ஒரு வாசகியின் கொள்கை 2

Advertisement

Mers

Writers Team
Tamil Novel Writer
படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லிட்டு போங்க நட்பூஸ்


ஒரு வாசகியின் கொள்கை 2

ஹே வெளிய வாடி ஆஃபீஸ் கு லேட்டாச்சு வீட்ல இருக்கறவளுக்கு இப்போ தா பாத்ரூம் ல உருட்டிட்டு இருப்பா

உள்ளே வெஸ்டர்ன் டாய்லெட் மீது உக்காத்துகொண்டு தன் மிக உயர்ந்த செல் போனில் (அப்டினு அவ மனசுல நெனச்சுக்குறாங்க ) நேற்றைய நைட் போட்ட அப்டேட் ஐ படித்துக் கொண்டு இருந்தால் நம்ம லக்ச்சு (லட்சுமி ) ஆனால் அவளின் ஆசை கணவன் அவளை லக்ஸ் என்று தான் அழைப்பான் இல்லை இல்லை அப்டி செல்ல பெயர் வைத்து தான் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுருந்தாள்

அந்த அத்தியாயத்தை முடித்தவுடன் வெளியே போகலாம் என்று நினைத்தாள் அதுற்குள் தன் முறுக்கு மீசை மாமா அவளை அழைத்து கொண்டிருந்தான்

வரேன் மாமா ஒரு டூ மினிட்ஸ் .

செரி சுசீக்கிரம் வா. உன் மொபைல் எங்க வச்ச என் மொபைல் ல நெட்ஒர்க் இல்ல. இம்போர்ட்டண்ட் ஆஹ் கால் பண்ணனும் . பெட்ரூம் ல தேடிட்டே இல்லடி ... கால் பண்ணா நாட் ரீச்சபெல் வருது . எங்க வச்சன்னு சொல்லு நானே எடுத்துக்க்ரே .

அய்யயோ போச்சு போச்சு மாட்டுனமா என்று சொல்லி கொண்டே மொபைல் ஆஹ் பிளைட் மோட் ல தா போட்டோமா என்று மறுபடியும் செரி பார்த்துக்கொண்டாள்

ஆம் எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் நைட் ல யாரு யாரு அப்டேட் போட்ருக்காங்கனு பார்த்துக்கொண்டிருப்பாள் அதற்கு ஏத்த இடம் பாத்ரூம் தான் . அவளிடம் இருப்பதோ சாம்சங் பீஹோல்டு ஆரம்ப காலத்தில் வந்த டச்சுஸ்க்ரீன் மொபைல்..லிங்க் ஓபன் செய்த பின்னர் ஆஃ ப் லைன் போய்டுவாள் . இது எப்போதும் நடப்பது தான் .( டேட்டா சேமிப்புங்க தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க தெரிஞ்சவங்க மீ டூ னு சொல்லிகோங்க) . அப்ரோ எதுக்கு பிளைட் மோட் .. வேற ஏதுமில்லைங்க இந்த மாதிரி சில கொசு இலைல இல்லை ஹஸு (ஹபண்டு ஓடிஏ சோர்ட் போர்முங்கோ )தொல்லைங்க திடீர்னு வரமுங்க அதுக்குதா இந்த முன்னேற்பாடு ...ஈஈஈஈ


வெளியில் போகுமுன் ஐயோ மறக்காம பிளஷ் பட்டன் அமுக்கிரனும் . அவள் உள்ளே சென்றதது அப்டேட் பார்ப்பதற்கு மட்டுமே ஆனால் வெளிய அவளின் ஆசை கணவனை நம்ப வைப்பதற்காக இந்த எச்சரிக்கை செயல்

வெளியே வந்தவள் என்ன இப்டி சத்தம் போடறீங்க அதான் காபி வச்சுட்டு தானே போனேன் . அதுக்குள்ள ஒரு சவுண்ட் . மனுஷன் நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல. பட பட பட்டாசை பொரிஞ்சுத்தள்ளி விட்டாள்

நேரே கிட்சேன் சென்றவள் தன் நயிட்டி பாக்கெட்டில் இருந்து மொபைல் ஐ எடுத்து கடுகு டப்பா பக்கத்துல வைத்துவிட்டாள் கணவன் அவளை தேடி அங்கு வருவதற்குள் .

