கற்பூர முல்லை Episode 6

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 6


தமிழ் வந்த முதல் நாளில் அலுவலக நிர்வாகம் அனைத்தையும் தீபக் விளக்கினான். பேக்டரியில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்கிறார்கள். அலுவலகத்திலும் நிறைய பேர் வேலை செய்கிறார்கள். இவை அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பில் தமிழ் இருந்தாள். அடுத்து வந்த நாட்களும் இவ்வாறாகவே சென்றன. தீபக் பாரின் செல்ல வேண்டிய நாளும் வந்தது. எல்லாவற்றையும் தமிழிடம் ஒப்படைத்து விட்டு குடும்பத்தோடு சென்று விட்டான். தமிழுக்கு வீடு விட்டால் அலுவலகம். அலுவலகம் முடிந்தால் வீடு இப்படியே நாட்கள் ஓடியது.


அன்று மாலை எப்பொழுதும் போல் அலுவலகம் முடித்து வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கென்று அலுவலக கார் இருந்தது. டிரைவிங் தெரியும் என்பதால் அவளே செல்ப் டிரைவ் செய்வாள். வெளியில் ஏதாவது ஷாப்பிங் செய்வது என்றால் மட்டுமே கேப் புக் பண்ணி செய்வாள்.


அன்றும் அதே போல் காரை செலுத்திக்கொண்டு இருந்தாள். வழியில் பழக்கடை தென்படவே பழங்கள் வாங்கலாம் என்று காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி சென்றாள். பழக்கடையில் பழங்களை தேர்வு செய்து கொண்டிருந்தாள். அருகே ஒரு பெண்மணியும் நின்று பழம் வாங்கி கொண்டிருந்தாள். இவளை விட இரண்டு மூன்று வயது மட்டும் அதிகமாக இருக்கும். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள் போலும். பார்க்கும் போதே தெரிந்தது.

பழங்கள் வாங்கி கொண்டிருந்த பெண்மணி திடீரென்று மயங்கி விழுந்தாள். உடனே தமிழ் பதறினாள். என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருந்தவர்கள் உதவியோடு அந்த பெண்மணியை எடுத்து காரில் போட்டு கொண்டு டிரைவரை ஆஸ்பத்திரிக்கு வண்டியை விட சொன்னாள்.


ஆஸ்பத்திரியில் அந்த பெண்மணியை சேர்த்தாள். அங்கிருந்த நர்ஸ் அவளிடம் விவரம் கேட்கவே இவர்கள் யார் என்று தெரியாது வரும் வழியில் மயங்கி விழுந்து விட்டார்கள் என்று கூறினாள். சரி அவரின் செல்போன் இருந்தால் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கும்படி கூறி சென்றாள். அந்த பெண்மணியின் ஹேண்ட்பேக் அவளிடம் தான் இருந்தது. அதில் செல்போனை தேடினாள். அது கிடைத்ததும்
அதில் கால் லாக்கில் கடைசியாக அண்ணா என்று ஒரு நம்பருக்கு பேசி இருந்தாள். எதுவாக இருந்தால் என்ன உடன் பிறந்தவராக தான் இருக்க வேண்டும் என்று அந்த நம்பருக்கு அடித்தாள்.


ஓரிரு ரிங் சென்றதும் அடுத்த முனையில் ஹலோ என்ற கம்பீரமான ஆண் குரல் கேட்டது. அந்த கணீர் குரலில் சிறிது தடுமாறினாலும் பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு ஹலோ என்றாள்.
அதற்குள் அகிலன் என்னம்மா.... பவி இப்போது தான் போன் செய்தாய் அதற்குள் என்ன என்று கேட்டான். கேட்ட பின் தான் கவனித்தான் குரல் மாறி இருந்ததை. உடனே யாரு நீங்க.....? என்றாள். அதற்கு தமிழ் பதில் கூறலானாள். என் பெயர் தேன் தமிழ். நான் வரும் வழியில் இந்த போன் வைத்திருக்கும் பெண் மயங்கி விழுந்து விட்டார்கள். உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு போனில் கடைசியாக இருந்த நம்பரை பார்த்து உங்களுக்கு கூப்பிட்டேன் என்றாள். சரிங்க.... நான் வரும் வரை அங்கேயே இருங்க என்று பதில் வந்தது. சரியென்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணியிருந்தாள்.


அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் அகிலன். பவித்ரா வின் பெயரை சொல்லி ரிசப்ஷனில் விசாரித்து
விட்டு பவித்ரா இருந்த அறைக்கு வந்து சேர்ந்தான். அங்கு தமிழ் வெளியில் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் சென்று நீங்கள் தானே எனக்கு கால் செய்தது என்று கேட்டான். அவள் ஆம் என்று தலையாட்டினாள். இப்போது அவங்களுக்கு எப்படி இருக்கிறது என கேட்டான். தெரியல... உள்ளே டாக்டர் செக் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினாள்.


