என் மன்னவன் நீ தானே டா....7

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...7



தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார் சகுந்தலா.அவருக்கு காலையில் திவ்யா நடந்து கொண்டது மேலும் ஆத்திரமடைய செய்திருந்தது.அவளை எப்படியேனும் வீழ்த்த வேண்டும் என்று கருவிக்கொண்டிருந்தார்.

அபினாஷோ இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல மோபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.அவனின் தலையில் கொட்டியா சகுந்தலா,

"டேய்...நான் இங்க அவள எப்படி அடக்கறதுனு யோசிட்டு இருக்கேன்.நீ என்ன டான விளையான்டுட்டு இருக்கியா..அவள எப்படியாவது உன்னோட வலையில சிக்க வை டா...மத்த நான் பார்த்துகிறேன்...."என்றார்.

"அவ சரியான ராட்சசி மா..அவள என்னோட சேர்க்காத...என்னோட திட்டமே வேற..."என்றான் மகன்.

"டேய்...ஏதாவது லூசு தனமா செஞ்ச கொன்னுடுவன் பார்த்துக..."

அபினாஷோ இது எதயும் காதில் வாங்கவில்லை.மேலும் இங்கு இருந்தால் தாய் உயிரை வாங்குவார் என்று வெளியில் சென்றுவிட்டான்.

கலைவாணி வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தார்.அதை கவனித்த வர்ஷி,

"ம்மா...அக்கா என்ன சின்ன பிள்ளையா வருவா மா..எனக்கு எதாவது சாப்பிட குடு மா..."

"இல்லடி காலை போனவ இன்னும் வரல,போன் போட்ட ஸ்விட்ச் ஆப்னு வருது அதான்..."என்றார் கவலையாக.

"ம்மா...உடனே வாட்ர் வால்ஸ்ஸ ஆரம்பிச்சுடாத வரு வா..."அழைத்து போனாள்.

திவ்யா சிறிது நேரம் கடற்கரை சென்றுவிட்டு வந்தாள்.அந்த இடம் அவளுக்கு பிடித்த ஒன்று தனது சுக துக்கங்களை அலைகளிடம் பகிர்ந்து கொள்வாள்.இன்றும் அவ்வாறு சென்றுவிட்டு வீடு வந்தாள்.

வர்ஷி தன் அம்மா கொடுத்த பகோடாவை ருசித்துக்கொண்டிருந்தாள்,அப்பொது உள்ளே சிரித்த முகத்துடன் திவ்யா இவளை கண்ட உடன் இவளிடம் வந்து,

"ஹாய் வர்ஷி...என்ன சாப்பிடுர..."என்று கேட்டுவிட்டு தானும் ஒரு துண்டை வாயில் போட்டாள்.தமக்கை சிரித்தது ஒரு அதிசியம் என்றாள் அவள் இவளுடன் சகஜமாக பேசியது பேர் அதிர்ச்சி,இதில் அவள் கேட்டது இவள் காதில் விழவே இல்லை.

"வர்ஷி....வர்ஷி...."என்று உலுக்கினாள் திவ்யா.

"ஆங்...சொல்லுக்கா..."என்றாள் வர்ஷி.

"என்னடி ஆச்சு...நான் கேட்டு இருக்கேன் நீ பதில் சொல்லாம ஏதோ யோசிச்சுட்டு இருக்க.."என்றாள் திவ்யா.

"ஒன்னுமில்ல க்கா.."என்றாள் வர்ஷி.

சமையல் அறையில் இருந்த வெளி வந்த கலைவாணி தனது இரு மகளையும் ஒரு சேர கண்டு மகிழ்ந்து போனார்.அதுவும் தனது பெரிய மகளின் முகத்தில் தெரிந்த சிரிப்பில் மனம் நிறைந்து போனது அந்த தாய்க்கு.திவ்யா தன் அன்னை கண்டவுடன்,

"ம்மா..நான் வெரஷ் ஆகிட்டு வரன்..எனக்கு உங்க கையால ஒரு கப் காபி.."என்று கூறி சென்றாள்.அவள் தன்னிடம் தான் கேட்டாளா என்று திக்பிரம்மை பிடித்தவர் போல் இருந்தார் வர்ஷி தான்,

"அம்மா..."என்று உலுக்கினாள்.அதில் தன்னிலை பற்றவர்,

"என்னடி.."என்றார்.

