என் மன்னவன் நீ தானே டா...10

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...10

அன்று இரவு திவ்யாவின் பேச்சை நினைத்து கிருஷ்ணனுக்கு மனதில் அழுத்தம் பிறந்தது.அதனால் வீட்ற்கு சென்றவுடன் நேராக பத்மினியின் படத்தின் முன்பு நின்றான்.

"பத்தூ...தாரணி லூசு மாதிரி பேசுரா..அவளுக்கு என்ன ஆச்சு...அவ எங்க நான் எங்க...இதெல்லாம் சரிவராதுனு நாளைக்கு சொல்லபோறேன்..ஏதாவது சொல்லு பத்தூ.."என்று குரல் கமறக் கேட்டான்.தாய் இறந்த பின் அவன் தனக்கு என்று எதையும் யோசித்தது இல்லை.மனதில் உள்ள வலிகளை சிரித்து கடக்க கற்றுக்கொண்டான்.இப்போழுது தாரணியின் கலங்கிய முகம் அவனை மிகவும் வருத்தியது.

"என்ன பத்தூ பேசமாட்டங்கிற ஏதாவது சொல்லு...நான் என்ன செய்யட்டும்..."என்றான்.

அவரோ அமைதியாக இருந்தார் அதை கண்டு அவனுக்கு மேலும் கோபம் அதிகமானது,

"ஓ..பேசமாட்டியா...போ..நானும் பேச மாட்டேன்..."என்றான் அழுகையுடனே.சற்று என்று தனிமையான உணர்வு.உடலும் மனமும் சோர்வடைந்தது போல கட்டிலில் விழுந்தான்,ஆனால் தூக்கம் தான் வரவில்லை.தாரணியின் கலங்கிய முகம் மனதை வதைத்தது.அதில் கடுப்பானவன்,

"எல்லாம் இவளால சும்மா அழுது மனுஷன படுத்தி எடுக்குறா..இப்பவே இப்படி மிரட்டுராளே கல்யாணத்திக்கு அப்புறம்..."என்று நினைத்து பார்த்தவன் தலையை வேகமாக உலுக்கி

"வேண்டாம் டா...கிருஷ்ணா எப்படியாவது தப்பிச்சுடு...நாளைக்கு நம்மளும் அழுதுட வேண்டியது தான்.."என்று தன்னை ஒருவாறு சமாதான படுத்தியவன் உறங்க முற்பட்டான்.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த பத்மினியின் ஆன்மாவோ,

"டேய் பையா...நீ வசமா மாட்டிக்கிட்ட..என் மருமக ரொம்ப புத்திசாலி..நீ அவகிட்ட இருந்து தப்பமுடியாது..."என்றார் சிரித்துக்கொண்டு.

காலையில் எப்போதும் போல எழுந்த கிருஷ்ணன் வாசலில் அரவம் கேட்டு அங்கு சென்றான் அங்கே ஆளையே முழுங்கும் அளவுக்கு இருவரைக் கண்டவுடன்,

"அடிபாவி நான் ஒத்துக்கலனு சொன்னவுடனே அடிக்க ஆள் அனுப்பிட்டாளா..இவனுங்க ஊதினாலே நான் பறந்துடுவேன் இதுல சண்டையெல்லாம்...."தலையை வேகமாக உலுக்கியவன்.பேசாம இவனுங்கிட்ட சமாதான கொடி காமிச்சிட வேண்டியது தான் என்று தனக்குள் பேசிக்கொண்டு இருக்கும் நேரம் அவர்கள் இருவரில் ஒருவன் கிருஷ்ணனை நோக்கி ஓடிவந்தான் அதை கண்ட கிருஷ்ணனுக்கு வடிவேலுவின் காமெடி தான் நியாபகம் வந்தது"ஓடிடு டா..புல்லட்டு பாண்டி.."என்று தனக்குள் சொல்லிக்கொண்டு இருக்கும் நேரம் ஓடிவந்தவன் அவனிடம் ஒரு கடித்ததை நீட்டிவிட்டு ஒரு சல்யூட் வைத்தான்.நடுங்கும் கைகலோடு கடிதத்தை வாங்கியவன் வீட்டின் உள்ளே ஓடிவந்திருந்தான்.