மொபைல் எங்க எங்க னு காட்டு கத்து கத்த வேண்டியது.இங்க தான் இருக்கு . ஒரு இடம் தேடறது இல்ல. ஆ வுனா ஹே தேடி குடு தேடி குடு னு சொல்லி மனுசனா டென்ஷன் படுத்தறது . நா என்ன டிடெக்ட்டிவ் ஏஜெண்சி லியா வேலை பாக்கறேன் . நான் படிச்ச படிப்புக்கு எங்க எல்லாமோ வேல கெடச்சுது . ஏன் நல்ல நல்ல மாப்பிள்ளை லா வந்தாங்க . அமெரிக்கா ல கூப்டாக ஆஸ்திரேலியால கூட கூப்டாக என் கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன் என்று ராகமாய் இழுத்து இழுத்து பேசி மொபைலை தனக்கு பின்னால் ஆ வென நின்று கொண்டிருந்த கணவன் கையில் குடுத்து விட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கிவிட்டாள் . அப்பாடா தப்பிச்சோம் சாமி . எவ்வளவு லெங்தா பேச வேண்டி இருக்கு முடியலடா சாமி . ஒரு வாய மூடவே இவ்ளோ கஷ்ட படறோம் ஊரு வைய எப்படி தான் அடக்கறாங்களோ
என்று கூறிக்கொண்டு இருந்த மனைவியை புரியாது பார்த்து

ஏன் டி நா இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோபப்படற

சும்மா என் வாய கிளறாம பாத்ரூம் போயிட்டு வந்து இந்த சப்பாத்தி தேச்சி தாங்க நான் குருமா பண்ணனும்

இருடி நைட் வந்து வச்சுக்கறே என்று சொல்லி பாத்ரூமில் நுழைந்தான் அவளின் கார்மேக கண்ணன் நம்ம லக்சு பாப்பா ஹஸ்ஸு திரு செந்தில் . அது என்னவோ பேரு செந்தில் தாங்க ஆனா நம்ம லக்சு கூப்புட்றது அந்த அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி இல்ல இல்ல அந்த அந்த நாவல் படிக்கிறப்போ வர ஹீரோ வின் செல்ல பெயரைக் கொண்டு . செந்தில் கு என்னவோ பிடிக்காது என்று வெளியில் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் மிகவும் ரசிப்பான் . அதுவும் அவர்களின் தனிமையில் மிகவும் காதலுடன் கூப்பிடுவாள் அவளின் செல்ல லக்சு இப்போ கூட அவளை லட்டு என்று அழைக்க கேட்டுக் கொண்டிருந்தாள் . இவன் தான் அதெல்லாம் முடியாது என்று கூறி நாட்கள் கடத்தினான் .. இப்படி செய்தாள் தினமும் நச்சரிப்பாள் வித விதமாய் கெஞ்சுவாள் சில நேரங்களில் முத்தமும் கிடைக்கும் அனால் நம்ம ஆளு மொத்தமா எடுக்க நாட்கள் கடத்தினான் . சில பல முத்தங்கள் குடுப்பான் நெற்றியில், பிறகு கன்னத்தில், கைகளில் என்று அனால் அவளின் இதழ்களை தீண்டும் உரிமையை இன்னும் அவன் எடுத்துக்கொள்ளவில்லை . இப்படி இல்லை மாற காயை இருந்து அவளிடம் பெரும் சலுகைகளே தனி சுகம் .

