என் மன்னவன் நீ தானே டா...12

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...12

தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் தூங்காமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.அவனையே பார்த்துக்கொண்டு இருந்த வருண்,

"டேய் நல்லா தூங்கு டா..அப்ப தான் நாளைக்கு.."என்று வருண் கூறிமுடிப்பதற்குள்.

"டேய்..உன்ன கொல்லப்போறேன் பாரு.."என்று கூறி அவனை தலையனையால் மொத்து மொத்தினான் கிருஷ்ணன்.

"டேய் அப்ப தான் நாளைக்கு மேடையில தூங்காம இருப்பனு சொல்ல வந்தா..நீ ஏன் டா தப்பாவே யோசிக்கிற..."என்றான் அவனை இயல்பாக்கும் பொருட்டு.

"பச்..படுத்த டா.."என்று ஒரு வித சலிப்போடு கூறினான் கிருஷ்ணன்.

"டேய் என்ன தான் உன் பிரச்சனை..ஏன் இப்படி இருக்க..ஒன்னு மட்டும் சொல்லு உனக்கு திவ்யாவை பிடிக்கலையா..."என்றான் காரமாக.

"அப்படி இல்ல டா.. அவள பிடிச்சிருக்கு ஆனா நான் அவளுக்கு பொருத்தமானவன் இல்ல டா..."
"எதவச்சு அப்படி சொல்ர.."என்று விடாமல் கேட்டான் வருண்.

"பணம் பணத்தோட தான்டா சேரனும்...எனக்கு இந்த பணக்காரங்க சகவாசகமே ஒத்துவராதுனு உனக்கு தெரியாதா.."என்றான் கிருஷ்ணன்.

"டேய் நீ பணத்த மட்டும் தான் நீ பார்க்குர திவ்யா அவங்க குடும்பத்தை பார்த்தா பணத்துக்கு முக்கியதுவம் கொடுக்குர மாதிரி தெரியல...நீ தேவையில்லாம உன்ன குழப்பிக்காத.."என்றான் ஒரு நல்ல நண்பனாக.கிருஷ்ணன் முகம் சற்று தெளிந்தது அதை பார்த்த வருண்,

"இப்பவாது தூங்கி தொலை டா...உன்னால ஏன் தூக்கமும் கெடுது.."என்று கூறிவிட்டு படுத்தான்.கிருஷ்ணனும் வருண் கூறுவது சரி நம்ம தான் தேவையில்லாம யோசிக்கிறமோ என்று நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டான்.

இங்கே திவ்யாவோ கிருஷ்ணனாவின் நினைவில் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தாள்.அவளின் நிலைகண்டு வர்ஷி தான்,
"அக்கா..என்ன மாமா கூட இப்பவே டிரீம்ஸா..."என்று வம்பலத்துக் கொண்டிருந்தாள்.

"ஏய் வாலு..இன்னும் தூங்காம என்ன செய்யர..."என்றாள் திவ்யா.

"நான் எப்படி தூங்கிறது நீ இப்படி புரண்டு புரண்டு படுத்தா..."என்றாள் பாவமாக.அசடு வழிந்த திவ்யா,

"சாரி டி...ஏதோ யோசனை அதான்..நீ தூங்கு.."என்றாள்.அந்த நேரம் உள்ளே நுழைந்த கலைவாணி இரு பெண்களும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அதட்டினார்,

"இரண்டு பேரும் இன்னும் தூங்காம என்ன செய்றிங்க தூங்குங்க.."என்றார்.

"ஓகே மதர் இன்டியா..."என்று சல்யூட் வைத்துவிட்டு போர்வை முகம்வரை மூடி தூங்க ஆரம்பித்தாள் வர்ஷி.அவளை பார்த்து சிரித்துவிட்டு திவ்யாவும் படுத்தாள்.இருவரையும் தூங்க சொல்லிவிட்டு கலைவாணியும் மற்ற வேலைகளை பார்க்க சென்றார்.

சகுந்தலாவோ அபினாஷிடம்,
"நீ எதுக்குமே லாய்க்கு இல்ல டா...உன்னால ஒரு வேலையும் ஆகப்போறது இல்ல.."என்று வசவு மழை பொழிந்துக் கொண்டிருந்தார்.இதை எதையும் காதில் வாங்காமல் அவனோ தனது மோபைலைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

"எரும..எரும..நான இவ்வளவு திட்டுறேன்..மோபைல்ல என்னத்த பார்க்குர.."என்றார்.

"அம்மா சும்மா நொய் நொயினு படுத்தியெடுக்காத...இந்த கல்யாணம் நடக்காது..நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்...நீ நிம்மதியா தூங்கு.."என்றான்.

"டேய்..நிஜமவா டா..என்ன பிளான் எனக்கும் சொல்லு டா..."என்றார் கண்கள் மின்ன.