கிருஷ்ணனுக்கு அந்த ஆள் வைத்த சல்யூட்டில் இதயம் வெளியில் வந்துவிட்டது போன்று இருந்தது.டம்பளரில் இருந்த தண்ணீரை பருகியவன் சற்று ஆசுவாசம் ஆனான்.பின் கையில் இருக்கும் கடிதத்தை பிரித்தான் அதில்,

"குட் மார்னிங்...கிருஷ்ணா...இவங்க இரண்டு பேரும் உன்னோட பாதுகாப்புக்கு,எனக்கு எதிரிகள் நிறைய பேர் இருக்காங்க அவங்க உன்ன கடத்திட்டா..அதான் ஒரு முன் எச்சரிக்கையா நான் உன்ன வீட்டோட அடைச்சுட்டேன்..எதாவது தேவைனா எனக்கு போன் பண்ணுங்க..பை.."(பின் குறிப்பு:எங்கேயும் தப்பிக்க முயற்சி செய்யாத...அவங்களை பேசி கொன்னுடலாமுனு யோசிக்காத ஏன்னா அவங்களுக்கு தமிழ் தெரியாது..)

இப்படிக்கு உன் அன்பு மனைவி,

தாரணி.என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

கிருஷ்ணனுக்கு பல்லை கடிப்பதை தவிர வேறு ஒன்று செய்யமுடியவில்லை.அப்பொழுது வெளியில் செல்வம் மற்றும் ரேகாவின் குரல் கேட்டு சென்றான்.அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து அனுப்பிய அந்த ஆள் பதில் வந்தவுடன் இவர்களை உள்ளே செல்ல அனுமதித்தான்.இதையெல்லாம் பார்த்த கிருஷ்ணனுக்கு தாரணியின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.மிகுந்த சந்தோஷத்துடன் வந்த செல்வம் அவனை கட்டி ணைத்து,

"டேய் தம்பி...ரொம்ப சந்தோஷம் டா..எங்க நீ இப்படியே இருந்திடுவியோனு நாங்க பயந்துட்டோம்..."என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.

ரேகாவோ"டேய்..ஏன் டா எங்க கிட்ட முன்னாடியே நீ விரும்புரனு சொல்லல.."

"யாரை விரும்புரேன்..என்ன சொல்லிரிங்க ஆன்ட்டி.."என்றான்.

சிரித்த ரேகா"எல்லாம் உனக்கு விளையாட்டு தான் உனக்கு.."

செல்வமோ"நான் அப்பவே நினைச்சேன் ரேகா இவன் அந்த பொண்ண பார்த்த உடனே மயங்கி விழவும் எனக்கு ஒரு சந்தேகம் தான்.."

கிருஷ்ணனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது தாரணி இவர்களிடம் தாங்கள் விரும்புவதாக கூறியிருக்கிறாள் என்று.அவளை என்று பல்லைக்கடித்தவன் ராட்சசி இன்னும் என்ன எல்லாம் சொல்லி வச்சுருக்காளோ தெரியலையே என்று நினைத்து என்ன விஷயமாக வந்தார்கள் என்று கேட்டான் அதைக் கேட்ட செல்வமோ,

"என்ன டா...நீ இப்படி பொறுப்பில்லாம இருக்க..இன்னும் பத்து நாள்ல கல்யாணம் எல்லாம் அந்த பொண்ணு தான் பார்த்துக்குது நம்ம ஏதாவது உதவி செய்னும் டா..அதான் உனக்கு எல்லாம் எடுத்து வைக்க வந்தோம் எடுத்துட்டு போர பொருள தவிர மத்தத ஒழுங்கு படித்திவைக்கனுமில்ல..அதான்"என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

கிருஷ்ணனுக்கோ ஒன்றும் புரியவில்லை

"என்ன அங்கிள் எங்க போறோம்.."என்றான்.செல்வமோ அவனை விசித்திரமாக பார்த்தவர் பின் திருமணத்திற்கு பிறகு தாரணியின் வீட்டில் தான் இருக்கபோகிறாய் என்றார்.அதில் ஆத்திரம் அடைந்தவன்

'என்ன நினைச்சுட்டு இருக்கா இவ நான் என்ன பொம்மையா இவ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க'என்று கத்திவிட்டு வெளியில் செல்ல முற்படும் நேரம் அங்கு வந்து நின்றது ஒரு உயர் ரக கார் அதிலிருந்து இறங்கியவர்களை கண்டு குழம்பி நின்றான்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
கிருஷ்ணனின் செக்யூரிட்டிக்குன்னு சொல்லி காவலுக்கு இரண்டு பேரை திவ்யா அனுப்பி வைச்சுட்டாளா?
சூப்பர் சூப்பர்
இனி நீ எங்கேயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கைப்புள்ள
யாருடா இது இப்போ காரில் வந்து இறங்கறவங்க?
 
Last edited:

Ambal

Well-Known Member
Thanks எல்லாம் இருக்கட்டும்
உங்களுடைய நிஜப் பெயர் என்ன?
உங்கள் பெயரை தமிழில் எப்படி எழுதுவது?
எனது பெயர் காயத்ரி.ஆம்பல் என்பது ஒரு வகை அல்லி மலர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top