அருமையான பதிவு கவி.நந்தனின் விபத்துக்கு பிறகு ஹாரன் அடிச்சு கேட்டை திறக்க சொல்லி அழிச்சாட்டியம் பண்ணதை போல, இப்பவும் அதே போல யார் என் கிட்ட பேசவேணாம்னு சொல்றது என வீம்பு புடிச்சு அம்முவை பார்க்க வந்துட்டான்.
அவினாஷ் பொறுப்பானவன்னு கங்கா நெனச்சு பொறுமையா பேச,என்னை நம்புங்கன்னு டைலாக் சொல்லனுமான்னு திமிரா பேசறது சரியில்லையே.அம்முக்கு எந்த பக்கம் என்ன பிரச்சனை வரும்னு தெரியாது,சென்னைய தாண்டி அனுப்ப யோசனையா இருக்கு,நந்தன் எழுந்திருச்சு வந்தா பதில் சொல்லனும் என சொன்ன கங்கா உன் காரிலேயே கூட்டிட்டு போன்னு சொல்லவும்,தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டானே.
பாவம்,காலையில் வீட்டில் சாப்பிடாம கிளம்புனவ,அம்மு முகத்தை பார்த்து சாப்பிடலாமான்னு கேட்டானே.கங்காட்ட பேசற பேச்சை கேட்டு அம்முவுக்கு கோபம் தான் வருது. எப்படியோ தம்பிய பார்த்த சந்தோஷத்தில் அம்முவின் கோபமும் குறைஞ்சிருச்சு.
ஆதி எதிர்பாராமல் அம்மு,அவினாஷை பார்த்ததும் சந்தோஷத்தில் குதிக்கறதும்,அப்பாவுக்கு விபத்து நடந்ததை பற்றி அவினாஷ் தன்னிடம் அப்போவே சொல்லிட்டார் என சொல்பவன்,அம்மு அப்பா வேலையை பார்ப்பதை பாராட்டும் அளவு வளர்ந்துட்டான்.
ஆபிஸ்க்கு வர வேணாம்னு சொன்னா இப்படி எதாவது செய்வானா,அடங்கமாட்டேங்கறானே.எங்க அம்மாக்கு அடுத்து உன்னை படுத்தறேன்னு அவினாஷ் சொன்னதை கேட்ட அம்முவுக்கு புரிந்தும் புரியாத நிலை.அவினாஷ்,அம்முவை படுத்தறதும்,அம்மு அவனை மிரட்டற அழகும் என்னவென்று சொல்ல.