அவளிடம் கேட்டு விட்டு தன் கைப்பேசியை எடுத்து சற்று தள்ளி சென்று யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தான். அந்த சமயத்தில் உள்ளிருந்து நர்ஸ் வெளிப்பட்டு ஒரு மருந்து சீட்டை கொடுத்து சீக்கிரம் வாங்கி வருமாறு கூறினாள். அவளும் கொஞ்சமும் தாமதியாது மெடிக்கல் எங்கு இருக்கிறது என கேட்டு, வாங்கி வருவதற்கு சென்றாள். போன் பேசியவாறே இதை கவனித்து கொண்டிருந்தான் அகிலன்.


பிறகு பேசி முடித்து விட்டு இவன் வரவும் அறைக்குள் இருந்து டாக்டர் வரவும் சரியாக இருந்தது. டாக்டர் நிர்மலா ராணி. புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவர் அவர். அவரும் அகிலனை பார்த்து விட்டார். அகிலனை முன்பே தெரியுமாதலால் அவனிடம் நலம் விசாரித்தார்.. அவனும் அதற்கு பதில் சொல்லிவிட்டு பவித்ரா வை பற்றி விசாரித்தான்.


அவர்கள் இப்போது மயக்கத்தில் இருக்கிறார்கள். மயக்கம் தெளிந்ததும் வலி வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் வலி வந்தால் நார்மல் டெலிவரி பண்ணிவிடலாம் இல்லையென்றால் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறினார்.

பவித்ரா உங்களுக்கு யார்...? என்று கேட்டார் டாக்டர். அவங்க என் நண்பரின் மனைவி. அவன் ஒரு கேஸ் விஷயமாக வெளியே சென்றிருக்கிறான் வருவதற்கு நேரம் ஆகும் என்று நினைக்கிறேன் என்றான் அகிலன். கையெழுத்து போட அவர் வேண்டுமே என்று டாக்டர் கூறினார். சரி வரும்வரை பார்க்கலாம் இவங்களுக்கு மயக்க தெளிய இன்னும் அரை மணி நேரம் ஆகும் அது வரை பார்க்கலாம் என்று கூறி சென்றார் டாக்டர்.


அவன் யோசித்தவாறே இருக்கையில் தமிழ் வந்து விட்டாள். மருந்துகளை உள்ளே கொடுத்து விட்டு நின்றிருந்தாள். முன்பின் தெரியாத இடத்தில் இந்த உதவி தேவைதானா என்று உள்ளத்தில் ஓடி கொண்டு இருந்தது. இது சரியா தவறா என தெரியவில்லை இருந்தாலும் ஆபத்தில் இருப்பவருக்கு உதவுவது மனிதாபிமானம். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று உள் மனம் உரைத்தது.


எங்கேயோ பார்த்து யோசித்து கொண்டு இருந்தவளுக்கு அருகே அகிலன் வந்தது கூட தெரியவில்லை. தன்னை யாரோ உற்று பார்ப்பது போன்ற உணர்வில் திருப்பியவள் எதிரே அகிலன் நிற்பதை கண்டு அதிர்ச்சியுற்றாள்.


அந்த சூழ்நிலையில் இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனாலும் அகிலனே ஆரம்பித்தான். கூட்டி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததற்கு மிகவும் நன்றி... இதுவரை ஆன செலவுகளை தான் தந்து விடுவதாக கூறினான். இப்படி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே உள்ளிருந்து நர்ஸ் வெளிப்பட்டு அவசர அவசரமாக டாக்டரை தேடி சென்றாள். அவள் சென்ற சில மணித்துளிகளில் டாக்டருடன் வந்தாள்.


உள்ளே சென்ற டாக்டர் திரும்பி வெளியே வந்து கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என கூற ஆனால் குமார் இன்னும் வரவில்லையே என்று கூறினான். இப்போது அவங்களுக்கு ஆபரேஷன் செய்யாவிடில் மிகவும் ஆபத்தாகி விடும் அதனால் கார்டியன் என்று நீங்களே சைன் போட்டுவிடுங்கள் என்றுகூறி சென்றுவிட்டார்.

உடனே சில மணி நேரங்களில் எல்லாம் நடந்தாகி விட்டது. பவித்ரா விற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இன்னும் நார்மல் வார்டிற்கு மாற்றப்படவில்லை. மயக்கத்திலேயே இருந்தாள்.

இரவு ஆகிவிட்டது. தமிழும் அங்கேயே இருந்தாள். பவித்ராவிற்கு கணவன், பிறந்த வீட்டு மனிதர்கள், புகுந்த வீட்டு மனிதர்கள் எல்லாம் வரவே இரவு ஆகிவிட்டது. குழந்தை பிறந்தவுடன் தான் அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் யாரும் தமிழை கவனிக்கவில்லை. ஆனால் அகிலன் மட்டும் கவனிக்க தவறவில்லை.


மலரும்
 

Jeevitha Ram prabhu

Active Member
அருமையான பதிவு ரொம்பgap விபோடுங்கள்இனிஞா
அருமையான பதிவு ரொம்பgap விடாதிங்க சீராக பதிவு போடுங்கள்
கண்டிப்பாக இனி ஒவ்வொரு ஞாயிறும் தொடரும் டியர். நன்றி தங்கள் கருத்துக்களுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top