கண்ணதாசனின் கைவண்ணம்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே…..வாழ்நாளிலே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே…..வாழ்நாளிலே
பருவம் என்னும் காட்டிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்…சுகம் பெறுவார்…அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே……… யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே…..வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்…
இளமை மீண்டும் வருமா…. மணம் பெறுமா…..முதுமையே சுகமா…
காலம் போகும் பாதையை இங்கே………..யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே…..வாழ்நாளிலே
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு….இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே……..யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே…..வாழ்நாளிலே
ஆஅ………..ஆஅ………..ஆஅ……

பாடும் குரலையும் பாடலின் இசையையும் கொண்டு ஒரு வேள்வியையே நடத்தி இருக்கிறார் மகாதேவன்.
இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர்.
முதல் சரணத்தில் பருவ வயதும், இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வையும் எளிதாக விளக்கி இருப்பார்…
செட்டி நாட்டு கவியரசுக்கு கணக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்…

“வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு….இருப்பது கனவு..!
காலம் வகுத்த கணக்கை இங்கே……..யார் காணுவார்!”

ஒரு முறை கோடம்பாக்கம் ரயில்வே க்ராஸிங்கில் சிக்னலுக்காக கண்ணதாசன் காத்திருந்த போது, சட்டென்று ஏற்பட்ட அகவெளிப் பாட்டை சிகரெட் பாக்கெட் அட்டையில் எழுதி வைத்தாராம்.
சிகரெட் பெட்டியில் சிந்திய தத்துவ முத்துக்கள் இன்றும் தமிழக மக்களின் காயம் பட்ட மனதிற்கு ஆறுதல் மருந்தாகிறது.
———————–
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: திருச்சி லோகநாதன்
 

mila

Writers Team
Tamil Novel Writer
எங்க அப்பா பாடிகிட்டே இருப்பாரு. சோ பழைய பாடல்கள் நிறை எனக்கு தெரியும், இந்த பாடல்வரிகள் மிகவும் அருமை.:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top