என் காதல் தீ 10

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
முதலில், லேட்டா வந்ததுக்கு சாரி!!! அடுத்து, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த எபி கொஞ்சம் சோகமாக தான் இருக்கும். அதனால முன்னவே கொடுக்க ட்ரை செய்தேன், முடியலை. இன் கேஸ், இன்னிக்கு சோகமான எபி படிக்கவேண்டாம்னு நினைக்குறவங்களுக்காகவே நான் முன்னவே சொல்றது. அப்படி நினைக்குறவங்க நோட் செய்து வைத்து நாளைக்கு படிச்சுக்கோங்கப்பா...:D:D மறுபடியும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....!!!:love::love::love::love:


HelloGuruPremaKosame.jpg

அப்பாவிடம் பேசிவிட்டு, மன்னிக்கவும்! கத்திவிட்டு வந்தவளோ, கட்டிலில் தன் கால்களை வயிற்றோடு குறுக்கிக்கொண்டு அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.

தங்கள் பிள்ளைகளின் வாழ்வை அவர்களிடமே விட்டுவிடும் பெற்றவர்களைக் கண்டு வளர்ந்தவளுக்கு தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்டிக்கும் தந்தையை புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவும், முன்பு அவர் தன்னை எதுவுமே சொன்னதில்லை, சமீபகாலமாக மட்டுமே இவை நிகழ்கின்றதென்னும் பொழுது, தான் என்ன செய்தோம் என்பதும் புரியவில்லை அவளுக்கு. தான் குடித்தது தவறென்று அவளுக்கும் தெரியவில்லை; நீ செய்தது தவறென்று அவரும் உறைக்கவில்லை.

அவள் பார்த்த விதத்திற்கும், அவள் தந்தையின் செய்கைக்கும் இமாலய வித்தியாசம் இருந்தது. தற்போதய பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறிது. தங்கள் பிள்ளைகளை மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டு அவர்கள் தவறிழைக்கும்போது கண்டிப்பு காட்டும்பொழுது காலம் சென்றுவிடுகிறது. நிர்லயாவின் நிலையும் இதுவே!

சரியோ, தவறோ, நானே கற்றுக்கொள்கிறேன் என்னும் எண்ணம் அவளுடையது. நான் இழைக்கும் தவறுகளுக்கு நானே பொறுப்பு, அவற்றை நானே சரி செய்து கொள்வேன் என்று எண்ணுபவள். அதனாலேயே அவள் பணம் தேவைப்பட்டபோதும் தன்னால் இயன்றவரை பிற இடங்களில் முயன்றாள். அவ்வாறு இருந்தும் அவளுக்கு தேவையான பணம் தர யாரும் இல்லை. இறுதியாக அவள் சென்று சேர்ந்ததே தந்தையிடம். (முதல்ல எல்லாத்தையும் அப்பாவிடம் சொல்லனும். அப்புறம் தான் மத்தவங்ககிட்ட. இதை கூட தெரிஞ்சுக்காதவள தப்பு சொல்றதா இல்லை இத தெரிஞ்சுக்க வைக்காத அப்பாவை சொல்றதா?)

மகளைப் பற்றி பயத்தில் இருந்தவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிந்தது. தன் மகள் பிற்காலத்தில் நன்கு வாழ்வாள் என்று மட்டும் யோசித்தவருக்கு அவளின் தற்போதைய மறுப்பு பெரிதாக தெரியவில்லை. கதிர் எப்படியேனும் அவள் மனதை மாற்றிவிடுவான் என்பது அவரது எண்ணம். ஆனால், அவர் தன் நிலையை எடுத்துக்கூறி கேட்டிருந்தாலே அவள் சம்மத்தித்திருப்பாள் என்பது ஏனோ அவருக்கு தெரியாமல் போய்விட்டது. தந்தை மேல் பாசம் உள்ளவள் தான், ஆனால் அதற்கு அவள் வகுத்து வைத்த எல்லைக்கோடு அவளுக்கு அவர் செயல் தன் மேல் ஒன்றை திணிப்பதாக பட்டது யார் குற்றம்?