. அந்த சுகமே அவனின் ஊக்கசக்தி ... அவனுக்குத் தெரியும் அவள் ஏன் உள்ளே அவ்வளவு நேரம் இருந்தால் என்று இருந்தாலும் அவளை இப்டி டென்ஷன் படுத்துறதுல அவனுக்கு ஒரு குஷி ஒரு அல்ப சந்தோசம் அவளின் சொற்ப்பொழிவை அவ்வளவு ரசிப்பான் ...கூட்டு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் சந்தோஷங்களை அவள் இழக்கிறாளோ என்று அவனுக்கு எப்பொழுதும் ஒரு நெருடல் இருக்கும். அவன் கத்தியது கூட அன்னை கிட்சனுக்கு வருவதற்குள் இவள் வந்துவிட வேண்டுமே என்று தான் தேவை இல்லாத பேச்சுக்கள் அவளைக்கொண்டு இடம் பெறுவது அவனுக்கு பிடிக்காது . அவன் மட்டும் தான் அவளை திட்டவும் அணைக்கவும் அப்புரம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் மத்ததெல்லாம் . ஒரு உரிமைக்கொண்ட நேசம் , காதல் , இத்தியாதி இத்தியாதி



லக்ஸ்ஸு பாப்பாவோ ஆமா இவர் அப்புடியே நம்மள வச்சுக்கிட்டாலும் கட்டிக்கிட்டு வந்துருக்கோம் விட
வச்சுக்கிட்டாலாவது நம்மல கொஞ்சம் ஹெவியா கவனிச்சா சேரி என்று முணுமுணுத்துக் கொண்டு குருமாவை தயாரித்துக் கொண்டே இதுகளை (அட நம்ம கணவன் மார்களை தான் இவ்ளோ மரியாதையாய் அழைக்கிறாள் ) கொஞ்சம் நாவல் படிங்க னு சொன்னா கேட்டாத்தானே . எப்போ பாரு நியூஸ் நியூஸ் .. அதுல எங்க வாழ்க்கை பாடம் வரும்.வாழ்க்கை ஒரு நாடகம் மாதிரி தான் எல்லாம் காட்டுறானுங்க . எதோ நாவல் படிச்சா கொஞ்சம் அப்புடி இப்புடி தெரிய வரும் நம்மளும் அப்புடி எப்புடி நடந்துக்களானு கத்துக்கிட்டா பரவா இல்ல நம்மள மட்டும் கல்யாணத்துக்கு முன்னாடியே சமைக்க தெரியுமா பாட்டு பாட தெரியுமான்னு கேக்க வேண்டியது நம்ம திருப்பி ரொமான்ஸ் நல்லா பண்ண தெரியுமான்னு கேட்ருக்கணும் எல்லா எங்க அப்பாவ சொல்லணும் .

தம்பி ரொம்ப தங்க கம்பி னு சொல்லி கட்டிவச்சுட்டாரு . எல்லாம் நேரம் என்று சொல்லி கொண்டே காப்பி கோப்பைகளை எடுத்து கொண்டு மாமனார் மாமியாரின் அறைக்கு சென்றாள் . அவர்களிடம் காபி டிரேயை கொடுத்துவிட்டு . கணவனுக்கு தேவையான துணிகளை பெட் ல எடுத்து வச்சுட்டு குக்கர் விசில் வருவதை கவனிக்க சென்றாள் .

மாமனாரும் மாமியாரும் வாக்கிங் செல்வதாக சொல்லிக்கொண்டு சென்று விட்டார்கள் .

