ஏரிக்கரை 4

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
உன்னுள் கருவாகி உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான்....
மண்ணுள் நான் வீழ்ந்து மெல்ல உதிரும்வரை என்னுள் நீ வாழ்வாய் அம்மா ....



ஏரிக்கரை 4 :

மங்களான ஒளியை அவ்வறையில் பரவ வைத்திருந்த அச்சிறு பல்பு , ஒரு பெரிய டேபிள் , பக்கத்துல ஒரு குட்டி சேர் அதுல இருந்த ட்ரேயில் துருப்பிடித்த பிளேடு துண்டுகள் சில . அவ்வளவு தான் அவ்வறையில் இருந்த பொருட்கள்.

அவ்வறையின் கதவை திறந்துகொண்டு மெல்லிய உடல்வாகுடன் வந்த அவன் தன் முகம் முழுவதும் நீலமும் சிவப்பும் கலந்து ஏதோ ஒரு திரவம் பூசியிருந்தான் . அது அவன் முகத்தை மிக கொடூரமாய் காட்டிக்கொண்டிருந்தது .வந்தவன் அங்கிருந்த பிளேடு துண்டுகளை ஆராய்ந்து பின் அதில் மிகவும் துரு பிடித்தது போல் இருந்ததை எடுத்தவன் ஒரு வித ரசிப்புடன் அதை தன் கன்னத்தில் தடவி பார்த்தான் ..அதில் கன்னத்தில் சிறு கீறல் பட்டு இரண்டு ரத்த துளிகள் அந்த பிளேடில் விழுந்தது . அதை கண்டு உனக்கு என்ன பிடிச்சிருக்கா என குரலில் உணர்வறியா பாவத்துடன் கூறியவன் எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு நீ என்கூடவே இருக்க போற என்றவனின் கண்கள் இரண்டும் அவ்வறையின் மங்கலான ஒளியில் வேட்டையாட போகும் சிறுத்தையின் கண்களாய் பளபளத்தது ..... அடுத்த நொடி அவ்வறையே அதிரும் வண்ணம் ஹாஹாஹாஹா என சிரித்தவனின் சிரிப்பு அவ்வறையில் மிக பயங்கரமாய் எதிரொலித்தது . எத்தகைய தைரியம் வாய்ந்தவர் அவ்விடத்தில் இருந்திருப்பினும் அவனது இச்சிரிப்பிலே நடுங்கி அவரது இறுதி நொடியை எண்ணியிருப்பர் . அந்த மங்கலான வெளிச்சத்தில் , முகம் முழுக்க நீலமும் சிவப்பும் கலந்த நிறத்தில் கன்னத்தில் ரத்தகாயமும் கண்களில் சிறுத்தையின் பளபளப்பும் என அவனது இக்கோர சிரிப்பு தனது அடுத்த வேட்டைக்கு அவன் தயார் என்பதை சொல்லாமல் சொல்லியது .

.............................................


அதே நேரம் தனது அறையில் , இரு கைகளையும் கோர்த்து அதில் தலை வைத்து கைமுட்டிகளை டேபிளில் ஊன்றியவாறு அமர்ந்திருந்தான் அரசு . உள்ளே வந்த முகில் அரசின் இந்நிலையை பார்த்து... என்ன ஆச்சு அரசு , போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கதான போன ...என்ன ரிப்போர்ட் வந்திச்சி ....எதுனா புதுசா தெரிஞ்சிதா ..என வரிசையாய் கேட்டவன் அவனிடம் மறுமொழி இல்லாததில் , பதில் சொல்லு அரசு ஒருத்தன் இங்க மூச்சுமுட்ட பேசிட்டு இருக்கேன் நீ அமைதியா இருந்தா எப்டி என முறைத்தவனை
நிமிர்ந்து பார்த்த அரசு தன் டேபிளில் இருந்த கோப்பை எடுத்து அவனிடம் கொடுத்தான். இது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தான என சொல்லிக்கொண்டே அதைப் பிரித்துப் படித்துப் பார்த்த முகிலின் முகம் வெளுத்தது . என்ன அரசு இதுல இப்டி போட்டுருக்கு ..அவங்க உடல்ல இருக்க காயங்கள் அவங்க உயிரோட இருக்கும்போது ஏற்பட்டதுனு ?? எப்பவும் தண்ணில விழுந்தவுடனே மீன்கள் கடிக்க வாய்ப்பில்லையே அதுவும் இந்த அளவுக்கு அட்லீஸ்ட் சில மணிநேரம் ஆவது ஆகிற்கும் அதுக்குள்ள நிச்சயம் அவங்க உயிர் போகிற்குமே ..அப்படி இருக்கும்போது உயிரோட இருக்கும்போது எப்படி ? அதுனால தான் அவங்க செத்துட்டாங்களா ??? அப்போ இது தற்கொலைன்ற மாதிரி தான வருது .

அரசு , டேய் லூசுப்பயலே ரிபோர்ட ஒழுங்கா படிச்சி பாரு ....அதுல என்ன போட்ருக்குனா , அவங்க எல்லோரும் தண்ணில விழுந்ததுனால தான் செத்துருக்காங்க காயத்துனால இல்ல ஆனா அந்த காயம் அவங்க உயிரோட இருக்கும்போது ஏற்பட்டிற்கு அது எப்படி ??... அத பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்

இடையில் குறுக்கிட்ட முகில் , அப்போ அந்த காயங்கள் மீன்கள் கடிச்சதுனால வந்தது இல்லையா ???

அவனை ஆழ்ந்து பார்த்த அரசு , மேலோட்டமாய் நம் பார்வைக்கு பட்ர காயங்கள் மீன்கள் தின்னதுனால தான் ஆனா ....

முகில் , ஆனா

அரசு , அதுக்கு முன்னாடியே அதாவது மீன்கள் தின்பதற்கு முன்பே அவர்களோட உடல்ல சின்ன சின்னதா ஆழமான காயங்கள் ம்கூம் கீறல்கள்னு தான் சொல்லணும் கிட்டத்தட்ட 108 கீறல்கள் இருந்துருக்கு ....

முகில், ஆ ஆ அரசு அது எப்படி வந்துருக்கும் அப்போ இதுக்கு முன்னாடி நடந்த நாழு கேஸ்ளையும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அப்டி எதுவும் சொல்லலயே??

அரசு , அவங்க போஸ்ட்மார்ட்டம் அ ஒரு போர்மாலிட்டி காக மட்டுமே நடைதிறக்காங்க முகில் அதான் அதுல இந்த காயங்களை அதிகமா சோதிக்கலை . அதுவும் இல்லாம அவங்க எல்லோரும் தண்ணில மூச்சுக்கு திணறி தான் இறந்துருக்காங்கனு ரிப்போர்ட் சொல்லுது .

முகில் , பாஸ் இப்போ தான் ஏதோ கீறல்கள் னு சொன்னிங்க இப்போ தண்ணில மூழ்கி செத்ததா சொல்றிங்க அப்போ இது தற்கொலை தானா?

அரசு , நீ லூசுன்னு அடிக்கடி நிரூபிக்காத டா அவங்க தண்ணில மூழ்கி செதுக்கங்கறது சரிதான் .அவங்க தானா தண்ணில குதிச்சிருந்தா எப்படிடா அவங்க உடல்ல கீறல்கள் வந்திருக்கும் .

முகில் , அப்போ அந்த காயங்கள் எப்டி வந்ததுன்னு கண்டுபிடிச்சா கேஸ் சால்வ்டு அப்படித்தான பாஸ்.

அரசு , நான் இன்னும் முடிக்கல முகில் ....அந்த கீறல்கள் மேல மீன்கள் தின்பத்திற்கு முன்பு அந்த காயங்கள் ஏற்பட்ட பின்பு வேற எதோ நடந்துருக்கு அதுல அந்த உடல்கள் இன்னும் சிதைஞ்சிற்கு .....
பேசிக்கொண்டிருந்தவன் தன்னை விழிகள் தெறிக்க பார்த்துக்கொண்டிருந்த முகிலை கண்டு அவனின் தோளில் தட்டி டேய் முழிச்சது போதும் நீ போன விசாரணை என்னாச்சி சொல்லு ???


-------------------------------------------
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top