என் காதல் தீ 07

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

அடுத்த பகுதி இதோ! ரெண்டு பேருக்கும் ரொமன்ஸ் என்று ஏதோ செய்து வைத்திருக்கேன். எப்படி வந்துருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்கப்பா... அடுத்த எபி திங்கள் இரவு அளிக்கிறேன்.


HelloGuruPremaKosame.jpg

இரவு ஏன் வந்தது என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தாள் நிரல்யா. அவனை தனியே சந்திக்க வேண்டுமே! இதுவரை உறவினர்கள் யாரேனும் இருந்ததால் அவர்கள் பின்னே ஒளிந்துகொண்டாள். இப்போது யார் பின்னே ஒளிவது? கதிர் தன்னை நெருங்கினால் அவனை எவ்வாறு காயப்படுத்துவது என்று தன் மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

கதவு திறந்து கதிர் உள்ளே வரவும், திரட்டி வைத்த தைரியம் எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓடிய காரணம் புரியவில்லை அவளுக்கு. கை, கால்கள் எல்லாம் சிறிது நடுக்கம் வர, புடவை தலைப்பை எடுத்து தன்னைச் சுற்றிக் கொண்டாள். (நடுக்கம் தெரியக்கூடாதோ?)

நிரல்யாவின் அருகில் வந்தவன், அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு குளிர்கிறது போல என நினைத்து மின்விசிறியை அணைத்து விட்டு வந்தது தான் இதில் கொடுமை. அதன்பின்னும் அவள் அதே போஸில் இருக்க, “இன்னும் குளிருதா?” என்று கேட்டான் அவன்.

‘இல்லை’ என்று தலையசைத்தவள் மெதுவே தன் கைகளை மூடியிருக்கும் துணியை விலக்கி எழுந்து நிற்க, வேண்டாம் என்று கூறியவன், அவள் எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

அவன் செய்கைகளை எல்லாம் பார்த்துக்கொண்டு அமர்ந்தாள் நிரல்யா.

தொண்டையை லேசாக செருமியவன், “நீ மேல படுத்துக்கோ. நான் இங்கேயே படுத்துக்கறேன்” என்றான்.

கேள்வியாக நோக்கியவளிடம், “இதுவரைக்கும் இருவரும் பார்த்துருக்கோம், பழகிருக்கோம், சரிதான். ஆனால், என்னைப் பற்றி உனக்கு எந்த அளவுக்கு தெரியும்னு சொல்ல முடியாது. நல்லா ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்டதுக்கு பிறகு நம்ம வாழ்கையை தொடங்கலாம். ம்ம்ம்?” என்றவன் அங்கேயே படுத்து உறங்கியும் போனான்.

‘உன்னைப் பத்தி நான் தெரிஞ்சுகிட்டா மட்டும் போதுமா? என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்க அவசியம் இல்லையா?’ என்று தனக்குள்ளேயே கேட்டவள் தன் எண்ணம் போகும் திசையை எண்ணி தலையில் லேசாக தட்டிவிட்டு கட்டிலில் அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள். (இப்போ கேளு! அன்னைக்கு அவன் தங்கச்சி பல வருஷமா உன்னை அவன் நினைச்சுக்கிட்டு ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ன்னு பாடிட்டு இருந்தத சொன்னாங்களே, அப்போவே கேட்டிருக்கனும்!)
**********​

மறுநாள் அழகாக விடிந்தது. புது இடம் என்பதால் தூக்கம் வராமல் தவித்தவள் உறங்கவே வெகு நேரம் ஆகிற்று. வழக்கம் போல விடியற்காலை எழுந்த கதிர், தன்னை தூய்மைபடுத்தி வெளிக்கிட்டான், நடைப்பயிற்சிக்கு.

தாமதமாக எழுந்த நிரல்யா கீழே வரும்பொழுது அனைவரும் எழுந்திருந்தனர். அன்று குலதெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றிருந்ததால் இவ்வாறு தாமதித்ததற்கு ஏதேனும் கூறுவரா என அனைவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றாள் அவள். ஆனால் அவர்களோ, ‘சாப்பிட வாம்மா’ என்றழைத்து அவளுக்கு விருந்து வைத்தனர்.

பின்னர் என்ன செய்வது என்று தெரியாது ஹாலில் அமர்ந்தவளிடம் வந்த அபிராமி, “அண்ணி, அண்ணன் வயலுக்கு போயிருக்கு. காலைல அங்கதா சாப்பிடும். இந்த கஞ்சிய கொண்டு குடுத்துட்டு வறீங்களா? எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு” என்றாள். தனக்கு வழி தெரியாது என்றவளை ஆச்சரியமாக பார்த்தவள், ஒரு சிறுவனை உடன் அனுப்பி வைத்தாள்.

அந்த சிறுவனுடன் கதையளந்துகொண்டே நடந்தவள் வயலைக் கண்டதும் மெய்மறந்து நின்றுவிட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெல் வயல்கள் பச்சைப்பசேலென இருந்தன. அதனைப் பார்த்தே நின்றுவிட்டவளை அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கு இழுத்துச் சென்றான் அந்த சிறுவன். சிறிது தூரம் சென்று தண்ணீர் விழும் சத்தம் கேட்க, “அண்ணே!” என்று அழைத்துக்கொண்டே வந்தவனுக்கு கிணற்றிலிருந்து ஒரு குரல் பதிலளித்தது “யாரு?” என்று.

“நான் பாலுண்ணே. அக்கா உங்கள பாக்கனும்னு கூட்டியாற சொல்லுச்சு” என்றவன், “நான் வாரேன்க்கா” என்று அவள் நிற்கச் சொல்வதை காதில் வாங்காமல் ஓடிவிட்டான்.

எந்தப் பக்கம் ஓடுவது என்று யோசித்துக்கொண்டு அவள் நிற்கையிலேயே கதிர் கிணற்றிலிருந்து வெளிவந்தான், தலையை துவலையால் துவட்டிக்கொண்டே.

அவனைக் கண்டதும் அவனுக்கு முதுகு காட்டி நின்றவள், ‘கருமம் கருமம்! ஒரு சட்டைய போட்டுட்டு வரக்கூடாது?’ என்று திட்டிக்கொண்டிருந்தாள். லாஜிக் பேசும் மூளையோ, ‘குளிக்கும்போது யாரு சட்டை போடுவா?’ என்று அவளை குட்டியது.

காலையில் நடைப்பய்ற்ச்சியோடு வயல்களுக்கும் சென்று மேற்பார்வையிட்டு அங்கேயே குளித்தும் வருவது விடுமுறை நாட்களில் வழக்கம். இன்றும் அதேபோல் வந்தவன், நிரல்யா வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அவளைக் கண்டதும் உடனே அருகில் வைத்திருந்த சட்டையை அணிந்துகொண்டு, “என்ன?” என்று கேட்டான்.

அவன் புறம் திரும்பாமலேயே தன்னிடம் இருந்த கூடையை மட்டும் நீட்டிய நிரல்யாவைக் கண்டு சிரிப்புதான் வந்தது அவனுக்கு.

“திரும்பலாம்” என்றவன் குரல் கேட்டு மெல்ல திரும்பியவள் ஒற்றைக் கண்ணை மட்டும் சிறிது திறந்து பார்த்து அவன் உடையணிந்திருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு இரண்டு கண்களையும் திறந்தாள்.

பின், கதிரின் அருகில் வந்தவள், தன் கையில் இருந்த கூடையை அவனிடம் அளித்து, “அண்ணி உங்ககிட்ட தர சொன்னாங்க” என்றாள்.

அதை அவளிடம் இருந்து வாங்கியவன், “நீ சாப்பிட்டியா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்று பதிலளித்தாள்.

அருகில் இருந்த அறைக்குள் இருந்து பாய் எடுத்து வந்து ஒரு மரத்தின் கீழ் விரித்தவன் அவளை அழைத்து உடனமர்த்தி அவள் கொண்டுவந்த பாத்திரத்தைத் திறந்தான்.

சாப்பிடுகிறாயா என்று அவன் கேட்ட கேள்விக்கு மறுத்து பதிலளித்தவள் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். விரைவில் உண்டு முடித்தவன் அவளை அழைத்துக்கொண்டு அன்க தோப்பை சுற்றிக் காட்டினான்.

ஒரு பக்கம் நெல், மற்ற இரு இடங்களும் தென்னையும் மாந்தோப்பும் என்று இருந்தன. முதலில் தென்னந்தோப்பை சுற்றிப் பார்த்தவள், மாந்தோப்பிற்குள் செல்ல, அங்கே இருந்த மாங்காய்கள் அவளை வாவென்று அழைத்தன.

கொத்துகொத்தாய் தொங்கும் மாங்காய்களை கண்டு அனைத்தையும் மறந்து அவற்றைப் பறிக்கமுயன்றவளுக்கு அதனை எட்டத்தான் முடியவில்லை.

அருகில் ஒரு கிளை தாழ்வாக இருக்கவும், அதில் ஏறி பறிக்க நினைத்தவள் காலணியைக் கழற்றிவிட்டு ஏறியிருந்தாள்.

“ஹேய்… கீழ இறங்கு” என்று வந்து நின்ற கதிரை கண்டுகொள்ளாது, “நான் பறித்து போடறது எல்லாம் எடுத்து வைங்க. வீட்டுக்கு போய் சாப்பிடனும். ஒன்னு குறைய கூடாது (மீ தலையில் அடிச்சுஃபையிங்!)” என்றவள் ஒவ்வொன்றாய் பறித்துக்கொண்டிருந்தாள்.

தேவையான அளவு பறித்து அவனிடம் அளித்தவள், கிளையின்மீது இருந்து ஒரு ஜம்படிக்க, தன்னிடம் இருந்த காய்களை தவறவிட்டு மரத்திலிருந்து விழுந்த தன் கனியை கைகளில் ஏந்தியிருந்தான் கதிர்.


கனவா... இல்லை காற்றா...

கனவா... இல்லை காற்றா...


கையில் மிதக்கும் கனவா நீ

கை கால் முளைத்த காற்றா நீ

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே

நுரையால் செய்த சிலையா நீ


இப்படி உன்னை ஏந்திக் கொண்டே

இந்திர லோகம் போய்விடவா

இடையில் கொஞ்சம் வலியெடுத்தாலும்

சந்திர தரையில் பாயிடவா


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்

நீரிலும் பொருள் எடை இழக்கும்

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி

அதை கண்டுகொண்டேனடி


காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது

உன் பளிங்கு முகத்தைக் பார்த்துகொண்டால்

பசியோ வலியோ தெரியாது


உன்னை மட்டும் சுமந்து நடந்தால்

உயரம் தூரம் தெரியாது

உன்மேல் மற்றொரு பூ விழுந்தால்

என்னால் தாங்க முடியாது


சிட்டுவேஷனுக்கு ஏற்ற பாடல் கதிரின் மனதில் பேக்கிரவுண்ட் பாட, அவனுக்கும் தோன்றியது, கையில் இருப்பவள் கை கால் முளைத்த காற்றென. அவளை நெருக்கத்தில் கண்டவன் தன் காதலியை ரசித்துக்கொண்டிருக்க, அவன் காதல் பார்வையில் கட்டுண்டு போனாள் மங்கையவள்.

இருவரில் முதலில் சமநிலை அடைந்தது நிரல்யாவே! கதிரின் கைகளில் தான் இருப்பதை உணர்ந்தவள் இறங்க முற்பட, ஏழுலகம் தாண்டி எங்கோ பறந்துகொண்டிருந்தவன் மண்ணுலகம் வந்து அவளை தரையில் இறக்கிவிட்டான்.

அவன் கண்பார்வையில் கட்டுண்டு இவ்வளவு நேரம் நின்ற தன்னை நொந்துகொண்டிருந்த நிரல்யாவிடம், “பாத்து இறங்கக்கூடாதா? கீழே விழுந்திருந்தா என்ன செய்யுறது?” என்று கேட்டவனை ‘லூசாப்பா நீ?’ என்ற பார்வை பார்த்துவிட்டு அவன் தவறவிட்ட காய்களை அள்ளி தன் துப்பட்டாவில் முடிந்து முன்னே நடந்தாள்.

‘இப்போ நான் என்ன சொன்னேன்னு இப்படி பாத்துட்டு போறா?’ என்று அவன் யோசித்து பின்தொடர்ந்தான். (அவளே சேஃபா லேண்டாகிருப்பா. வாண்டடா வந்து பிடித்தவனை இந்த பார்வை பார்க்காம, பதக்கமா கொடுப்பாங்க? காதல் கொண்ட மனம் தன்னவளை காக்க மட்டுமே யோசிக்கும் அல்லவா?)

பின், நிரல்யாவிற்கு மீதி இருந்த இடங்களை அவன் சுற்றிக்காட்ட, அவற்றைக் கண்டு களித்துக்கொண்டு நின்றிருந்தவளின் முகத்தில் வந்து செல்லும் மாற்றங்களை ரசித்து அவளுடன் நடந்தான் அவன்.


தொடரும்...


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top