சப்பாத்தி மாவு பிணைய பிணைய படித்த அத்தியாயத்தின் நினைவுகள் . அதில் நாயகன் நாயகி சப்பாத்தி பிசையும் போது அவளின் கைகளை பின்னாலிருந்து அவன் கைகளை கொண்டு பிசைந்து அவளின் மனதை சேர்த்து பிசைந்தான் அதை நினைக்கையிலே நம்மளுக்கும் கல்யாணமாகி 40 நாள் ஆச்சு எங்கே .... பாசமா இருக்கார் எல்லா பண்றார் ஆனா என்ன தொட மட்டும் யோசிக்கிறார் ஒருவேளை காதல் தோல்வியோ இல்லையே அப்டி நம்ம அலசி அறைஞ்சதில ஒன்னும் தெரியலையே அப்போ அப்போ காட்டிபிடிக்கிறார் நம்மளும் முத்தம் கொடுக்குறோம் அவரும் கொடுக்கிறார் அப்ரோ ஏன் என்று நினைத்தவள் அன்று அவன் முதலிரவின் போது கூறியதை நினைவு கூர்ந்தாள்
 

Mers

Writers Team
Tamil Novel Writer
இங்க பாரு லெச்சு நான் ரொம்ப உன்னை நேசிக்கிறேன் நீ இல்லாம நான் இல்லை அப்டிலாம் ஒன்னு இருக்கா என்று எனக்கு தெரியல . இதுவரை நான் காதல் வயப்பட்ட தில்லை .ஆனா உன் போட்டோ அம்மா காட்டுனப்போ எதோ என் மனசு சொல்லிச்சு இவள் உனக்கானவன்னு உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு நான் கேட்டு தெரிஞ்சுகிறத விட நான் வாழ்ந்து தெரிஞ்சுக்கணும்னு ஆசை படறேன் ... உனக்கு முன்னாடி காதல் இருந்துச்சா இல்லையானு கூட எனக்கு தெரிய வேணாம் அது கடந்த காலம் . இந்த நாள் 6.20 மணில இருந்து நீ என் மனைவி எண்ணில் சரி பாதி .உனக்கு எங்கிறதா விட நமக்கு தான் அப்டிங்கிறதே நான் விரும்புறேன்.
உன்னை நான் தெரிஞ்சுக்கணும் அப்டிங்கிறதா விட நான் உன்னை உணரணும்னு ஆசைப்படறே அதுகப்பரோ நம்ம நம்ம இல்வாழ்க்கையை தொடங்கலாம் னு என் எண்ணம் . இதில் உனக்கு துளி அளவு இஷ்டமில்லைனாலும் இப்போவே சொல்லு ஐ அம் ஓகே வித் இட்.

நம்ம லெச்சு பாப்பா வோ என்ன இவரு நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொல் உதடுகள் கூட ஓட்டும் ங்கிறத இவ்ளோ லெங்த் ஆஹ் சொல்றாரு நம்ம படிச்ச நாவல்ஸ் ல எல்லாம் இப்டி வரலையே..

என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே . அவள் கண்ணாளன் அவள் கையை பிடித்து உன்னை நான் காதலிக்க விரும்புகிறேன் உனக்கு சம்மதமா ? என்று கேட்டு விட்டான் அவளும் என்ன புரிந்ததோ ஆம் என்று மேலும் கீழும் தலையை ஆட்டினாள் . பிறகு நீ டையார்ட் ஆஹ் இருப்ப நீ தூங்கு லச்சு காலைல இருந்து ஒரே அலைச்சல் நீ தூங்கு . என்று சொல்லி அவன் படுக்கையின் ஓரத்தில் செவுரு ஓரமாக படுத்துக்க கொண்டான் . அவள் அவனருகில் படுத்துக் கொண்டு யோசித்தாள் என்ன பேசுனார் என்று மெதுவாக அவளுக்கு புரிந்தது இடியாப்ப சிக்கலை நூடுல்ஸ் லெவெல்க்கு கொண்டு வந்தாள் . அத்தருணமே அவனை மிகவும் பிடித்து விட்டது . அவசர கல்யாணத்தினால் அவனிடம் அவள் பேச நேரம் இல்லாமல் போனது .அவர புரிஞ்சிக்க எனக்கு ஒரு சான்ஸ் அதே மாதிரி அவருக்கும். நல்ல நல்ல வசனம் எல்லாம் பேசுறாரு . செம ரொமான்டிக் ஆஹ் இருப்பாரு போல .. ஐயோ ஜாலி தான் . நமக்காக யோசிக்கிறார் இது போதும் உடனே மனதில் (இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேண்டும் நீ போதுமே பட்டு ஓடியது )..சிறிது நேரம் கழித்து அவன் புறம் திரும்பி ஐ லவ் யு மை சென்ட் (செந்தில் ஷார்ட் பார்ம் ) என்று அவன் முதுகுக்கு பின்னால் அவனுக்கு கேக்காத வாறு சொல்லி படுத்துக் கொண்டே அவனை பார்த்துக்கொண்டே உறங்கிப்போனாள்

