கவிதையில் கதை

Shakthi Jaya

Writers Team
Tamil Novel Writer
#1
வாழ்வின் விடியலை நோக்கிய
பயணம் என்று அறியாமல்
இரவு நேர பயணத்தில் ஈடுபட்டேன்....

என் இதய ராணியான அவள்
என்னை நோக்கி என் பயணத்தில்
கலந்து கொள்ள ஓடி வந்து கொண்டிருந்தாள்....

என் உதிரம் கூட அவளது ஓட்டத்திற்கு ஏற்ப
என் உடலில் வேகமாக பாய்ந்தது....

எனது கரம் என் அனுமதி இல்லாமல்
அவளின் முன் நீட்ட.....

அவளது கரமும் எந்தன் கரத்துடன் சேர்க்கப்பட்டது...
வாழ்வின் இறுதிவரை உந்தன் கரத்தை விட மாட்டேன் என்ற சத்தியத்தோடு....

இருவரது விழிகளும் இமைக்க மறந்து
பார்வையாலே எதையோ தேடிக்கொண்டு இருக்க...

இவர்களது தேடலில் இரு மனங்களின் சங்கமத்திற்கான பயணம் அழகாக தொடங்கியது....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes