என் காதல் தீ 03

Advertisement

laksh14

Well-Known Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி... இதோ, அடுத்த அப்டேட்டுடன் வந்துட்டேன்... சீக்கிரமே எல்லாருடைய கமென்ட்ஸுக்கும் ரிப்ளை பண்ணிடறேன்ப்பா....


‘திரும்பவும் இவனா?’ என்ற ரீதியில் நிரல்யா நோக்க, அவளைத் தவிர மற்ற பெண்களெல்லாம் சைட்டடிக்க ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர். மாணவர்களோ, ‘இவரு நமக்கே டஃப் காம்படீஷன் குடுப்பாரு போல’ என நினைத்துக்கொண்டிருந்தனர். இதற்கு சம்பந்தப்பட்டவனோ, யாருடைய பார்வையையும் சட்டை செய்யாமல் தன்னைப் பற்றிய சிறு விளக்கத்தை அளிக்கத் தொடங்கினான்.

“ஸ்டுடன்ஸ், என் பெயர் கதிர்நிலவன். நான் இந்த கல்லூரியிலேயே இளங்கலை விவசாயம் முதல் முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளேன். உங்களுக்கு நாந்தான் இந்த நான்கு வருடமும் ஃபெகல்டி அட்வைசர். எந்த விஷயமென்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் இந்த படிப்பினை தெரிவு செய்திருக்கலாம், சிலர் விருப்பமில்லாமல் கூட. எதுவாகினும் என் மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது, அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், அவ்வாறே இருப்பீர்கள் என நம்புகிறேன்” என அவன் தெளிவான ஆங்கிலத்தில் முடித்தபோது வாய் பிளந்து பார்ப்பது நிரல்யாவின் முறையானது.

கதிரின் பார்வை நிரல்யாவை கண்டிப்புடன் பார்த்தே உரையை முடித்ததால் தன் வியப்பை அவனிடம் காட்டாமல் மறைத்தவள் தனக்குள் கவுண்டர் கொடுக்கவும் தவறவில்லை, ‘உன் வாயாலயே நீ மாட்டப்போறடி… அவனப் பத்தி தெரியாம நீ அவன அவன் முன்னாடியே திட்டிருக்க. நல்லவேளை, பல மொழிகளில் பேசியதால (திட்டியதால்!) அங்கே யாருக்கும் புரியல, இவனுக்கும் புரியாதுன்னு நினைச்சா, கல்லூளிமங்கனா இருந்துருக்கானே! பிவேர் ஆஃப் ஹிம்!’ என தனக்குள்ளேயே கடிந்துகொண்டாள் நிரல்யா. (இத்தனை நாளா அவன் போக வர, நீ சும்மா இருக்காம அவன பாத்து உச்சு கொட்டுனல்ல… இனி அவன் என்னென்ன செய்யப்போறானோ! இல்லை, மாட்டிக்கொண்டு முழிக்கப்போகின்றானா?)

*********

அன்று ஃபீல்ட் விசிட் எனப்படும் களப் பணிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் நாள். முதல்நாள் ஃபீல்ட்விசிட் என மட்டும் சொல்லப்பட்டிருக்க, அதனைப் பற்றி அறியாதவளோ, எங்கேயோ செல்லப்போகிறோம் என நினைத்து புது சுடிதார் அணிந்து வந்திருந்தாள்.

வகுப்பில் நிரல்யா நுழைந்தவுடனேயே இதனைக் கண்ட அஞ்சலி “என்னடி… இன்னைக்கு இப்படி புது டிரஸ் போட்டுட்டு வந்துருக்க?” என்று கேட்டாள்.

