என் காதல் தீ 02

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

முந்தைய பகுதியை படித்துவிட்டு கமெண்ட் செய்திருந்த அனைவருக்கும் நன்றி... இதோ அடுத்த பகுதி...


இரண்டு நாட்கள் கழித்து,

அந்த பன்னாட்டு விமான நிலையத்தின் முன் காத்திருந்தான் கதிர். தந்தையின் கட்டளையை ஏற்று அவரது நண்பரை வரவேற்க வந்திருந்தான். அவரிடம் அவனுக்கு பாசத்தை விடவும் மரியாதையே அதிகம் இருக்கும். அவர்களது ஊர் பவானி ஆற்றின் கரையில் இருப்பதால் முன்பெல்லாம் ஆற்றில் இறங்கியே மறுகரையை அடைந்து அருகிலிருக்கும் ஊர்களுக்குச் செல்ல முடியும். அக்காலத்திலேயே முதுகலை வரை படித்து தற்போது தானே ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளவரைக் கண்டு வியந்திருக்கிறான் கதிர். இன்றுவரை அவ்வூர் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக கூறப்படுவது மாணிக்கமே (ஊரின் முதல் பட்டதாரி அல்லவோ).

விமானம் வந்ததற்கான அறிவிப்பு வரவும், உள்ளிருந்து வெளியே வந்தவர்களைக் கண்டு தனக்கு பரிச்சயமான அந்த முகத்தைத் தேடியவனுக்கு சிரமத்தை அளிக்காமல் சிறிது நேரத்திலேயே தோன்றினார் மாணிக்கம்.

“வாங்க மாமா… நல்லா இருக்கீங்களா? பயணம் எல்லாம் வசதியா இருந்ததா?” என்று கேட்டவாறே அவரின் பைகளை வாங்கி தன்னுடன் வந்தவரிடம் அளித்தான்.
“நல்லா இருக்கேன்ப்பா… நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? படிப்பெல்லாம் முடிஞ்சுதா?”
“எல்லாரும் சௌக்கியமுங்க. பெட்டி எல்லாம் வந்தாச்சுன்னா கெளம்பலாமாங்க? இப்போ கெளம்புனா பொழுதோட ஊர் போய் சேந்துடலாமுங்க” என்றான். மாணிக்கத்தின் கண்களோ, விமான நிலையத்தின் உள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தன.


“யாராவது வரவேண்டி இருக்குதுங்களா? இல்ல…?” என முடிக்காமல் நிறுத்தியவனுக்கு பதிலாக வந்தது, “டாட்… இட் இஸ் சோ ஹெவி. கேன் யூ ஹெல்ப் மீ அவுட்? (அப்பா… இது மிகவும் கணமாக இருக்கிறது. உதவ முடியுமா?)” என்று கூறிக்கொண்டே அந்த பெரிய ட்ராலியை தள்ளிக்கொண்டு வந்த குரல்.

‘யார்றா இது?’ என்று எட்டிப் பார்த்தவனுக்குத் தெரிந்தது எல்லாம் ஒரு டீஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்து ட்ராலியைப் பிடித்து இழுத்து வந்த அந்த பெண்தான்.

முகம் பார்க்க அவன் முயற்சிக்க, அதற்கு அவசியம் இல்லை என்பதுபோல் அந்த உருவம் முன்புறம் திரும்பவும், அதிர்ச்சியடைவது கதிரின் முறையானது. முன்புறம் தொங்கிய முடிக்கற்றைகள் ‘பச்சை நிறமே பச்சை நிறமே’ என பாடிக்கொண்டிருந்தன (கலரிங்-ங்க!)

“கதிர்! இவ என் பொண்ணு நிரல்யா. நீ சின்ன வயசுல பார்த்திருப்ப” என்றவர், நிரல்யாவின் புறம் திரும்பி, “இவர் கதிர். என் பால்ய சினேகிதன் பெரியசாமியின் மகன்” என அறிமுகப்படுத்தி வைத்தார்.

நிரல்யா யாரென அறிந்ததும் தன் முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருந்தான் கதிர். முதலிலேயே விருப்பமில்லாமல் வந்தவளுக்கு வேட்டி சட்டையுடன் மாநிறத்தில் ஆறடிக்கு சற்று குறைவாக திடகாத்திரமாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருந்த கதிரைப் பிடிக்கவில்லை. (அவன மொறைச்சா அடுத்த பிளைட்டுல்ல உன்ன பறக்க விட்டுடுவாங்க-ன்னு நினைப்பாம்மா உனக்கு?)

பெட்டிகள் அனைத்தையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் அந்த சிற்றூரை நோக்கி பறந்தனர்.