"உன்கிட்ட பிளான் எல்லாம் சொல்லமுடியாது..ஆனா நாளைக்கு கல்யாணம் நடக்காது அதுக்கு நான் பொறுப்பு.."

"என்னமோ பண்ணு எனக்கு இந்த கல்யாணம் நிக்கனும்,அந்த திவ்யா தலைகுனியனும் அவ்வளவு தான்.."என்றார் கண்களில் வெறியோடு.அனைவரும் எதிர்பார்த்த நாளும் விடிந்தது.

மணமேடையில் கிருஷ்ணனோ ஐயர் கூறிக்கொண்டிருந்த மந்திரங்களை கர்ம சிரத்தையாக கூறிக்கொண்டு இருந்தான்.பொண்ணை அழைத்து வாங்கள் என்று கூறியவுடன் கிருஷ்ணனுக்கு மனது சற்று படபடத்தது நேற்று அனார்கலியில் விண்ணுலக தேவதை போல் இருந்தவள் இன்று பட்டுத்தி எவ்வாறு இருப்பாள் என்று மனது நினைத்தது.தன்னை அறியாமலே கண்கள் அவள் வரும் வழிப்பார்த்தது,அவனை ஏமாற்றாமல் அவனவள் சிகப்பு நிற பட்டுத்தி தங்க சிலைப் போல வந்துக் கொண்டிருந்தாள்.திவ்யாவின் பால் போன்ற நிறத்திற்கு அந்த சிகப்ப நிறமும் அதற்கு பொருத்தமான அணிகலன்களும் அவளை பேரழகியாகவே காட்டியது அவளிடம் இருந்து கண்களை எடுக்க முடியாமல் தவித்தான் கிருஷ்ணன்.

"போதும் ரொம்ப வழியுது தொடைச்சுக்கோ டா.."என்றான் வருண். கிருஷ்ணனொ கண்களை அவளிடமிருந்து அகற்றாமல்,

"போ டா..இங்க இருந்து.."என்று விரட்டினான்.

வருணோ பாவமாக"நேத்து யாரோ இந்த கல்யாணம் பிடிக்கலனு சொன்னாங்க..இப்ப.."என்று கூறிவிட்டு சென்றான்.

திவ்யாவும் கிருஷ்ணனை தான் பார்த்துக்கொண்டு வந்தாள் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக தெரிந்தான்.அவனும் தன்னை தான் பார்க்கிறான் என்று உணர்ந்து அவளது முகம் செம்மை நிறம் கொண்டது.ஒருவாரு கிருஷ்ணனின் பக்கத்தில் அமர்ந்தாள் திவ்யா.அவள் அமர்ந்தவுடன் யாரும் அறியா வண்ணம் கிருஷ்ணனைக் கிள்ளினால்,

"ஸ்..ஸ்..ஏன்டி கிள்ளுர.."என்றான்

"எனது டி யா.."என்றாள் திவ்யா.

"ஆமாம் பொண்டாட்டியோட ஷார்ட் வார்ம்.."என்றான் அவனும் அசராமல்.

"உன்ன.."என்று பல்லைக் கடித்தாள் திவ்யா.

"நீ ரொம்ப அழகா இருக்க தாரணி.."என்றான் கிருஷ்ணன்.அவளோ அவனை விநோதமாக பார்த்துவிட்டு,

"நான் அழகுனு இப்ப தான் உன் கண்ணுக்கு தெரியுரெனா.."என்றாள் ஒருமாதிரி குரலில்.அவளது பதிலில் அதிர்ந்து அவளை பார்த்தவன் பிறகு ஒன்றும் கூறாமல் தலை குனிந்துக் கொண்டான்.

அனைத்து மந்திரங்களும் ஓதி ஐயர் மாங்கல்யத்தை அவனிடம் கொடுத்தார்.
அதை கைகளால் வாங்கியவன் திவ்யாவின் கழுத்தில் கட்ட செல்லும் நேரம்,

"நிறுத்துங்க...நிறுத்துங்க.."என்று கத்திக்கொண்டு ஓடி வந்தான் வருண்.அனைவரும் அதிர்ந்து அவனை நோக்கினர் என்றால் திவ்யாவோ கிருஷ்ணனை கொலைவெறியோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.சகுந்தலாவின் மனமோ மகிழ்ச்சியில் கூத்தாட்டம் போட்டது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

வருண்தானே கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்லுறான்
திவ்யா ஏன் கிருஷ்ணனை முறைக்கிறாள்?
வருணையல்லவா இவள் முறைக்கணும்?
ஆனால் திவ்யா கல்யாணத்தை ஏண்டா வருண் நிறுத்துறே?
அப்புறம் வர்ஷியை எப்படி உனக்கு கல்யாணம் செய்து தருவாங்க?
 
Last edited:

Ambal

Well-Known Member
கல்யாணமும் நடக்கும் கலாட்டாவும் நடக்கும்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top