என் மன்னவன் நீ தானே டா...13

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...13

"நிறுத்துங்க...நிறுத்துங்க..என்று கூறிக்கொண்டு ஓடி வரும் நண்பனை பார்த்த கிருஷ்ணன் குழம்பி போய் பார்த்தான்.திவ்யாவோ கிருஷ்ணனை கொலை வெறியோடு முறைத்துக் கொண்டு இருந்தாள்.நண்பனை புரியாமல் பார்த்துவிட்டு திவ்யாவின் புறம் திரும்பிய கிருஷ்ணன் அவள் தன்னைகொலைவெறியோடு பார்பதைக் கண்டு

"இவ ஏன் இப்படி முறைக்கிறா.."என்று நினைத்தவன் அப்பொழுது தான் நண்பன் கூறிக்கொண்டு வரும் வார்த்தைகளைக் கேட்டான்.

"நிறுத்துங்க..நிறுத்துங்க.." என்று கத்திக் கொண்டு வந்தது.அவன் நிறுத்துங்கனு கத்துனதுக்கு இவ ஏன் என்ன முறைக்கிறா என்று நினைக்கும் வேளையில்,

"என்ன உங்களோட பிளான் இந்த கல்யாணத்த நிறுத்த.."என்று அடிக்குரலில் சீரினாள் திவ்யா.அவள் கூறியதைக் கண்டு

'இவ என்ன லூசா..'என்று நினைக்கத்தவன் அவளிடம்

"என்னடி உலருர.."என்றான்.

"அது எப்படி ஒன்னும் தெரியாத மாதிரி முகத்தை வச்சிரிக்கியோ...இந்த கல்யாணதை நிறுத்தனும் நீயும் உன் பிரண்டும் என்ன பிளான் பண்ணிங்க..."என்று கேட்டவள்.அவனது இடையில் ஒரு கத்தியை வைத்து,

"எது நடந்தாலும் நீ எந்திரிக்கக் கூடாது...மீறி எந்திரிச்ச..."என்று மிரட்டினாள்.அவளது செயலைக் கண்டு அதிர்ந்தவன்,

"அடியே..சத்தியமா சொல்றேன் எனக்கு ஒன்னும் தெரியாதுடி...அவன் ஏதோ உலரிக்கிட்டு வரான்..நீ அவசரப்பட்டு என்ன குத்திடாத.."என்றான் நடுங்கியவாரே.

"என்ன ஏமாத்திட்டு நீ உனக்குனு வேறு தேவதை தேடி போலாம்னு இருக்கியா...உன்னோட வாழ்வும் சாவும் என் கூட தான்.."என்றாள் கண்களில் ஒருவித வெறியோடு.

"அப்படி எல்லாம் இல்லடி..என்ன நம்பு..நீ தான் தேவதை..நீ மட்டும் தான் என் தேவதை..கத்திய எடுடி பயமா இருக்கு..."என்றான்.அவளோ சிறிதும் இவனை கவனிக்கவில்லை கிருஷ்ணனோ,

"அடேய் பாவி பயல என்ன தான் உன்னோட பிரச்சனை...நீ கத்துனதுக்கு என் உயிரு பெயிடும் போல இருக்கு.."என்று மனதில் புலம்பியவன்.கடவுளே இந்த ராட்சசி கிட்டேந்து என்ன காப்பாது வேண்டிக்கொண்டான்.

வருணோ நிறுத்துங்க என்று கத்திக்கொண்டு மேடையை அடைந்தான்.அவனைக் கண்ட கிருஷ்ணனோ,

"என்ன டா...சீக்கிரம் சொல்லி தொலை.."என்று அடிக்குரலில் சீரினான்.

"நீ தான டா..நிறுத்த சொன்ன.."என்று கிருஷ்ணன் தலையில் குண்டைப் போட்டான் வருண்.அதைக் கேட்ட திவ்யாவோ கத்தியை மேலும் லேசாக அழுத்தினாள்.

"ஒரு நிமிஷம் இருடி..என்னனு கேக்குறன்..அவசரப்படாத.."

"டேய் படு பாவி நான எப்படா சொன்னேன்.."என்றுக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கலைவாணி பதத்துடன்.

"என்ன தம்பி பிரச்சனை..என்னனு சொல்லுங்க.."என்றார் கண்கள் கலங்க.அவரிடம் திரும்பி,

"அத்தை பதஷ்ட்டபடாதிங்க..நான் என்னனுக் கேக்குறேன்.."என்றான் கிருஷ்ணன்.பின் நண்பனிடம் திரும்பியவன்,

"அடேய்..சொல்லித் தொலை..என் உயிர எடுத்துடுவ போல.."என்றான்.

