என் காதல் தீ 15

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

ரொம்ப லேட் ஆகிடுச்சு. ரியலி சாரி... வேற ஒன்னும் இல்லப்பா... ஒரு மிகப் பெரிய வேலை. அதை முழுவதும் முடிக்கும் வரை வேறு எந்த பக்கமும் திரும்பவே முடியவில்லை. இனி அடிக்கடி அப்டேட்களை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு சின்ன எபி தான். ஏனென்றால், இந்த எபியை இங்கேயே முடித்தால் தான் நன்றாக இருக்கும்னு தோனுச்சு. சோ, இப்படியே முடிச்சுட்டேன். அடுத்த எபி பெரியது. நாளை மாலைக்குள் வந்துவிடும், மோஸ்ட்லி. இல்லையேல், திங்கள் தான். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா....


HelloGuruPremaKosame.jpg
இரவு உணவுக்கு வந்தமர்ந்த கதிருக்கு தானே பரிமாற ஆரம்பித்தாள் நிரல்யா, அவனை தடுத்துவிட்டு. ஒரு நாள் விட்டு ஒருவர் சமைக்க, மற்றவர் அனைத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முறைமைப் படுத்தி செய்துவந்தவர்களில் அன்று நிரல்யாவின் முறை.

நாள் முழுவதும் பல துறைகளுக்கு அலைந்து கலைத்து வந்தவனுக்கு அன்று பார்த்து பயங்கர பசி. (ஊருக்குள்ள காலேஜ் இருந்தா பரலாயில்லை. ஊரே காலேஜா இல்ல இருக்கு!) நிரல்யா தந்த உணவைக் கண்டவனுக்கு முகம் அஷ்டகோணலாகியது.

என்றுமே ஒருவருக்கு பிடிக்காததை முடிந்தவரை தவிர்த்து வந்தனர் இருவரும். அவ்வாறு கதிருக்கு பிடிக்காத முதல் உணவு, உப்புமா. சட்னி இருந்தாலாவது கண்ணை மூடி விழுங்குபவனுக்கு அதுவும் இல்லை என்றால் அன்று எதுவும் இறங்காது. இன்று அது டேபிளில் அதன் துணை இல்லாமல் அவனை கடுப்படிக்க அமர்ந்திருந்தது. (தாங்கள் ஒரு பக்கா தமிழ்நாட்டு மனைவியாகி விட்டீர் என்பதனை வெகு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் யுவர் ஹானர்!)

அதனைக் கண்டு ரகசிய புன்னகை ஒன்று வந்தமர்ந்தது அவன் முகத்தில். பின்பு, அவன் செய்ததற்கு நிரல்யாவின் அமைதிப்போர் துவங்கிவிட்டதே? எதுவும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான் அவன்.

ஊரில் இருந்து திருவிழாவிற்கு அழைத்திருந்த தந்தையிடம், அவளுக்கு இன்டேர்னல்ஸ் என்றதால் தாங்கள் வர முடியாத நிலைமையில் இருப்பதாக கூறியதாலேயே இந்த பனிப்போர். (மூட்டை முடிச்சை எல்லாம் கட்டி ரெடியா வெச்சிருந்தவ கிட்ட போய் வேண்டாம்னு சொன்னவன்கிட்ட இந்த அளவு நிறுத்திருக்காளே!)

முன்பு ஒருமுறையும் இப்படியே செய்திருந்தாள், அவனின் விசிறி என்று அறியாமல் ஒரு பெண்ணிடம் சில பொறுப்புகளை ஒப்படைக்க அழைக்க, அந்த பெண்ணோ வகுப்பில் வந்து ஓவர் பில்டப் விட, அன்று தான் முதல் முறை சண்டையிட்டாள் நிரல்யா. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று பார்ப்பதே இல்லை, அப்படி பார்த்தால் அந்த பெண்ணைப் பற்றி தெரிந்திருக்கும் என்று பல வெகுமதிகள். வகுப்பறையில் பாடம் நடத்தும்போது எவ்வாறு கவனிக்கிறார்கள் என்று பார்ப்பதோடு சரி, வேறு எப்போதும் அவன் பெண்கள் பக்கம் திரும்பியதே இல்லையே!