அவனோ அவளின் கூற்றை கேட்டுக் கொண்டு தான் இருந்தான் . ஆனாலும் அவள் தன்னவள் அவளிடம் கூடல் கொள்ளும்போது ஒரு புனிதமும் தேடலும் இருக்க வேண்டும் . திடீர் கல்யாணம் தங்களை அறிய நாட்களும் வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் . அவனின் ஒவ்வொறு செயலும் அவளை அவன் மீது காதலுக்கு அளவுகோல் இல்லை என்று உணரவைத்தது . தினமும் அவளிடம் பேசுவான் அவளின் பலம் பலவீனம் .அதில் அவள் நாவல் பிரியை என்று அறிந்து அவளுக்கு நாவல்களை வாங்கி குவித்தான் .. இப்டி வெஜ்ஜா இருந்த வங்க எப்போ நான் வெஜ் ஆனாங்கனு அவங்களுக்கே தெரியாமல் போனது. ஆனாலும், கூடல் மாட்டும் அவர்களிடத்தில் இல்லை.

ஹனிமூன் கூட பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தான் அவனின் எண்ணம். இவள் தான் பிரண்ட்ஸ் facebook இல் போடும் ஹனி மூன் போட்டோஸ் ஐ பார்த்து காண்டாவாள் ... எல்லா நம்ம வரம் சாமியார் ஆ இருக்கார் .உடனே கன்னத்தில் போட்டுக்கொண்டு இப்போ ல சாமியார் தா நிறைய குட்டியோட சுத்துறார் . இவர் ஒரு தனி டிசைன் என்று புலம்புவாள் அனால் அவனிடம் ஏதும் சொல்லமாட்டாள் . ஆனால் அவனிடம் செல்ல கொஞ்சவும் மற்ற வேளைகளில் முகம் சுண்ணாகாமல் இருப்பவள் நாவல் ல ரொமான்ஸ் சீன் படித்துவிட்டால் தான் மலை ஏறிடுவாள் . அப்டி என்ன இவருக்கு எவ்ளோ நாள் வேண்டி கெடக்கு என்று கோவமும் ஆதங்கமும் ஏக்கமும் சேர்ந்து வரும்

அப்புடி தான் இன்றைக்கும் ஆனது.

ஹ்ம்ம் ஒரு பெருமூச்சூடே சப்பாத்தி மாவை பிசைந்தாள் . பின்னாள் இருந்து அவள் கனலன் அவளை அனைத்து அவள் கையேடு அவன் கைசேர்த்து மாவை பிசைந்தான் . அதிசயம் ஆனலும் உண்மை என்கிற ரேஞ்சில் அவனை பின்னல் திரும்பி பார்த்தாள் . அவளின் கழுத்து தோள்பட்டை முதுகு உள்ளிட்ட இடங்களில் தன் இதழ்களை கொண்டு கவிதைகள் படைத்தான் .

