என் காதல் தீ 05

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சொன்னபடி அப்டேட்டுடன் வந்துட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா. அடுத்த அப்டேட் பெரியதாக இருக்கும். சோ, வெள்ளி அல்லது சனி குடுத்தற்றேன்...


HelloGuruPremaKosame.jpg
தான் கேட்டதை இன்னும் நம்ப முடியாமல் நின்றிருந்தான் கதிர். அன்று ஞாயிறாகையால், வழக்கம்போல தங்களுக்கு சொந்தமான வயல்களைப் பார்வையிட்டு வந்தவனை வரவேற்றது அந்த செய்தி. அதனை அறிந்துகொண்டதிலிருந்து ஏகத்திற்கும் குழப்பம் வந்து சேர்ந்தது அவனுக்கு. அதனை தெளிவுபடுத்திக்கொள்ள தந்தையிடம் விரைந்தான் அவன்.

கதிர் அந்நேரத்தில் தன்னைக் காண வந்த காரணத்தை ஏற்கனவே ஊகித்திருந்த பெரியசாமியும், “என்கிட்ட என்ன கேட்கனுமோ தயங்காம கேளுப்பா” என்றார்.

சிறிது யோசனைக்குப் பின், “நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மையா இல்லையான்னு தெரியப்படுத்திக்கலாமுன்னு தானுங்க…”

“ஆமாய்யா… உனக்கு தெரியாததில்ல… இது நாங்க ஏற்கனவே பேசி வெச்சிருந்ததுதா. மாணிக்கம் இங்க போனதடவ வந்திருந்தப்பவே கேட்டான். நாந்தான் பட்டனத்துபுள்ள, இங்க எப்படி ஒத்துக்குமுன்னு யோசிச்சேன். இத்தன நாளுல்ல புள்ள நல்லபடியா இருக்கு, நம்ம கூடையும் ஒட்டிகிச்சு (நல்லா ஒட்டுச்சுங்க!). அதுதா, அவன் திரும்ப கேட்கவும் எனக்கும் சரின்னு தோனுச்சு. நீங்க ரெண்டு பேரும் எடுக்குற முடிவுதாய்யா… இது எங்க ஆச மட்டுந்தா. நீங்க எங்களுக்காகன்னு பாக்காதீங்க” என்றார்.

“சரிங்கய்யா, நான் யோசிக்குறேனுங்க” என்றவன் அடுத்து அழைத்தது மாணிக்கத்திற்கு.

இந்நேரத்திற்கு கதிரிடம் அவன் அப்பா பேசியிருப்பார், அவன் தன்னை அழைக்கவே காத்திருந்தார். தன்னிடம் அவன் கேட்கக்கூடிய விடயங்களை முன்பே யூகித்துவைத்திருந்ததால் அதற்கு எல்லாம் தக்க பதில் அவரிடம் இருந்தது. பல வருடங்களாக அவனை அறிந்தவருக்குத் தெரியாதா அவன் மனம் எவ்வாறு செயல்படுமென்று?

கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த சம்பாஷனையின் முடிவில், தான் நிரல்யாவிடம் பேசவேண்டும் என்று உரைத்திருந்தான் கதிர். அதற்கு சம்மதித்த மாணிக்கத்திற்கு எல்லாம் சரியாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்று மாலையே நிரல்யாவைத் தேடி சென்றவனிடம் அவள் மாடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட, அங்கே சென்று பார்த்தபோது தொலைவில் வெறித்துக்கொண்டிருந்தாள் அவள்.

அவளின் பின்பு வந்து நின்றவன் சிறிது தன் தொண்டையை செறும, அதனால் கலைந்தவள் திரும்பிப் பார்க்கவும், அவளைக் கண்டவன் ‘இவளா இது?’ என்று யோசித்தான்.

எப்பொழுதும் நிரல்யாவின் முகத்தில் ஒரு உயிர்ப்பும், அதனோடு ஒரு திமிரும் இருக்கும். தற்போது அவ்விரண்டையுமே காணவில்லை. அதற்கான காரணத்தை அவனால் யூகிக்க முடிந்தது. அதனால், அதனைப் பற்றி பேசி தானும் அவளைக் காயப்படுத்த விரும்பாமல், தான் வந்ததற்கான காரணத்தைக் கூற ஆரம்பித்தான்.

என்னதான் எல்லாரிடமும் இலகுவாகப் பழகுபவனாக இருந்தாலும், இதனைப் பற்றி பேசிட சிறிது தயக்கம் தடுத்தாலும், பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தவன், “மாமா ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டான்.

அவன் மாமா என்று யாரை அழைக்கிறான் என்று யோசித்தவளுக்கு, அது தன் தந்தை தான் என்பது சில நொடிகளுக்குப் பின்னே உரைத்தது.

‘ஆம்’ என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு வேறு பக்கம் பார்த்தவளிடம் வேறு என்ன கேட்பது?

“உங்களோட விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? அதைப் பொருத்து தான் என் பதில் இருக்கும்” என்றவனை சடாரென்று கண்ணில் மின்னலுடன் திரும்பிப் பார்த்தவள், தன் தலையைக் குனிந்துகொண்டு, “எனக்கு சம்மதம்” என்றாள்.

“அப்படின்னா, தேதி முடிவு பண்ண சொல்லவா?”

அதற்கு வெறும் தலையாட்டல் மட்டுமே கிடைத்தது.

“முடிவை சொன்னதற்குப் பிறகு மாற்ற முடியாது. இது ஃபைனலைஸ்ட் தானே?”

அதற்கும் தலையாட்டலே!

பெண்களுக்கு திருமணம் என்றாலே இதுவரை வராத வெட்கம், நாணம் எல்லாம் வரிசை கட்டி வந்து நிற்குமே! அந்நிலைமையே நிரல்யாவிற்கும் என்று நினைத்துக் கொண்டான் கதிர்.

“சரி, நான் எல்லாரிடமும் சொல்லிடறேன்” என்றவன் படியை நோக்கித் திரும்ப,

“ஒரு நிமிஷம்! எனக்கு கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு!” என்றாள் நிரல்யா.

‘என்ன’ என்பதுபோல் பார்த்தவனிடத்தில் தன் கோரிக்கைகளை முன்வைத்தாள் அவள்.

  • தங்களது திருமணம் பற்றி கல்லூரியில் யாரும் அறியக் கூடாது.
  • எளிமையாகவே திருமணம் நடைபெற வேண்டும்.
  • நடப்பதை எல்லாம் பழகிக்கொள்ள அவளுக்கு சிறிது அவகாசம் வேண்டும்.
இத்திருமணம் நடந்தால் நிரல்யாவின் படிப்பிற்கு எந்த ஒரு இடைஞ்சலும் வர விடக்கூடாது என்று கதிர் முன்பே நினைத்திருந்ததால் இவை யாவையும் ஏற்றுக்கொண்டான், சந்தோஷமாகவே!

ஆனால், இவற்றுக்கான நிரல்யாவின் காரணங்களை அவன் அறியும்போது?


தொடரும்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top