கனவு கவிதை நீ

athi praba

Writers Team
Tamil Novel Writer
#1
வந்தியத்தேவன் மேல் வந்த காதலால் எழுதியது. இப்போது எல்லாம் காதல் கவிதை எழுத சொன்னால் ஒரே வந்தியத்தேவன் நினைப்பு தான் வருகிறது... வந்தியத்தேவனோடு ஒரு பெரிய பயணம் தொடங்கலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது..

( பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்)

கனவு கவிதை நீ


ஆழிப்பேரலையாக
அள்ளிக் சுருட்டுகிறது
அவனுடைய நினைவுகளும்
கனவுகளும்....

கண்ணை இறுக மூடிக்
கொண்டாலும் கனவுக்குள்
வந்து மிரட்டுகிறாய்
மீண்டும் மீண்டும் என்னிடமே....

ஓடி ஒளிந்து கொள்ள தான்
நினைக்கிறேன்...
உன்னுடைய நினைவுகளை
மறந்து துறந்து
உன் நினைவுகளை
மறந்து போக
மறுக்கிறது மனம்....

நேரில் கண்டதில்லை
கற்பனையில் உன்
வசப்படுகிறேன்....

ஆறு அடி உயரமும்
அகன்ற தோளுமாய்....
ஏனோ எதிரில்
வந்து நிற்கிறாய்
கண்முன் கனவில்...,

அருள்மொழி நாயகனாய்
இருக்க ஏனோ....
நீயே மனதில் இடம் பிடிக்கிறாய்...

ஒவ்வொரு நாளும் கனவில்
காதுக்குள் குதிரையின்
குளம்படி ஓசை
அதிர்ந்து தான் போகிறேன்....,
இரவில் தூக்கத்தில்.....

வீட்டில் சொன்னால்
பொன்னியின் செல்வனை
இனி படிக்காதே என்று
மட்டுமே பதில் வருகிறது......

ஏழெட்டு முறை படித்த
பின்னும் புத்தகம் எடுக்காமல் வர்ணனைகள் கண் முன் வர....,

முதலில் வந்து போவது
என்னவோ நீ தான்.....,

வாய்ப்பிருந்தால் வந்தியதேவனை நேருக்குநேர் ஒரே முறை
காண ஆவல் கொள்கிறது....,
கனவில் கண்டு காதல்
கொண்ட கண்கள்.....,

வெளியே கவிதை தர
வெட்கம் தடுகிறது...
வீட்டில் இருக்கும்
வக்கீலுக்கு கவிதை
எழுதுவதை குறைத்து
புத்தகத்தில் புதைந்து
போன வந்தியத்தேவனுக்கு
கவிதை சொல்கிறேன்....

இது போல எத்தனை
பெண்களை வசியம்
செய்தானோ இந்த
வந்தியத்தேவன்....

ஆதிபிரபா....
 
#4
சூப்பர் கவிதை, ஆதிபிரபா டியர்
எனக்கும் அருள்மொழிவர்மனை
விட வந்தியத்தேவனைத்தான்
பிடிக்கும்
குந்தவையின் மீது எனக்கு லைட்டா
பொறாமைப்பா
 
Last edited:

R.viji

Well-Known Member
#5
ஆமாப்பா கல்கியோட பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் நம்மையும் அந்த காலகட்டத்திற்க்கே கூட்டிசெல்வார்கள்.கதை படித்து ரொம்ப நாள் அந்த கதை மண்டையில் ஓடி கொண்டு இருந்தது
 
RajiChele

Well-Known Member
#6
சூப்பர் கவிதை, ஆதிபிரபா டியர்
எனக்கும் அருள்மொழிவர்மனை
விட வந்தியத்தேவனைத்தான்
பிடிக்கும்
குந்தவையின் மீது எனக்கு லைட்டா
பொறாமைப்பா
Ha ha banu ma enakum than!!! :p:p;)
 
#7
Ha ha banu ma enakum than!!! :p:p;)
ஹா ஹா ஹா
காசா, பணமா? பொறாமைதானே
அதுவும் இல்லாத ஒருத்தியின் மீது?
No problem, ராஜி டியர்
உங்களுடைய முழுப் பெயர் என்னப்பா?
ராஜலக்ஷ்மி செல்வம்?
ராஜேஸ்வரி செல்வம்?
Or செல்லப்பன்?
 
RajiChele

Well-Known Member
#8
ஹா ஹா ஹா
காசா, பணமா? பொறாமைதானே
அதுவும் இல்லாத ஒருத்தியின் மீது?
No problem, ராஜி டியர்
உங்களுடைய முழுப் பெயர் என்னப்பா?
ராஜலக்ஷ்மி செல்வம்?
ராஜேஸ்வரி செல்வம்?
Or செல்லப்பன்?
Rajalakshmi Chezhiyan.. Banu ma..
 
#9
Rajalakshmi Chezhiyan.. Banu ma..
வாவ் சூப்பர் நேம், ராஜலக்ஷ்மி செழியன் டியர்
உங்களுடைய பெயரை கரெக்ட்டா சொல்லிட்டேன்
உங்க வீட்டுக்காரர் பெயர்தான் குழப்பிட்டேன்
Chele-ன்னு இருந்ததால் நான்
அப்படி கெஸ் பண்ணிட்டேன்ப்பா,
ராஜி டியர்
 
Last edited:

RajiChele

Well-Known Member
#10
வாவ் சூப்பர் நேம், ராஜலக்ஷ்மி செழியன் டியர்
உங்களுடைய பெயரை கரெக்ட்டா சொல்லிட்டேன் உங்க வீட்டுக்காரர் பெயர்தான் குழப்பிட்டேன் Chele-ன்னு இருந்ததால் நான் அப்படி கெஸ் பண்ணிட்டேன்ப்பா, ராஜி டியர்
Ninga epavume super than banu ma!!!! :):)(y)(y)
 
Advertisement

New Episodes