கண்கள் விரிய பார்த்த மனையாளை ஒரு மயக்கும் புன்னகை சிந்தி அவளின் இதழ்களை கவ்வினான் . மெண்மையாய் அவள் இதழ்களை கொய்தான்.அவளுக்கு நாடி நரம்புகள் எல்லாம் ஜிவ்வென்று இருந்தது.
தன் எச்சிலை அவளுக்கு பருக கொடுத்து அவளுடையதை தன்னிடம் பண்டமாற்று முறை செய்து கொண்டிருந்தான் அக்கள்வன் . அவள் மிகவும் எதிர்பார்த்த தருணம் அல்லவா . முதல் முத்தம் அதன் தாக்கம் ஹைய்யோ ஹைய்யோ செமயா இருக்கே என்று அவள் மனம் கூக்குரல் இட்டது . நீண்ட நெடிய நேரம் சுமார் ஒரு 10 நிமிடம் கழித்து அவளை விட்டான்.

கீழே விழும் நிலையில் இருந்தவளை தாங்கி லட்டுக்குட்டி என் செல்லம் என் ஜாங்கிரி என் அமுல் பேபி . உனக்கு சுரபிரிஸ் ஆஹ் இன்னைக்கு நைட் சொல்லலானு நெனச்சு நீ என்ன இவ்ளோ தேடுவேன்னு தேரிலேயே டி . ஹெவியா கவினிக்கறதா விட ஸ்ட்ரோங் கா கவனிக்கணும் நெனச்சேன் டி என் பார்பி டால் .உன்ன வச்சிருக்கேத்தான் என் மனசுல . உனக்கு அது புரியலையா . நீ தா நாவ ல்ஸ் லாம் படிச்சு பயங்கரமா கர்பணை பண்ணி வச்சிருப்பே அதான் சஸ்பென்ஸ் ஆஹ் சர்ப்ரைஸ் ஆஹ் இன்னைக்கு உனக்கு என் லாவ் ஆஹ் சொல்லி அப்டியே நம்ம அம்முனிய ஹெவியா ஆஹ் கவனிக்கலாம்னு நெனைச்சே . உனக்கு புடிச்ச ஸ்விட்ஸ்ர்லாந்து கூட ஹனிமூன் பாக்கேஜ் வாங்கிட்டேன் . என்று சொல்லி முடிக்கவில்லை .

அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதுவிட்டாள் . போ நீ போ உனக்கு இவ்ளோ நாள் ஆச்சா . போடா போடா என்று சொல்லி அவனை தள்ளி விட

அப்போவே அப்டி இருந்துருந்தா இப்டி நாம உணர்ந்துருக்க மாட்டோம் டி என் தங்கக்குட்டி

இப்போ ஒவ்வொரு செல்லும் நீ வேணும்னு ஸ்டரைக் பண்ணுது என்று சொல்லி தன் இதழை குவித்து அவள் தாலியில் முத்தம் வைத்தான்.

அவளின் நெஞ்சாங்கூடு மத்தியில் இருந்த தாலியை அப்டியே அதில் தன் இதழில் ஒற்றி எடுத்தான் .

அவள் உணர்ச்சி பெருக்கில் செண்ட்டு என்று முனங்கினாள்.. அவளை அப்புடியே அனைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்து . அவளை சிறிது தள்ளி நிறுத்தி


ஐ லவ் யு டி மை பொண்டாட்டி என்று அங்கே இருந்த காளிபிளவரை எடுத்து முழங்காலில் மண்டியிட்டு அவளிடம் நீட்டினான் ..


அவள் மனதில்

இதுதானா இதுதானா

எதிர் பார்த்த அந்நாளும் இதுதானா

இவன்தானா இவன்தானா

மலர் சூட்டிய மணவாளன் இவன்தானா




இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே




ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே


இதுதானா இதுதானா

எதிர் பார்த்த அந்நாளும் இதுதானா

இவன்தானா இவன்தானா

மலர் சூட்டிய மணவாளன் இவன்தானா

மூன்றாம் பாகத்தில் சந்திப்போம்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மெரின் நெல்சன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top