என் மன்னவன் நீ தானே டா...11

Ambal

Well-Known Member
#1
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...11

பெரிய கல்யாண மண்டபம் முழுவதும் பொன்னிற விளக்குகளால் ஒளிர்ந்தது.திவ்யா மற்றும் கிருஷ்ணனின் திருமணத்திற்கு முதல் நாள் வரவேற்ப்பு வைபோகம் இனிதே நடந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணனுக்கு அந்த நீள நிற கோர்ட் சூட் பாந்தமாய் இருந்தது.பின்னே இருக்காதா அதை வாங்கியது தாரணி அல்லவா,அவனுக்கென்று பார்த்து பார்த்து எடுத்திருந்தாள்.கிருஷ்ணன் மாநிறத்திற்கு சற்று கம்மி என்றாலும் அவன் சிரிக்கும் பொழுது அவனது கன்னங்களில் விழும் குழி அவளுக்கு பிடித்த ஒன்று.அதனால் அவனை ஓர விழியாள் பார்த்துக்கொண்டு இருந்தாள் திவ்யா.அந்தோ பரிதாபம் அவனோ ஏதோ திவர யோசனையில் இருந்தான்.அதைக் கண்டு கடுப்பானவள் அவனை யாரும் அறியாதவாறு அவன் கைகளைக் கிள்ளுனினாள்.

"ஆ..ஆ..ஏய் ஏன் கிள்ளுன.."என்றான்.

"ஏன் இப்படி இருக்க கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு ப்ளீஸ்.."என்றாள்.

மெரூன் கலர் அனார்கலி அணிந்து தேவதை போல் இருந்தவளை பார்க்கும் போது எல்லாம் இதற்கு தான் தகுதியானவனா என்ற எண்ணமே அவளை பார்க்கவிடாமல் செய்தது.இப்பொழுது தனது கண்களை சுருக்கி கேட்ட போது மனது கரைந்தாலும் தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டு சிரிக்க முயன்று தோற்றான்.அவன் ஏதோ மனதை வதைத்துக்கொள்கிறான் என்று உணர்ந்த திவ்யா அவனது கைகளை இறுக பற்றிக்கொண்டு கண்களை மூடித் திறந்தாள்.

திவ்யா கைபற்றியதில் மின்சாரம் தாக்கியது போல் உணர்தவன் இதில் தனது அகன்ற விழிகளை மூடி திறந்ததில் முழுவதுமாக அவளிடம் விழுந்தான். பின் அவளது தலையில் முட்டி அழகாக சிரித்தான் அந்த சிரிப்பில் மயங்கிய அவளும் சிரித்தாள் அந்த தருணத்தை அழகாக புகைப்படம் எடுத்தது கேமரா.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த கலைவாணிக்கு மனது நிறைந்து இருந்தது.திவ்யா திருமணம் என்றவுடன் அவருக்கு ஏதோ மனது நெருடலாக இருந்தது.அதனால் வரதராஜனை அழைத்துக்கொண்டு நேராக கிருஷ்ணனை பார்க்க சென்றுவிட்டார்.கிருஷ்ணனுக்கோ இவர்கள் யார் என்று தெரியவில்லை செல்வம் தான் இவர்களை அறிமுகப்படுத்தினார்.அவர்களை வரவேற்றவன் எதுவோ சொல்ல வருவதும் தயங்குவதுமாக இருந்தவனைக் கண்ட கலைவாணி தான் ,

"யாரும் தப்பாநினைக்கலனா நான் தம்பி கூட கொஞ்சம் தனியா பேசுனும்.."என்றார்.அனைவரும் சென்றவுடன் கிருஷ்ணனின் அருகில் வந்த கலைவாணி,

"தம்பி ஏதாவது நீங்க என்கிட்ட சொல்லனும் நினைக்கிரிங்களா.."என்றார்.சற்று தயங்கியவன் பின் தன்மனதில் உள்ளதை கூறினான்

"ஆன்ட்டி.."என்றவனை தடுத்தவர் அத்தைனு கூப்பிடுங்க என்றார்.அவனோ அதை காதில் வாங்காமல்

"நாங்க லவ் எல்லாம் பண்ணல..அவ கார்மெண்ட்ஸை காப்பாத்த தான் இந்த மாதிரி லூசு தனமா யோசிக்கிறா..நீங்களாவது சொல்லுங்க நான அவளுக்கு பொருத்தமானவன் இல்ல.."என்று படபடவென்று பொரிந்தான்.மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லும் கிருஷ்ணனை மிகவும் பிடித்தது அதிலும் தனது மகளுக்காக யோசிக்கிறான் என்று மனது நிம்மதியடைந்தது.முதலில் இது சரிவருமா மகள் அவசரபடுகிறாள் என்று நினைத்து கலங்கியவர் இப்பொழுது கிருஷ்ணனைக் கண்டு அவனிடம் பேசியவுடன் அவரது மனதில் உள்ள அனைத்து சஞ்சலுங்களும் பனி போல மறைந்திருந்தது.