"அம்மா..என்ன இந்த உலகத்துல இருக்கியா இல்லையா.."என்றாள்.

"டி..இது நம்ம திவ்யா தானா.."என்றார்.

"அது தான் ம்மா எனக்கும் டவுட்டா இருக்கு..ஏன் கிட்ட கூட பேசிட்டு போரா..ஒரு வேல அக்காக்கு உடம்பு சிரியில்லையோ.."என்றாள்

அவள் தலையில் ஒரு கொட்டு வைத்த கலைவாணி,

"போடி போக்கிரி..நான் போரேன் ரொம்ப நாள் கழிச்சு ஏன் பொண்ணு ஏன் கிட்ட காபி கேட்டுருக்கா..நான் போய் கலக்குறேன் என்று சொல்லி சென்றார்.சிறுபிள்ளை போல துள்ளலோடு செல்லும் தாயை கண்டவள் முகத்திலும் குறுநகை.

திவ்யா தன்னை சுத்தபடித்துக்கொண்டு வேறு உடை மாற்றிவிட்டு கீழே வந்தாள்.அங்கு தாயின் காபியின் மனம் அவளை இழுத்தது.டைனிங் டேபிலில் அமர்ந்து தனது தங்கையுடன் பேசிகொண்டே தாய் தந்த காபியை ரசித்து குடிக்க தொடங்கினாள்.இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்த தாயையும் திட்டி தன்னுடன் அமர வைத்தாள்.வேகு நாட்களுக்கு பிறகு தனது மகள்களுடன் அந்த மாலை நேரம் இனிமையாக இருப்பதை போல உணர்ந்தார் கலைவாணி.

அந்த இனிமையை கெடுக்க வென்றே வந்தார் சகுந்தலா.தனது அறையிலிருந்து வெளியில் வந்த சகுந்தலா கண்ணில் பட்டது மூன்று பேர் முகத்தில் இருந்த புன்னகை தான் அதிலும் திவ்யாவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி மேலும் ஆத்திரமுட்டியது.அதை எப்படியேனும் அழித்தே தீர வேண்டும் என்ற வன்மம் பிறந்தது.அதனால் கைபேசியை எடுத்துக்கொண்டு சோபவில் அமர்ந்தவர் பேசுவது போல பாவலா காட்டிக்கொண்டு உரக்க பேசினார்,

"ஹலோ..சுமி எப்படி இருக்க.."என்று ஏற குறைய கத்தினார்.

சகுந்தலா வருவதை கண்ட கலைவாணி திவ்யாவின் கை மேல் கை வைத்து அழுத்தி உனது ரூம்முக்கு போகுமாறு சைகை செய்தார்.அவருக்கு எங்கே மீண்டும் சகுந்தலா திவ்யாவை கஷ்ட படுத்திவிடுவாரோ என்று பயம்.அவர் எதை குறிப்பிடுகிறார் என்று உணர்ந்த திவ்யா அவரிடம் தான் பார்த்துக்கொள்வதாக கண்களை மூடி திருந்தாள்.

"நான் நல்லாருக்கேன்..நீ எப்படி இருக்க.."என்று பேசுவது போல நடித்தார்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள் மற்றவர்கள்."இங்க என்னத்த சொல்ல..கல்யாணமா பைத்தியகார அப்பனுக்கு பொறந்தவள யார் கட்டிப்பா.."என்று திவ்யாவை நோகடிக்கும் நோக்கொடு பேசிக்கொண்டு இருந்தவர் கையில் இருந்த மோபைலை பிடுங்கி உடைத்திருந்தாள் வர்ஷி.

"இன்னோருவாட்டி அப்பா பத்தி பேசினிங்க காலையில அக்கா கால்ல தான் அடிச்சா ஆனா நான் உங்க மண்டைய உடுச்சிடுவேன்.."என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு சென்றுவிட்டாள்.இதை கண்ட கலைவாணியும்,திவ்யாவும் அதிர்ந்து நின்றனர் என்றால் சகுந்தலாவோ இந்த புள்ளபூச்சிக்கு இவ்வளவு கோபம் வருமா என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.திவ்யா தனது தாயிடம்,

"அம்மா...போய் வர்ஷிய பாரு அழுதுட்டு போரா பாரு..."

