என் காதல் தீ 16

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ மிகப் பெரிய அப்டேட்... படிச்சிட்டு கருத்துக்கள் சொல்லுங்கள் ப்ரெண்ட்ஸ்...

HelloGuruPremaKosame.jpg
முத்தமிழ் விழா – கோவையில் உள்ள அந்த பல்கலையில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா. வேளாண்மைக்கு பெயர்பெற்ற அந்த பல்கலையின்கீழ் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும், சில தனியார் கல்லூரிகளிலும் நடந்தாலும், அவை அனைத்திற்கும் தலைமையகமான கோவை வளாகத்தில் நடக்கும் அந்த விழாவிற்கு எப்பொழுதும் தனி மதிப்பு தான். காரணம், மற்ற இடங்களில் ஒரு நாள் மட்டும் நடப்பது, இங்கு மட்டும் மூன்று நாள் திருவிழா.


செந்தமிழ், பைந்தமிழ், தேன்தமிழ் என்று பல அடைமொழிகள் நம் தமிழ்மொழிக்கு உண்டு. அவற்றில் ஒன்று, முத்தமிழ் ஆகும். இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் சேர்த்து முத்தமிழ் என்று குறிப்பிடுவர். அறிவுக்கு விருந்தாவது இயற்றமிழ்; அறிவுக்கும் செவிக்கும் விருந்தாவது இசைத்தமிழ்; அறிவு, செவி, விழி – இம்மூன்றுக்கும் விருந்தாவது நாடகத்தமிழ். இந்த விழாவில் பிற கல்லூரிகளில் இருந்து மட்டுமல்லாது, பல ஊர்களில் இருந்து கலைஞர்களும் வந்து பங்குபெறுவர். அதனால், தமிதோடு, தமிழரும் சங்கமிக்கும் விழாவாக இருக்கும் இந்த விழா.

ஆண்டுதோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழ் ஏற்பாடு செய்யப்படும் விழாவில், இந்த வருடம் ‘உலகமயமாக்கல் சூழலில் தமிழ் கலை இலக்கிய கலாச்சார போக்கும் சவாலும்’ என்ற தலைப்பு எடுக்கப்பட்டிருந்தது. கலைநிகழ்ச்சிகள் மாலை நேரத்தில் நடக்கும். அவற்றின் மேற்பார்வையாளர் பொறுப்பு கதிருக்கு தரப்பட்டிருந்தது. அதனை திறம்பட செய்திருந்தான் கதிர்.

முதல்நாள் இயற்றமிழுக்கு ஒதுக்கப்பட்டிருக்க, பல்கலையின் அரங்கத்தில் தங்கள் கட்டுரைநயத்தையும் கவிதைநயத்தையும் காட்டிக்கொண்டிருந்தனர் ஒரு புறம். மறுபுறமோ, தமிழைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து தங்கள் அறிவைக் காட்டிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கமோ, சித்திரத்தின் திருவள்ளுவர் இயற்றிய இரண்டடி வெண்பா வண்ணக்கலவையாகி இருந்தது. இவை அனைத்தையும் கண்டு ரசித்தபடி தன் தோழிகளுடன் வலைய வந்தாள் நிரல்யா.

ஒவ்வொன்றையும் கண்டு நிரல்யா விளக்கம் கேட்க, அதற்கு பதில் கூறியே சலித்துப்போனாள் அஞ்சலி. இதனைக் கண்டு மிஷா சிரிக்க, அவளை முறைத்த நிரல்யாவுக்கு அவள் நாக்கை துறுத்திக் காட்ட, ‘உன்ன…’ என்றபடி கையை ஓங்கிய நிரல்யாவிற்கு பழிப்பு காட்டியவளை கடுப்பாகி துரத்த ஆரம்பித்தாள் நிரல்யா. அதனை இரண்டு ஜோடிக் கண்கள் ரசனையுடன் பார்த்தன.

இரண்டாவது நாள் இசைக்கு ஒதுக்கப்பட்டிருக்க, வில்லுப்பாட்டு போன்ற விதவிதமான அழிந்துவரும் கலைகளை மேடையில் அரங்கேற்றினர்.

மூன்றாவது நாளில் நாடகத்தமிழை சிறப்பிக்க பல்வேறு நாடகங்களும், அவற்றுடன் நம் பாரம்பரிய கலைகளை போற்றும் வகையில் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை அனைத்திற்கும் மேற்பார்வையிட்டது கதிரானதால் அவன் அன்று முழுவதும் மேடையின் அருகிலேயே இருக்க வேண்டியிருந்தது.

இரண்டு நாட்களாக தங்களை கேள்விகளால் துளைத்தெடுத்தவள் இந்த முறையும் ஏதேனும் கேட்டு தங்களை நிகழ்ச்சியை பார்க்கவிடாமல் செய்தால் அவ்வளவுதான் என்று எச்சரிக்கை விடுத்தே அமர்ந்தனர் தோழிகள் இருவரும். அதனால் வெகுவாக கடினப்பட்டு அவர்களிடம் எதுவும் கேட்காமல் அமர்ந்தவளை தொலைவில் இருந்தே நோட்டமிட்டவாறு இருந்தான் அவன், வருண்.

வருண் அந்த கல்லூரியின் கடைசியாண்டு மாணவன். நிரல்யாவை ரேக் செய்த கூட்டத்தின் தலைவனும் அவனே. முதன்முதலில் அவள் கல்லூரியில் நுழைந்ததில் இருந்தே நிரல்யாவின்மேல் அவனுக்கு பிடித்தம் இருந்தது. அதுவும் அவள் பின்புலம் அறிந்து கொண்டவன், அவள் மூலமாக வளமான வாழ்வும் அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும் என்று மனக்கணக்கு போட்டு அதற்கு முதற்கட்டமாக அவளுடன் சுமூகமான ஒரு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டான். இந்த வருடத்துடன் கல்லூரியை விட்டு செல்வதால் சீக்கிரமே அவளிடம் தன் காதலை உரைத்து அவளையும் எப்படியேனும் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று இருந்தவன், இந்த விழாவை தனக்கு சாதகமாக்க நினைத்தான்.

பசியெடுக்கவே, தன் தோழிகளிடம் கேண்டீன் வருமாறு அழைத்தவளுடன் அவர்கள் வர மறுக்க, தானே தனித்து சென்றாள் நிரல்யா. கலையரங்கமும் கேண்டீனும் எதிரெதிர் திசையில் உள்ளவை. அந்த மாபெரும் கலையரங்கத்தின் வெளியே சிறிது தொலைவில் கடைகள் இந்த விழாவிற்கென்றே அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் உண்பது அவளுக்கு அவ்வளவாக பிடிக்காததால், கேண்டீனுக்கு செல்லலாம் என முடிவெடுத்து அந்த திசையை நோக்கி நடக்கலானாள்.

அந்த வளாகத்தின்னுள் பல துறைகளில் அலுவலகங்கள் இருப்பதால் மாலை மங்கும் வரை எங்கும் செல்வதில் பெரிதும் பயமில்லை என்பதாலேயே அவள் தைரியமாக அவ்வளவு தொலைவு சென்றது. சில சந்தர்ப்பங்களில் அந்த வளாகத்தில் சினிமா ஷூட்டிங்கும் நடப்பதுண்டு. அவ்வாறு ஒரு முறை ஷூட்டிங் வந்த சூர்யாவுடன் கதிர் எடுத்த படம் ஒன்றும் உள்ளது அவனிடம். அப்படி என்னதான் இருக்கு இங்கே என்று அந்த நூற்றாண்டு பழமையான செங்கட்டிடத்தையும், அதனை ஒட்டி உள்ள தனித்தனி கட்டடங்களையும் ரசித்து பார்த்தவாறே வந்தவளுக்கு, அருகே யாரும் இல்லை என்பது மனதில் பதியவில்லை.