அதன்பின் கிருஷ்ணனை பேசியே கரைத்திருந்தார் கலைவாணி.ஒரு தாய் போல பொருமையாக பேசும் கலைவாணியை கிருஷ்ணனுக்கு பிடித்திருந்தது.இதோ மகளின் முகத்தில் இருந்த மலர்ச்சிக் கண்டு கலைவாணியின் முகமும் மலர்ந்தது.வர்ஷியோ தனது அக்காவின் திருமணத்தில் தேவதை போல வளம் வந்தாள்.

சகுந்தலாவுக்கோ மனது எரிந்துக் கொண்டு இருந்தது.அவர் எவ்வளவோ முயற்சி செய்தார் திருமணத்தை நிறுத்த ஆனால் அவரது முயற்சிகளை திவ்யா முறியடிதாள். கல்யாணத்தை நிறுத்தமுடியவில்லை என்ற ஆதங்கம் அவரது முகத்தில் தெரிந்தது.இதனால் அபினாஷை காய்ந்துக் கொண்டிருந்தார்.அபினாஷோ இது எதையும் காதில் வாங்காமல் வர்ஷியை சைட் அடித்துக்கொண்டிருந்தான்.அவனது மனதில் வேறு ஒரு திட்டம் தீட்டிக்கொணடிருந்தான் அதை செயல்படுத்த நேரம் பார்த்துக்கொணடிருந்தான்.

தனது நண்பனின் முகத்தில் வந்துபோகும் பாவனைகளை வருண் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.அவனுக்கு நன்கு தெரியும் கிருஷ்ணன் இந்த ஆடம்பரங்களை விரும்பமாட்டான்.இந்த ஒரு காரணத்தினால் தான் அவன் திவ்யாவிடம் இருந்து ஒதுங்கி இருந்தது.சற்றுமுன் வரை இந்த திருமணம் ஒரு ஒப்பந்தம் மாதிரி தான் என்று நினைத்துக்கொண்டு இருந்தான் ஆனால் திவ்யா அனைவர் இடமும் கிருஷ்ணனை இன்முகமாக அறிமுகபடுத்தியவிதம்,பின் அவன் மனதை அறிந்து அவனை சமாதானபடுத்தியது அனைத்தையும் பார்த்தவன் மனது திவ்யா தான் கிருஷ்ணனுக்கு சரியானவள் என்று முடிவு செய்தான்.பின் கிருஷ்ணனின் மனநிலையை மாற்றும் பொருட்டு மேடையில் ஏறியவன்,

"வாழ்த்துக்கள் மச்சி...திவ்யாவ தான் லவ் பண்றேனு சொல்லவே இல்ல.."வேண்டும் என்று வம்பிழுத்தான்.அதில் கடுப்பான கிருஷ்ணனோ,

"வா டா நல்லவனே...நான் லவ் பண்ணேன் நீ பார்த்த..ஓடிரு கொலை பண்ணிடுவேன்.."என்றான்.

"இப்ப எதுக்கு அவர திட்டர..அவர் என்ன பொய்யா சொன்னார்..உண்மையதான சொன்னார்.."என்று கண்ணடித்து கூறினாள் திவ்யா.

"இவ ஒருத்தி ஆவுனா கண்ணடிச்சு மனுசன படுத்தி எடுக்குரா.."என்று நினைத்தான் கிருஷ்ணன்.அவனை மேலும் ஊசுப்பேற்றுவிதமாக திவ்யா அவனது கைகளை கிள்ளி வைத்தாள்.அதில் கடுப்பானவன்

"நீ இப்ப உன் கை வச்சுக்கிட்டு சும்மா இல்ல.."

"இல்லனா என்ன செய்வ..."என்று விடாமல் கேட்டாள் திவ்யா.அதில் கடுப்பானவன் யாரும் அறியா வண்ணம் திவ்யாவின் இடுப்பை கிள்ளி விட்டான்.அதில் அதிர்ச்சியானவள் அவனைப் பார்த்தாள்,அவனோ வைத்த கையை எடுக்காமல் புருவம் உயர்த்திக் காட்டினான்.அவனது தொடுகை ஒருவித அவஸ்தையை தர கண்களால் அவனிடம் கெஞ்சினாள் திவ்யா,பின் ஒருவாரு அவளை பயமுருத்திவிட்டு கையை எடுத்தான் கிருஷ்ணன்.

வருணோ இவர்களின் காதல் பாடம் ஆரம்பிக்கும் முன்பே கீழே இறங்கி இருந்தான்.அவனது மனமோ தனக்கு இதுபோல் ஒரு துணை அமைந்தால் நன்றாக இருக்கும் நினைக்கும் நேரம் அவனது கண்களில் விழுந்தாள் வர்ஷினி. புள்ளி மான் போல துள்ளிக் குதித்துக் கொண்டு இருப்பவளைக் கண்டு அவனது மனமும் துள்ளியது.

இவ்வாறு அனைவரும் நிறைந்த மனதுடன் அடுத்த நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.திவ்யா நினைத்தபடி திருமணம் நடக்குமா??
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement