என் மன்னவன் நீ தானே டா...25

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...25

திவ்யா தனது அலுவலக அறையில் மதியம் வரை நடைபயின்றவள் அதற்கு மேல் முடியாமல் கிருஷ்ணனைக் காண அவனது செக்ஷனுக்கு சென்றாள்.அறையில் இருந்து வெளியில் வந்தவள் அஞ்சலியிடம்,

"அஞ்சலி...நான் ரவுண்ட்ஸ் போய்யிட்டு வரேன் எதாவது போன் வந்த என் மோபைலக்கு கால் பண்ணு..."என்று கூறிவிட்டு சென்றாள்.இந்த வாய்ப்புக்குகாக காத்திருந்தது போல அஞ்சலி,

"ஓகே...மேடம்..."என்றாள்.

திவ்யா சென்ற சில நிமடங்களில் அஞ்சலி திவ்யாவின் அறைக்குள் நுழைந்தவள் மைக்குரோ போனை எங்கு வைப்பது என்று நோட்டம்விட்டவள் மேஜை மேல் இருந்த சிறிய கடிகாரத்தின் பின் அதை மறைத்தவள் கடிகாரத்தை மேஜை மேல் வைத்துவிட்டு தனது இடத்தில் அமர்ந்தாள்.ஒரு வேலையாக அங்கு வந்த ராமசாமி அஞ்சலி திவ்யாவின் அறையில் இருந்து மறைந்து வருவதைக் கண்டு துணக்குற்றார்."இந்த பொண்ணு ஏன் இப்படி வருது...இதோட பார்வையே சரியில்லையே..."என்று யோசித்தவாரே அஞ்சலியின் அருகில் சென்று,

"நான் திவிமாவ பார்க்கனும்..."என்றார்.அவர் ஒரு வேலையாக திவ்யாவைக் காண வந்திருந்தார்.

"மேடம் இப்ப ரவுண்ட்ஸ் போய்ருக்காங்க..."என்று கூறியவள் தன் மோபைலில் கவனமானாள்.

"திவிமா உள்ள இல்லையா...அப்ப இந்த பொண்ணு உள்ள பண்ணுச்சு..." நினைத்தவர் இதைப் பற்றி கிருஷ்ணனிடம் கூறவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.

கிருஷ்ணனின் அறையில் திவ்யா,

"இப்ப நீ வரப்போறியா இல்லையா..எனக்கு பசிக்குது எவ்வளவு நேரம் உனக்காக வெய்ட் பண்றது..."என்றாள் கடுகடுவென்று.காலையில் இருந்து கிருஷ்ணனின் கண்ணாமூச்சியை அவளும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள் அவளுக்கு எரிச்சலாக இருந்தது எப்ப பாரு என்ன சுத்தவைக்கிறதே இவன் வேலையா போச்சு என்று நினைத்தாள்.

கிருஷ்ணனுக்கு திவ்யாவின் மனநிலை புரிந்தாலும் அவன் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அவளிடம்,

"தாரணி கொஞ்சம் வேலை இருக்கு நீ சாப்பிடு..நான் வரேன்..."அவனது பதிலில் முறைத்தாள்.அவள் தன் பேச்சைக் கேட்க மாட்டாள் என்று உணர்ந்தவன்,

"சரி கோபபடாத வரேன் வரேன்...நீ போ..."

"இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல வர..."என்று மிரட்டவிட்டு சென்றாள்.

அவள் கூறியது போல் வந்தவன் உணவருந்திவிட்டு சென்றுவிட்டான்.அவன் தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமாக போனது.கார்மெண்ட்ஸில் தான் இல்லாதரபோது பார்க்கவேண்டிய வேலைகளை முடித்தவன்,செல்வத்திடம் சென்று,

"அங்கிள் நான் வர இரண்டு நாள் ஆகும்...நீங்க கொஞ்சம் பார்த்துக்குங்க...எதாவது பிரச்சனைனா எனக்கு போன் பண்ணுங்க..."என்று கூறிவிட்டு வெளியில் வந்தான்.திவ்யா டெண்டர் விஷயமாக வெளியில் சென்றிருந்தாள்.தனது கார் நோக்கி வரும் நேரம்,

