ஒண்ணுமே செய்யலை

Advertisement

Sahi

Well-Known Member
காட்சி 1
இடம்: வீடு
கதாப்பாத்திரங்கள்: அப்பா (வெற்றிச்செல்வன்), அம்மா (அன்பரசி/அன்பா), குழந்தை (யாழ்வெண்பா/யாழி)

வெற்றி: அன்பா
அன்பா: .....
வெற்றி: அன்பாமா
அன்பா: ம்ம்
வெற்றி: என்ன ம்ம். ஏன் காலையிலேயே மூட் ஆஃப்.
அன்பா: வேண்டுதல்
வெற்றி: ப்ச் என்னனு சொன்னாதானே தெரியும். ஏதாவது பிரச்சனையா?
அன்பா: பெருசா இல்லை ஆனா இருக்கு
வெற்றி: ஹான்!!!!! என்ன?????
அன்பா: யாழ் கிளாஸ் டீச்சர் பேரெண்ட்ஸ வந்து பார்க்க சொல்லியிருக்காங்க.
வெற்றி: ஹேய் இது யூஸ்வல் தானே அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன்
அன்பா: ஆமாம் ஆமாம் யூஸ்வல் தான். ஒரு மாசத்துக்கு மூன்று தடவை. ஒரு தரம் நீங்க போய் பாருங்க அப்ப தெரியும் அந்த யூஸ்வல் என்னனு.
வெற்றி: நீ இவ்ளோ டென்ஷனாகரத்துக்கு எதுவும் இல்லை. நம்ம பேபி டூ ஸ்மார்ட் டா.
அன்பா: ஊர்ல எல்லோரும் அப்டித்தான் சொல்லிக்குறாங்க. உங்க டூ ஸ்மார்ட் babe பண்ற வேலையில டீச்சர்ஸ் எல்லாம் கொலைவெறில இருக்காங்க. (மகளிடம்) யாழ்மா சொல்லுடா என்ன பண்ணி வச்சிருக்க.
யாழி: மா ஒண்ணும் பண்ணலை...
அன்பா: ஏங்க நீங்க கேளுங்க
வெற்றி: பேபி என்னடா பண்ண
யாழி: பா ஒண்ணுமே பண்ணலைபா.
வெற்றி: பார்த்தியா நான்தான் சொல்றேன்ல
அன்பா: பார்க்கலை, கேட்டேன் இன்னும் அங்கேபோய் வேற கேட்கணும்.
வெற்றி: ரிலாக்ஸ். ஆல் தி பெஸ்ட். பை
அன்பா: என்ன கொழுப்பா
வெற்றி: அச்சச்சோ இல்ல ஒரு ஃப்லோவ்ல சொல்லிட்டேன். பார்த்து போய்ட்டுவா.
அன்பா: ...
வெற்றி: இன்னும் என்ன
அன்பா: நீங்களும் வரலாம் இல்ல
வெற்றி: அன்பா படுத்தாத. அவ kg தான் படிக்கறா இதுக்கே இப்படியா. இன்னும் பெரிய கிளாஸ் எல்லாம் போனா பிறகு என்ன செய்வ? சியர் அப். வந்து கால் பண்ணு.
அன்பா: அப்ப வரமாட்டிங்க ஓகே நானே வாங்கிக்கட்டிக்கிறேன்.
வெற்றி: ஹா ஹா ஹா! பேபி என்னடா உங்க அம்மா இப்படி பயப்படுறாங்க நீ அவ்ளோ நல்லவளா
அன்பா: அடிங்க ஓடிருங்க கடுப்பாயிருவேன்
வெற்றி: ok cool. Bye baby


(என்ன ஒரு பேரென்ட் மீட்டுக்கு இவ்வளவா அப்படின்னு நீங்க யோசிக்கறது தெரியுது. ஏன்னா அவங்க மேக் அப்படி. வித விதமா வச்சு செய்வா. கணிக்கவே முடியாது. வாங்க பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு)


