காதலில் உள்ளங்கள் கரைந்ததே - 2

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
உள்ளம் – 2

உன்னுடைய தந்தையின் பெயர் ரவீந்தர் தமிழ்நாட்டில் இருக்கிறார் நான் அவருடைய அத்தை மகள் என கூற தொடங்கினார்

ரவி அந்த காலத்திலேயே இன்ஜினியரிங் படித்து வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர் என்னுடைய அம்மாவும், ரவி அப்பாவும் அண்ணன் தங்கை எங்க அம்மாவுக்கு நானும், அண்ணன் வெற்றி என இரண்டு பிள்ளைகள் மாமாவிற்கு ரவீந்தர்.சுமலா இரண்டு பிள்ளைகள் சுமலாவை ஒரு பணக்கார வீட்டில் திருமணம் செய்து கொடுத்து ஒரு வருடத்திலே கணவனை இழந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார்

ரவி வெளிநாட்டில் இருந்துவந்து இங்கு தொழில் தொடங்கவும் அத்தை ராணி அவருக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்து நிச்சியம் செய்தார்

திருமனத்தினன்று அந்த பெண் தான் காதலித்தவனுடன் சென்று விட மாமா என்னை ரவிக்கு தரும்படி என் அன்னையிடம் கேட்டார் அம்மாவும் தன் அண்ணன் குடும்ப கௌரவம் காக்க கல்லூரியில் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த என்னை மனம் முடித்து கொடுத்துவிட்டார்

ஆரம்பத்தில் எனக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது அதற்கு காரணம் வேறு பெண்ணை மணக்க நினைத்தவர் கடைசியா அவள் கிடைக்கவில்லை என என்னை மணந்து கொண்டது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது அந்த வாழ்க்கையில் என்னால் ஒன்ற முடியவில்லை அதோடு என அத்தைக்கும் சுமலாக்கும் அவர்களை விட வசதியில் குறைந்த நான் அந்த வீட்டு மருமகளாக வந்தது பிடிக்கவில்லை

அப்படியே ஒரு வருடம் கடந்தது அந்த ஒரு வருடத்தில் ரவியின் செய்கைகளும், குணமும் கண்டு என்னை அறியாமல் அவர் மேல் காதல் கொள்ள தொடங்கிவிட்டேன்

என்னுடைய படிப்பை நிறுத்த அத்தை பல வகையில் முயன்றார் அதையும் மீறி படித்து முடித்தேன் அதை பொறுக்க முடியாமல் கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது இன்னும் ஒரு வாரிசை கொடுக்க துப்பில்லை இவளுக்கு படிப்பு ஒண்ணுதான் கேடு. நீ மலடி என தெரிந்துதான் உன் அம்மா எப்படியாவது தள்ளிவிட்டால் போதும் என்று கேட்டவுடன் கொடுத்து விட்டாலோ என்றார்

அத்தையின் பேச்சு என் மனதை அதிகம் காயபடுத்திவிட்டது அதிலிருந்து வெளிவர வேலைக்கு செல்ல தொடங்கினேன் எனது மாமா “வெளியில் ஏன் வேலைக்கு செல்லனும் நீ வேலை பார்க்க விரும்பினால் நம்ம கம்பனியிலே பார்க்கலாம் தானே”

இல்லை மாமா வெளியே சென்று வேலை செய்தால் நிறைய கற்று கொள்ளலாம் இங்கே அது முடியாது எல்லாரும் என்னிடம் இருந்து தள்ளி இருப்பார்கள்

மாமா “சரி மா உன் இஸ்டம்”

வேலைக்கு சென்று ஒரு மாதம் கடந்த நிலையில் ரவி என்னிடம் “நீ ஏன் நம்ம கம்பனியிலே வேலை பார்க்க கூடாது”

என்ன இப்பொழுது வந்து இதை பற்றி கேட்கிறார் அதுவும் வேலைக்கு சென்று ஒரு மாதம் கழித்து என நான் சிந்திக்க அதை தடை செய்யும் விதமாக நீ இன்று ஒருவனுடன் காரில் ஏறி செல்வதை பார்த்தேன் “உன்மீது சந்தேகம் எல்லாம் இல்லை ஆனால் வெளி ஆண்களுடன் நீ பழகுவதை மற்றவர்கள் யாராவது குறை சொல்லலாம்” என கூறி கொண்டே என்னை நெருங்கி நிற்க என்னதான் நான் அவரை கணவனாக ஏற்று கொண்டாலும் வேறு பெண்ணை மணக்க நினைத்தவர் இன்னும் உணர்வு உறுத்தி கொண்டே இருந்தது என்னை நெருங்கவும் தயங்கி நின்றேன்

இந்த ஒரு வருடம் உன் மனம் மாறும்வேண்டும் என காத்திருந்தேன் இன்னும் உனக்கு என்மீது நம்பிக்கை வரவில்லையா