"தம்பி...நான் உங்கள விட்டுட்டு வரேன்..."என்றார் ராமசாமி.அவர் ஏதோ தன்னிடம் சொல்ல நினைக்கிறார் என்று ஊகித்தவன் சரி என்றான்.காரில் செல்லும் போது இன்று அஞ்சலி திவ்யா இல்லாத போது சென்றது பின் யாரிடமோ கைபேசியில் பேசியது அனைத்தையும் கூறினார்.அனைத்தையும் அமைதியாக கேட்டவன்,

"நான் பார்த்துக்குறேன் தாத்தா...நீங்க கவலையவிடுங்க...அந்த டைரவர வாட்ச் பண்ணுங்க எனக்கு அவன் மேல சந்தேகம் இருக்கு..."என்றவன் தான் வெளியில் செல்வதாள் திவ்யாவை இரு நாடுகளுக்கு வீட்டில் விடும் படி கூறினான். அவரும் சரி என்றார்.

வீடு வந்தவன் கண்கள் வர்ஷியை தான் தேடியது அவள் தோட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டவன் அவளிடம் சென்றான்.

"என்ன வர்ஷிமா...என்ன பண்ற.."ஏதோ யோசனையில் இருந்தவள் திடீர் என்ற கேட்ட குரலில் பயந்துவிட்டாள்.அவளது பயத்தைக் கண்டவன்,

"ரிலாக்ஸ் வர்ஷி...நான் தான் பயப்படாத..."என்றவன் அவளுக்கு எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.

"என்ன மாமா கேட்டீங்க..."

"ப்பா...பேசிட்டியா..எங்க பேசா மடந்தை ஆகிட்டியோனு பயந்துட்டேன்..."அவனது பதிலில் மெலிதாக சிரித்தவள் தலையை ஆட்டி,

"இப்படியே சிரிச்சுக் கிட்டே இரு..."என்றவன் நாளை பெங்களூர் போவதாக கூறினான்.

"மாமா பயமா இருக்கு..."என்றாள் கைகள் நடுங்க.அவளது கைகளை ஆதரவாக பற்றியவன்,

"நான் பார்த்துக்குறேன்...நீ பயப்படாத...நீ அதையே நினைச்சுக்கிட்டு இருக்காத..."என்றான்.

"எத நினைக்ககூடாது" என்று திவ்யாவின் குரல் கேட்கவும் திடுக்கிட்டனர் இருவரும்.டெண்டர் பற்றிய மீட்டிங் முடித்து வீடு வந்த திவ்யா கிருஷ்ணனும் வர்ஷியும் தோட்டத்தில் இருப்பதைக் கண்டு அவர்களிடம் வந்தாள்.அவள் எதுவரைக் கேட்டாள் என்று புரியாமல் இருவரும் திருதிரு வென முழித்தனர்.

"ஏன் இப்படி பார்க்குகிறீங்க..."என்றாள் இருவர் முன்பும் சொடுக்கிட்டு.

"அது அக்கா..."என்று தடுமாறினாள் வர்ஷி.

"அவ லவ் தோத்து போச்சு...அதான் இப்படி இருக்கா..."என்றான் கிருஷ்ணன்.அவனது பதிலில் திடுக்கிட்ட இருவரும்,

"என்ன சொல்லுரீங்க..."என்றாள் திவ்யா அவசரமாக.வர்ஷியோ இந்த மாமா என்ன சொல்லுராங்க என்று புரியாமல் விழித்தாள்.அவனோ,

"ஆமா தாரணி...நாங்க பார்த்த சீரியல்ல வர்ஷிக்கு பிடிச்ச கேரக்டரோட லவ் தோத்து போச்சு அதான்உட்கார்ந்து இருந்தா நான் தான் அதையே நினைச்சுக்கிட்டு இருக்காதனு சொன்னேன் இல்ல வர்ஷி...."என்றான் அவளை பார்த்தவாறே அவளும் ஆம் என்பது போல தலையாட்டினாள்.திவ்யாவோ இருவரையும் கொல்லும் வெறியுடன் முறைத்துக் கொண்டு இருந்தாள்.

"எல்லாரும் இங்க தான் இருக்கீங்கலா..."என்று கேட்டபடி வநதார் கலைவாணி.அவரைக் கண்டவுடன் முகத்தை மாற்றிய திவ்யா,

"ஆமா.. இப்ப தான் நான் வந்தேன் "என்றாள்.

