கல்லுக்குள் ஒரு காதல் -Kallukkul Oru Kathal-16

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#2


கல்லுக்குள் ஒரு காதல்அத்தியாயம் -16மனிதன் யாருக்கு வேண்டுமானாலும் பயப்படாமல் இருக்கலாம்... ஆனால்... மனசாட்சியைவிட ஒரு சிறந்த நீதிபதி இந்த உலகத்தில் இல்லை... அதற்கு பாரபட்சம் கிடையாது...லஞ்சம் கொடுக்க முடியாது...சொந்த பந்தம் பார்க்காது... அந்த மனசாட்சி கேட்கும் கேள்விக்கு பயந்துதான் ஸ்ரீ ஊருக்கு போகாமல்.... லண்டனில் சுற்றிக்கொண்டிருந்தான்... ஜெனிபர் கேட்டதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை..... ஸ்ரீயின் முகத்தில் இருபதுநாள் தாடி... கட்டிலில் படுத்து யோசித்து கொண்டிருந்தான்...சுந்தரமும் சுமித்ராவும் விரும்பி திருமணம் செய்து கொண்டதால் இருவர் வீட்டிலும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை...பிழைப்புக்காக பிறந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு வந்து சுந்தரத்தின் கடுமையான உழைப்பால்... இந்த அளவுக்கு உயர்ந்திருந்தார்... ஸ்ரீக்கு பிறகு வேறு குழந்தைகள் இல்லாததால் ஸ்ரீமேல் உயிரையே வைத்திருந்தார்கள்... சுந்தரம் மட்டும் சில நேரங்களில் கண்டிப்பு காட்டுவார்... படிப்புக்காக லண்டனுக்கு போனவனுக்கு அந்த கட்டுப்பாடற்ற வாழ்க்கைமேல் ஒரு போதை ஏற்பட்டிருந்தது.... நினைத்த நேரம் கிளப்புக்கு போவது... நண்பர்களின் சேர்க்கையால் மது என்று இருந்தவனுக்கு அங்கு இருந்த பெண்கள் அவன் அழகில் கம்பீரத்தில் அவன்மேல் விழுந்து விழுந்து பழகியதில்..... நண்பர்கள் தூண்டிவிட பெண்களோடும் பழக்கமும் வந்தது....கேட்கும் நேரமெல்லாம் சுந்தரம் பணம் அனுப்பி கொண்டிருக்க.... அதை செலவழிக்க ஸ்ரீ இங்கு கற்று கொண்டிருந்தான்...படிப்பு முடியவும் சுமித்ரா போன்மேல் போன் போட்டு கூப்புட்டு கொண்டே இருக்க தன் தாய்மீது பாசம் இருந்தாலும்... இந்த வாழ்க்கையை அங்கு அவர்கள் கண்முன்னால் வாழமுடியாது என்பதால் இங்கேயே தொழில் தொடங்கலாம் என்ற நண்பர்களின் அறிவுரையை கேட்டவன்...சுந்தரத்திடம் பணம் கேட்க.... அவர் இங்கு வந்து தொழில் தொடங்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவேன்... ஆனால் அங்கு தொடங்க பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்....வாழும்போது சுமித்ராவை ஏற்றுக் கொள்ளாத அவளுடைய பெற்றோர் சாகும் தருவாயில் சொத்து முழுவதையும் ஸ்ரீ பெயரில் எழுதி... அவன் மனைவி சம்மதத்தோடு இருவரும் கையெழுத்து போட்டால் சொத்தை விற்கலாம் என உயில் எழுதி வைத்திருந்தனர்... இதனால்தான் ஸ்ரீ கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டு மனைவியாக வருபவளிடம் கையெழுத்து வாங்கி சொத்தை விற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து இந்தியா வந்திருந்தான்.... ஆராவை பார்த்து ஒத்துக் கொள்ள வைத்தவன்...கல்யாண குழப்பத்தில் ஜெயாவை திருமணம் செய்ய மனதை ஜெயாவிடம் பறிகொடுத்திருந்தான்... ஆனால் லண்டன் ஆசையும் விடவில்லை...

