கடும் சோதனைகள் வருவது ஏன் ...?

Advertisement

Eswari kasi

Well-Known Member
கடும் சோதனைகள் வருவது ஏன் ...?
கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...?
.
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !

எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?

வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது. நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.

ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.

விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்
சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.

எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.

உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.
கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்...

நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்....
வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்....
கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்...

பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...
சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.

உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.

கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்...!
-நன்றி
 
Rajesh Lingadurai

Active Member

நல்ல தன்னம்பிக்கையூட்டும் கட்டுரை. இதுபோன்ற தன்னம்பிக்கை கட்டுரைகளை மேலும் எழுத வாழ்த்துக்கள். நான் கடவுள் நம்பிக்கையற்றவன். விதியை ஏற்றுக்கொள்ளாதவன். கடவுள் நம்பிக்கை, விதி இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துமென்றால், அவற்றை ஏற்றுக்கொள்வதில் பிழையில்லை. ஆனால் அதனால் வரும் நன்மைகளை விட தீமைகளே நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன்.

கடவுள் நம்பிக்கை, விதி இரண்டும் உண்மையென்றால் கோயிலுக்குள்ளேயே ஒரு குழந்தையைக் கற்பழிக்கும்போது அந்த கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார். கடவுளை நம்பாதவர்கள் கூட விதியை நம்ப வேண்டுமென்று இங்கு நிர்பந்திக்கப் படுகிறார்கள். ஏனென்றால், கடவுள் மற்றும் விதி என்ற பெயரால்தான் இங்கு தவறுகளே கட்டமைக்கப்படுகின்றன. ஒரு குழந்தை ஏன் கற்பழிக்கப்படுகின்றது என்று நியாயம் கேட்டால், அந்த குழந்தை போன பிறவியில் செய்த தவறுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறது என்று கூசாமல் சொல்கிறார்கள். பச்சிளம் குழந்தையை ஒருவன் கற்பழிக்கிறான், அவன் செயலைக் கூட நியாயப்படுத்த இந்த விதி உதவுமானால், அப்படி ஒரு விதி நமக்குத் தேவைதானா? உண்மையில் மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள் என்றால், சில லட்சங்களில் இருந்த மனிதர்கள் கூட்டம் இன்று ஏன் 700 கோடிகளைத் தாண்டி நிற்கிறது. தவறு செய்தவர்கள், தனது வசதிக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காப்பு வேலைதான் விதி என்பது எனது வாதம்.

என்னைப் பொருத்தவரை, கடவுள் என்பது ஒரு கோட்பாடு, ஒரு ஆள் இல்லை. கலப்படம் இல்லாத அன்பின் உச்சம்தான் கடவுள் நிலை. அன்பு அறவே இல்லாத நிலை என்பது அதற்கு நேரெதிர் நிலை. ஆகையால், இந்த பூமியில் உள்ள அனைவருமே கடவுள்தான் என்பது என்னுடைய கருத்து. நம் முன்னோர்கள் கடவுள் பற்றி குறிப்பாக சொல்லிவிட்டுப் போன அனைத்துமே, தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் சொன்னதுதான். கடவுள் (கட + உள்), இறைவன் (இறை + அவன்), தத்துவமசி (நீதான் கடவுள்), அஹம் ப்ரஹ்மாஷ்மி (நான் கடவுள்). இப்படி எந்த ஒரு சொல்லை எடுத்தாலும், அது மறைமுகமாக நம்மையே குறிக்கிறது.

விதி அல்லது ஊழ் என்பது செயல் விழைவுத் தத்துவம்தான். நமது ஒவ்வொரு செயலுக்கு சமமான எதிர்வினை என்ற தத்துவம்தான் அது. நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம், நமது முன்வினைகள் நம்மைத் துரத்துகின்றன எனபதெல்லாம் கற்பனை. நமது சமுதாயத்தின் தவறுகளை நாம் பொறுத்துக்கொள்ள, ஆட்சியாளர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள்தான் விதி. மகாபாரதம், ராமாயணம் என்று காவியங்களின் பின்னணியே விதியை நம்ப வைப்பதுதான். தவறு என்னும் ஊற்றில் ஊற்றெடுத்த நச்சுத்தண்ணீர்தான் விதி. கடவுள் நம்பிக்கையில்லை என்றால் கூட ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் விதியை நம்பமாட்டேன் என்று சொல்லிப்பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவே உங்களை எதிர்க்கும். விதி என்பது சதி, நம் நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு நடுவில் இழையோடியிருக்கும் சூத்திரக்கயிறு. அந்தக் கயிற்றை அறுத்துவிட்டுப் பார்த்தால்தான், நமது சமுதாயத்தின் குற்றப்பின்னையை உணர முடியும்.

சமுதாயத்தைக் குறைகூறும் நோக்கில் நாம் இதைக் கூறவில்லை. ஆனால், சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாதென்பதற்காக சொல்கிறேன். தங்கள் கட்டுரைக்கு மீண்டும் நன்றி.
 
Nandri sir, ethu ennudaiya katurai alla, silla pathivukalai padikkum pothu nantragha erukkirathu yendru thondrum, appadi naan paditha oru pathivai dhan poten. Thani manidhan olukkamaga erunthale naatil thavarukkal nadakkathu, appadi yarum erukkarkala yenbathu dhan kelvikuri
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top