நான் தயங்கி கொண்டே “என்ன இருந்தாலும் நீங்கள் இன்னொருத்தியை மணக்க நினைத்தவர் என்னும் எண்ணம் என்னை விட்டு நிங்க மாட்டேன் என்கிறது

எனக்கு அந்த பெண் வேறு ஒருவரை விரும்புவது முன்பே தெரியும் இருந்தும் அவளிடம் திருமனத்தினன்று காதலனுடன் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன் அதே போல் திருமணத்தன்று சென்றுவிட்டாள்

என்ன இவர் புதிதாக ஒன்றை சொல்கிறார் நினைத்து அவரை பார்க்க இது என்ன புதுகதை என பார்க்கிறாயா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் எப்படியும் அம்மா நான் உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டார் அதனால் அப்பெண்ணிடம் உதவிகேட்டேன் அவளும் செய்தாள் அப்பாவிற்கு இது முன்பே தெரியும் அவருக்கு நீ மருமகளாக வருவது விருப்பம்தான்

சரியான நேரத்தில் அப்பா பேச்சை ஆரம்பித்து உன்னை எனக்கு கொடுக்குமாறு கேட்டார் நான் நினைத்தது போலவே நம் திருமணம் நடந்தது

ரவி அவ்வாறு சொல்லவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது அதோடு என்னை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தேன் பின் வாழ்வே மகிழ்ச்சியாக சென்றது

நான் மகிழ்ச்சியாக வீட்டில் வலம் வருவது அத்தைக்கும், சுமளாவிற்க்கும் பிடிக்கவில்லை என்னை வேண்டாதவளாகவே பார்த்தனர் அதோடு எப்படியாவது என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டு ரவிக்கு வேறு வசதியான பெண்ணை கட்டவேண்டும் என எண்ணினர் அவர்கள் எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஒரு நிகழ்வு நடந்ததது அதுவே என்னுடைய வாழ்க்கையை புரட்டிபோட்டது

வேலையின் காரணமாக வெளியில் MDயுடன் நான் சென்றேன் அன்று வேலை முடியவே இரவு 9 மணி ஆகிவிட்டது அதோடு கிளம்பும் நேரத்தில் மழையும் வலுத்ததால் வீடு வந்து சேரவே 11 மணி ஆகிவிட்டது என்னை வீட்டைவிட்டு அனுப்ப சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்த அத்தையும்,சுமலாவும் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டனர்

உள்ளே நுழையும்போதே அத்தை “எந்த வீட்டிலாவது இந்த கூத்து நடக்குமா வேலைக்கு போய்ட்டு வரும் குடும்ப பொண்ணு நடு ராத்திரியில் வருவது ஆனால் இந்த வீட்டில் நடக்கிறதே இதை ஒருத்தரும் கேட்க மாட்டிங்களா”

சுமலா “அது எப்படிமா கேட்பாங்க அவதான் அண்ணனையும் அப்பாவையும் கைக்குள்ள வைத்து கொண்டு காரியம் சாதிக்கிறலே அவங்களும் இவ சொல்லவதற்கு எல்லாம் ஆமாம் சாமி போடுறாங்க அவங்களா கேட்ட போறாங்க” என சரியாக தன்னுடைய அண்ணன் கொவப்படுபடி பேசினாள்

ரவிக்கு நந்தினி வெளி ஆண்களுடன் வேலை செய்வது பிடிக்க வில்லை அவள் எப்பொழுதும் தன்னிடம் மட்டுமே பழக வேண்டும் வேறு யாரிடமும் பேசகூடாது என்னை மட்டுமே அவள் நினைக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தது அவள் வேலை விசியமாக வெளியில் சென்று பிற ஆண்களுடன் பேசினாள் எங்கே தன்னை விட்டு வேறு ஒரு ஆணின் மேல் ஈர்ப்பு வந்து அவனுடனே சென்றுவிட்டால் என பயம் இருந்தது அதுவே நாளடைவில் சந்தேகமாக உருவானது

நந்தினி அவளின் MDயுடன் வெளியில் பல முறை பார்த்ததிலிருந்து அந்த சந்தேகம் வலுப்பெற அதுவும் அன்று சுமலா பேசியதும் ரவியை கோவம் கொள்ள செய்ய அதில் மதியிலந்தவன் நந்தினியை நோக்கி “ஏன் இவ்ளோ நேரம் வேலை மாலையே முடிந்திருக்குமே”

ஒரு ஒப்பந்தம் சம்மந்தமாக MDயுடன் வெளியில் சென்றேன் அந்த மீட்டிக் முடிய நேரமாகிவிட்டது அதோடு மழை வேறு வந்ததால் விரைவாக வர முடியவில்லை

அத்தை “ஏண்டி ஒழுக்கம் கெட்டவளே எவனுடனோ ஊர் சுற்றிவிட்டு வந்து மழை வந்தனால் லேட்டு என சொல்ற எந்த குடும்ப பொண்ணாவது இந்த நேரத்திற்கு வெளியில் போய்டு வருவாளா, எவன் கூட போனியோ அவனுடனே போய் இருக்க வேண்டியது தானே திரும்ப வந்தது எங்க குடும்பத்து மனத்தை ஏன் வாங்கற”