இங்கு வந்ததில் இருந்து திருமணத்திற்கு முன் இருந்தது போல இருக்க நினைக்க சுத்தமாக அவனால் முடியவில்லை…. ஜெனிபர் சொன்னது பொட்டில் அடித்ததுபோல உண்மையை உரைக்க.... இன்னும் தன்னை பற்றிய சுய அலசலுக்காவே இன்னும் ஒரு மாசம் இருக்க முடிவு செய்தான்.... ஸ்ரீக்கு அவன் மேலேயே பயமாக இருந்தது... நாளை வேறு பொண்ணை பார்த்து மயங்கிவிடுவமோ..... இல்லை மீண்டும் வெளிநாடு வந்துவிடுவமோ என்று யோசித்தே தன்னால் தன் பெற்றோருடனும் ஜெயாவுடனும் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க முடியுமா என்று யோசித்தே தன் போனை அணைத்து வைத்திருந்தான்... தன் நண்பர்களுக்கு தெரிந்தால் மீண்டும் ஏதாவது பேசி தன் மனதை கலைத்து விடுவார்கள் என்று எண்ணித்தான் அவர்களுடனும் தொடர்பில்லாமல் இருந்தான்....சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எளிதாக கெட்டுபோக சூழ்நிலையில் இருந்த சிவா கஷ்டப்பட்டு முன்னேறி வர....நல்ல சூழ்நிலையில் நல்ல பெற்றோருக்கு பிறந்த ஸ்ரீ வழி தவறி போயிருந்தான்…. வாழ்க்கை யாருக்கு எப்போது பாடம் கற்றுக்கொடுக்கும் என்று தெரியாது... ஆனால் அப்படி ஒரு பாடத்தை.. ~.ஜெனிபர் மூலமாக ஒழுக்கம்தான் முக்கியம் என்ற பாடத்தை ஸ்ரீ இங்கு கற்றுக்கொண்டான்.... பார்க்கும் போது சாதுபோல தெரிந்தாலும்.... உள்ளே குள்ளநரித்தனம் இருந்தால் மனிதன் எந்த அளவுக்கும் இறங்குவான் என்ற பாடத்தை சதாசிவம் மூலம் சிவா கற்றுக்கொண்டான்... பார்க்கும் ஒரு ஆளின் குணத்திற்கும்.... நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை சிவா மூலமாக ஆரா கற்றுக்கொண்டாள்....படுத்திருந்த ஸ்ரீக்கு இங்கு வந்து இருபது நாட்கள் ஆயிற்று... இனிமேல் ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது என்று தோன்றியது... ஒரு மாசம் இருக்கலாம் என்றவனுக்கு இதற்கு மேல் முடியவில்லை.... அவன் மனசாட்சியோ... நீ எதுலாயாவது பர்பெக்டா இருக்கியா.... லண்டன்தான் முக்கியம்னு சொன்ன இப்ப ஊருக்கு போறேன்னு சொல்லுற... கல்யாணமே வேணாமுன்னு சொன்ன... இப்ப பொண்டாட்டிதான் முக்கியம்னு சொல்லுற... கடைசியில இங்க ஒரு மாசம் இருக்கேன் சொன்ன இப்ப இருபதுநாளுலயே கிளம்ப போறேன்னு சொல்லுற.... நீ எப்பத்தான் என் பேச்ச கேப்ப என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது..... அவன் அந்த ஹோட்டல் மூலமாகவே இந்தியா போவதற்கு டிக்கெட் பெற்று தரச்சொல்ல காலை 8 மணிக்கு பிளைட்......அங்கு ஹாஸ்பிட்டலில் மூன்று நாட்களில் சுந்தரத்தை டிஸ்சார்ஜ் செய்ய... சுமித்ரா பத்து நாட்களுக்கு மேல் ஹாஸ்பிட்டலில் இருந்துவிட்டு நேற்றுதான் வீட்டிற்கு வந்திருந்தார்...காலில் முறிவு ஏற்பட்டு பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்துள்ளதால் அவரால் லேசாகத்தான் நடக்க முடிந்ததால் வீல்சேரில்தான் அமர்ந்திருந்தார்... இரு கையிலும் கட்டு நெற்றியில் கட்டு என பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.. சுந்தரத்திற்கு தன் மனைவியை இப்படி பார்க்கவே முடியவில்லை... திருமணம் முடிந்த இத்தனை வருடங்களில் தன் மனைவிக்காக பார்த்து பார்த்து செய்பவர்.... வெளியிடங்களுக்கு சென்றால்... தன் மனைவிக்கென்று ஒரு பொருளையாவது வாங்காமல் வரமாட்டார்...தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்... இப்போது இப்படி பார்க்க முடியாமல்....நெஞ்சே பாரமாக இருந்தது....கட்டிலில் படுத்திருந்தவர்.... மெதுவாக கண்ணைத்திறந்து....” இன்னும் ஸ்ரீ போன் பண்ணலையாங்க....” ஜெயா அவருக்காக பாலை ஆத்திக் கொண்டிருந்தவளுக்கும் கோபமாகவே இருந்தது... இந்த அத்தை தன் மகன பத்தி மூச்சுக்கு மூன்னூறுதரம் கேட்டுக்கொண்டே இருக்காங்க... நம்மள போன்னு சொன்னா போயிரப் போறேன்... இதுக்காக அம்மா அப்பாவுக்குகூட போன் பேசாம இருக்காங்களே... இப்ப எப்படி போறது... அத்தை எழுந்து நடந்தவுடன போயிரனும் என்று நினைத்துக் கொண்டே பாலை கொடுத்தாள்....“ஜெயா.....”

“சொல்லுங்க மாமா...??”

“இங்க உக்காரும்மா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.... சுமி உன்கிட்டயும் பேசனும் உன்னால உட்காந்து கேக்க முடியுமாம்மா.....??”“என்னங்க....” என்றபடி எழுந்து உட்கார…

“ஜெயா...நான் உன்னை என்னோட பொண்ணுன்னுதான் நினைக்கிறேன்... அது உண்மைதானேம்மா...??”“என்ன மாமா இப்படி சொல்லுறிங்க... நான் எங்க அப்பாவ பாத்ததுகூட இல்லை உங்கள என்னோட அப்பாவாதான் நினைக்கிறேன்...”“அப்ப சொல்லும்மா என் பையன் உன்கூட குடும்பம் நடத்துறேன்னு சொன்னானா..... இங்க இருந்த வரைக்கும் ரெண்டுபேரும் சந்தோசமா இருந்திங்களா...??”