மூவரும் பேசிக்கொண்டே வர, யாரையுமே கண்டுகொள்ளாமல் ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்க ஆரம்பித்துவிட்டாள் நிரல்யா. நீண்ட தூர பயணத்தால் வந்த களைப்பு என நினைத்துக்கொண்டான் கதிர். ஆனால், அது அவ்வாறு அல்ல, என் குணமே அதுதான் என புரிய வைத்தாள் நிரல்யா, வெகு சீக்கிரமே!
**********

குளிர்காற்று வந்து முகம்வருட, தன் விழிகளை மெல்ல திறந்தவளை தலையசைத்து வரவேற்றது சாலையின் இரு நெடுகிலும் வளர்ந்திருந்த பாக்கு மற்றும் தென்னை மரங்கள். தன் கோபத்தை எல்லாம் ஒரு நொடி தள்ளி வைத்துவிட்டு அந்த ஏகாந்தத்தை ரசிக்க ஆரம்பித்தவளுக்குள் ஓடிய எண்ணம், ‘இங்கே ஒரு ஃபோட்டோஷூட் நடத்தனும் நமக்கு. இன்ஸ்டாலையும் FB-லயும் லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்!’ (வாட்ஸாப்பில் ஒரு மெசேஜ் வருதான்னு பாரும்மா…. அப்புறமா லைக்ஸ் வர்றத பத்தி யோசிப்போம்!)

ஒரு பெரிய வீட்டின் முன் கார் நிற்க, நால்வரும் இறங்கியதும் ஊரே ஒன்றுகூடி வரவேற்றது. அனைவரையும் நலம் விசாரித்து, அவர்களின் நலம் விசாரிப்பை ஏற்று வீட்டினுள் நுழைய வெகு நேரமாயிற்று. தன் தந்தை அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில் நிற்க, எப்போது நாம் தனியாவோம் என்று நின்றிருந்தாள் நிரல்யா. மற்றநேரமாகின், அவளும் ஓரிரு வார்த்தைகள் பேசியிருப்பாள்தான். தற்போதைய மனநிலையில் அவளுக்கு யாருடனும் பேச விருப்பமும் இருக்கவில்லை, அந்த வெள்ளந்தி மனிதர்களிடம் தன் விருப்பமின்மையை காட்டி காயப்படுத்த ஏனோ அவளுக்கு மனமில்லை. ஒரு சின்ன சிரிப்போடு நிறுத்திக்கொண்டாள் அவள்.
“பாவம் புள்ள… ரொம்ப நேரம் பிரயாணம் பண்ணி தளர்ந்து போய் இருக்கு… நல்லா ஓய்வெடுக்கட்டும்ய்யா… நாங்க பொறவு வாரோம்…” என்று கூறி கலைந்து சென்றனர்.


நிரல்யா தங்களுடன் ஒட்டாததை பிரயாண களைப்பு என்றும் புது மனிதர்களைப் பார்த்த பயம் என்றும் தங்களுக்குள்ளேயே அவர்கள் ஒவ்வொன்றாக நினைத்துக் கொள்ள, கதிரோ மனதினுள் ‘திமிர்பிடித்தவள்’ என பெயரிட்டுக்கொண்டான். அவன் அவ்வாறு நினைத்ததற்குக் காரணம், நிரல்யா வீட்டினுள் வந்ததும் தனக்கு அவர்கள் அளித்த தண்ணீரை குடிக்காமல் பாட்டிலிட்ட குடிநீரைக் குடித்தது. அவனைப் பொறுத்தவரை அது நல்ல செயல் அல்ல! அவளைப் பொறுத்தவரை, தடுப்பு நடவடிக்கை.

இருந்தும், யாரிடமும் முகம் காட்டாமல் இருந்ததால் அவன் ஆழ்மனது ‘கொஞ்சம் நல்லவள் தான் போலும்’ என்றது அவனுக்கு கேட்கவில்லை.
**********

அதற்கடுத்த நாட்கள் மாணிக்கமும் நிரல்யாவும் அவளுக்கான கல்லூரியில் சேர்வதற்கான பணிகளில் ஈடுபடலாயினர். தமிழ்நாட்டில் உள்ள அந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் அவளுக்கு எளிதாக இடம் கிட்டியது. ஆனால், அதற்கான மகிழ்ச்சி துளியும் அவளிடம் இல்லை.

ஹாஸ்டலில் சேர நினைத்தவளை அவளது தந்தையும் விடவில்லை. தன் மகள் பாசத்துடன் கட்டுப்பாடான ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என பிரியப்பட்ட அவருக்கு நண்பரின் வீடே தகுந்ததாக அமைந்தது. இந்த கருத்தை பெரியசாமியிடம் முன்வைத்தபோது, அவரோ யோசிக்கலானார்.

“நீ சொல்றது சரிதான், மாணிக்கம். கண்ணால வயசுல இருக்குற பொண்ணையும் பையனையும் ஒரே வீட்டுல தங்க வைக்குறது நமக்கு பழக்கமில்லையேய்யா!” என யோசித்தார்.

அவர் கூறியதும் மாணிக்கம் முதலிலேயே நினைத்ததே! ஆனால், அவரது ஆழ்மன எண்ணம் வேறாக இருக்கிறதே! அதனை தக்க சமயம் பார்த்து பேசிக்கொள்ள முடிவெடுத்து, “நானும் யோசிச்சேன். ஆனால், என் பொண்ண உன் கண்முன்னாடியே வைத்துக்கொள்வது தான் எனக்கு நல்லதுன்னு படுது. இது முற்றிலும் புது இடம் அவளுக்கு. எப்படி இருக்காளோ என பயப்படுவதைவிட இங்கே பாதுகாப்பாய் இருக்கும் எனக்கும் கவலையின்றி இருக்கும்” என்றார்.

நீண்ட யோசனைக்குப் பிறகு நிரல்யாவை அடுத்த தெருவில் இருக்கும் கதிரின் தாய் வழி பாட்டி விசாலாட்சியில் வீட்டில் தங்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

நாட்கள் செல்ல, நிரல்யாவிற்கு வகுப்புகள் தொடங்கும் நாளும் வந்தது. அவள் கல்லூரியில் சேர செல்லும்பொழுதே அவர்கள் அனைத்து விதிகளைப் பற்றியும் கூறியிருந்ததால் அதற்கு ஏற்றாற்போல் தேவையானதை முந்தினமே தயார் செய்திருந்தாள். (நமக்கு எப்போதும் போர்க்கால அடிப்படை தான்!)

எளிமையான ஒரு சல்வார் கமீஸ் அணிந்து முடியை குதிரைவாலிட்டு வந்தவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தான் கதிர். வேண்டாவெறுப்பாக அவனுடன் சென்றவளை தானும் வேண்டா வெறுப்பாக அழைத்துச் சென்றான் அவன்.

கல்லூரிக்கு செல்லும் வழி எல்லாம் மரங்களைக் கணக்கெடுத்தவள், காரை நிறுத்தியதும் இறங்கி வழி தேடி ஓடிவிட்டாள். சில மனிதர்களை பார்த்தவுடனே காரணமில்லாமல் பிடிக்காமல் போய்விடுமாமே! அவ்வகையினுள் இவ்விருவரும் அடக்கம் போலும்!

தேடலுக்கு அவசியமில்லாது முதலாமாண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்திற்கு வழி சொல்லும் பலகைகள் உதவியுடன் வந்தவள் நிகழ்ச்சிகள் முடிந்து தங்களுக்கான பிளாக்கை வந்தடைந்தாள். இடைப்பட்ட நேரத்தில் இரு தோழிகளும் கிடைத்துவிட்டனர் – மிஷா, அஞ்சலி.

புதிய இடத்தில் எவ்வாறு இருப்பது, எப்படி பழகுவது என்று பயந்துகொண்டிருந்த நிரல்யாவின் பயத்தை சிறிது போக்கினர் இருவரும், வாசன் ஐ-கேரின் பிரபலமான வசனமான ‘நாங்க இருக்கோம்’-ஐயும் தங்கள் செயல்காளாலும்.

பேசிக்கொண்டே பிளாக்கினுள் நுழைந்தவர்களை சீனியர் மாணவர்கள் பூச்செண்டு அளித்து வரவேற்க, மூவரும் மகிழ்ச்சியுடனே வகுப்பிற்கு வந்தனர்.

மிஷா வடக்கத்திய பெண், அஞ்சலி தெந்தமிழகத்தைச் சேர்ந்தவள். இருவரும் முன்பே அறிமுகமானதால் ஒன்றாகவே ரூமெடுத்திருந்தனர் ஹாஸ்டலில்.

தங்களை மறந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் மற்றவர்களின் திடீர் அமைதியால் வகுப்பு வாசலைப் பார்க்க, உள்ளே நுழைந்தவனைக் கண்டு மிஷாவும் அஞ்சலியும் ‘செம’ என லுக்கு விட்டுக்கொண்டிருக்க, நிரல்யாவோ, ‘இங்கேயுமா!’ என்று மானசீகமாக தலையில் கை வைத்தாள்.


தொடரும்
 

Attachments

  • HelloGuruPremaKosame.jpg
    HelloGuruPremaKosame.jpg
    86.2 KB · Views: 1
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top