முன்பு என்றோ ஆசையாக சமையல் பழக ஆரம்பித்தபோது சிம்மை முழுவதும் திறந்து வைத்து எண்ணையில் மசாலா சேர்க்க, அது கருகிவிட, அந்த வாடையை நுகர்ந்து அங்கே வந்த அவள் தந்தை உறைத்ததோ, ‘இதுகூட தெரியாதா?’ என்று. அவர் சொல்லிச் சென்றதும், ‘பரவாயில்லை, முழுவதும் சிம்மை இப்போ ஆன் செய்ய கூடாதுன்னு தெரிஞ்சுதே’ என்று நினைத்தவளுக்கு அன்று முதல் தானே பட்டு திருந்துவோம் என்ற எண்ணமும் வந்துவிட்டிருந்தது. (இதுக்கா இப்படி? நாங்க எல்லாம் என்ன திட்டுனாலும் கண்டுக்காமல்ல இருப்போம். பாப்பா… கடைசில சமையல் கத்துக்கிட்டியா இல்லையா? பிகாஸ், கதிர் பாவம்!)

எதைஎதையோ நினைத்து அழுதுகொண்டிருந்தாள் அவள். தான் செய்த செயல்களுக்கு எல்லாம் காரணகர்த்தாவாக ஒரு மனம் அவள் தந்தையை குற்றம் சொல்லிக்கொண்டிருக்க, அவளது நியாயமான மனமோ, ‘உண்மையை சொல்லு, நீ தப்பே செய்யலையா?’ என்று இடித்துரைத்துக்கொண்டிருந்தது.

வெகு நேரம் அழுது கரைந்தவள், இனி செய்ய வேண்டியது எதுவென முடிவு செய்து அதை செய்ய தயாரானாள். ஆனால், அவள் எடுக்கும் முடிவுகளுக்கு மட்டும் ஆயுட்காலம் குறைவு போலும்!

**********

கதிரும் அங்கே ஒரு முடிவு எடுத்திருந்தான். நிரல்யா என்ன விருப்பப்படுகிறாளோ, அந்த முடிவுக்கு தான் சம்மதிக்க வேண்டும் என்று. ஆனால், அவன் காதல் கொண்ட மனமோ, ஏதேனும் செய்து அவளை தன்னுடன் தக்க வைத்துக் கொள்ளேன் என்று கேட்டுக்கொண்டிருந்தது. அதனை சமாதானப்படுத்த அவன் விழைந்த நேரத்தில் கீழே ஏதோ சத்தம் கேட்கவும் என்னவென்று பார்க்க விரைந்தான்.

**********

நிரல்யா பேசிவிட்டு சென்றதிலிருந்து தனக்குள் உலன்றவருக்கு தன் உடல்நிலை எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டது. அவளைப் பற்றிய கவலையிலும், அதைவிட முக்கியமாக கதிரைப் பற்றிய கவலையிலும் இருந்தவருக்கு தன்னுடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் மயங்கியும் விழுந்துவிட்டார்.

ஏதோ சத்தம் அவர் அறையில் இருந்து கேட்கவும், என்னவென்று பார்க்கச் சென்றவர்களுக்கு மயங்கிய நிலையில் மாணிக்கத்தைக் காணவும், என்ன செய்வதென்று தெரியாமலேயே ஓசை எழுப்பினர்.

அங்கே வந்த கதிர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அவரை காரில் ஏற்ற சொல்லிவிட்டு தன்னுடன் அவரது மருத்துவ ரிபோர்ட்டுகளை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் காண்பிக்க, அவர்கள் தேவையான முதலுதவி அளித்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பணிந்தனர். கதிர் தன்னுடன் நிரல்யாவையும் தங்கையையும் அவள் கணவரையும் மட்டும் அழைத்துக்கொண்டான்.

