என் மன்னவன் நீ தானே டா...24

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...24

தனது அறையில் லேப்டாப்பில் முழ்கி இருந்தாள் திவ்யா.அவளுக்கு வரவிருக்கும் டெண்டர் மிகவும் முக்கியம் தனது தாத்தா இருந்தவரை கவர்மெண்ட் ஆடர்கள் இவர்களுக்கு தான் கிடைக்கும் அந்தளவுக்கு அவரது உழைப்பு இருக்கும்.இது திவ்யாவுக்கு சவால் போல் தான் எப்படியாவது டெண்டரை எடுக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே வேறு எதையும் அவள் கருத்தில் பதியவைக்க அவள் முயலவில்லை.

கிருஷ்ணனுக்கு சகுந்தலாவின் மீது சற்று சந்தேகம் துளிர்ந்தது.ஏதேதோ சிந்தனைகள் உடன் தன் அறைக்கு வந்தவன் ஜாரை மேஜை மேல் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.

"கிருஷ்ணா தண்ணி தாகமா இருக்கு தண்ணி குடுங்க..."என்றாள் திவ்யா.கிருஷ்ணனிடம் இருந்து பதில் வராமல் போகவே திரும்பி கிருஷ்ணனை பார்த்தாள்,

"என்ன ஆச்சு கிருஷ்ணா...ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க..."என்றாள் அவனது யோசனை முகம் கண்டு.அவளிடம் கூறலாமா என்று நினைத்தவன் பின் வேண்டாம் என்று முடிவு செய்தான்.அவனிடம் பதில் இல்லை என்றவுடன் அவன் தோள்களை பற்றினாள் திவ்யா அதில் தன்னுர்வு பெற்றவன்,

"என்ன தாரணி..."என்றான்.

"அது தான் நான் கேட்குறேன் உங்களுக்கு என்ன... ஏதோ பேய பார்த்த மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க..."என்றாள் சிரித்துக்கொண்டு.அவளது பாவனையில் சிரித்தவன்,

"அது தான் என் பக்கத்துலே இருக்கே..."

"என்ன நான் பேயா..."என்றாள் மூக்குவிடைக்க.

"ம்ம்..இல்ல நீ மோகினி என்ன மயக்குற மோகினி..."என்றான் அவளை தூக்கி தன்மேல் போட்டுக்கொண்டு.அவனது கைகள் அவளது மேனியில் ஊர்வலம் வந்தன.அவனது தொடுகையில் உடம்பு சிலர்த்து அடங்கியது திவ்யாவுக்கு.

"யாரோ சொன்னாங்க முதல்ல லவ் பண்ணிட்டு அப்புறம்..."என்று வெளிவராத குரலில் கூறியவள் அவனை காண முடியாமல் அவனது மார்பில் முகம் புதைத்தாள்.அவளது பதிலில் உல்லாசமாக சிரித்தவன்,

"அப்புறம் என்ன தரும்மா...ஏன் நிறுத்திட்ட சொல்லு..."அவளோ அவனது மார்பில் மேலும் ஒன்றினாள்.அதில் கிருஷ்ணனுக்கு அவனது உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் அவளது முகம் நிமிர்த்தி பார்த்தான் அதில் தெரிந்த அளவு கடந்த காதலில் மயங்கியவன் அவளது சிவந்த உதடுகளை தன் உதடுகளால் மூடினான்.கணவனின் முதல் இதழ் முத்தத்தில் புது ரத்தம் பாய்வது போல உணர்ந்தாள் திவ்யா இருவரும் தங்கள் உலகில் மூழ்கி இருக்கும் நேரம் எங்கிருந்தோ கேட்ட கைபேசியின் சத்தத்தில் முதலில் உணர்வுக்கு வந்த கிருஷ்ணன் அவளிடம் இருந்து விலகியவன் தன் மனைவியின் சிவந்து இருக்கும் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி,

"ரொம்ப படுத்துற டி நீ...நான் சும்மா இருந்தாலும் நீ இருக்க விடமாட்ட போல..."என்றான் அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டு,

"நான் என்ன டா பண்ணேன்...செஞ்சது எல்லாம் நீ என்ன சொல்லுர..."என்றவள் அவன் மீது இருந்து எழுந்து அமர்ந்து கலைந்து இருந்த உடையை சரிசெய்தபடி கேள்வி கேட்டாள்.

