என் மன்னவன் நீ தானே டா...14

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...14

கிருஷ்ணன் ஓய்ந்து போய் ஒரு இறுக்கையில் அமர்ந்திருந்தான்.அவனுக்கு இப்பவே இவ்வளவு பிரச்சனை இன்னும் எவ்வளவு இருக்கோ என்ற யோசனை ஓடிக்கொண்டு இருந்தது.திவ்யாவோ வர்ஷினியுடன் தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தாலும் அவ்வபோது தன் கணவனையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.இப்போழுது கூட அவளால் நம்ப முடியவில்லை அனைத்து கலாட்டாவும் முடிந்து கல்யாணமும் முடிந்திருந்தது.சற்றுமுன் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தாள்,

"அக்கா..எழாத உக்காரு.."என்று வர்ஷியின் குரல் கேட்டு அனைவரும் திரும்பினர்.கலைவாணியோ இளைய மகளைக் கண்ட உடன் ஓடி அவளை அணைத்துக் கொண்டு,

"எங்கடி போன...நாங்க பயந்துட்டோம்..."என்றார் நடுக்கத்துடன்.அவரது கலங்கிய கண்களை துடைத்தவள்,

"எனக்கு ஓண்ணுமில்ல..நீ அழறத முதல்ல நிறுத்து..."என்று அதட்டிவிட்டு அவரது கை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றாள்.

வர்ஷினியின் குரல் கேட்டவுடன் சகுந்தலாவின் முகம் மாறத் துவங்கியது உடனே தனது மகன் அபினாஷ்க்கு தொடர்புக் கொண்டார் அவனது பேசியோ அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.இவன் எதுக்கும் லாய்க்கு இல்ல இவனபோய் நம்பினேன் பாரு என்ன சொல்லனும்.இப்ப இவங்கிட்ட வேற நல்லவ மாதிரி நடிக்கனும் என்று சொல்லிக் கொண்டு வர்ஷியிடம் வந்து,

"எங்க வர்ஷி போன..பாரு உங்க அக்கா அம்மா எல்லாரும் பயந்துட்டாங்க.."என்றார் நல்லவிதமாக.வர்ஷியோ,

"நான் நல்லா தான் அத்தை இருக்கேன்.."என்று கூறிவிட்டு தன் தாயை அழைத்துக்கொண்டு மேடைக்கு சென்றுவிட்டாள்.

வர்ஷி வந்தவுடன் கிருஷ்ணன்

"வா மா..வந்துட்டியா தெய்வமே..ப்பா தப்பிச்சேன்.."என்று மனதில் நினைத்தான்.திவ்யாவோ வர்ஷி வந்தவுடன்,

"என்ன பிரச்சனை வர்ஷி..."என்றாள் தனது அத்தையை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.வர்ஷியோ

"அக்கா நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல..நீ ஒழுங்கா உக்காரு.."என்று கட்டளையிட்டவள் கிருஷ்ணனிடம் திரும்பி,

"என்ன மாமா பாத்துட்டு இருக்கிங்க தாலியைக் கட்டுங்க.."என்றாள் ஆணையிடும் தோரணையில்.

"என்னங்கடா இன்னக்கி எல்லாரும் என்ன ரொம்ப மிரட்டுரிங்க..."என்று மனதில் நொந்துக் கொண்டு வர்ஷியிடம்,

"சரி மா.."என்றான்.பின் அனைவரின் ஆசியோடு மாங்கல்யத்தை திவ்யாவின் கழுத்தில் அணிவித்தான் கிருஷ்ணன்.

"ப்பா..கல்யாணம் முடிஞ்சிடுச்சு.."என்று நினைத்தான் கிருஷ்ணன்.

திவ்யாவுக்கோ எதையோ சாதித்துவிட்ட உணர்வு.தனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலியை தொட்டு பார்க்கும் போழுது உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டானது.அனைத்தும் நல்லவிதமாக முடியவும் வர்ஷி கண்களால் வருணுக்கு நன்றி தெரிவித்தாள்.அவன் மட்டும் தக்க சமயத்தில் வரவில்லை என்றால் தன் நிலை என்று நினைத்தவள் மனது பதறியது. அவளின் முகத்தை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்று உணர்ந்த வருண் தன் கண்களை மூடி திறந்தான் எதுவும் இல்லை என்று கூறும்விதமாக.வருணின் பாவணையில் வர்ஷியின் மனது சற்று அமைதி அடைந்தது.அதன்பின் தன் இயல்புநிலைக்கு வந்தவள் தன் அக்காவின் திருமணத்தில் உற்சாகமாக கலந்துகொண்டாள்.