சுமலா “அது எப்படிமா அவனோடு போவ இவள் நல்லா வசதியோடு வாழ அண்ணன் சொத்து வேண்டும்,இவள் எது செய்தாலும் சப்போர்ட் பண்ற மாமனார் வேணும் இவளுக்கு தேவை படும்போது அண்ணன் வேண்டும் அதனால் எப்படி போவா” இகழ்ச்சியாக பேசனாள்

இவற்றை சொல்லும்போதே நந்தினியின் கண்கள் கண்ணீரை சுரக்க அன்றைய வலி இன்றும் அவரது முகத்தில் தெரிந்தது அதோடு மூச்சு திணறல் எடுக்க அச்சுவை குப்பிட எத்தனிக்க அம்முவை கை பிடித்து தடுத்து நான் உன்னிடம் என்னுடைய வாழ்வில் நடந்ததை முழுவதும் சொல்லாமல் என்னுடைய உயிர் போகாது

அம்மா அப்படி சொல்லாதே நீ என்னுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும்

நந்தினி மீண்டும் சொல்ல தொடங்க அம்முவும் அதை கேட்க தொடங்கினாள்

சுமலா இவ்வாறு பேச மாமா “கொஞ்சம் பாத்து பேசு சுமலா அவள் உன்னுடைய அண்ணி”

ரவி “சுமலா சொல்வதில் என்ன தப்பிருக்கு லேட்டாக வீட்டிற்கு வந்ததும் இல்லாமல் ஒரு பதற்றமும் இல்லாமல் எவ்ளோ திமிரா நிற்கிறாள் அம்மா என்னிடம் சொன்னது சரிதான் இவள் எப்பொழுதுமே இரவு 1௦ மணிக்குமேல் வீட்டிற்கு வருவதாக கூறினார் நானும் வேலையில் இருந்தது தாமதமாக வருவதால் எனக்கு தெரியவில்லை அம்மா இவள் மீது உள்ள கோவத்தில் சொல்கிறார் என நினைத்தேன் ஆனால் உண்மை இப்பொழுது அல்ல தெரிகிறது”

மாமா “இல்ல ரவி இன்று மட்டுமே லேட்டாக வந்துள்ளா எப்பவும் இப்படி நடக்காது”

அத்தை “உங்களுக்கு என்ன தெரியும் இவள் வர நேரத்தை பற்றி நீங்களே ஊர் சுற்றிவிட்டு லேட்டாக வரீங்க வந்ததும் சாப்பிடு தூங்க போய்டுவீங்க அதனால் உங்களுக்கு தெரியாது

இவளை முதலில் வீட்டைவிட்டு வெளியே துரத்து அப்பொழுதுதான் நம்மை பிடித்த பீடை ஒழியும்”

சுமலா என்னை வீட்டை விட்டு வெளியே இழுத்து செல்ல நானோ “ரவியிடம் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் ப்ளீஸ்ங்க கெஞ்ச அதுவும் அவனுக்கு அவள் இந்த வசதியான வாழ்க்கைகாகவே அம்மா சொன்ன படி நாடகம் ஆடுவதாக தோன்ற என்னுடைய கதறல்கள் அங்கே ஒன்றுமில்லாமல் சென்றது

வீட்டை விட்டு வெளியே தள்ளிய சுமலா என் கழுத்திலிருந்த தாலியையும் அறுத்து எடுத்து கொண்டாள் அப்பொழுது அதை தடுக்கும் எண்ணம் கூட எனக்கு வரவில்லை அந்தளவு மனமுடைந்து போயிருந்தேன் ஆனால் என்னுடைய தாலியை அறுக்கும்போது ரவி மாடியில் இருந்து பார்த்து கொண்டிருந்தார் இருந்தும் ஒரு வார்த்தை சொல்லி தடுக்க கூட இல்லை என சொல்லி முடிக்க அவருக்கு மூச்சு திணறல் அதிகமாகவே அச்சு விரைந்து அதை சரி செய்ய முயன்றான் அவனால் முயல மட்டுமே முடிந்தது அதற்குள் அவரது உயிர் உடலை விட்டு பிரிந்து சென்றுவிட்டது தன்னுடைய மகளிடம் அனைத்து பாரங்களையும் இறக்கி விட்டு


காதலில் கரையும்................................


Hai friends i come with next update read and drop your comments paa by nalini sri
 

banumathi jayaraman

Well-Known Member
வேண்டாத பிடிக்காத மருமகளை
மாமியாரும் விதவை நாத்தனாரும்
படுத்தும் பாடு ரொம்பவும்
அநியாயம், நளினி டியர்

நந்தினியை விரும்பி மணந்த
இந்த கூமுட்டை கணவன் ரவி
ஒரு வருடத்தை வீணாக்கி
விட்டானே
ஆசைக் கணவன் சொல்லும்
பொழுதே நந்தினி வேலையை
விட்டிருக்கலாம்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top