என் காதல் தீ 09

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

அடுத்த எபியுடன் வந்துட்டேன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா. இந்த எபிக்கு நீங்க என்ன நினைக்குறீங்க, ஏதாவது விளக்கம் வேண்டுமான்னு படிச்சுட்டு கமெண்ட் செய்ங்க. உங்க கேள்விகளுக்கான விளக்கத்தை இனி வரும் அப்டேட்களில் தரேன்.


HelloGuruPremaKosame.jpg

வீட்டினுள் நுழைந்தவுடன், பெரியசாமி தன் மருமகளைப் பார்த்து, “அப்பாவிடம் பிரசாதத்தை கொடுத்துவிட்டு வாம்மா” என்றார். அவரை மறுத்து எதுவும் கூற முடியாதவளும் தன் தந்தையின் அறையை நோக்கி விரைந்தாள். இருவரும் பேசியே பல நாட்களாகிற்று. அவரிடம் திருமணத்திற்கு சம்மதம் கூறியதோடு சரி, அதன்பின் அவளும் பேச முயற்சிக்கவில்லை, தன்னிடம் அவர் பேச வந்தபோதும் ஒன்றும் பேசாமல் விலகிக்கொண்டாள்.

நிரல்யா அறையினுள் நுழையும்போது அவள் தந்தை உறங்கிக்கொண்டிருந்தார். அவர் தன்னிடம் பேச வந்தால் என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு இது வசதியாக இருக்க, அவருக்கு அருகில் இருந்த மேசையில் தான் கொண்டுவந்தவற்றை வைத்துவிட்டு கதவை நோக்கி சென்றாள்.

நிரல்யா உள்ளே நுழைந்த போதே விழித்துவிட்டவர், அவள் நகர்வது கண்டு பேர் சொல்லி அழைத்தார். சட்டென்று நின்றாள் நிரல்யா, திரும்பாமல்.

“அப்பா மேல இன்னும் கோபம் போகலியா நிரும்மா?”

பதிலில்லை.

“அப்பா உன் நல்லதுக்காக தானே செய்தேன்? அத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற?”

இப்பொழுது கோபம் கொண்டவள் அவர்புறம் திரும்பி, “எதுப்பா நல்லது? எனக்கு இஷ்டமில்லைன்னு தெரிஞ்சும் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்குறதா?”

“அந்த கட்டாயத்தை கொண்டு வந்தது யார்?” என்று எதிர்கேள்வி கேட்டவரை மேலும் எதுவும் கேட்க முடியாமல் பார்த்தாள் அவள். தவறு நிரல்யாவின் புறமும் இருக்கிறதே!

அமெரிக்காவில் இருந்தபோது நண்பர்கள் இருவர் தங்களுக்கு பணம் உடனடியாக தேவைப்படுகிறது என்று உரைக்க, அவர்கள் கடன் வாங்க உதவி செய்தாள் நிரல்யா. சிறிது நாட்களில் அவள் இங்கே வந்துவிட, பணம் வாங்கியவர்களோ, அதனோடு தப்பிச் சென்றுவிட, அதனை கட்டும் பொறுப்பு இவளிடம் வந்து சேர்ந்தது. நிரல்யாவை தொடர்பு கொள்ள முடியாததால் அவள் தந்தையை அழைத்த அந்த பேங்க் மேனேஜர், விவரத்தை சொல்ல, அப்போதுதான் இந்த விடயமே தெரிந்தது மாணிக்கத்திற்கு. பணத்தை விரைவாக செலுத்தும்படி சொல்லிவிட்டு வைத்துவிட்டார் அவர்.

இவை எல்லாம் நடப்பதற்கு முன்பே மாணிக்கம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சாதாரணமாக ஏதாவது இருக்கும் என்று வந்தவருக்கு, சர்ஜரி செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, உயிர்பயத்தை விட, தனக்கு ஏதேனும் ஆகிவிட்டால் தன் மகளின் நிலை என்னவாகும் என்று நினைத்தே மிகவும் கலங்கிப் போனார் அவள் தந்தை. அவள் நன்றாக வாழ்வதைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் திருமணத்தைப் பற்றி பேச்செடுத்தார் அவளிடம். இங்கே அவர் செய்த தப்போ, தன் உடல்நிலையை மறைத்தது. முடியவே முடியாது என்று மறுத்தவளிடம் மிகவும் போராடினார் அவர். அசையவே மாட்டேன் என்று இருந்தவளிடம் மெல்ல தன் உடல்நிலையைப் பற்றி உரைக்க, அதனையும் தன்னை சம்மதிக்க வைக்க அவர் செய்யும் செயலாகவே நினைத்தாள் அவள்.

முன்பே தன் வாழ்வில் அனைத்தையும் அவர் விருப்பப்படி செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணம் அவளுக்கு. இதில் இந்த சிறிய வயதில் எதற்கு திருமணம் என்பது ஒரு புறம், தனக்கு அவனை பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல், ‘எனக்காக செய்’ என்று அவர் கேட்பது ஒரு புறம் என்று அவர் மேல் கோபத்தை வளர்த்திருந்தவளுக்கு அவர் செய்வது எதுவும் தனக்கு எதிராகவே தெரிந்தது தான் விதியா?

இந்நிலையில்தான் அவரிடம் வந்து நின்றது இந்த பணவிடயம். அது ஏனோ தெரியவில்லை, சில பெற்றோர்களுக்கு ‘அவனுக்கு/அவளுக்கு என்ன தெரியும்?’ என்ற மனோபாவம் வருவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அவ்வாறே நிரல்யாவின் தந்தைக்கும் தெரிந்தது அவள் மறுப்பது. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தந்துவிட வேண்டும் என்று யோசித்த அவளை பெற்றவருக்கு, கட்டாயப்படுத்தி அளித்தால் அமுதமும் விஷம்தான் என்பது மறந்து போயிற்று.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லியும் நம்பாதவளிடம் அடுத்த துருப்புசீட்டாக உபயோகித்தார் அந்த கடன் விடயத்தை. நிரல்யாவிடம் இருக்கும் பணத்தை வைத்து அவளால் அவற்றை முற்றிலும் அடைக்க முடியாது என்பது அவர் அறிந்ததே. தன்னிடம் உதவி தேடி வருவாள் என்று நினைத்திருந்தவரின் எண்ணம்போல், அவரிடம் உதவிகேட்டாள் மகள். அதற்கு அவர் போட்ட கண்டிஷனே கதிரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. இதற்கு மறுத்த மகளுக்கு வேறு எந்த வழியிலும் உதவி கிட்டவில்லை. திருமணத்திற்கு மறுத்தால் தந்தை பணம் தரமாட்டார்; கட்டத் தவறினால் ஜெயிலிற்கு செல்ல வேண்டும். திருமணம், சிறை என்ற இரண்டையும் நினைத்து பார்த்தவளுக்கு இரண்டுமே கசப்பாக இருந்தது. வெகு தீவிரமான யோசனைக்குப் பின், தந்தையிடம் சரியென்று உரைத்தாள் அவள், ஒரு வருடம் மட்டுமே இந்த திருமணபந்தத்தில் இருப்பேன் என்ற கட்டளையோடு. எப்படியும் கதிரை திருமணம் செய்துவிட்டால் மகளின் மனம் மாறிவிடும் என்று நம்பிக்கை கொண்டிருந்தவரும் அவள் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

திருமணம் என்பது அவளைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய விடயமாக படாமலே இருந்தது. நாட்கள் செல்ல செல்ல, அவள் பாட்டியின் அறிவுரைகளை கேட்டபோது இது ஒரு பெரிய கடமை போலும் என்று நினைத்தாள். ஆனால், இந்த ஒரு திருமணத்தால் எத்தனை பேருக்கு மகிழ்ச்சி என்று கண்டபோது, அவளுக்கு சிறிது குற்றவுணர்வு ஏற்பட்டது. இருந்தாலும், எப்படியேனும் கதிரிடம் சண்டைபோட்டு பிரிந்துவிடலாம் என்று எண்ணியபின்பே அவள் சிறிது ஆசுவாசமடைந்தாள். ஆனால், இன்று அவனுக்கு தன்பால் இருக்கும் ஈர்ப்பை உணர்ந்தவள் மனம் மீண்டும் கலங்கிய குட்டையானது. எதுவுமே அவனிடம் சொல்லாமல் அவனை ஏமாற்றுகிறோமோ என்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது. எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவள் தந்தையின் அறைக்கு வந்தாள்.

இவற்றை எல்லாம் நினைத்தவள், “நான் தப்பு செய்தேந்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதற்காக இப்படி செய்யலாமா? எந்த ஒரு தவறும் தன் வாழ்வையே பணயம் வைக்குமளவுக்கு பெரியது இல்லையே!”

“அவ்வாறு மொத்த வாழ்வும் சரியில்லாது போகும் அளவுக்கு என்ன நடந்தது உனக்கு?” என்று கேட்டவருக்கு எப்படி விளங்கவைப்பது என்று பார்த்தாள் நிரல்யா.

“உங்களுக்கு ஏன் புரியவில்லை? நீங்க கட்டாயப்படுத்தி இந்த பந்தத்தில் என்னை சிக்கவைத்திருக்கீங்கன்னு?”

“உனக்கு ஏன் புரியவில்லை, இதுதான் உனக்கு நல்லதுன்னு?”

“நமக்கு இதுதான் நல்லதுன்னு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும். பட், அதில் புடிச்சதுன்னு ஒன்னு ரெண்டுதான் இருக்கும். நீங்க செய்வது, எனக்கு பிடிக்காததை தேடித் தேடி தர முயல்வது” என்றாள் அவள்.

“அப்படி நான் உனக்கு என்ன செய்துவிட்டேன்?” என்று கேட்டார் அவள் தந்தை.

மனதில் இருப்பதை எல்லாம் யாரிடம் கொட்ட என்று தெரியாமல் தவித்திருந்தவள் ஒவ்வொன்றாக கொட்ட ஆரம்பித்தாள், அது தனக்கு பிரியமானவரை வெகுவாக காயப்படுத்தும் என்பதை அறியாமல்.

“எனக்கு தேவையான சமயத்தில் நீங்க என்னுடன் இல்லவே இல்லை. என் பொண்ணுக்கு கேட்கறது எல்லாம் கிடைக்கனும்னு நினைச்சீங்க, ஆனா நான் கேட்கறது எல்லாம் உடனிருந்து வாங்கி தரனும்னு நினைச்சுருக்கீங்களா? நான் இங்கே படிக்க வர மாட்டேன் என்று அவ்வளவு சொன்னேன். என்னை கேட்காமல் இங்கே அழைத்து வந்தீங்க. சரி, இங்கே தான் படிக்கனும்னு முடிவா இருக்கீங்கன்னு அதை நானும் அக்செப்ட் பண்ணிட்டேன். எனக்கு பிடிச்ச கோர்ஸ் படிக்கலாம் என்று நினைத்தால் அதையும் விடலை நீங்க; உங்களுக்கு பிடிச்சதா பார்த்து என்னை சேர்த்துவிட்டீங்க. இப்போ, இந்த கல்யாணம். உங்களுக்கு பிடிச்ச மாதிரிதான் என் வாழ்க்கையில் எல்லாமே நடக்கன்னும்னா, எனக்கு தனியா ஒரு லைஃப் எதுக்குப்பா? அதையும் நீங்களே வாழ்ந்துட்டு போகலாமே?”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், “உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கனும்னு நினைக்கிறது தப்பு இல்லையே! அதற்காகத்தான் செய்தேன். அதைகூட நீ புரிஞ்சுக்க மாட்டேங்கற.”

“அப்பா! நீங்க சொல்ற எல்லாமே சரிதான். பெத்தவங்க தன்னோட பிள்ளைங்க வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் நினைப்பாங்க. யாருமே அவங்க பிள்ளைங்க கஷ்டப்படனும்னு நினைக்குறதில்லை. அதற்காக பார்த்துப்பார்த்து நீங்க செய்யுறதுதான் ஒவ்வொன்னும். ஆனால், நீங்க செய்யுறது எங்களுக்கு பிடிக்குதா, பிடிக்கலையான்னு கொஞ்சமாவது யோசிக்குறீங்களா?”

“அப்படி என்ன உனக்கு பிடிக்காதத இப்போ செய்துட்டேன்? இந்த படிப்பு சேர மட்டேன்னு சொன்ன, இப்போ படிக்கல? அதேபோல இதுவும் சரியா போகும்” என்றவரைப் பார்த்து அவளுக்கு பிடித்து வைத்த பொறுமை எல்லாம் பறந்துதான் போனது.