கலை சென்றவுடன் திவ்யா சகுந்தலாவை ஒரு அற்ப புழுவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு சென்றாள்.வர்ஷி தனது அறையில் அழுதுக்கொண்டிருந்தாள்,அவளின் தலையை ஆதரவாக தடைவிய கலை,

"விடு டா...அவங்கெல்லாம் ஒரு ஆள் இல்லனு சொல்லுவ இப்ப நீயே அழலாமா.."என்றார் மகளின் அழுகை காண சகிக்காதவராய்.

"அவங்க மண்டைய உடைக்கனும் போல இருக்குமா..அவங்களால தான் இப்படி ஆனதே..இப்ப எப்படி பேசராங்க பாரு.."என்றாள் ஆதங்கத்தோடு.மகள் மிகவும் காயப்பட்டுருக்கிறாள் என்பதை உணர்ந்த கலை,

"விடு டா...சக்கடை மேல கல்ல போட்டா அது நம்ம மேல தெளிக்கும்...அதனால இத பத்தி யோசிக்காத.."என்று ஆறுதல் படுத்தினார்.தனது அறைக்குள் வந்த திவ்யாவிற்க்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.இருந்தும் தன் தங்கையின் செயலில் அவளுக்கும் ஆச்சரியமே,அவளுக்கு கோபம் வரும் என்பதே இன்று தான் பார்கிறாள்.இருந்தும் சகுந்தலாவை நினைத்து பல்லை கடித்தவள் உடனடியாக வக்கீல் வரதராஜனுக்கு அழைத்தாள்.

திவ்யாவின் அழைப்பை ஏற்றவர் ,

"சொல்லு திவிமா..."என்றார்.

"அங்கிள்..வேற வழியே இல்லயா..தாத்தா ஏன் இப்படி பண்ணாரு.."என்று படபடவென்று பொரிந்தாள்அவளை பேசவிட்டவர் பின் பொருமையாக

"திவிமா..தாத்தா எது பண்ணாலும் உனக்கு நல்லது தான் டா பண்ணுவாரு...நீ நல்லா யோசி மனசபோட்டு குழப்பிக்காத..ஏதுவா இருந்தாலும் உனக்கு மூணூமாசம் தான் டையம் பார்த்துகோ..."என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.அவர் வைத்தற்கு பின் தாத்தாவின் கண்டீஷனை நினைவு கூர்ந்தாள்.ராம் தனது உயிலில் அனைத்து சொத்துகளையும் சரிபாதியாக சுகுமாரின் பிள்ளைகளுக்கும் சகுந்தலாவிற்கும் எழுதியிருந்தார்.அதில் கார்மெண்ட்ஸை திவ்யாவும் அவளது கணவனும் சரிபாதியாக பிரித்திருந்தார்,அதுவும் திவ்யா தான் இறந்து மூன்று மாதங்களுகுள் திருமணம் செய்ய வேண்டும் இல்லையேல் கார்மெண்ட்ஸ் ஏலம் விடப்படும் என்பதே அவரது உயில்.

திவ்யாவிற்கு தாத்தா இவ்வாறு செய்வார் என்று நினைக்கவில்லை.தனது திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காக இப்படி எழுதிருக்கிறார் என்று புரிந்தது.மீண்டும் என்ன செய்வது என்று புரியாமல் குழபினாள்.கல்யணம் என்ற ஒன்று கசந்து போய் இருந்தது திவ்யாவின் மனதில்.தனது கபோடை திறந்து சில கோப்புகளை தேடிக்கொண்டிருந்தவள் கையில் சிக்கியது அந்த படம் அதை பார்த்தவள் முகம் மீண்டும் புன்னகை பூசியது.அவளது கைகள் மீண்டும் கன்னத்தை தடவி பார்த்தது.அவளது உதடுகள்

"கிருஷ்ணன்.." என்று உச்சரிக்கும் நேரம்.

தனது வீட்டில் தோசை ஒரு வெட்டு வெடிக்கொண்டிருந்த கிருஷ்ணன் பொரையேரி இருமிக்கொண்டிருந்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அப்பாடா
ஒரு வழியா கல்யாணம் பண்ண திவ்யா கிருஷ்ணனை செலக்ட் பண்ணிட்டாளா?
இனி எல்லாம் சுபம்தான்
அச்சோ
சகுந்தலாவை வர்ஷி எதிர்த்துட்டாளே
அந்த லூசு பையனை வைச்சு ஏதாவது கெடுதல் பண்ணிடுவாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top