ஜெயா அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க“உண்மையை மட்டும் சொல்லனும்மா...??”

“உங்க அப்பான்னு சொன்னது உண்மைன்னு நினைச்சா எனக்கு உண்மையை மட்டும் சொல்லனுமா.....??”மெதுவான குரலில்” இல்ல மாமா...”சுமித்ரா அதிர்ச்சியோடு பார்க்க....அங்கு ஏர்போர்ட்டுக்கு வந்த ஸ்ரீ........ யாரோ தன்னை அழைப்பதை கேட்டு திரும்பி பார்க்க... தன்னுடன் ஆரம்பகாலத்தில் ரொம்ப நட்பாக இருந்த நண்பன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்... தமிழ்நாட்டுக்காரன் தான் வேகமாக வந்தவன்...ஸ்ரீயை ஓங்கி ஒரு அறை வைத்தான்....“டேய்...” என அவன் சட்டையை எட்டிப்பிடிக்க..... ….

“சட்டையை விடுடா” என்றவன்...” ஏண்டா போன எடுக்கல....??”

“ஏண்டா போன எடுக்காததுக்கா என்னை அடிச்சா...??”“பாவி...பாவி...உங்க அம்மாவும் அப்பாவும் ஆக்சிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க ... இதுகூட தெரியாம...நீ இங்க சுத்திக்கிட்டு இருக்க உன் போன் எங்கடா....??”அப்போதுதான் தன் பேக்கிலிருந்து போனை எடுத்து ஆன் பண்ண.... அதில் ஏகப்பட்ட மிஸ்டு கால்கள்.... மெசேஜ்கள்....வாட்ஸ் அப்... பேஸ்புக் ..டுவிட்டர் என அனைத்திலும் அவன் நண்பர்களும்...ஜெயா...தன் தந்தையின் செகரெட்டரி என அனைவரும் கொடுத்த செய்திகள்.....ஸ்ரீயால் முடியவில்லை.... அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டான்.... கண்ணீர் கரகரவென ஊற்ற.... தன் நண்பனை சற்று நேரம் அழவிட்டவன்... பின்னர் மனது தாங்காமல் தண்ணீர் எடுத்து கொடுத்தவன்..”.கவலை படாதடா இப்ப அம்மா அப்பா நல்லாயிருக்காங்க... என்னோடயெல்லாம் இங்க வந்துட்டு புது நண்பர்கள் கிடைக்கவும் பேசுரத விட்டுட்ட... என்னால உன்னைவிட முடியலடா... எங்க அம்மா அப்பாவ போய் பாத்துட்டு வரச்சொன்னேன்... இப்ப பரவாயில்லையாம்... சரி உனக்கு எப்ப பிளைட்...??” அப்போது அறிவிப்பு வர... ஸ்ரீயும் கிளம்பியிருந்தான்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#3
ஸ்ரீயால் ஒன்றும் பேச முடியவில்லை.... என்ன பேசுவான்... இப்படி அம்மா அப்பாவுக்கு துணைக்குகூட இல்லாம வெட்டியா ரூமுக்குள்ள அடைஞ்சுகிடந்தமே...ச்சே. ..நாமெல்லாம் என்ன மனுசன்… அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தான்...கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது... பிளைட்டில் ஏறியதோ... இல்லை இறங்கியதோ தெரியவில்லை.... வாடகை காரை பிடித்தவன்... தன் வீட்டு அட்ரஸை சொல்லி காரில் கண்மூடி அமர்ந்திருந்தான்... கண்ணுக்குள் சுமித்ராவின் முகமே வந்து வந்து போனதுவீட்டிற்குள் வர...கால் உள்ளே வைக்கவே....குற்ற உணர்ச்சியாக இருந்தது... உள்ளே வர ஹாலில் யாரையும் காணவில்லை... உள்ளே தன் தந்தையின் அறைக்கு செல்ல… சுமித்ரா சேரில் அமர்ந்திருக்க ஜெயா ஈரத்துணியால் அவர் உடலை துடைத்துக் கொண்டிருந்தாள்... சுந்தரம் கட்டிலில் அமர்ந்து சுமித்ராவிடமும் ஜெயாவிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்... உள்ளே நுழைந்தவன் தன் அம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைந்து காலடியில் விழுந்திருந்தான்..தன் அம்மாவை இந்த கோலத்தில் பார்க்க முடியவில்லை... எப்போதும் மங்கலகரமாக சிரித்தபடி இருப்பவர்... இன்று வீல் சேரில் அவர் கையை பிடித்து அழுது கொண்டிருந்தான்.... தன் தாயின் கையை பிடித்து தன் கன்னத்தில் அறைந்தவன்....” என்னை அடிங்கம்மா.... அடிங்க....” . அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்...