“படிக்குறேன் தான், ஆனால் பிடித்து சந்தோசமா படிக்கிறேனான்னு எனக்கு மட்டும்தான் தெரியும். ஒவ்வொரு முறையும் எப்படியாவது பாஸ் ஆகனும்ன்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நான் படிக்கிறேனே தவிர, படிப்பது மனசுல பதியுதா, பதியலையான்னு உங்களுக்கு தெரியுமா? இப்படி என்னை நானே வருத்திட்டு படிச்சா அது எப்படி எனக்கு பிடிக்கும்? இதேதான் இப்பவும் நடந்திருக்கு. என்னை கட்டாயப்படுத்தி இவருக்கு கல்யாணம் செய்து வைச்சீங்களே, நானும் ஒரு வருடம் மட்டும்தான்னு உங்ககிட்ட கண்டிஷன் போட்டேன். ஆனால் அவரைப் பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்த்தீங்களா?”

“அவரைப் பற்றி நினைத்ததால் மட்டுமே நான் இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டேன். வேறு யாராக இருந்தாலும் நான் ஒத்திருக்க மாட்டேன். ஏன்னா, இந்த ஒரு வருடத்தில் அவரை உனக்கு கண்டிப்பா பிடிச்சிறும்”

“அதை எப்படி நீங்களா சொல்லலாம்? இந்த ஒரு வருடத்தில் எனக்கு அவரை பிடிக்கலைன்னா அது எவ்வளவு பெரிய கஷ்டம் எல்லாருக்கும்? பிடிச்சு கல்யாணம் செய்யுறது வேற, பிடிக்காம இருக்குறது வேற. உங்களுக்காகவும் மற்ற எல்லாருக்காகவும் நான் அவருடன் வாழறேன்னு வைங்க, எனக்கு எப்பவும் இது எனக்கு பிடிக்காத வாழ்க்கைன்னு ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்குமேப்பா? அந்த உறுத்தலோடு எப்படி நான் நிம்மதியா இருப்பேன்? நீங்க கேட்கலாம், எத்தனையோ பேர் பிடிக்காம வாழறதில்லையான்னு. அதுல ஒருத்தரா உங்க பொண்ணு இருக்கமாட்டா. ஒருவேளை, எனக்கு இந்த ஒரு வருடத்தில் அவர் மேல லவ் வரவே இல்லைன்னா என்னை கட்டுன அந்த மனுஷன் நிலைமையை நினைச்சு பார்த்தீங்களா?” கடைசி வாக்கியத்தை அவள் சொல்லும்போது வேனில் நடந்தது நியாபகம் வர, முகம் ஒரு முறை கசங்கியது அவளுக்கு.
 
Last edited:

lekha_1

Writers Team
Tamil Novel Writer
“நீ ஏன் எதிர்மறையாகவே சிந்திக்கிறாய்?” என்று வினவிய தந்தையிடம், “இரண்டு பக்கமும் யோசிச்சு பார்க்கனும்ப்பா! அதுவும் இது சிறிய விஷயம் இல்லை, தப்பா போனாலும் பரவாயில்லைன்னு நினைக்க. ஒரு பெண் தன் கணவன் தன்னை பிடிக்காமல் கடமைக்காக வாழ்கிறான் என்று தெரிந்தால் அதன்பின் அவளுக்கு அந்த வாழ்வு நரகத்திற்கு சமானம்; அதே தான் ஒரு ஆணுக்கும். நீங்க எனக்கு மட்டுமில்லை, இதில் கதிரையும் இழுத்து விட்டு அவருக்கும் கஷ்டத்தை கொடுத்துட்டீங்கப்பா.”

தன் தந்தையின் முகம் பார்த்தவள், தான் அதற்கு மேலும் சொல்ல வந்தவற்றை எல்லாம் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, “தயவு செய்து என்னிடம் பேச நினைக்காதீங்க, இப்போதைக்கு. உங்களை பார்க்கும்போது எல்லாம் என்மேல் நீங்க திணித்த இந்த பந்தம் தான் நியாபகத்திற்கு வருது. நான் தப்பு செய்தேன்தான்; இல்லைன்னு சொல்லல. ஆனால், அதற்கு என்ன தண்டனை வேணாலும் தரலாம் நீங்க. இப்படி செய்திருக்க வேண்டாம்” என்றவள் விறுவிறுவென்று சென்று தன்னறைக்குள் அடைந்துகொண்டாள்.