அவள் கெட்ட நேரத்திற்கு, மெயின் கேட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள அந்த கேண்டீனின் பாதி தூரத்தை கடந்த நிலையில் அவள் இங்கு வந்ததிலிருந்து எப்பொழுதும் பூத் பங்களா என்று செல்லமாக அழைக்கும்! இன்செக்ட் மியூசியத்தின் (Insect Museum) புறம் யாருமே இல்லை. சுற்றுப்புறம் பார்த்து வந்தவளை கவர்ந்து அந்த மியூசியத்தின் பின்புறம் இழுத்துச்சென்றான் வருண்.

திமிறப் பார்த்தவளின் வாயை பொத்தி பின்புறம் இழுத்து வந்தவனின் செயலில் பயந்து போனவளுக்கு அவன் அவள் முன் வந்து நின்றதும் ‘இவந்தானா?’ என்ற ஆசுவாசம் சிறிது ஏற்பட்டாலும், எதனால் தன்னை இவ்வாறு இழுத்து வர வேண்டும் என்று நினைத்தவாறு. “என்ன பண்ற நீ? எதுக்கு என்ன இப்படி தூக்கிட்டு வந்த?” என்று கோபத்தோடு கேட்டவளுக்கு அவன் செய்த செயல் திகைக்க வைத்தது.

அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன், தன் அமரக்காதலைப் பற்றி எடுத்துக்கூறி அவளை காதலிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தான்.

வருண் காதலுரைப்பதைக் கேட்டவளுக்கு, எங்கேயும் சென்று முட்டிக் கொள்ளலாம் போல தோன்றியது. பின்பு, இங்கே மூன்று மாதமாக ஒருவனை தன்னிடம் காதல் சொல்ல வைக்க என்ன செய்வது என்று தெரியாமல் அவளே தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறாள், இதில் இவன் வேறு. இப்பொழுது தான் எக்கி எக்கி ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி விடும் வரை வந்திருக்கிறார்கள் இருவரும். அதற்கு கதிர், நிரல்யா இருவருமே காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

நிரல்யாவிற்கு தன்மேல் விருப்பமில்லை என்று நிலைத்து கதிர் விலகி நின்றாலும், அவளுக்கு காலம் முழுவதும் தோள் கொடுக்கும் துணையாகவேனும் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன், இப்பொழுதுதான் அவளிடம் கொஞ்சம் மனம் விட்டு பழக ஆரம்பித்திருக்கிறான்.

நிரல்யாவோ, கதிரை எவ்வாறு தன்னிடம் காதலை உரைக்க வைப்பது என்று சிந்தித்தே தனக்கு அவன் மேல் தோன்றிய ஈர்ப்பு காதலாக மாறியதை அவளே அறியவில்லை. அவனிடம் ‘என்னை காதலிக்கிறாயா?’ என்று அவன் சட்டையைப் பிடித்து கேட்கவும் அவளுக்கு துணிவில்லை. (கூடியசீக்கிரமே இந்த விஜயஷாந்தி எத்தனை ரவுண்டு அவனை விளாசப்போறாங்களோ!) அவனிடம் அவள் காட்டும் அக்கறை எல்லாம் ஒரு தோழியாக அவன் நெஞ்சில் நின்றதே தவிர, அவள் மனதை தெளிவாக காட்டவில்லை. அயல்நாட்டு நாகரீகத்திற்கும் இந்திய நாகரீகத்திற்கும் நடுவில் அல்லாடும் அவளும் அவனிடம் நெருக்கம் காட்ட தயக்கமும், எப்படி கையள்வது என்று தெரியாததால் அதனை அப்படியே விட்டுவிட்டாள்.

பேக் டு த பிரசென்ட்,

இதனை எல்லாம் தன் மனதில் ரீவைண்ட் செய்து பார்த்தவள், ‘கொடுக்க வேண்டியவன் கண்டுக்க மாட்டேங்குறான். நீயாவது சொல்றியே, டையலாக் எல்லாம் எங்க இருந்துடா எழுதுறீங்க? சரி, கேட்டு வைப்போம். மாமா ப்ரபோஸ் செய்யும்போது அவரும் இந்த அளவுக்கு செய்யலைன்னா அவர செஞ்சு விட்ற வேண்டியதுதான்’ என்று நினைத்தவள் வெகு கவனத்துடன் அவன் செய்பவற்றை நோக்கலானாள்.

அரைமணி நேரம் உயிரைக் கொடுத்து அவன் பேசி முடித்து அவள் முகம் நோக்கி என்ன சொல்லப் போகிறாய் என்று பார்த்து நிற்க, சொன்னாளே ஒரு பதில்! “சாரி! உங்ககிட்ட இருந்து இன்னும் நல்லா எதிர்பார்க்குறேன்” என்று.

இன்னும் என்னடா சொல்வது என்று அவன் யோசிக்க, “என்ன, எதுவும் தோணலியா? இது எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்கேப்பா” என்க, திடீரென்று தன் சட்டைப் பையினுள் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்து அவள் சம்மதம் தாங்கி நின்றான்.

‘விளையாட்டு வினையாகிருச்சு நிரூ!’ என்று நினைத்தவள், “தம்பி! எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு!” என்றவாறு அவன் கைகளில் அகப்படாமல் அந்த இடத்தை காலி செய்ய, ‘போடி போ! என்னிடம் இருந்தா ஓடற? நீ சொன்ன அந்த ஆள் ப்ரொஃபஸர் தான? ரெண்டு பேரையும் எப்படி பிரிக்கறதுன்னு எனக்கு நல்லா தெரியும்’ என்று தன் மனதுக்குள் கருவிக்கொண்டான், நிரல்யாவைப் பற்றி அனைத்தையும் ரிசர்ச் செய்திருந்த அவன். ஆனால், சமீபமாக மட்டுமே அவளை தொடர்ந்தவனுக்கு அவளது திருமண விடயம் மட்டும் ஃபில்டராகி காதில் போய் சேர்ந்திருந்தது.

*******

பரிசு வழங்குதல் மற்றும் முடிவுரை மட்டுமே மிச்சமிருக்க, ரிலக்ஸான கதிர், நிரல்யா அந்த அரங்கத்தில் தட்டுப்படாததால் அவள் அலைப்பேசிக்கு அழைக்க, அன்று முழுவதும் வளைத்து வளைத்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களால் அவளது அலைப்பேசி உயிர்விட தயாராகியிருக்க, அதற்கு சிறிது நேரம் ஆயுள் நீட்டிக்க ஃப்லைட் மோடில் வைத்திருந்தாள். இது தெரியாமல் அவளைத் தேடிய கதிருக்கு அவள் தோழிகள் மூலம் அவள் எங்கே என்ற விவரம் தெரிய, அவளைத் தேடி கேண்டீனுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது, தூரத்தில் விரைந்து நடந்த நிரல்யாதான்.

நிரல்யா வேக எட்டுக்களில் செல்லவும், அவளை அழைக்கலாம் என தன் பைக்கை உயிர்ப்பித்தவன் சில அடிகள் வந்து நிறுத்திவிட்டான், அதே இடத்தில் இருந்து வெளிவந்த வருணைக் கண்டு ‘இவன் எங்க இங்க இருந்து வர்றான்?’ என நினைத்தவாறு.

செல்லும் நிரல்யாவையே சிறிது நேரம் பார்த்த வருண், திரும்ப, அங்கே கோபமுடன் நின்றிருந்த கதிரைக் கண்டு திகைத்துவிட்டான். எல்லாம் ஒரு நொடிதான்.

“என்னடா செய்யற இங்கே? அதுவும் இந்த நேரத்துல தனியா?” என்று கதிர் உறும,

“சர் சர்! ஒன்னும் இல்ல சர்! சும்மாதான் சர் வந்தேன்” என்று வேண்டுமென்றே நடித்தவன், கதிர் அவனை மேலும் துளைத்தெடுக்கவும்,

“சர், லவ்வர்ஸ் அங்க இங்கன்னு மீட் பண்ணத்தான் சர் செய்வாங்க. அதையெல்லாம் நீங்க கண்டுக்கக்கூடாது”

“லவ்வர்ஸா? யார்றா உன் லவ்வர்?” என்று கதிர் வெடிக்க,
 
Last edited:

lekha_1

Writers Team
Tamil Novel Writer
“அது உங்களுக்கு எதுக்கு சர்! அவ வீட்டுல ஏதோ ப்ராப்ளமாம். அதப் பத்திதான் சர் பேசிட்டு இருந்தோம். சீக்கிரமே அத சால்வ் பண்ணிட்டு எங்க விஷயத்த வீட்டுல சொல்லலாம்னு சொன்னா சர்.”