பின் அனைவரும் அங்கே தேனீர் அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.இடையில் திவ்யாவுக்கு அழைப்பு வரவும் பேசிவிட்டு அவள் தன் ரூம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்.அவளின் பின்னே கிருஷ்ணனும் வந்தான்.அவன் தன் பின்னே வருவதை பார்த்த திவ்யா அறையில் நுழைந்தவுடன்,

"இப்ப எதுக்கு என் பின்னாடி வரீங்க...போங்க..."என்றாள் மூக்கு விடைக்க.அவளுக்கு காலையில் இருந்து கிருஷ்ணன் தன்னைக் கண்டுகொள்ளாமல் இருந்தது கோபமூட்டியிருந்தது.அவளது கோபத்தை ரசித்தவன் அவளை பின்புறமாக அணைத்து,

"தரும்மா..இப்பெல்லாம் நீ கிட்ட வந்தாலே என் கை சும்மா இருக்க மாட்டீங்குது..."என்றவன் கை அவளது இடையில் அழுத்தமாக பதிந்தது.அதில் கூச்சமுற்றவள் அவனை இரு கைகளால் தள்ளினாள்.

"இப்ப ஏன் தள்ளுர...நீ தான என்ன பார்க்கலனு சொன்ன..."என்றவன் பார்வை அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தது.அதில் மேலும் சிவந்த திவ்யா,

"போதும்...விடு..நான் குளிக்க போனும்.."என்றவள் அவனை தள்ளிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்திருந்தாள்.அவள் குளித்து வெளிவரும் போது கிருஷ்ணன் தன் துணிகளை எடுத்துவைத்துக்கொண்டிருந்தான்.

"என்ன கிருஷ்ணா..என்ன பண்ற..எங்க போற..."என்று கேள்விகளாக தொடுத்தாள்.

"என் பிரண்டுக்கு ஒரு பிரச்சனை அதான் உதவி கேட்டான்....அதான் இரண்டு நாள் பெங்களூர் போயிட்டு வரேன்..."

"என்ன பெங்களூர் போரியா...அதுவும் இரண்டு நாளா...இங்க டெண்டர் வேலை இருக்கு கிருஷ்ணா..இப்ப போறேனு சொல்லுர..."என்று அடுத்த கேள்வி கனைகளை தொடுத்தாள்.அவளை கட்டிலில் அமர வைத்தவன்,

"தருமா...நான் எல்லாம் செல்வம் அங்கிள் கிட்ட சொல்லிருக்கேன்...டெண்டர் கோட்டீங் மட்டும் தான நீ தான் பண்ண போற...இரண்டு நாள்ல நான் வந்துடுவேன்..."

"என்ன விளையாடுறியா...எங்கேயும் போக வேண்டாம்...உன் பிரண்டுக்கு வரலனு சொல்லு.."என்றாள் காரமாக.

"தருமா...அவன் எனக்கு நிறையா உதவி செஞ்சிருக்கான் டா...அவனுக்கு நான் திரும்பி செய்யனும்ல...இந்த ஒருதடவ ப்ளீஸ் போயிட்டு வந்துடுறேன்.."என்றான் கெஞ்சுதலாக.அவள் அரை மனதாக சரி என்றாலும் பிரண்ட் யாரு என்ன பிரச்சனை என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனை ஒரு வழியாக்கியிருந்தாள்.அவளது கேள்விகளில் கிருஷ்ணனுக்கு தான் தலைசுற்றியது.பின் ஒருவழியாக அவளை சமாதானம் செய்து கிளம்பியிருந்தான்.

பெங்களூர் வந்தவன் தன் நண்பன் ஒருவன் உதவியுடன் சிறந்த டிடக்டிவ் ஏஜன்ஸி ஒன்றில் அனைத்து விவரங்களையும் கூறி தகவல் கூறுமாறு கூறியிருந்தான்.அவர்கள் கிருஷ்ணன் கொடுத்த நம்பர் ஸிவிட்ச் ஆப் என்று வரவும் அந்த நம்பர் கடைசியாக உபயோகித்த இடம் எது என்று பார்பதாக கூறினர்.பின் வர்ஷி சென்ற பப்புக்கு சென்றவன் அங்கு வர்ஷி வந்த நாள் அன்று பதிவான சிசிடிவி காட்சிகளைக் கேட்டான் முதலில் மறுத்தவர்கள் பின் அவன் போலிஸ் வரை செல்வேன் என்று மிரட்டவும் பார்க்க அனுமதித்தனர்.அதில் வர்ஷியை பின் தொடர்ந்து ஒருவன் உள் நுழைவதைக் கண்டான் அரையிருளில் அவனது முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் அவன் வெயிட்ரிடம் ஏதோ கொடுத்து கலக்க சொன்னது அனைத்தையும் பார்த்தவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.