"டேய் நீ தான சொன்ன என் அம்மா இல்லாம என் கல்யாணம் நடக்காதுனு..அதான்.."என்று கூறியவன் பத்மினியின் படத்தை எடுத்தான்.அதன்பின் தான் அனைவரும் சற்று அசுவாசம் அடைந்தார்கள் என்றால் கிருஷ்ணனொ வருணை கொலை வெறியொடு முறைத்துக் கொண்டு இருந்தான்.அதைக் கண்ட வருணோ

"ஏன் டா என்ன முறைக்குற..."என்றான்.

"அதுக்கு ஏன் டா நிறுத்துங்கனு கத்துன.."

"அம்மா படம் இல்லாம நீ தாலிக் கட்டிட்டா அப்புறம் நீ வருத்தபடுவ அதான்..."என்று பாவம் போல கூறினான்.

"டேய் உன்னால ஏன் உயிர் போயிருக்கும்..படு பாவி.."என்று நினைத்தவன்.அவனிடம்

"ரொம்ப நன்றி டா.."என்றான் கைகள் கூப்பி கூறினான்.
பின் திவ்யாவிடம் திரும்பி,
"அதான் அவன் சொல்லிட்டான்ல நீ கத்திய எடுமா..."என்றான்.அவனை ஒரு முறைத்துவிட்டு கத்தியை எடுத்தாள்.கிருஷ்ணனுக்கு அவள் கத்தியை எடுத்தவுடன் தான் மூச்சே வந்தது.
"அப்பா..ராட்சசி எடுத்துட்டா ..ராட்சசி..ராட்சசி.."என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு இருந்தான்.அனைவரும் சற்று ஆசுவாசம் அடைந்ததும் ஐயர் நல்ல நேரம் முடிய போது தாலியைக் கட்டுங்க என்றார்.
கிருஷ்ணனோ மனதில்,
"சீக்கிரம் கொடுங்க அடுத்து பிரச்சனை வருதுக்குள்ள தாலியைக் கட்டிருறேன் இல்ல இவ என்ன குத்திக் கொன்னாலும் கொன்னுடுவா ராட்சசி".ஆனால் பாவம் அவன் அறியான் இன்று கடவுள் அவனை ஒருவழியாக்காமல் விடப்போவது இல்லை என்று.

கிருஷ்ணன் தாலியை கட்டப்போகும் நேரம் சகுந்தலா,

"இரு தம்பி...எங்க வர்ஷினிய காணும்...அக்கா கல்யாணம்னு அவ தான் ரொம்ப ஆர்வமா இருந்தா...எங்க அவ அண்ணி..."என்றார் பீடிகையோடு.அவரது பேச்சில் துணுக்குற்ற திவ்யா சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தனது தாயைப் பார்த்தாள்.கலைவாணியோ தற்போது தான் தனது இளைய மகள் தன் பக்கத்தில் என்பதை உணர்ந்தார்.

கிருஷ்ணனோ அய்யோ இந்த குண்டு ஆன்ட்டி என்ன பண்ணிவச்சிருக்குனு தெரியலயே இப்ப இதுக்கும் இவ என்ன தான் குத்த போறா...அய்யோ கடவுளே காப்பாத்து என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்தான்.தற்போது அனைவரும் வர்ஷியை தேடும் பணியில் இருந்தனர்.சகுந்தலாவோ திவ்யாவைக் கண்டு,

"தேடு..தேடு..நீங்க தேடுனாலும் அவ கிடைக்கமாட்டா.."என்று மனதில் கருவிக் கொண்டு இருந்தார்.திவ்யாவோ சகுந்தலாவை கொலைவெறியோடு முறைத்துக்கொண்டு இருந்தாள்.ஆனால் உள்ளுகுள் தங்கைக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு இருந்தாள்.அவளுக்கு சகுந்தலாவின் முகத்தில் தெரிந்த சிரிப்பு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது.

கலைவாணியோ மண்டபம் முழுவதும் தேடிக் கொண்டு இருந்தார்.அவருக்கு மனது படபடக்க தொடங்கியது.அனைவரும் தேடி தோல்வியுடன் வந்தனர்.திவ்யாவோ தான் நியமித்த ஆட்களைக் கொண்டு தேடச்சொல்லிருந்தாள் அவர்களும் மண்டபம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தனர்.நேரம் ஆக ஆக திவ்யாவுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது இதற்கு மேல் தான் அமர்ந்திருந்தால் சரியில்லை என்பதை உணர்ந்து மேடையில் இருந்து எழ முற்படும் நேரம்.

"அக்கா எழாத உக்காரு..."என்று வர்ஷியின் குரல் கேட்டு அனைவரும் திரும்பினர்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
பத்மினி அம்மாவின் போட்டோவுக்காகவா வருண் கல்யாணத்தை நிப்பாட்ட சொன்னான்?
ஹா ஹா ஹா
குண்டு ஆன்ட்டி ஏதாவது செய்தால் திவ்யா உன்னை கண்டிப்பா குத்தி விடுவாள் கிருஷ்ணா
சகுந்தலா வர்ஷியை கடத்தப் பார்த்தாளா?
பல்ப் வாங்கினாளா?
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top