சுமித்ரா ஸ்ரீ கையை பிடித்தவர் அழுகையில் விம்மி கொண்டிருந்தார்....” அம்மா..... அம்மா.... அப்பா... என்னை மன்னிச்சிருங்கப்பா.... உங்களுக்கு அடிபட்டிருந்தது எனக்கு தெரியாதும்மா...”சுந்தரம்....” நீ யாருப்பா...??”

“அப்பா...”

“அப்பா... அப்படிங்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா... நாங்கதான் உன்னை பெத்தோம்... இதோ இந்த பைத்தியகாரி இந்த நிலைமையிலும் உனக்கு என்னாச்சோன்னு எப்ப பாத்தாலும் கேட்டுக்கிட்டு இருக்கா.....பாரு...உங்க அம்மாவ....சுமி...பாருடி உன் மகன... நான்தான் சொன்னேன்ல அவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது.... நம்மள பாக்க பிரியப்பட்டிருக்க மாட்டான்னு....??”“அப்பா சத்தியமா உங்களுக்கு அடிபட்டதே தெரியாதுப்பா...”“தெரியாதா... அப்படியென்ன முக்கியமான வேலை பாத்த....”

ஸ்ரீ என்ன சொல்லுவான்.... மற்ற பெண்களை மறக்க ரூமில் இருந்தேன் என்றா....

“என்ன ஸ்ரீ பேசாம இருக்க... என்ன சொல்லுறதுன்னு தெரியலயா... நீதான் பெத்தவங்க... பொண்டாட்டி வேணாமுன்னு அங்கயே செட்டிலாக போனவன்ல... இப்ப எப்படி நியூஸ் தெரிஞ்சு வந்த.... ஓஓஓ உன்னோட அந்த உருப்புடாத ப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்களா.... போடா போய்..... உங்க அம்மா அப்பா ஆக்ஸிடென்ல செத்துப் போயிருப்பாங்க.... பொண்டாட்டிகிட்ட கையெழுத்து வாங்கிட்டு சொத்த வித்துட்டு வா... இங்கயே இருக்கலாமுன்னா... எதுக்கு வந்த....சொல்லு சொல்லு...??” என்ற உலுக்க...ஸ்ரீ உள்ளுக்குள் செத்துக்கொண்டிருந்தான்...சுமி...சுந்தரத்தின் கையை பிடித்து..”.வேணாங்க... எதுவும் சொல்லாதிங்க...அவன் விருப்பப்படியே விட்டிருங்க...”.சுந்தரம் ஒன்றும் சொல்லாமல்.... பீரோவை திறந்து அதில் இருந்த பத்திரங்களை கொண்டுவந்து அவன்முன் போட்டவர்....” இந்தா ஸ்ரீ ... நீ எப்ப வருவன்னுதான் காத்துக்கிட்டு இருந்தோம்.. இந்தா இதெல்லாம் நான் சம்பாரிச்ச சொத்து எல்லாத்தையும் உன் பேருக்கு மாத்திட்டோம்... பெத்தவனா நான் ஒருநாள்கூட என்னோட கடமையில இருந்து தவறுனதில்லை.... நாங்க இந்த வீட்டை விட்டு போறோம்... எல்லா சொத்தும் உன் பேருல இருக்கு அந்த கார்மெண்ட்ஸ மட்டும் எங்களோட மருமக.... இல்ல மக பேருல மாத்தலாம்னு இருக்கேன்.... எல்லா வீடு... எஸ்டேட்...பங்களா எல்லாத்தையும் உனக்கு குடுத்துட்டோம் நாங்க ஒரே ஒரு பிளாட்ட மட்டும் எடுத்துக்கிட்டோம்....இந்தா.... இது என் மருமக கையெழுத்து போட்டுக்குடுத்த பத்திரம்...ரெண்டு பத்திரம் இருக்கு... ஒன்னு சொத்த விக்கிறதுக்கு... ஒன்னு டைவர்ஸ்க்கு நீ உன் இஷ்டப்படி எப்படி வேணும்னாலும் இருந்துக்க... எங்க வேணும்னாலும் போய்க்க நானும் உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்க இந்த பாவப்பட்ட ஜென்மமும் எதுவும் கேக்கமாட்டோம் நாங்க கிளம்புறோம்.....” சுமித்ரா அழுது கொண்டே இருக்க ஜெயா குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்...அனைவரையும் ஒரு முறை பார்த்தவன்.... எழுந்து .... “அம்மா... அப்பா.. இங்க பாருங்க.. நீங்க சொல்ல வேண்டியது எல்லாத்தையும் சொல்லிட்டிங்க.... கடைசியா நானும் ஒன்னு சொல்லனும்பா... அத மட்டும் கேட்டுருங்க...” பத்திரம் அனைத்தையும் எடுத்து தந்தையின் காலடியில் வைத்தவன்....” அப்பா ஒரு மகனா நான் உங்களுக்கு எப்பவும் கஷ்டத்தை மட்டும்தான் குடுத்திருக்கேன்... எனக்கு உங்க மேலயும் அம்மா மேலயும் பாசம் இருக்குப்பா... நான் லண்டன விட்டுட்டு இங்கயே வந்திட்டேன்பா... இனிமே உங்க..கூடவும் அம்மாகூடவும் இருக்க போறேன்பா…..”சுமித்ரா கண்ணீருடன் தன்கணவரின் கையை பிடிக்க...” இல்ல ஸ்ரீ அது சரிவராது... நீயும் இங்க வரும்போது எத்தனையோ முறை இப்படி சொல்லியிருக்க நாங்களும் நம்பிக்கையா இருப்போம் அப்புறம் ரெண்டு... மூனு மாசத்துல கிளம்பிருவ... நாங்க நம்ப தயாராயில்ல... உங்க அம்மா இப்பத்தான் கொஞ்சம் நல்லாயிருக்கா மறுபடியும் அவள படுக்க வைச்சிராத... எனக்கும் உறவுன்னு சொல்லிக்க அவளவிட்டா வேற ஆள் இல்லை... நீ சந்தோசமா இருப்பா...நாங்க கிளம்புறோம்....”தன் தாயின் காலடியில் அமர்ந்தவன்.....” அம்மா சத்தியமா சொல்றேன்மா.... இனிமே இங்கதான் இருக்கப் போறேன்... என்மேல நம்பிக்கை வைங்கம்மா.... அப்பாட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க....??”ஸ்ரீயின் தலையை பாசமாக தடவியவர்.... பாவமாக சுந்தரத்தை பார்க்க...தன் தாயின் கைகளை எடுத்து தன் கண்ணில் ஒற்றியவன்...” அம்மா இந்த ஒரு தரம் மட்டும் என்னை நம்புங்கம்மா....ப்ளிஸ்...??”ஸ்ரீயை பார்த்த சுந்தரம்” சரி.....ஸ்ரீ நம்புறேன்... உனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்குறேன்.. இன்னும் ஆறு மாசம் உனக்கு டைம் கொடுக்குறேன்... அதுவரைக்கும் நீ எங்களோட இருந்து என்னோட பிசினசையும் பாத்துக்கிட்டா நான் உன்னை நம்புறேன்....”ஸ்ரீ சந்தோசமாக எழுந்து தன் தந்தையின் கையை பிடித்தவன்..”..ரொம்ப தாங்க்ஸப்பா... இனி நீங்க சொல்லுற மட்டும் கேக்குறேன்பா…”அவன் கையை தட்டிக் கொடுத்தவர்....” எனக்கு இன்னும் நம்பிக்கை இல்லப்பா இது உங்க அம்மாக்காக நான் எடுத்த முடிவு பாப்போம் ...நீ என்ன பண்ணுறேன்னு....ஜெயா....அம்மா...ஜெயா...”அதுவரை தனக்குள் ஏதோதோ யோசித்துக் கொண்டிருந்தவள் சுந்தரத்தின் குரலால் நிமிர்ந்து பார்த்தவள்...” சொல்லுங்க மாமா...”“போம்மா போய் மாடியில இருக்க உன்னோட பொருளையெல்லாம் எடுத்து கீழ இருக்குற ரூமுக்கு கொண்டு வாம்மா...”

“ம்ம்ம் சரி மாமா....” ஸ்ரீ அதிர்ச்சியுடன் சுந்தரத்தை பார்க்க...“என்ன பார்க்குற ஸ்ரீ... நீ ஆறு மாசம் ஸ்டடியா இருந்து காட்டு... அப்புறம் உன் பொண்டாட்டியோட குடும்பம் நடத்தலாம்... அதுவரைக்கும் ஜெயா கீழேயே இருக்கட்டும்... ஏன்னா நீ...வெளிநாடுகள்ல இருந்தவன்...நாளப்பின்ன ஜெயாவை கைவிட்டா...பாவம் அந்த பொண்ணு உன் குழந்தையோட தனியா நிக்காம...தைரியமா ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கும் பாரு.... நான் இப்ப உனக்கு அப்பாவா இருக்குறதவிட ஜெயாவோட அப்பாவாத்தான் இருக்க விரும்புறேன்...நீயும் ப்ரூ பண்ணு என்னோட மகன்னு அப்புறமா..... நான் நம்புறேன்....ஜெயாம்மா...நீ இந்த மாமா சொல்லுறத கேட்ப தானே.....??”“கண்டிப்பா கேட்பேன் மாமா.....”“அப்ப இந்த ஆறு மாசத்துக்கு எக்காரணத்தைக் கொண்டும் நீ மாடிக்கு போக வேணாம்மா... உனக்கு நல்லதுக்கு மட்டும்தான் சொல்லுறேன்... புரிஞ்சு நடந்துக்குவன்னு நினைக்கிறேன்” என்றபடி வெளியில் சென்றார்...