அதன்படி, அவரை பரிசோதிக்கும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல, அவரை பரிசோதித்தவர்களோ, தற்போது பேஸ்மேக்கர் பொருத்துவது மிகவும் கட்டாயம் என்றுவிட்டனர்.

முன்பே இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதனோடு தற்போது அட்டாக்கும் வர, அபாயகரமான கட்டத்தில் இருந்தார் அவர். பேஸ்மேக்கர் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியவன், தானே முன்நின்று அனைத்தையும் பார்த்துக்கொண்டான். இவை அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்தவாறு நின்றிருந்தாள் நிரல்யா.

அவளுக்கு தந்தை தன்னை கட்டாயப்படுத்தியதன் காரணம் விளங்கத் தொடங்கியது. தான் எத்தகைய தவறு செய்திருக்கிறோம் என்றும் அவளுக்கு புரியத் தொடங்கியது. ஆனால், அதனை முழுவதும் ஆராய விடாமல் அவளை தடுத்தது ஐசியூவில் இருக்கும் தந்தையின் நிலை.

‘ஆண்டவா! அப்பாவை எப்படியாவது காப்பாத்தி கொடுத்துறு’ என்று வேண்டியவாறு நின்றிருந்தாள். வேறு எதுவும் அவள் நினைவில் இல்லை. அவளை சமாதானப்படுத்த அபிராமி கூறியவை எல்லாம் காதின் அருகே கூட செல்லவில்லை.

பலர் இவ்வாறுதான்; ஒருவர் நம்முடன் இருக்கும்வரை அவரை டேக்-இட்-ஃபோர்-கிராண்டட் என்று எடுத்துக்கொள்வது; நம்மை விட்டு பிரியும்பொழுது அவர்களின் அன்பை உணர்வது.

கண்சண்ட் ஃபார்மில் கையெழுத்து வாங்க வந்த தாதியை மொழியறியா குழந்தையென பார்த்து நின்றாள் நிரல்யா. அவளின் நிலை புரிந்து அவளருகில் வந்த கதிர், “நிரல்யா, கையெழுத்து போடு!” என்றுரைக்க, அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதனை செய்துவிட்டு தொய்ந்து அமர்ந்தவள் சுவற்றை வெறித்தாள்.

மாணிக்கத்தை ஆப்பரேஷன் தியேட்டருள் அனுப்பிவிட்டு திரும்பிய கதிருக்கு இடிந்து போய் அமர்ந்திருந்த நிரல்யாவே கண்ணில் பட்டாள். அபிராமியையும் அவள் கணவரையும் சாப்பிட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்தான். நிரல்யாவை எண்ணி நகரமாட்டாமல் நின்றிருந்தவளை தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்து அனுப்பி வைத்தவன், தன்னவள் அருகே சென்று அமர்ந்தான்.

யாரோ தன்னருகே வந்து அமரும் அரவம் கேட்டவள் திரும்பியபோது கதிரே இருந்தான். அவனைக் கண்டவளுக்கு தானாக கண்கள் கலங்கியது.

அவளுக்கு எவ்வாறு ஆறுதல் அளிப்பது என்று தவித்தவன், பெஞ்சில் இருந்த அவள் கரத்தின் மேல் தன் கரம் வைத்தான். ஆதிமொழியான இச்செய்கையை புரியாதவற் யாரும் உள்ளரோ?

முழுவதும் உடைந்த நிரல்யா, கதிரை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள். அவள் வாயில் இருந்து ‘அப்பா வேணும்’ என்பதைத் தவிர வேறு எதுவும் வரவில்லை.

அப்போது அங்கே வந்த அபியும் அவள் கணவரும் இருவரையும் கண்டு அமைதியாக அவ்விடத்தை விட்டு விலகினர்.

தொடரும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top