அனைத்து சம்ரதாயங்ளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருந்தது திவ்யா அனைத்திலும் ஆர்வமாக கலந்து கொண்டாள் என்றாள் கிருஷ்ணனோ அடுத்த பிரச்சனை வரும் முன் அனைத்தும் முடிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருந்தான்.சகுந்தலாவோ இது எதிலையும் கலந்து கொள்ளாமல் மனதிற்குள் தன் மகனை திட்டிக் கொண்டு இருந்தார்.

"எங்க போய் தொலைஞ்சானு தெரியல வரட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு.."என்று கருவிக்கொண்டு இருந்தார்.அவனோ மருத்துவமனையில் தலையில் காயத்துடன் தன் தோழனுடன்,

"எவன் தெரியல டா...கடைசி நேரத்துல எல்லாதையும் கெடுத்துட்டான்.."என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.

"நல்ல வேல டா...அவன் நம்பல பார்க்கல..இல்லனா அவ்வளவு தான்.."என்றான் அவனின் நண்பன்.

அபினாஷும் அவனது நண்பனும் வர்ஷிக்கு மயக்க மருந்து கொடுத்து தூக்கிக்கொண்டு வரும் நேரம் தான் வருணின் கண்களில் மாட்டிக்கொண்டனர்.பின் ஒருவாறு வருணிடம் இருந்து தப்பி வந்திருந்தனர்.அபினாஷோ தற்போழுது தான் வீடு சென்றால் தன் தாய் பேசியே தன்னை கொன்றுவிடுவார் என்று நினைத்தவன் தன் மோபைலை அனைத்துவிட்டு தன் நண்பனிடம்,

"டேய்...இப்ப நாம இங்க இருக்கிறது நல்லது இல்ல..நாம ஊட்டில எனக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கான் அங்க போயிடலாம்.."என்றான்.அவனது நண்பனுக்கு அவன் கூறுவது சரி எனப்பட,

"சரி டா..போலாம்.."என்றான்.

கலைவாணிக்கு தனது மகளை மணக்கோலத்தில் காணும்பொழுது மனது நிறைந்து இருந்தது.திவ்யாவோ வர்ஷியை கேள்விகலால் துளைத்துக் கொண்டு இருந்தாள்.

"வர்ஷி..எங்க போன..சொல்லு.."

"அக்கா..நான எங்ககேயும் போகல..எனக்கு சாப்பாடு ஒத்துகல அதன் மாத்திரை வாங்க தான் போனேன்.."என்று பொய் சொன்னாள்.

"என்னடி சொல்ர நைட் நல்லாதன இருந்த தீடீர்னு எப்படி உடம்பு முடியாம போகும்...நீ ஏன் போன..."என்று விடாமல் கேள்விகளால் துளைத்தாள்.திவ்யா தன்னை மேற்கொண்டு கேள்விக் கேட்கும் முன் வர்ஷி,

"அக்கா...என்ன பத்தி கவலைபடாத நான் நல்லா தான் இருக்கேன்..நீ போய் மாமாவ பாரு.."என்று விரட்டினாள்.

"ஏய் பதில் சொல்லாம தப்பிக்க பார்க்கிறியா.."என்றாள் திவ்யா.

"ஹி..ஹி..அப்படி எல்லாம் இல்ல அக்கா...நீ தேவையில்லாம யோசிக்காத..நீ போ முதல்ல.."என்று அவளை இழுத்து கொண்டு கிருஷ்ணின் பக்கத்தில் சென்றாள்.

கிருஷ்ணனோ "ப்பா..ஒரு வழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது இல்லனா என் நிலைமை.."என்று நினைத்தவன் கண்முன் திவ்யா கத்தியை வைத்தது நியபகம் வரவும் சரியான ராட்சசியா இருப்பா போல என்று மனதிற்குள் புலம்கிறேன் நினைத்து வாய்விட்டு புலம்பிக் கொண்டு இருந்தான்.

"யாரை மாமா ராட்சசினு சொல்ரிங்க.." என்றாள் வர்ஷி.அவளது குரலில் தூக்கிப்போட்டவாரு எழுந்து நின்றான்.

"அய்யோ மாமா..ஏன் இப்படி பயப்படுரிங்க..."என்றாள் வர்ஷி.

கிருஷ்ணனோ வர்ஷிக்கு பின்னால் தன்னையே முறைத்துக்கொண்டு இருக்கும் மனைவியைக் கண்டவன்,

"அய்யோ..காதில வாங்கிட்டா போலவே..என்ன டா கிருஷ்ணா உனக்கு நேரமே சரியில்லை..."என்று தனக்குள் நொந்துக்கொண்டான்.அதற்குள் வர்ஷி,
"அக்கா நீ மாமா பக்கத்துல உக்காரு..நான் போய் அம்மா என்ன செய்யறாங்கனு பார்த்துட்டு வரேன்.."என்று கூறி அமர வைத்துவிட்டு சென்றாள்.