அந்த வெயிட்ரரை பிடித்து வெளுத்து வாங்கியிருந்தான்.பின் தான் சொல்லியிருந்த டிடக்டிவ் ஏஜன்ஸியில் வெயிட்ர் அவனை பற்றிக் கூறிய அங்க அடையாலங்களை கூறி ஸ்கெட்ச் வரைந்து தருமாறு கேட்டிருந்தான்.அவர்களும் சரி என்றுவிட்டு பின் அந்த நம்பர் வாங்க அவன் சமர்பித்த அனைத்தும் போலி என்றும் கடந்த இரு நாட்களாக நம்பர் அணைத்து வைக்கபட்டிருப்பதால் அவனது இடத்தை காண்டுபிடிப்பதில் சற்று தாமதவாதாக கூறினர்.

இரண்டு நாட்கள் கடந்து இருந்தது கிருஷ்ணன் பெங்களூர் சென்று இரவு தான் வீடியோ கால் செய்வான் இரண்டு நிமிடம் பேசிவிட்டு வேலை இருப்பதாக வைத்துவிடுவான்.அவன் இல்லாமல் திவ்யாவுக்கு அனைத்தும் கசந்தது இருந்தும் தன் வேலையில் கவனம் செலுத்தியவள் டெண்டர் காண கொட்டேஷனை செல்வத்தின் உதவியுடன் சமர்பித்திருந்தாள்.அதற்கான முடிவு இன்று தெரிந்துவிடும் அதனால் சற்று பதற்றமாக இருந்தாள் திவ்யா.காலையில் கிருஷ்ணனுக்கு அழைத்தவள் அவன் எடுக்கவில்லை என்றவுடன் ஒருவித சோர்ந்த நிலையில் இருந்தாள்.

செல்வம் திவ்யாவின் ரூம்மிற்கு வேகமாக வந்தார் அவரது முகம் பதற்றமாக இருக்கவும்,

"என்ன அங்கிள்...ஏன் டென்ஷனா இருக்கீங்க..."என்றாள்.

"அது டெண்டர் நமக்கு கிடைக்கல...ஜேடி கம்பெணிக்கு போயிடுச்சு..."என்று விஷயத்தை போட்டு உடைத்தார்.அந்த செய்தியில் அதிர்ந்தவள் எப்படி என்று கேட்க முனையும் நேரம் அவளது கைபேசி ஒலித்தது கிருஷ்ணனோ என்று நினைத்து "ஹலோ..கிருஷ்ணா.."என்று கூறினாள்.ஆனால் அடுத்த முனையில் கூறிய செய்தி கேட்டு அதிர்ந்தாள் திவ்யா.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அச்சோ
அஞ்சலி பீடை வைத்த மைக்ரோ போன் மூலம் எதிரிக்கு டெண்டர் சீக்ரெட் தெரிந்து விட்டதா?
இந்த கூமுட்டை கிருஷ்ணன் நான் பார்த்துக்கிறேன் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு என்னத்தை பார்த்து கிழிச்சான்?
அங்கே அஞ்சலியின் அண்ணன் அந்த ரமேஷ் நாய் வேற இன்னும் சிக்கவில்லை
கிருஷ்ணன் இல்லைன்னா திவ்யாவுக்கு போன் செஞ்சது வேற யாரு?
போட்டிக்காரன் ஜேடி கம்பெனியா?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அச்சோ
அஞ்சலி பீடை வைத்த மைக்ரோ போன் மூலம் எதிரிக்கு டெண்டர் சீக்ரெட் தெரிந்து விட்டதா?
இந்த கூமுட்டை கிருஷ்ணன் நான் பார்த்துக்கிறேன் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு என்னத்தை பார்த்து கிழிச்சான்?
அங்கே அஞ்சலியின் அண்ணன் அந்த ரமேஷ் நாய் வேற இன்னும் சிக்கவில்லை
கிருஷ்ணன் இல்லைன்னா திவ்யாவுக்கு போன் செஞ்சது வேற யாரு?
போட்டிக்காரன் ஜேடி கம்பெனியா?
நன்றி தோழி...கிருஷ்ணனின் ஆட்டம் இனி தான் ஆரம்பம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top