"இந்த கேள்விக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...போடி..."என்றான்.

"ஆமா இந்த நேரத்துல உனக்கு யார் மேசேஜ் பண்றது..."என்றாள் விஷமமாக.அவள் மேசேஜ் என்றதும் அவனுக்கு வர்ஷியின் நியபகம் வந்தது அவளது சிம்மை தன் மோபைலில் போட்டிருந்தான்.ஒருவேலை வர்ஷிக்கு வந்த மேசேஜாக இருக்குமோ என்று நினைத்தவன் வேகமாக தன் மோபைலை எடுத்து பார்த்தான்.அவன் நினைத்தது போல அது வர்ஷிக்கு தான் வந்திருந்தது.அவளது புகைபடத்தை சற்று மார்பிங் செய்து அவளை அரைகுறை ஆடையில் இருப்பது போல மாற்றி கீழே என்ன ஹனி எப்படி இருக்க..என்று அனுப்பியிருந்தான் ரமேஷ்.

கிருஷ்ணனுக்கு இவ்வளவு நேரம் இருந்த உல்லாச மனநிலை மாறி முகம் கடினமுற்றது.ஒரு சிறு பெண்ணை எவ்வாறு எல்லாம் படுத்துகிறார்கள் என்று நினைத்தவனுக்கு ரமேஷைக் கொல்லும் வெறியே வந்தது.அவனது முகமாற்றத்தை கண்ட திவ்யா,

"என்ன கிருஷ்ணா கண்டுபிடிச்சிட்டியா..."என்றாள் தீவிரமாக.அவளது கேள்வியில் திடுக்கிட்டவன் இவ எத கேக்குறா என்று நினைத்தான்.

"என்ன..."என்றான் தயங்கியவாரே.அவனுக்கு வர்ஷி விஷயம் தெரிந்தாள் மிகவும் கோபப்படுவாள் என்று தெரியும்.கோபத்தில் ஏதாவது ஏடாகூடமாக செய்துவிட்டாள் வர்ஷிக்கு ஆபத்து என்று நினைத்தான் அதனால் அவளிடம் இது பற்றி எதுவும் கூறவேண்டாம் என்று முடிவெடுத்தான்.ஆனால் இப்போது அவளது கேள்வியில் என்ன கேட்கிறாள் என்று புரியாமல்.

"என்ன...எதை பத்தி கேட்குற..."

"நீ தான கிருஷ்ணா சொன்ன சரக்கு டேமேஜ் ஆனத பத்தி விசாரிக்க சொல்லிருக்கேனு...அதான் உன் முகம் மாறவும் யாரனு தெரிஞ்சிடுச்சானு கேட்டேன்..."

அவளது பதிலில் "ப்பா இத பத்தி கேட்டுருக்கா...நல்லவேளை நான் உலறல.."என்று நினைத்தவன்.

"உன் கிட்ட அத பத்தி யோசிக்காதனு சொன்னேன்ல...நான் பார்த்துக்குறேன் நீ இந்த டெண்டரை நல்லபடியா முடி..."என்றான்.

"ம்ம்...சரி.."என்றாள் அரைமனதாக.

"எனக்கு கொஞ்சம் தூக்கம் வருது நான் படுக்குறேன்..."என்றவன் அடுத்த பக்கம் சென்று படுத்துவிட்டான்.அவனுக்கு உள்ளுக்குள் பயம் எங்கு தான் ஏதாவது வர்ஷியை பற்றி அவளிடம் உலறி விடுவோமோ என்று அதனால் தூக்கம் வருகிறது என்று கூறி படுத்துவிட்டான்.படுத்தாலும் மனதில் பல நிகழ்வுகள் வலம் வந்தன அதனால் தூக்கம் வராமல் புரண்டவன் சிறிது நேரத்தில் தன்னை அணைத்து திவ்யா தலைகோதவும் அனைத்தும் மறந்து உறங்கினான்.அவனை பார்த்துக்கொண்டே இருந்தவள் பின் தன் வேலையில் ஆழ்ந்தாள்.

