ஏரிக்கரை 7

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
ஓராயிரம் பூங்கொத்துகள் தோற்றுப்போகும் மழலையின் ஒற்றை புன்னகையில் ...

ஏரிக்கரை 7 :

அவ்விரவு வேளையிலும் தன் கையில் இருந்த பைலில் ஆழ்ந்திருந்த அரசு அதிலிருந்த இரண்டு முகவரியை மட்டும் தனியாக குறித்துவைத்துவிட்டு நிமிர்ந்தவன் , தனக்கு முன்னாள் இருந்த சேரில் அமர்ந்தவாரே தூங்கி கொண்டிருந்த முகிலை கண்டு சிரித்துகொண்டே அவன் அருகில் சென்று அவனின் தலையை மென்மையாய் கோதி கொடுத்தான் . முகிலிற்கு அரசுவை தவிர வேறுஎவருமில்லை .அரசுவின் இரண்டாம் வயதில் தெருவோரத்தில் மயங்கி கிடந்த முகிலை அழைத்து சென்று சொந்த பிள்ளை போல் வளர்த்தனர் அரசுவின் பெற்றோர் . அன்றுமுதல் அரசுவின் நிழலாய் அவன் என்ன செய்தாலும் அவனிற்கு துணையாய் நிற்கின்றான் . இன்று மாலையில் காணாமல் போன குழந்தைகளின் பைலை கொடுத்த முகில் அவனிடம் , ஏன் அரசு...ஒருவேளை என்னோட அம்மா கூட அந்த பவித்ரா மாதிரி தானோ ...நான் அவங்களுக்கு பிடிக்காம பிறந்து அதுனால என்ன ரோடுல விட்டுட்டாங்களோ .

மிகவும் உணர்ச்சிவசப்படும் வேளைகளில் மட்டுமே பெயர் சொல்லி அழைப்பவனின் குரலிலே அவன் மனம் வருந்துவதை அறிந்தவன் ,

ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்.... ஆனா முகில் உனக்கு மத்த இறந்து போன பெண்களை நினைச்சாலும் அப்படி தான் தோணுதா என்ன ?? ஒருவேளை அதே மாதிரி ஒரு சூழ்நிலை உன்ன பெத்தவங்களுக்கும் இருந்திருக்கலாம்ல இல்லனா ....அந்த கடவுள் எனக்காக , உன்ன என் கூட சேர்க்கிறதுக்காகவும் இதெல்லாம் பண்ணிர்களாம் ...என்னை கேட்டனா ....கடவுளின் படைப்புலையே மிக சிறந்ததுனா அது தாய் தான் ....சிலநேரங்களில் அது தவறலாம் ஆனா தாயைவிட உன்னத சக்தி இந்த உலகத்துல வேற எதுவுமே இல்லை .முகிலின் தலையை கோதிக்கொடுத்துகொண்டே மாலை நடந்ததை நினைவு கொண்டவன் கடிகாரம் ஐந்து முறை அடித்ததில் களைந்து முகிலை எழுப்பினான் ...

முகில் , என்ன பாஸ் எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க இப்போ தான் அனுஷ்கா கிட்ட வரா.. அது பொறுக்காதே உங்களுக்கு ..

அரசு , டேய் காலையிலயே அசிங்கமா வாங்கி கட்டிக்காத போடா போய் பிரெஷ் ஆகிட்டு வா ....போலீஸ்ஸ்டேஷன் கிளம்பனும் , ரெண்டு குழந்தைங்க வீட்ல இன்ஸ்பெக்டர் வசந்த் அ விசாரிக்க சொல்லி அதுல கிடைக்ற டீடெயில்ஸ் வச்சிதான் கேச மூவ் பண்ண முடியும் .

கனவு கலைந்ததில் முகில் , அவர் கனவுல அனுஷ்கா வராத பொறாமையில எழுப்பிவிட்டுட்டு கடமை கண்ணாயிரம் மாதிரி சீன போடவேண்டிது என வாய்க்குள் முனங்க ..

அரசு , என்னடா அங்க முனங்குற ..

முகில் , உங்க சின்சியாரிட்டி ஆஹ் பத்தி பாராட்டிட்டு இருந்தேன் பாஸ்..

......................................................

காவல்நிலையத்திற்கு வந்த இருவரும் இன்ஸ்பெக்டர் வசந்த்திடம் தாங்கள் கொண்டுவந்திருந்த முகவரிகளை கொடுத்து ,
சார் எங்களுக்கு இவங்க குழந்தைங்க எப்படி காணாம போச்சுன்னு விசாரிச்சு சொல்ல முடியுமா என கேட்டனர் .

