவங்கள பத்தின விவரம் நான் அங்கே வந்து தங்க ஒரு வீடு வேண்டும் ஏதாவது நல்ல வீடா இருந்தா பேசி முடிங்க இன்னும் இரண்டு நாளில் பத்திர பதிவு செய்துவிடலாம்

அம்மு நீ எதுக்கு தனியா வீடு வாங்கணும் என்னுடைய வீட்டிலே தங்கிகோ மா என்னுடைய வீட்டில் தங்க தயக்கமா இருந்தது என்றால் என்னுடைய விருந்தினர் மளிகை இருக்கு அங்க தங்கலாமே

இல்லை அங்கிள் நான் செய்ய போற வேலைக்கு நான் யாரு என்று தெரியாம இருக்கணும் அவங்க குடும்பத்தில் ஒவ்வொருத்தரும் ஏன் இப்படி நடக்குது எதனால் நடக்குது என தெரியாமல் தவிக்கணும் அதுவும் இல்லாமல் நான் அந்த விட்டுக்குள்ள போகணும் அதுவும் நந்தினி பெண் என அவங்க யாருக்கும் தெரிய கூடாது

அங்கிள் இன்னும் ஒரு வாரத்தில் இங்கிருக்கிற வேலை எல்லாம் முடித்துவிட்டு நான் சென்னை வரேன் அவங்களுக்கு கேட்ட நேரம் தொடக்கி விட்டது

_______________________________________________________________________________________________________________________________________

சென்னை மாநகரம் தன்னுடைய அழகு குறையாமல் அந்த இரவு வேளையிலும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க ரவி மளிகை என்ற பெயரில் வசதியானவர்கள் வசிக்கும் பகுதியில் ரவீந்தரின் வீடு உள்ளது வீடு என்னமோ மளிகை போல் ஜொலித்து கொண்டிருந்தது ஆனால் அதில் உள்ளவர்கள் மனம் அவ்வாறு உள்ளதா என சந்தேகம் தான்

வீட்டின் உள்ளே இருந்து அப்பா, அப்பா என யாதவ் குரல் கேட்க யாதவின் தந்தையோ வெளியே தோட்டத்தில் அமர்ந்து நிலவை பார்த்து கொண்டிருக்கிறார்.

தான் தந்தையை கண்டுவிட்ட யாதவ் “அப்பா இங்க என்ன செய்றீங்க உங்களை நான் வீடுபூரம் தொலவுகிறேன். நீங்க என்னடா என்றால் வெளியே உங்கர்ந்து நிலவை ரசித்துகிட்டு இருக்கீங்க”

வெற்றி “சொல்லு யாதவ் எதற்கு என்னை தேடினாய்”

பா உங்களுக்கு விசியமே தெரியாதா இல்ல தெரிந்தும் ஏதும் செய்யாமல் இருக்கீங்களா

என்ன என்று முதலில் சொல்லு டா எதுவும் சொல்லாமல் தெரியுமா என கேட்டால் என்ன என்று சொல்ல

அபை அண்ணனுக்கு கல்யாணம் பண்ண போறங்களாம் அம்மாவும் பாட்டியும் இப்பதான் பேசிடு இருந்தாங்க

என்னது உன் அம்மாவும், பாட்டியுமா அவங்களுக்கு அபையை கண்டாலே பிடிக்காதே அப்பறம் எப்படி அவனுக்கு கல்யாணம் செய்யணும் என யோசிகிறாங்க இதில் ஏதோ இருக்கு உன் அம்மாவும், பாட்டியும் பெரியதா திட்டம் போடுறாங்க. சரி பொண்ணு யாராம் அதை பத்தி ஏதாவது பேசினாங்களா.

ம் வர்ஷன்- தேவி கல்யாணத்தை முடித்தாச்சு இந்த வார்சாவை அண்ணாக்கு கல்யாணம் பணிட்டா மாமா சொத்து எல்லாம் வெளிய போகாம அவங்ககிட்டயே இருக்குமாம் அதனால மாமா ஆபிஸ் இருந்து வந்ததும் இத பத்தி பேசலாம் பேசிகிட்டாங்க

வெற்றி “அது தானே பார்த்தேன் என்ன அபை மேல புது அக்கறை என்று என்னுடைய தங்கையை அடித்து துரத்தியது பத்தாது என்று என்னையும் அவகளுக்கு அடிமை மாதிரி ஆக்கிட்டாங்க இதுல அபை வாழ்க்கையும் பாழாக்க பாக்கறாங்க”

அப்பா வர்ஷா நல்ல பொன்னு தானே அண்ணா அவளை கட்டிகிட்டா நல்லா இருக்கும் நீங்க ஏன் வேண்டாம் என சொல்றீங்க

வர்ஷா நல்ல பெண்தான் நான் இல்லை என சொல்லவில்லை ஆனால் ரொம்ப பயந்த சுபாவம் அபையோட கோவத்துக்கு அவளால் தாக்கு பிடிக்க முடியாது. அபை சுபாவத்துக்கு அவனை அடக்கி ஆளுகிற பெண்தான் சரியாக வருவாள். இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்தால் இரண்டு பேரு வாழ்க்கையுமே பாலாகும். அதுவும் அபை யார்கிட்டையும் ஒட்ட மாட்டன். அவனுடைய சின்ன வயதில் இருந்து அவனுக்கு அம்மா, அப்பா பாசமே கிடைக்கல. நான் அவனோடு பேசினாலும் என்னிடமும் பேசமாட்டன் அதனால என்னாலையும் அவன நெருங்க முடியல. ஏதோ உன்கிட்ட மட்டும் பேசுறான்.

நீங்க சொல்றதும்பி ஓகே தான் ஆனா அண்ணாக்கு இவளோ கோவம் வருது இவரு எப்படி நோயாளிகளுக்கு வைத்தியம் பாக்கறாரு. ஒரு மருத்துவருக்கு தேவை பொறுமை, சகிப்புதன்மை இது எதுவுமே அண்ணாவிடம் நான் பார்த்தது இல்லை

வெற்றி “யாதவ் என கண்டிப்பு பார்வை பார்க்க”

சரி,சரி உங்க செல்ல புள்ளைய ஒன்னும் சொல்லல வாயை மூடிக்கிறேன் என்று வாயின் மீது கைவைத்து அப்பாவியாக ஒரு பார்வை பார்க்கவும் அதை கண்டு வெற்றியின் உதடுகள் புன்னகையில் விரிந்தது

காதலில் கரையும்..................................

friends படித்து எப்படி இருக்கு என சொல்லுங்க i am for your comments paa ........................................
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே
இன்னுமா அந்த சுமலா, ரவியின் அம்மா இவங்களோட ஆட்டம் அடங்கலை?
அப்போ அபிதா நந்தினிக்கு அபைசரண் ஜோடியில்லையா?
தாய் மாமாவின் அடிவருடியாக இருக்கும்
அபை ரவியைப் பழி வாங்கத் துடிக்கும் அபிதாவுடன் இணைவானா?
மனைவியின் மற்றொரு பிள்ளையின்
மீது வெற்றிக்கு என்ன இவ்வளவு பாசம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top