அஞ்சலி தனது அறையில் செல்வராஜ் வாங்கி வந்த மைக்குரோ போனை திவ்யாவின் அறையில் எவ்வாறு வைப்பது என்று யோசனையில் இருந்தாள்.அதன் மூலம் திவ்யாவின் செயல்களை கண்கானிக்க நினைத்தவள் எங்கு வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு படுத்தாள்.அதன்படி காலையில் சீக்கிரம் கார்மெண்ட்ஸுக்கு வந்தவள் திவ்யாவின் அறையை திறக்க முயன்றாள் எப்பொழுதும் அவளிடம் அந்த அறையின் ஒரு சாவி இருக்கும்.அதைக் கொண்டு திறக்க முயன்று தோற்றாள்.என்ன இது புது பூட்டு மாதிரி இருக்கு என்று அப்பொழுது தான் பூட்டை கவனித்தாள்.அப்பொழுது அங்கு வந்த ராமசாமி,

"என்ன ம்மா...இன்னக்கி சீக்கிரம் வந்துட்ட.."என்றார்.அவரது வீடு கார்மெண்ட்ஸ் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் உள்ளது அதனால் அவர் தான் முதலில் வருவது இது வழமை இன்று அஞ்சலி வரவும் கேட்டர்.

"அது கொஞ்சம் வேலை இருக்கு தாத்தா...அதன்..யார் மேடம் ரூம் பூட்டை மாத்தினது..."

"கிருஷ்ணன் தம்பி தான் மா...யாரும் உள்ள அனுப்பதீங்னு சொன்னுச்சு.."அவரது பதிலில் பல்லைக் கடித்தவள்.

"சரி தாத்தா..."என்று கூறிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள்.ச்ச இப்ப என்ன பண்றது யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் வந்ததிலிருந்து அவளது முகபாவனைகளை கண்ட ராமசாமிக்கு ஏதோ சரியில்லை என்றுபடவும் வெளியில் வந்து கிருஷ்ணனுக்கு போன் செய்துவிட்டார்.அவரின் அழைப்பை ஏற்றவன் அவர் கூறியவற்றைக் கேட்டுவிட்டு,

"நான் பார்த்துக்குறேன் தாத்தா...நீங்க அந்த டைரவர கொஞ்சம் கவனிங்க..."என்றவன் மேலும் சில விஷயங்கள் பேசி வைத்தான்.எங்கு திரும்பினாலும் பிரச்சனை யாரால இருக்கும் என்று நினைத்தவன்.முதல்ல சின்னகுட்டி பிரச்சனைய முடிக்கனும் என்று நினைத்தவன் பெங்களூர் செல்ல திட்டமிட்டான் அதற்கு முன் கார்மெண்ட்ஸில் சில வேலைகளை முடிக்க நினைத்தான்.

காலையில் வழக்கத்துக்கு மாறாக சற்று தாமதமாக எழுந்தாள் திவ்யா.பக்கத்தில் தன் கணவனை தேடியவள் அவன் இல்லாததைக்கு கண்டு,

"எப்போதும் சார நான் தான் எழுப்பனும் இன்னக்கி எங்க இவ்வளவு சீக்கிரம் கிளம்பி போனான்..."என்று யோசித்தவள் எழுந்து கார்மெண்ட்ஸ் செல்ல தயாரானாள் திவ்யா.கார்மெண்ட்ஸில் கிருஷ்ணன் செல்வத்திடம் சிலவற்றைக் கூறிக்கொண்டிருந்தான் அப்போது இரண்டு மூன்று முறை அஞ்சலி இங்கும் அங்கும் சென்றதை கவனித்தான்.இவ இங்க என்ன பண்றா என்று நினைத்தான் பின் அவளைப் பற்றிய சிந்தனையில் இருந்து வெளிவந்தவன் செல்வத்தை அனுப்பிவிட்டு தான் பெங்களூர் சென்று செய்ய வேண்டியவைகளை மனதில் பட்டியல் இட்டுக்கொண்டான்.இதில் மாட்டியிருப்பது பெண் என்பதால் தானே கண்டறிய நினைத்தான் யாரிடமும் பகிர அவனுக்கு நம்பிக்கையில்லை.