காட்சி 2
இடம்: பள்ளி
கதாப்பாத்திரங்கள்: அன்பா, யாழி, கிளாஸ் டீச்சர்

அன்பா: Good morning mam
யாழி: Good morning miss
டீச்சர்: Good morning, Good morning
அன்பா: மீட் பண்ண சொல்லியிருந்தீங்க.... mam
டீச்சர்: yes but Mr. வெற்றிச்செல்வன் வரலையா?
அன்பா: இல்ல அவங்க கொஞ்சம் பிஸி
டீச்சர்: இந்த தடவை கண்டிப்பா அப்பாவோட வரனும்னு இன்ஃபோர்ம் பண்ணியும் அவங்க வரலைனா எப்படி?
அன்பா: ....
டீச்சர்: அவங்க அப்பாகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணினா பயப்படுவான்னு....
அன்பா (mind voice): க்கும் அப்படியே பயந்துட்டாலும்
அன்பா: என்ன கம்ப்ளைண்ட் mam
டீச்சர்: mmm ஒண்ணுமே செய்யலை
அன்பா: what?
டீச்சர்: Ya
அன்பா: mam அப்புறம் எதுக்கு பேரெண்ட் மீட் பண்ண சொன்னீங்க
டீச்சர்: ....
அன்பா: யாழிஈய் என்னதான் செஞ்ச
யாழி: மா ஒண்ணும் செய்யலை மா...
அன்பா: யாழிஈய்
யாழி: Promise ma
(இதுல இங்கிலீபீஷ் ஒன்னுதான் குறைச்சல் படுத்துதுங்க)
அன்பா: Please mam anything serious?
டீச்சர்: உங்க பொண்ணே சொல்றாளே அப்புறம் என்ன?
அன்பா: ஒண்ணுமே செய்யலைனு ஒரு கம்ப்ளைண்ட்டா?
டீச்சர்: ஆமாம் ஒரு வாரமா உங்க பொண்ணு கிளாஸ்ல ஒன்னுமே செய்யலை. I mean class work, home work, test இப்படி எதுவுமே செய்யலை.
இதுதான் லாஸ்ட் வார்னிங். கொஞ்சம் வீட்லயும் கேர் எடுத்துக்குங்க. தட்ஸ் இட். இன்னொரு தடவை ப்ரோப்லம்னா பிரின்சிபால் தான் மீட் பண்ணனும். I hope u understand u can go now.
அன்பா: ஹான்! Sure mam. Thank u
(கடவுளே இதுதான் அந்த "ஒண்ணுமே செய்யலையா" எப்படி யாழிமா வித விதமா என்ன மாட்டிவிடற)

காட்சி 3
இடம்: வீடு
கதாப்பாத்திரங்கள்: வெற்றி, அன்பா
வெற்றி: ஏன் கால் பண்ணல நான் செம டென்ஷனா இருந்தேன்
அன்பா: யாரு நீங்க நம்பிட்டேன்.
வெற்றி: சரி சரி என்னாச்சு என்ன செய்ஞ்சா
அன்பா: ம்ம்ம்... ஒண்ணுமே செய்யலை
வெற்றி: என்ன (உச்சகட்ட அதிர்ச்சியில் முழிப்பது இப்ப வெற்றியின் நிலை)

அடுத்து என்ன நடந்து இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே....

டீச்சர் சொன்ன எதையுமே செய்யலைனு சொல்லி இருந்தா இந்த கதையே இல்லை. அதுதான் குழந்தைகள்.
குழந்தைகளையும் அவர்களின் குறும்புகளையும் நம்மால் என்றும் கணிக்கவே முடியாது.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா........
ஸ்கூல் ஒர்க் ஒண்ணுமே
பேபி செய்யலைங்கிறதை
வைச்சு இப்படி எங்களை
வைச்சு செஞ்சுட்டீங்களே,
சஹி டியர்?
 
Last edited:

Janavi

Well-Known Member
Too smart kid's.....வேற வழி இல்லை, ஒத்துக்க தான் வேண்டும்....:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top