கிருஷ்ணனோ திவ்யா அருகில் அமர்ந்தவுடன் "இப்ப என்ன திட்டப்போரானு தெரியலையே.."என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.
திவ்யாவோ,"நீ..நீங்க..உங்களுக்கு இந்த வேட்டி சட்டை நல்லா இருக்கு.."என்றாள்.

"என்ன இவ திட்டுவானு பார்த்தா.."என்று யோசித்தவன் பின் தான் அவள் தன்னை பன்மையில் அழைத்தை உணர்ந்து ஆச்சிரியமாக பார்த்தான்.அவன் தன்னை பார்பதை கண்டு என்ன என்றாள் கண்களால் அதில் மயங்கியவன் அழகாக சரித்து ஒன்றுமில்லை என்றான்.அவனது சிரிப்பில் மயங்கி அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் திவ்யா.இருவரும் அவர்களது உலகில் இருந்தனர்.

"அக்கா.."என்று வர்ஷியின் அழைப்பில் அவர்கள் உலகில் இருந்து வெளி வந்தாள் திவ்யா.

"என்ன வர்ஷி.."

"அக்கா மாமா கிளம்புங்க நேரா மாமா வீட்க்கு போய் விளக்கேத்திட்டு நம்ம வீட்டுக்கு போகனுமா..அம்மா சொன்னாங்க.."என்று கூறி சென்றாள்.

கிருஷ்ணனோ தற்பொழுது திவ்யாவின் முகத்தில் வந்து போன பாவனைகளை நினைத்துக்கொண்டிருந்தான்.

"இவ என்ன நம்மல இப்படி பாக்குரா..ஒரு வேல நம்மல விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாளா.."என்று நினைத்தவன் பின்"ச்ச..ச்ச இருக்காது அவளே கார்மெண்ட்ஸ காப்பாத்த தான் கல்யாணம் அப்படினு சொன்னாளே..பின்னே அப்படி பார்த்தா.."என்று குழம்பிக் கொண்டு இருந்தான்.
"கிருஷ்ணா.."என்று திவ்யாவின் குரலில் கலய்ந்தவன்.

"என்ன தாரணி.."என்றான்

"கிளம்புங்க.."என்றாள் எங்க என்றான் புரியாமல் விழித்தவனைக் கண்டு திவ்யாவுக்கு சிரிப்பு வந்தது முயன்று அடக்கியவள் பின் வர்ஷி கூறியவற்றை கூறினாள்.

அனைவரும் கிருஷ்ணனின் வீடு சென்றனர்.அங்கு கடவுளின் முன் வணங்கி விளக்கேற்றினாள் திவ்யா.சிறிது நேரம் கழித்து திவ்யாவின் வீடு சென்றனர்.வீட்டைக் கண்ட கிருஷ்ணனோ,

"என்ன இது வீடா...இது அரண்மனை மாதிரி இருக்கு.."என்று நினைத்தவன். மனது தன்னால் சுனங்கியது.மனதில் மீண்டும் ஒரு போராட்டம் துவங்கியது.கலைவாணி இவர்களை நோக்கி வருவதை உணர்ந்து தன் முகத்தை மாற்றினான். ஆரத்தி எடுத்து மணமக்களை வரவேற்றார்.

கல்யாணத்திலேயே இவ்வளவு பிரச்சனை இன்னும் என்ன எல்லாம் வரபோகுதோ என்று நினைத்துக் கொண்டு திவ்யாவின் வீட்டில் காலடி வைத்தான் கிருஷ்ணன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு
காயத்ரி டியர்

வர்ஷியை அத்தை மகன் கடத்தப் பார்த்து வருண் காப்பாற்றி விட்டானா?
சூப்பர்
அபினாஷ் ஊட்டிக்கு ஓடிட்டானா?
ஹா ஹா ஹா
அடேய் கிருஷ்ணா
நீ புது மாப்பிள்ளைடா ஜாலியா இரு, தம்பி
ஐயோ பாவம்
இப்படி பயந்துக்கிட்டே இருந்தால் கிருஷ்ணனுக்கு திவ்யாவையும் அவளுடனான வாழ்க்கையையும் எப்படி பிடிக்கும்?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு
காயத்ரி டியர்

வர்ஷியை அத்தை மகன் கடத்தப் பார்த்து வருண் காப்பாற்றி விட்டானா?
சூப்பர்
அபினாஷ் ஊட்டிக்கு ஓடிட்டானா?
ஹா ஹா ஹா
அடேய் கிருஷ்ணா
நீ புது மாப்பிள்ளைடா ஜாலியா இரு, தம்பி
ஐயோ பாவம்
இப்படி பயந்துக்கிட்டே இருந்தால் கிருஷ்ணனுக்கு திவ்யாவையும் அவளுடனான வாழ்க்கையையும் எப்படி பிடிக்கும்?
நன்றி தோழி
திவ்யா பிடிக்கவைத்துவிடுவாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top