திவ்யா கார்மெண்ட்ஸ் வந்து மதியம் கடந்து இருந்தது அவளுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் நினைவு முழுவதும் தன்னவனிடமே. நேற்றைய நிகழ்விற்கு பின் மனது அனைத்திற்கும் கிருஷ்ணனை தேடியது. அவனோ அவளிடம் சிக்காமல் கண்ணாமூச்சு ஆடிக்கொணடிருந்தான்.காலையில் இருந்து தன் வேலையில் மூழ்கி இருப்பவனை அழைக்க முடியாமல் தவித்தாள்.இரண்டு முறை அவனது பகுதியை சுற்றுவது போல அவனை அழைக்க முற்பட்டாள் ஆனால் அவனோ கர்மமே கண்ணாக தன் வேலையில் கவனமாக இருந்தான்.உண்மையில் அவன் வேலையில் கவனமாக இருப்பது போல தன்னைக் காட்டிக்கொண்டான்.அவனுக்கு திவ்யாவின் நேற்றைய அருகாமை அவனது இளமை உணர்வுகளை தட்டி எழுப்பியிருந்தது.ஆனால் தற்பொழுது இருக்கும் சூழல் சரியில்லாத காரணத்தால் தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டவன் அவளிடம் இருந்து சற்று விலகி இருக்க நினைத்தான்.

கிருஷ்ணன் அறியவில்லை அவனது விலகலில் அவள் தவிக்கப்போகிறாள் என்றும் மேலும் எந்த விஷயத்தை மறைக்க நினைக்கிறானோ அதனாலே அவனுக்கும் அவளுக்கும் இடையில் இடைவெளி வரப்போகிறது என்று. பெங்களூர் செல்ல அவன் கூறப்போகும் பொய் அவனுக்கு பாதகமாக போகிறது என்று அவன் அறிந்திருக்கவில்லை.பெங்களூர் செல்லும் கிருஷ்ணன் தன் வேலையில் வெற்றி பெறுவானா...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

திவ்யாவின் கம்பெனியில் அஞ்சலிக்கு என்ன வேலை?
அங்கேதான் அஞ்சலி வேலை பார்க்கிறாளா?
எவ்வளவு தைரியமா திவ்யா ரூமை திறக்கப் பார்க்கிறாள்?
பெங்களூரு போவதற்கு கிருஷ்ணன் பொய் சொன்னால் என்ன?
இது ஒரு குற்றமா?
உண்மையை சொன்னால் மட்டும் தங்கை வர்ஷியை திவ்யா சும்மா விட்டுடுவாளா?
ஏன்மா காயத்ரி
ஏற்கனவே இரண்டு பேருக்கும் நடுவிலே ஒண்ணும் நடக்கலை
இதிலே கிருஷ்ணனுக்கும் திவ்யாவுக்குமிடையே இடைவெளியா?
உருப்பட்ட மாதிரிதான்
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

திவ்யாவின் கம்பெனியில் அஞ்சலிக்கு என்ன வேலை?
அங்கேதான் அஞ்சலி வேலை பார்க்கிறாளா?
எவ்வளவு தைரியமா திவ்யா ரூமை திறக்கப் பார்க்கிறாள்?
பெங்களூரு போவதற்கு கிருஷ்ணன் பொய் சொன்னால் என்ன?
இது ஒரு குற்றமா?
உண்மையை சொன்னால் மட்டும் தங்கை வர்ஷியை திவ்யா சும்மா விட்டுடுவாளா?
ஏன்மா காயத்ரி
ஏற்கனவே இரண்டு பேருக்கும் நடுவிலே ஒண்ணும் நடக்கலை
இதிலே கிருஷ்ணனுக்கும் திவ்யாவுக்குமிடையே இடைவெளியா?
உருப்பட்ட மாதிரிதான்
நன்றி தோழி...அஞ்சலி திவ்யாவின் செயலாளர்....அவனது பொய் சிலருக்கு சாதகமாகும் அது தான் பிரச்சனை...இருவருக்கும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top