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#5
சுமித்ரா..”.ஸ்ரீ உங்க அப்பா இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெருசுப்பா...நீ அவரு மனசு புரிஞ்சு நடப்பா...ஜெயாம்மா எனக்க ரொம்ப நேரமா உக்கார்ந்தே இருந்தது முதுகு வலிக்குது...கொஞ்சம் படுக்க வைக்கிறாயாம்மா....??”“இதோ அத்த “என்றபடி கிட்டே வர...ஸ்ரீ தன் தாயை கையில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தான்....
“ எனக்கு ஒரு காப்பி கிடைக்குமா ??”என்று ஜெயாவை பார்த்து கேட்க....
“இப்போ கொண்டு வாரேன்” என்றபடி வெளியேறினாள்...சுமித்ரா கண்மூடி உறங்க முயற்சிக்க...தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தவன்...மெதுவாக வெளியேறினான்... தோட்டத்தில் சுந்தரம் உட்கார்ந்திருப்பது தெரிந்தது... தந்தையின் மெலிவு பார்க்கும் போதே தெரிந்தது... இந்த இருபது நாள்ல நம்ம வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிருச்சு...தோட்டத்தில் அமர்ந்திருந்த சுந்தரம் ஸாரி ஸ்ரீ எனக்கு இத தவிர வேற வழி தெரியல மறுபடியும் ஒரு ஏமாற்றத்த சுமி தாங்க மாட்டா அதுதான் கொஞ்சம் கடினமா உன்கிட்ட பேசுற மாதிரி ஆயிருச்சு.... சுமிதான் இப்படி இருக்கானா மருமக அதவிட ஏமாந்த பொண்ணா இருக்கா... எதுக்கெடுத்தாலும் ரொம்ப பயந்த சுபாவமா இருக்கு...அந்த பொண்ண ஒரு வேள நீ ஏமாத்திட்டா அந்த பாவத்தை எங்களால எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போக்க முடியாது... உன்னோட பொண்டாட்டிதான் அவ... ஆனா...அவளோட அருமையை நீ புரிஞ்சுக்கனும் அந்த பொண்ணு ஒரு வைரம்னு நீ புரிஞ்சு நடக்க எனக்கு இத விட்டா வேற வழி தெரியல... இந்த ஆறு மாசம் அந்த பொண்ண நீ புரிஞ்சு நடக்க ஒரு வாய்ப்பா இருக்கும் அந்த பொண்ணவிட வேற ஒரு பொருத்தமான பொண்ணு உனக்கு கிடைக்காது.... அது உனக்கு புரியவரும்னு நினைக்கிறேன்... என்று நினைத்தபடி கண் மூடி அமர்ந்திருந்தார்....டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ஸ்ரீ... கிச்சனில் காப்பி போட்டு கொண்டிருந்த ஜெயாவையே பார்த்துக் கொண்டிருந்தான்....ஆகாய ஊதாநிற சேலை....சட்டை...தன் நீண்டபின்னைலை கொண்டையாக மாற்றி போட்டிருந்தாள்...முகம் பொலிவிழந்து காணப்பட்டது...ஆளே மெலிந்து காணப்பட்டாள் மனதிற்குள் ஏதோ யோசித்து கொண்டிருப்பாள் போல.... இவ இப்ப வந்து என்ன குண்டைதூக்கி போட போறாளோ என்று ஜெயாவையே பார்த்துக் கொண்டிருந்தான்....காப்பியை கொடுத்தவள்...மெதுவான குரலில்...” உங்ககிட்ட கொஞ்சம் பேசவா....??’பூனைக்குட்டி வெளிய வரப்போகுது போலவே....ஸ்ரீக்கு ஆயாசமாக வந்தது...ஒன்றும் சொல்லாமல் அவளை நிமிர்ந்து பார்க்க....” நீங்க அத்த மாமாக்கூடவே இருங்க... என்னை பத்தி யோசிக்க வேணாம்... நான் நீங்க இப்ப போன்னு சொன்னாக்கூட உடனே வெளிய போயிருரேன்... நீங்க வந்தவுடன சொல்லிட்டு போலாம்னுதான் காத்துக்கிட்டு இருந்தேன்...அத்த பாவம் நீங்க வராம ரொம்பவே தவிச்சு போயிட்டாங்க.... அன்னைக்கு ஆக்ஸிடென்ட் ஆன அன்னைக்கு எனக்கு ரொம்பவே பயமாயிருந்துச்சு... எங்க அத்தான் மட்டும் நேரத்துக்கு வந்து ரத்தம் குடுக்காட்டா....ரொம்பவே பிரச்சனையா போயிருக்கும்.... கடவுள் மாதிரி வந்து காப்பாத்திட்டாங்க... நான் போயிருரேங்க... நீங்களாச்சும் அத்த மாமாவோட சந்தோசமா இருங்க... வெளிநாடு போறதா இருந்தாலும் இவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிருங்க.... என்னை பத்தி கவலை படாதிங்க...நான் எங்க அத்தான்கிட்ட சொல்லி ஒரு வேலை வாங்கிக்குவேன்... ஆராவும் பாத்துக்குவா..”.மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்தாள்....அதுவரை அவனுள்ளே அடங்கியிருந்த அவன் மனசாட்சி இதற்குமேல் பொறுக்கமாட்டேன் என வெளியே குதித்து... அவனை பார்த்து கைக் கொட்டி சிரித்தது.. டேய்...ஸ்ரீ..நீ இந்த பொண்ணுக்காக லண்டனும் வேணாம்... அந்த பொண்ணுகளும் வேணாமுன்னு வந்த..... இந்த பொண்ணு உன்னை வேணாமுன்னு வீட்ட விட்டு போக போகுதாம்.... ஊருக்கு போறதுக்கு முன்னாடி உன்கிட்ட வேலை தேடச் சொன்னவ... இப்ப புதுசா யாரோ.... அத்தானாம்... அவன்கிட்ட வேலை தேடித்தரச் சொல்லிக்கிறேன்னு சொல்லுது.... நீ ஆறு மாசம் தாங்கமாட்ட போலவே....உங்க அம்மா அப்பாவ இத்தன நாள் பாத்துக்கிட்டதுக்கு நன்றி சொல்லிட்டு அவள அனுப்பிவிடு... நீ மறுபடியும் இப்ப உங்க அம்மா அப்பாவோட லண்டனுக்கே போயிரு... உன்னால உங்க அப்பாவோட பிஸினசயெல்லாம் பாத்துக்க முடியாது...சரியா....என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க...அதை தலையில் தட்டி உள்ளே அனுப்பியவன்...ஜெயா தன்னையே பார்ப்பதை கண்டு... பக்கத்தில் இருந்த சேரைக் காட்டி அமரச் சொன்னான்....ஜெயா அமராமல் நின்று கொண்டே இருக்கவும் தங்களை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்தவன்.... ஒருவரும் இல்லாமல் இருக்கவும் சட்டென்று எழுந்து...ஜெயா வேகமாக தன் அருகே இழுத்தவன்... அவள் இதழில் தன் இதழை புதைத்திருந்தான்....ஜெயாவுக்கு ஒரு பெரிய சுழலுக்குள் மாட்டியது போல இருந்தது.... முத்தமிட்டு நிமிர்ந்தவன்...” என்னடி பொண்டாட்டி... உக்காரு “என்று தன் அருகில் இருந்த சேரில் அமர வைத்தான்...