“படிக்குற வயசுல காதல் ஒரு கேடு!” என்று திட்டுவிட்டு செல்ல வந்தவனிடம், “அத உங்க வீட்டு பொண்ணிடமும் சொல்லுங்க சர்!” என்று சொல்லியே விட்டிருந்தான் வருண்.

“என்ன சொல்ற?” என்று அவனை கொலைவெறியுடன் பார்த்த கதிரிடம், “ஆமாம் சர்! நான் லவ் பண்றதே உங்க சொந்தக்கார பொண்ணத்தான்” என்றவன், கதிர் சுதாரிக்கும்முன் பறந்திருந்தான்.

(பத்தவெச்சுட்டியே பரட்ட!)

வருண் கூறியதைக் கேட்ட கதிருக்கு அது நிரல்யாவாக இருக்காது என்று தோன்றினாலும், அவள் எங்கிருந்து வந்தாள், அவள் அல்லாமல் வேறு யார் இங்கு படிக்கிறார்கள் என்று பல கேள்விகள்அவன் தலையைக் குடைந்தன. நிரல்யா இவ்வாறு செய்யமாட்டாள் என்று அவன் தன்னை சமாதானப்படுத்தினாலும், அவன் மனம் சில நாட்களுக்கு முன் இருவரும் பேசிக்கொண்டவற்றை அசைபோட்டது.

******

அன்று வெகு நேரம் கதிரும் நிரல்யாவும் பேசிக்கொண்டிருக்க, இருவரது பேச்சும் பலவற்றைத் தொட்டு இறுதியாக இருவரது திருமணத்தில் வந்து நின்றது.

அதனைப் பற்றி பேச்செடுத்ததும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், “கதிர்! மேரேஜ்ங்கறது லைஃப்லாங் கமிட்மெண்ட். எனக்கு ஜென்றலா இந்த மஞ்சக் கயிறு மேஜிக்-ல எல்லாம் நம்பிக்கை இல்ல. மேபி, நான் வளர்ந்த விதம் அப்படியா இருக்கலாம். என்னைப் பொருத்தவரைக்கும் மேரேஜ்ங்கறது லவ்வ பேஸ் பண்ணிதான் இருக்கனும். அதை விட்டுட்டு, கல்யாணம் செய்தா அதுக்கப்புறம் லவ் வந்துரும்னு சொல்றது எல்லாம் நம்பிக்கையில்ல. இவன்மேல எனக்கு இருக்குற ஒரு அன்பு என் வாழ்க்கை முழுவதும் அவன் மேல இருக்கும், இவன் கூட நான் வாழ்ற வாழ்க்கை எனக்கு நிறைவைத் தரும்னு நான் நினைக்கிறவன் கூடதான் என்னை கமிட் செய்துக்க நினைச்சேன். அப்பா திடீர்ன்னு வந்து சொல்லும்போது எனக்கு அப்படி எதுவுமே உன்மேல தோணல.

அந்த லவ் வாழ்க்கை முழுவதும் வராம போயிட்டா, என்ன செய்யறது? என்னால ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது. அதுனால தான் நான் அவ்வளவு அடம் பிடிச்சது” என்று சொல்லி நிறுத்தினாள் அந்த பதின்ம வயதின் இறுதியில் இருக்கும் மங்கை.

அவளுக்கு தெரியவில்லை, அந்த மேஜிக் என்பது வெறும் கயிற்றால் வருவதல்ல, தமக்கு இவர் சொந்தம் என்று இருமனமும் உணர்ந்து இணைவதால் வருவதென்று.

நிரல்யா சொல்வதைக் கேட்டவன், “இது, அப்போ உன்னோட ஸ்டேன்ட். இப்போ?” என்று கண்களில் சிரிப்போடும் எதிர்பார்ப்போடும் கேட்டான்.