“ஏண்டி… இன்னைக்கு ஃபீல்ட் விசிட் போகப்போறோம்னு சொல்லவும் போட்டுக்கொண்டு வந்தேன்” என்றவளை வினோதமாக பார்த்தனர் அவள் தோழிகள். அவர்கள் விளக்கம் அளிக்க தொடங்கும்முன் அனைவரையும் கிளம்பச் செல்லவே, “அங்கே வந்து பார்த்துக்கொள்” என்று முடித்துவிட்டனர். (உரையாடல்கள் யாவும் ஆங்கிலமே! சொல்ல மறந்துவிட்டேன்! நம் நாயகியின் தூய தமிழை சீனியர் மாணவர்கள் சிலர் கலாய்த்ததால் அவர்கள் முன் தேம்பாவணி பாட முடிவெடுத்து தமிழை தீவிரமாக கற்றுக்கொண்டிருக்கிறாள் அஞ்சலியிடமிருந்தும் கதிரின் பாட்டியிடமிருந்தும். நிரல்யாவை மாற்றிய அந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் மிக விரைவில்!)

தோழிகளின் கூற்றின் அர்த்தம் வெகு சீக்கிரத்தில் புரிந்தது அவளுக்கு, பரந்து விரிந்த வயல் நிலங்களைப் பார்த்ததும். வழக்கமாக வகுப்புகள் காலை ஏழு மணிக்கே வயலில் ஆரம்பித்துவிடும். அன்று முதல் நாள் ஆகையால், தாமதமானது என்றும், இனி அனைவரும் தவறாது ஏழுமணிக்கே வரவேண்டும் என அனைவரையும் பணித்துவிட்டு வயலில் இறங்கி செய்முறை விளக்கம் கொடுத்தான் கதிர். அவன் முடித்ததும் அனைவரும் அதையே பின்பற்ற சொல்ல, திருதிருத்தாள் நிரல்யா.

இவள் மட்டும் வரப்பில் நின்றது கண்டு கதிர் கண்டிக்கவும், அவனை முறைத்துக்கொண்டே ஹீல்ஸ் காலுடன் இறங்கியவளுக்கு கால் வழுக்கியது. “அம்மா!” என்று அலறி கண்களை மூடிக்கொண்டவளை நிலம் தாங்கும்முன் அந்த நிலவன் தாங்கிக்கொண்டான் தன்னிரு கரங்களில்.

‘என்னடா… இன்னும் தரை தட்டுப்படலியே! ஃபோர்ஸ் ஓஃப் கிராவிட்டி (புவியீர்ப்பு சக்தி) ரொம்ப ஸ்லோவா இருக்கோ!’ என்று நினைத்து மேலும் தன் கண்களை இறுக்கிக்கொண்டவளை சுற்றியிருந்தோரின் ஓசை மெல்ல விழிக்கச் செய்ய, விழித்தவளின் கண்முன் நின்றது கதிரவன்.

‘இவரு புடிச்சுட்டாரு போல… (வாத்தியாருங்கற மரியாதைங்க!) நல்லவேளை, விழவில்லை… நான் எல்லாம் கீழ விழுந்தா அடி பட்டு வலி தாங்க முடியாதுன்னே சைக்கிள் கத்துக்காம டைரெக்டா கார் ஓட்டுன பொண்ணு… இந்த அடி எப்படி தாங்க’ என்று எண்ணிக்கொண்டிருந்தாள் அவள். (உனக்கு பில்டப் எல்லாம் கொடுத்தனேம்மா… இப்படி கொழந்த புள்ள மாதிரி சைக்கிள் ஓட்ட பயப்படுவன்னு தெரியாம போச்சே!) தான் இருக்கும் சூழ்நிலை அறிந்து கதிரிடம் இருந்து அவள் விலகும்முன், அவனே விலக்கி நிறுத்தினான் நிரல்யாவை.

இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பது என கதிர் அவளை தனியாக அழைத்து வசைமாறி பொழிந்துவிட்டான். அவன் திட்டியதோ, அவளின் நலத்திற்காக. நிரல்யா எடுத்துக்கொண்டதோ, வேறு கோணத்தில்.

கீழே விழவில்லையாயினும் சிறிது தசை பிறல்ந்ததால் கதிரே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கும் அழைத்துச் சென்று விட்டான்.

அச்சம்பவத்தினால் கால் வலியெடுக்க, ஒரு வாரம் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டாள் நிரல்யா. அந்த ஒரு வாரமும் கதிர் தினமும் தவறாமல் ஆஜராகிவிடுவான் மாலை வேளைகளின் அவளின் நலம் விசாரிக்க, நிரல்யா தங்கியிருக்கும் அவனது பாட்டி வீட்டிற்கு. மாணிக்கமும் தன் அலுவல்களை கவனிக்க ஊருக்கு சென்றுவிட, அவளின் நலத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டதனை சரிவர செய்ய நினைத்தானா அல்லது அவள் மீது கொண்ட கரிசனமோ?

அவ்வாறு ஒரு நாள் கதிர் அவள் வீட்டிற்கு (நிரல்யாவின் வீடு என்றே வைத்துக்கொள்வோம்) சென்றபோது, உள்ளிருந்து அவள் கோபமாக மறுத்துக்கொண்டிருந்தது காதில் விழ, பெரியவரிடம் சண்டையிடுகிறாளோ என்றெண்ணி அறைக்குள் விரைந்தான் கதிர். (எங்கள் தலைவியை எப்பொழுதும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறீர்கள், யுவர் ஆனர்!)

அங்கே அவன் கண்டதோ, தன் வாயை இரு கைகளாலும் மூடிக்கொண்டு பாட்டி அளித்த எதனையோ மறுத்துக்கொண்டிருந்த நிரல்யாவை, இதுவரை அவன் கண்டிடாத வகையில்!

இத்தனை நாட்களாய் இங்கே தங்கியிருந்ததில் பாட்டியுடன் நன்றாக ஒட்டிவிட்டாள் நிரல்யா. தாய்ப்பாசத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்தவளின் ஏக்கங்கள் யாவும் அவரருகில் இல்லாமல் போயின. அதனால், அவருடன் இயல்பான பாசத்துடன் பழக முடிந்தது அவளுக்கு.

வாசலில் நிழல் தெரியவும், நிரல்யா யாரென நோக்க, அதனைத் தொடர்ந்து பாட்டியும் திரும்பினார். அப்பொழுதுதான் தெரிந்ததும் அவர் கையில் இருந்தது கஷாயம் என்று.

“வாய்யா… கதிரு… இந்த புள்ளய பாரு… தலைக்கு தண்ணி வார்த்துட்டு காச்சல் வந்து படுத்துருக்கு… சீக்கிரம் சரியாகட்டுமுன்னு கஷாயம் செய்து எடுத்துட்டு வந்தா, குடிக்க மாட்டேங்குறா” என குறைபட்டார் பாட்டி.

“நான் இதுவரை இவை எதையும் சாப்பிட்டதில்லை. எனக்கு ஒத்துக்கொள்ளுமா என்றும் தெரியவில்லை. தயவு செய்து மாத்திரை வாங்கி வர முடியுமா” என ஆங்கிலத்தில் கதிரிடம் கேட்டுவிட்டு, தங்களை பார்த்துக்கொண்டிருக்கும் பாட்டியிடம், “அப்பத்தா… ப்ளீஸ்… எனக்கு இது வேண்டாமே! என் செல்ல அப்பத்தால்ல…” என்று கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

இதனைப் பார்த்தவன், “அம்மாயி, அந்த புள்ளக்கு இது ஒத்துவருமான்னு பயப்படுது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இன்னும் நம்ம சமயல சாப்பிடவே சிரமப்படுது. நான் போய் மாத்திர வாங்கிட்டு வரேன். அத சாப்பிட்டதும் நல்லா தூங்கட்டும்” என்றான்.

“சரிய்யா… நீ போய் வாங்கிவா…” என்று கூறி பாட்டி வெளியேறவும், “கொஞ்ச நேரத்துல வந்திடறேங்க” என கதிரும் வெளிக்கிட சென்றான். அப்போது, “ஒரு நிமிஷம்!” என அழைத்த நிரல்யா, “தேங்க்ஸ்… அன்னைக்கும், இன்னைக்கும்” என்று புன்சிரிப்புடன் கூறினாள். அதற்கு பதிலாய் தானும் அதே போன்றதொரு சிரிப்பை தந்தவன் வெளியேறினான்.

இருவரது முகத்திலும் அந்த சிரிப்பு சில நிமிடங்களைத் தாண்டியும் நிலைத்திருந்தது.

தொடரும்...
lovelyyyyy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top