வசந்த் , இதுல ஒரு குழந்தை நேத்து தான் கிடைச்சுது சார் ...அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டோம் . ஆனா இன்னொரு குழந்தையோட பேரண்ட்ஸ் கிட்ட இப்போ விசாரிக்க முடியுமா தெரில சார்.

முகில் , ஏன் எதுனால விசாரிக்க முடியாது .

வசந்த் , இப்போ தான் சார் அந்த குழந்தையோட அப்பா வந்தாரு . அவரோட மனைவியை காணோமாம் . மனுஷன் ஏரிக்கரை கேச பத்தி தெரிஞ்சி ரொம்ப பயந்து போயிருக்காரு . கமிஷ்னர் வேற இப்போ என்ன வர சொல்லிருக்காரு ...உங்களுக்கு எதுனா உதவி தேவைபட்டா போன் பண்ணுங்க சார் என அவசரமாய் சொன்னவர் அங்கிருந்த ஏட்டைய்யாவை கூப்பிட்டு , சார் எந்த உதவி கேட்டாலும் செஞ்சுக்குடுங்க ஏட்டய்யா நான் கமிஷ்னர் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வரேன் என்று வெளியே சென்றுவிட்டார் .

அதுவரை அமைதியாய் இருந்த முகில் , பாஸ் என்ன அமைதியா இருக்கீங்க அந்த கொலைகாரன் தான் கடத்திற்கனும் ...நீங்க சொன்னமாதிரியே நாளையோட ஒரு வாரம் பாஸ் அவன் அவங்கள கொல்லறதுக்குள்ள நம்ப அவனை கண்டுபிடிச்சாகனும் .

பட்டென்று எழுந்தவன் , கமான் முகில் அத்தனை போலீஸ் ஸ்டேஷன்க்கும் தகவல் சொல்லு ஏட்டய்யா எல்லா செக் போஸ்ட்டையும் அலர்ட் பண்ணுங்க குயிக் .

வெளியே செல்ல திரும்பிய அரசு ...அங்கிருந்த கான்ஸ்டபில் மற்றொருவரிடம் பேசியதில் சட்டென்று திரும்பி அவரிடம் சென்றவன் .

என்ன சொன்னிங்க ??? உங்கள தான் இப்போ என்ன சொன்னிங்கனு கேட்டேன் ...

வெளியே சென்றவன் சட்டென்று நின்றதிலே அவனை பார்த்தவர் அவனின் இக்கோபக்குரலில் ...

சார் ....அது நீங்க செக் போஸ்ட் அலர்ட் பண்ண சொன்னிங்களா ...நேத்தே அவங்க காணாம போயிருந்தா இப்போ அலெர்ட் பண்ணறதுனால எப்படி கண்டுபிடிக்க முடியும்னு .... சார் ...சார் சு...சும்மா தா...தான் சொன்னேன் சார் .

அரசு முகிலை பார்க்க அருகில் வந்தவன் அவரிடம் ....நீங்க எப்படி அவங்க நேத்து காணாம போயிருப்பாங்க சொல்றிங்க ....அவங்க ஹஸ்பன்ட் இப்போ தான கம்ப்லைன் குடுத்தாரு .

அவர் , சார் யார் சார் இப்போ சம்பவம் நடந்தவுடனே நம்ப கிட்ட கம்ப்லைன் குடுக்கிறாங்க . ஒரு நாள் முழுக்க அமைதியா இருந்துட்டு அப்பறம் தான் நம்ப கிட்ட வராங்க சார்.. அதுனால தான் நிறைய கேஸ் அப்படியே நிக்குது . இவரே போனவாரம் குழந்தைய காணோம்னு முழுசா ஒரு நாள் போனப்பறம் தானே வந்து சொன்னாரு .

அமைதியாய் அவர் பேசியதை கவனித்துக்கொண்டிருந்த இருவரும் கடைசி வரியில் என்னதுஉஉ என கத்திவிட்டனர் .
.

ஷிட் இத ஏன் முன்னடியே சொல்லல... கம்ப்லைன் குடுத்த அந்த ஆள உடனே ஏரிக்கரைக்கு வர சொல்லுங்க என சொல்லும்போதே சரியாய் அங்கிருந்த தொலைபேசி அலறியது .

அரசுவும் முகிலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் .

போனை எடுத்து பேசியவர் இவர்களிடம் , சா...சார் ....அந்த ஏரிக்கரைல இன்னொரு பொணம் கிடக்குதாம் சார் .


ஆம் அதே ஏரிக்கரை தன்னுடைய ஆறாம் பிணத்துடன் ........


----------------------------------------------
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top