ஒருவேளை நிரல்யாவின் தந்தை தன் உண்மை நிலவரத்தை சொல்லி அவளிடம் கதிரை திருமணம் செய்ய கேட்டிருந்தாலோ, இல்லை அவளுக்கு போதிய அளவு அவகாசமளித்திருந்தாலோ தந்தைக்காகவேனும் முழுமனதுடன் நிச்சயம் சம்மதித்திருப்பாள் அவள். ஆனால், இரண்டுமே அவர் செய்யவில்லை. இதனாலேயே அவள் கண்களில் அவர் தான் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் இவ்வாறு செய்துவிட்டதாக தோன்றியது. அவரின் நிலை அந்த இடத்தில் இருக்கும்போதுதான் அவள் புரிந்துகொள்வாள். நிரல்யா சென்றதும் மறைவிலிருந்து வெளிவந்த கதிரின் முகம் பாறையென இறுகியிருந்தது.

*********

மாடியில் நின்றிருந்த கதிர், நிரல்யா தன் தந்தையுடன் பேசியவற்றை அசைபோட்டுக்கொண்டிருந்தான். அவள் தன் தந்தையின் அறைக்குள் இருப்பதை அறியாதவனோ, அவரை காண சென்றிருந்தான். தான் எவ்விடம் தவறினோம்? படிக்கும் பெண்ணை தொந்தரவு செய்யகூடாதென்று அவளிடம் தன் மனதை மறைத்ததிலா, இல்லை அவள் விருப்பப்படியே எல்லாம் நடக்கவேண்டும் என்று நினைத்ததிலா? என்று ஒரு மனம் யோசித்து கோபம் கொள்ள, மறுமனமோ, அவளுக்கு ஏன் என்னை பிடிக்காமல் போனது? என்று தன்மீதே கழிவிரக்கம் கொண்டது.

ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட

உன்னை தொட விண்ணையடைந்தேன்

ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணைவிட்டு

மண்ணை தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய்

இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது

இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது

உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே

நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமாம் என்றது

கை ஜாடை இல்லை என்றது

பசும் பூங்கொடி நிஜம் என்னடி

இது வாழ்வா சாவா

எதை நீ தருவாய் பெண்ணே

நிரல்யாவிற்கு தன்னை பிடிக்கவில்லை என்று மூளை அவனிடம் கட்டியம் கட்டிக் கூற, அவள் கண்ணில் தெரிந்த உணர்வு என்னவென்று தெரியாமல் அவன் மனம் குழம்பிப் போனது.

நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே

என் நிழலில் இருந்து ரத்தம் கசிகின்றதே

ஒரு சொல் ஒரு சொல்

ஒரு சொல் சொன்னால் உயிரே ஊறிவிடும்

அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்

நிலா நீயல்லவா

தேய்பவன் நானல்லவா

காரணம் நான் சொல்லவா

கால்கள் இல்லாமலே காற்று நடை போடலாம்

நீயும் இல்லாமலே நாட்கள் நடைபோடுமா

அவளை ஆதியும் அந்தமுமாய் நினைத்து இருந்த அவன் அடிமனமோ அவள் இல்லாமல் எதுவும் இல்லை என்று அவனிடம் சொல்ல, தவித்துப் போனான் அவன். கட்டாயப்படுத்தியா காதலை வரவைக்க முடியும்?

இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது

இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது

உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே

நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமாம் என்றது

கை ஜாடை இல்லை என்றது

பசும் பூங்கொடி நிஜம் என்னடி

இது வாழ்வா சாவா

எதை நீ தருவாய் பெண்ணே

அவள் இல்லாமல் வாழ்வது அவனுக்கு துன்பம், அவனுடன் வாழ்வது அவளுக்கு துன்பம். இதற்கு தீர்வுதான் என்ன?



தொடரும்



 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு அப்பாவாக மாணிக்கம்
தன்னோட கடமையை
சரியாக செய்துட்டார்
ஆனால் நிரல்யா பேசுவது
சரியாக இருப்பது போல
தோன்றினாலும் அது சரி
இல்லையே?
எவனோ இரண்டு பேருக்கு
ப்ரெண்ட்ஸ்ன்னு உதவி
செய்யப் போயி அவனுங்க
பணத்துடன் ஓடிப் போயிட்டு
இவளுக்கு இடைஞ்சல்
செஞ்சுட்டானுங்களே
இந்த ஒரு விஷயத்திலையே
இவளோட அப்பாவித்தனம்
தெரியுதே, லேகா டியர்
ஆக மொத்தம் கதிர்தான்
பாவப்பட்ட ஜீவன்
ஆனால் ஒட்டுக் கேட்பவர்கள்
நல்லது எதையும் கேட்க
முடிவதில்லையோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top