அதன்பின், இன்றுதான் திரும்ப உப்மா உணவுப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. அமைதியாக எதுவும் பேசாமல் சாப்பிடுபவனை சுட்டெரிப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள் நிரல்யா. அவளுக்கு எப்பொழுதுமே கல்லூரிக்கு செல்வது என்றால் மூக்கால் அழுவதுதான். முதல் இண்டேர்னல்ஸில் கோட்டை விட, அந்த விடயம் இவனுக்கு தெரியவர, நன்றாக படிக்க வேண்டும் என்று தானே வகுப்பெடுக்க ஆரம்பித்துவிட்டான். இந்த தொல்லையில் இருந்து தப்பிக்க பத்து நாட்கள் விழாவை சிறப்பித்துவிட்டு வருகிறேன் என்று கம்பி நீட்ட நினைத்தவளுக்கு அவனே கம்பி நீட்டினால் அவளும்தான் என்ன செய்வாள்?

“ஹலோ! இங்க ஒருத்தி கோபமா இருக்கேன். நீங்க பாட்டுக்கு சந்தோஷமா சாப்பிட்டு போறீங்க?”

நிரல்யாவின் குரல் கேட்டு ஹாலை நோக்கி சென்றவன், திரும்பி அவளை அழைத்தான். குழப்பமுடன் அவனை நெருங்கியவளின் தோள்கள் இரண்டிலும் தன் கைகளை வைத்து தன்னை நோக்கி இழுத்தவன், “எல்லா பசங்களுக்கும் அவங்க மனைவி சிறிதளவாவது அவங்க அம்மா மாதிரி இருக்கனும்னு நினைப்பாங்க. நீ இப்படி செய்யும்போது என் அம்மா நியாபகத்துக்கு வர்றாங்க” என்றான்.

அவன் சொல்வதைக் கேட்டவளுக்கு எவ்வாறு ரியாக்ட் செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. தன்னுள் அவன் தாயின் குணங்களை காண்கிறான் என்று சந்தோஷப்படுவதா இல்லை, அவரை நினைத்து வருந்துபவனை தேற்றுவதா என்று அறியாமல் தன் தோள் பதிந்த அவன் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள்.

“உனக்கு தெரியுமா? அம்மாவும் அப்பாவும் சண்டையிட்டு நான் பார்த்ததே இல்லை. அம்மாக்கு பிடிக்காத ஏதாவது அப்பா செய்தால் அன்னைக்கு அப்பாக்கு பிடிக்காததா சமைச்சு வைப்பாங்க. அதுலயே அப்பாக்கு புரிஞ்சுடும். நீயும் அதே போல செய்யவும், எனக்கு…” என்று சொல்லிக்கொண்டே வந்தவன், முடிக்க முடியாமல் தடுமாறினான்.

உணர்ச்சிவசப்பட்டிருப்பவனை அருகிலிருந்த சோஃபாவில் அமர வைத்து அவனை தன் வயிற்றோடு கட்டியணைத்து ஆறுதல் படுத்தினாள் நிரல்யா. மொழிகள் இல்லாத மௌனம் பல கதைகள் பேசியது இருவரிடையே.

சிறிது நேரம் தனக்குள் உழன்றவன், தன்னை கட்டுப்படுத்தி நிரல்யாவின் முகத்தைப் பார்க்க, அவளோ கண்களில் கண்ணீர்த்துளிகளுடன் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள். தன் பாரத்தைப் பேசி அவள் பாரத்தையும் ஏற்றிவிட்டோமே என்றாகிப் போனது அவனுக்கு.

“ஐ’ம் சாரிம்மா… என்னென்னமோ பேசி உன் மூடை ஸ்பாயில் செய்துட்டேன்” என்றவன், அவளை விட்டு விலகினான்.

“ச்சே ச்சே! அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்றவள், “நாம சின்ன வயசுல என்னென்ன செய்தோம்?” என்று பேச்சை மாற்றினாள்.

அவள் தன்னை இயல்புக்கு திருப்ப முயல்வதை உணர்ந்தவன், அவள் போக்கிலேயே சென்றான்.

அன்று நள்ளிரவைத் தாண்டியும் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். தங்களுக்கு பொதுவான விஷயங்களில் ஆரம்பித்து, தங்களைப் பற்றி விலாவரியாக இத்தனை நாட்களாக பேசாதவற்றையெல்லாம் சேர்த்து பேசினார்கள்.

நம் அன்புக்குறியவர்களுடன் நாம் செலவிடும் நேரமே அவர்கள் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நாம் புரிந்துகொள்வதற்கான தருணங்களை அளித்திடும். இந்த இரவு, இரு மனதையும் நெருங்கி வரச் செய்திருந்தது. ஆனால், இதே இரவு இருவரையும் பிரிக்கும் ஆயுதத்தையும் கொண்டுள்ளதை அவர்கள் அறியவில்லை.

தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top