அந்த ஃபோர் போஸ்டர் பெட்டில் தன் உணர்வே இல்லாமல் படுத்திருந்தாள்.ஏஸியின் மெல்லிய சத்தத்தை தவிர அந்த அறை நிசப்தமாக இருந்தது.அறையின் கதவை நிதானமாக திறந்துக் கொண்டு வந்தான் அவன்.
அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியாததைக் கண்டு அவனின் நெற்றியில் முடிச்சு விழுந்தது.அவளருகே சென்று குனிந்துப் பார்த்தான்.அந்த மெல்லிய விளக்கொளியில் அவளின் ஆரஞ்சு கன்னங்களில் அடித்த கைத் தடத்தை கண்டவனின் கண்களில் சினம் ஏறியது.அவளை அப்படி அடித்தவர்களை துவம்சம் செய்து விட துடித்த தன் மனதை எண்ணி அவனுக்கே ஆச்சரியம் ஆனது.