“இல்ல மாமா.... உங்ககிட்ட…..??”“என்கிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னாரா...நானும்தானே இருந்தேன்.... அப்படி ஒன்னும் எனக்கு கேக்கலையே... ஏண்டி...நான் உனக்காக லண்டனே வேணான்னு வந்தா...நீ நான் வேணான்னு போறேன்னு சொல்லுற... என்னை பார்த்தா எப்படி இருக்கு.... நான் பாக்கத்தாண்டி வெளிநாடு போயிட்டு வந்தவன் மாதிரி இருப்பேன் பக்கா லோக்கல் புரியுதா...இனிமே அங்க போறேன்.... இங்க போறேன்னு சொல்லு இருக்கு உனக்கு காலம் பூராவும் நாம ஒன்னாத்தான் இருக்கனும் புரியுதா....இப்ப என்னவோ...அத்தான் பொத்தான்னு வேற சொல்லுற... உன்னோட புது உறவெல்லாம் தேவையில்ல புரியுதா....பொண்டாட்டி...??” கண்ணீர் வழிந்தபடி இருக்க...ஜெயா... என்ன சொல்லுவாள்... இவர் ஏன் இப்படி பேசுறார்...நமக்கு ஒன்னுமே புரியல.... முதல்ல டைவர்ஸ் தாரேன்னு சொன்னார் வீட்டைவிட்டு வெளிய அனுப்பிடுவேன்னு சொன்னார்... இப்ப இப்படி பேசுறாரே.... அத்தைய பாத்ததுல ரொம்ப குழப்பமா இருக்காரோ“என்னடி...பாக்குற... என்னை பாத்தா லூசு மாதிரி இருக்கா...??”ஜெயா குத்து மதிப்பாக எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள்...” என்னடி சொல்லுற..??”.

மெதுவான குரலில்” என்ன வாடி போடின்னு சொல்றிங்க....??”“நீ... என்னோட பொண்டாட்டி தானே...??”

தலையை ஆட்ட...

“அப்புறம் அதுலயே ஒரு டி..... இருக்கு அப்ப நான் டி போட்டு பேசுனா ஒரு தப்பும் இல்ல புரியுதா...??”

ஜெயா தலையை ஆட்ட...

“நல்லா பூம்பூம் மாடு மாதிரி தலைய தலைய ஆட்டுற...”.

ஜெயா இந்த உலகத்திலே இல்லை.... அவளுக்கு இந்த ஸ்ரீ புதிதாக தெரிந்தான்..... பயமாகவும் இருந்தது...பிடித்தும் இருந்தது என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும் போல இருந்தது.... மெதுவாக எழுந்தவள்...உள்ளே போக பார்க்க காப்பியை குடித்து முடித்தவன்...

“ இங்க பாரு... எங்க அப்பா உனக்கு புள்ளதான் குடுக்க கூடாதுன்னுதான் சொன்னாரு.... ஆனா கட்டிப்புடிக்க வேணான்னு சொல்லலை...முத்தம் குடுக்க வேணான்னு சொல்லலை... லவ் பண்ண வேணான்னு சொல்லலை... அதெல்லாம் இந்த ஆறு மாசத்துல செய்வேன் பாத்துக்க....” ஜெயா திருதிருவென முழிக்க..”..ஸ்ரீ... உன்பாடு ரொம்ப கஷ்டம் போலவே...எல்கேஜியில இருந்து ஆரம்பிக்கனும் போலவே...”டேய்....ஸ்ரீ எப்பாடு பட்டாவது... உங்க அப்பாவோட பிஸினசை இப்ப இருக்குறதவிட ஒரு படி மேல கொண்டு வந்துரு... உன் பொண்டாட்டிய உன்னை லவ் பண்ண வச்சிரு... என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டிருக்க.... அவன் மனசாட்சியோ... ஆமா இவரு பெரிய உனக்கும் எனக்கும் ஜெயம் ரவி.... பிரபு சொன்னவுடன வயல்ல வேலை பார்த்து அவரவிட ஒரு மூட்டை நெல்லை அதிகமா விளைய வச்ச மாதிரி... இவரு அவங்க அப்பா பிஸினசை ஒரு படி மேல கொண்டு வரப்போறாரு... .போடா... போ.... உன்னை பத்தி எனக்கு தெரியும்.... என்று கால் மேல் கால் போட்டு அவனுக்கு சவாலிட்டபடி அமர்ந்திருந்தது.....இனி....................??????.தொடரும்.................
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#7
ஹாய் ப்ரண்ட்ஸ் போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றிப்பா..... அடுத்த பதிவ போட்டுட்டேன்பா படிச்சிட்டு கமெண்ட்ஸ் போடுங்க ப்ரண்ட்ஸ்....நன்றி
 
#8
இந்த அப்டேட் பூராவும்
ஸ்ரீராமன்தான் வந்திருக்கிறான்
என்னோட சிவராமன் செல்லாக்குட்டி
வரலையே, மகேஷ் டியர்?

ஹப்பாடா ஒரு வழியாக ஸ்ரீக்குட்டிக்கு
பல்ப் எரிஞ்சு ஜெயாப் பொஞ்சாதியப்
பாக்கோணுமின்னு கெளம்பி
பிளைட்டு ஏறிட்டான்
போனு ஸ்சுச்சு ஆப்பு செஞ்சதாலே
அப்பா அம்மாவுக்கு அடிபட்டோது
ஸ்ரீக்கு தெரியலை
 
Last edited:
#9
இவ ஒருத்தி, ஆன்னா ஊன்னா
நானு எங்கனாச்சும் போய்க்கிறேன்
நீயி உங்கப்பனாத்தாளோட
சுகமா இருங்கிறா, ஜெயா
கூறு கெட்டவ

அடியேய், செயா?
உன்னைய வுட்டுப்போட்டு
இருக்க மிடியலேன்னுத்தேன்
உன்ற ஸ்ரீ மச்சான் பாரீனேலேந்து
உனிக்காண்டி ஓடியாந்துட்டான்
இனி நீயே விட்டாலும் அவென்
உன்னைய வுட மாட்டான்
செயாப் பொண்ணே
 
Last edited:
#10
கல்லுக்குள் ஒரு காதல்

அத்தியாயம் -16

மனிதன் யாருக்கு வேண்டுமானாலும் பயப்படாமல் இருக்கலாம்... ஆனால்... மனசாட்சியைவிட ஒரு சிறந்த நீதிபதி இந்த உலகத்தில் இல்லை... அதற்கு பாரபட்சம் கிடையாது...லஞ்சம் கொடுக்க முடியாது...சொந்த பந்தம் பார்க்காது... அந்த மனசாட்சி கேட்கும் கேள்விக்கு பயந்துதான் ஸ்ரீ ஊருக்கு போகாமல்.... லண்டனில் சுற்றிக்கொண்டிருந்தான்... ஜெனிபர் கேட்டதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை..... ஸ்ரீயின் முகத்தில் இருபதுநாள் தாடி... கட்டிலில் படுத்து யோசித்து கொண்டிருந்தான்..

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எளிதாக கெட்டுபோக சூழ்நிலையில் இருந்த சிவா கஷ்டப்பட்டு முன்னேறி வர....நல்ல சூழ்நிலையில் நல்ல பெற்றோருக்கு பிறந்த ஸ்ரீ வழி தவறி போயிருந்தான்…. வாழ்க்கை யாருக்கு எப்போது பாடம் கற்றுக்கொடுக்கும் என்று தெரியாது... ஆனால் அப்படி ஒரு பாடத்தை.. ~.ஜெனிபர் மூலமாக ஒழுக்கம்தான் முக்கியம் என்ற பாடத்தை ஸ்ரீ இங்கு கற்றுக்கொண்டான்.... பார்க்கும் போது சாதுபோல தெரிந்தாலும்.... உள்ளே குள்ளநரித்தனம் இருந்தால் மனிதன் எந்த அளவுக்கும் இறங்குவான் என்ற பாடத்தை சதாசிவம் மூலம் சிவா கற்றுக்கொண்டான்... பார்க்கும் ஒரு ஆளின் குணத்திற்கும்.... நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை சிவா மூலமாக ஆரா கற்றுக்கொண்டாள்....
ரொம்பவும் அருமையான வரிகள்
வாழ்க்கையின் நிதர்சனத்தை
புரிய வைக்கும், மண்டையில
நச்சு-ன்னு அடித்து சொன்னது
போல ஒவ்வொருவரின்
வாழ்க்கைக்கும் தேவையான
வரிகள், மகேஷ் டியர்
 
Last edited:

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes