எறும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

Advertisement

Eswari kasi

Well-Known Member
நம்மை விட அளவில் மிகச்சிறியவையான (கிட்டத்தட்ட 10000 மடங்கு சிறியவை) எறும்புகளைப்பற்றி இன்று பார்ப்போம்.

பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களில் எண்ணிக்கைக்கு சமனானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன!

இதுவொன்றே எறும்புகள்
லேசுப்பட்டவை இல்லை என்பதற்கு சான்று.
எறும்புகள் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்…

எறும்புகள் டைனோசர்களின் காலத்தில்இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் வருடங்கள் ஆகின்றன.

10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் பூராவும் வாழ்கின்றன.

எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன!

எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம் அவை : egg, larva, pupa, adult.

சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை உயிர்வாழும். ( பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.)

எறும்புகளுக்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.

எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும்!

எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்பு ராணி எறும்பாகும்.

எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய எறும்புகளுக்ககவும்!

எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன.

எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது! கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை colony(காலனி) என்பார்கள். ( 2002 ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான எறும்புகளைக்கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள் நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது. (இது இத்தாலி – ஸ்பெயின் எல்லையில் அறியப்பட்டது.)

சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியன. அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை.

சில எறும்புகள் நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நீரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் தகுதி உடையவை.

வட அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார் 5 பில்லியன் பெறுமதியான உடமைகள் சேதமாகின்றன.

படித்ததைப் பகிர்ந்தேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top