“இப்போ…” என்று அவன் கண்களை நோக்கியவள் அவனுடன் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்து, “ஒருத்தர ரொம்ப பிடிக்குது. ரீசெண்ட்டா எனக்கு கிடைச்ச ஃப்ரெண்ட் அவர். பட், இப்போ அவர என் ஃப்ரெண்டுக்கும் மேல நினைக்கறேன்” என்றவாறு அவன் முகம் பார்த்தாள்.

“ஆஹான்… யாரு மேடம் அது? எனக்கு தெரியாம?” என்று நக்கலாக கேட்டவனிடம்,

“ஹா… இப்போவேவா? அவர உங்களுக்கும் தெரியும், கொஞ்ச நாள் வைட் பண்ணுங்க சர்! உங்க முன்னாடியே கொண்டு வந்து நிறுத்துறேன்” என்றுவிட்டு அறையினுள் ஓடிச்சென்றாள் நிரல்யா.

அவள் சென்றதும், ‘நான்தான் அதுன்னு சொல்லு லயா!’ என்று கதிர் அவள் மனதோடு பேச,

உள்ளே நிரல்யாவோ, ‘எப்போடா என்ன லவ் பண்றத சொல்வ?’ என்று அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

********

தற்போது அதனை நினைத்துப் பார்த்த கதிர் வருத்தத்துடன் தன் கண்களை மூடித்திறந்தான். தன் காதலன் அல்லது காதலி நம்மை காதலிக்கிறாரா என்பது ஒரு பக்கம், அவர்கள் நேசம் வேறு யார் மீதாவது இருக்குமா என்று தவிப்பது ஒரு பக்கம். இதுவரை ஒரு பக்கம் மட்டுமே ஊஞ்சலாடிய கதிரின் காதலை மற்றொரு பக்கமும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டான் வருண். அந்தக் காதல் ஊஞ்சல் நிதானம் தவறாமல் ஆடுமா இல்லை, கணம் தாங்காமல் அந்து விழுந்துவிடுமா?

கத்தி வீசுற கண்ணில் பேசுற

பாத்து பாத்து பார்வையால சுத்து போடுற

உன்ன போல நான் ஆள பாக்கல

ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள தத்தி தாவுற


அழகா மனச பொடியா அறச்ச

ஒழுங்கா இருந்த என்ன ஒளர வெச்சாயே

முயலா கெடந்த புயலா அடிச்ச

உசுர ரெண்டா கிழிச்சு நீ தையல் போட்டாயே


நித்தம் வந்து நீ நின்னு காட்டுற

சத்தம் போடுற உள்ளாற

மொத்தமாக நீ நின்னு பாக்குற

வத்தி போகுறேன் தன்னால

மிச்சம் காலையில உன்ன இறுக்கிதா

கனா காணுறேன் கூத்தாட

கண்ணு முழிச்சதும் எட்டி போகுற

நியாயம் இல்லடி வாடி வாடி


ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச

உன்னால நானும் தெறியா தெறிச்சேன்

உசுருள உன் பேச்ச தானே குவியா குவிச்ச

உங்கிட்ட தானே வயச தொலைச்சே அலையுறேன் நான்


ஒதடுதான் இனிக்குதே நொடியில உன் பேச்சும் நான்

இதயம் தான் நழுவுதே

உனக்குள்ள இது நடக்குமா

அட கொழம்புறேன்

ஏக்கம் சேந்தாச்சு உன்னால

தூக்கம் தான் சேரல

பாத்தும் பாக்காம நீ போனா என்ன சொல்ல

பின்னல் போடாம நீ என்ன மொத்தமா கோக்குற

தினம் நெனப்புல நீ வருடுற என்ன திருடுற


ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்ச

உன்னால நானும் தெறியா தெறிச்சேன்

உசுருள உன் பேச்ச தானே குவியா குவிச்ச

உங்கிட்ட தானே வயச தொலைச்சே அலையுறேன் நான்


தொடரும்


 

Saroja

Well-Known Member
வருண் கலகம் பண்ணிட்டான்
நிரல்யா லூசு விரும்பறத சீக்கிரம் சொல்லு
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top