என் காதல் தீ 01

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

நான் லேகா... கதை எழுதனும்னு ரொம்ப ஆசை... சரி... எழுதிடலாம்னு தொடங்கிட்டேன்... படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்...

HelloGuruPremaKosame.jpg
என் காதல் தீ 01

“What the hell, dad? How could you? I mean, how could you ever do this to me!!! Me, your daughter whom you have raised up more than a princess??? (என்ன அப்பா இது? இதனை எப்படி உங்களால் செய்யமுடிந்தது? அதுவும் எனக்கு? நான் நீங்கள் பொத்திப்பொத்தி வளர்த்த பிள்ளை!!)” என தன் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அந்த ஆடம்பரமான தனிவீட்டில் செவிப்பறை கிழியும் அளவுக்குக் கத்திக்கொண்டிருந்தாள் அந்த மங்கை. ஆனால், அவள் கூப்பாடு யார் காதில் விழவேண்டுமோ, அந்த மனிதர் அதனைப் பற்றி சிறிதும் கவலையின்றி ஏதோ தான் படிக்காவிட்டால் உலகமே தன் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதுபோல அன்றைய நாளிதழை வாசித்துக்கொண்டிருந்தார்.


தான் சொல்வதைக் கேட்காமல் நெருப்புக்கோழி பூமிக்குள் தலையை விடுவதுபோல் பேப்பரில் முகம் புதைத்திருந்த தந்தையின் கவனத்தைக் கலைக்க அவர் அருகில் சென்று கோபத்துடன் அவர் கையில் இருந்த நாளிதழைப் பிடுங்கி தூர எறிந்தாள் பெண்.


அவள் எறிந்த நாளிதழைப் பார்த்தவர், மெல்ல எதிரே நிற்கும் தன் பெண்ணைப் பார்த்தார். அவரது புருவங்கள் மெல்ல உயர்ந்து நெற்றிக்கு வந்தது.


அவரின் அந்த செய்கையையே தான் பேசுவதற்கான சம்மதமாகக் கொண்டு பேச ஆரம்பித்தாள் அந்த மங்கை.


அந்தப் பார்வை, ‘நான் முடிவு எடுத்துவிட்டேன். இனி அதனை எத்தகைய முயற்சியும் தடை செய்ய முடியாது’ எனக் கூறும் பார்வை. அத்தகைய பார்வையை அவர் பார்த்தார் என்றால், அதற்குப் பின் என்ன ஆனாலும் அவரை அவர் முடிவிலிருந்து மாற்ற இயலாது. இருந்தும் முயன்று பார்க்கலாம் எனத் தோன்ற, அதற்குத் தன் காளி அவதாரம் சரிப்படாது என உள்மனம் எடுத்துரைக்க, அரை நிமிடத்திற்கும் குறைவான நொடியில் ரம்யா கிருஷ்ணனைவிட விரைவாக சாந்தஸுரூபினி ரூபத்திற்கு மாறினாள் அவள்.


“Daddy… Please hear me for a minute… How will I live in such a place? Couldn’t you send me somewhere at least in Australia or U.K.? Instead, you have come up with an idea to send me to India. And, that too, some small village which even Google maps failed to identify!!! (அப்பா! தயவு செய்து கேளுங்கள்! நான் எப்படி அந்த இடத்தில் வாழ முடியும்? என்னை உங்களால் அட்லீஸ்ட் ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் என அனுப்ப முடியாதா? அதனை விட்டுவிட்டு இந்தியாவிற்கு அனுப்புகிறீர்கள்! அதுவும், ஏதோ ஒரு குக்கிராமம்!!!)” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் மகள்.


“நிரல்யா... உனக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன்… எங்கிட்ட தமிழில் பேசுன்னு?” என அவள் கேட்ட விஷயத்தை விடுத்து கேட்ட மொழியில் கவனம் பதித்துக் கேட்டார் அவர்.


“But, I am not comfortable with tamil (ஆனால் எனக்கு தமிழில் பேசுவது வசதியாக இருக்காது!)” என்று மீண்டும் ஷேக்ஸ்பியரின் சிஷியை போல அவள் ஆங்கிலத்திலேயே தொடங்க, தந்தையின் முறைப்பைக் கண்டவள், சட்டென தன் ஓட்டை டமிலுக்கு மாறினாள்.


“எனக்கு அங்கே பிடிக்கலைப்பா… I’m happy here. Please let me do what I wish (நான் இங்கே சந்தோசமாக இருக்கிறேன். என்னை இங்கேயே இருக்க விடுங்கள்!)” என டமிலில் ஒப்புக்குப் பேசிவிட்டு மீண்டும் ஆங்கிலத்தையே நாவினில் தவழ விட்டாள் மங்கை. அவளும்தான் என்செய்வாள்? அறியாத வயதில் தாயகத்தை விட்டு இங்கு வந்ததிலிருந்து அவளுக்குத் தான் தன் தாய்மொழியும் நாடும் கிட்டத்தட்ட மறந்தே போயிற்றே!


(உன்னைச் சொல்லிக் குற்றமில்லை… அவரைச் சொல்லிக் குற்றமில்லை… காலம் செய்த கோலமடி… சரி சரி… கச்சேரியை அப்புறமா வைத்துப்போம்… இப்போ சண்டையை… I mean, கதைக்கு போவோம்…)


“நிரும்மா… நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லிட்டேன்… எப்பொழுதும் நாம் பிறந்த நாட்டை தூற்றக்கூடாது… நீ காலேஜ் தமிழ்நாட்டுல, அதுவும் என் ஃப்ரெண்ட் வீட்டுல இருந்துதான் படிக்கப் போற… இதுக்கும் மேலே நீ சொல்வதற்கு ஒன்றுமில்லை… என்ன சொன்ன? கூகிள் மேப்ல கூட கண்டுபிடிக்க முடியலையா? அங்கே வந்து பாரு… உன் கூகிள், ஃபேஸ்புக் எல்லாத்தையும் மறந்துடுவ…”


“எனக்கு அங்கே பிடிக்காது…” என்று உரைத்தாள் மகள்.


“எதைப்பற்றியும் அறியாமலே பிடிக்கலைன்னு சொல்லக்கூடாது நிரல்யா… நீ வந்துப் பாரு…”


“வாட் டாட்… புடிக்காதுன்னு சொல்லிட்டு இருக்கேன்… நீங்க வந்து பாரு… நொந்து பாருன்னு சொல்றீங்க…? நோ இன் த சென்ஸ் இஸ் அ நோ… கான்ட் யூ அண்டர்ஸ்டாண்ட்?”
அவள் கேட்டதற்கு பதிலாக, “நாளை பகல் ஒரு மணிக்கு ஃப்ளைட். தயாராக இரு” என்று கூறினார் தந்தை.


“ஐகாண்ட்… ஐ வில் நாட்” என காற்றுடன் கத்திக்கொண்டிருந்தாள் மங்கை. அவள் கூறுவதைக் கேட்கத் தான் அவள் தந்தை அங்கே இல்லையே!
தன் காலால் தரையை உதைத்துக்கொண்டு கடுப்புடன் அறையை நோக்கிப் பயணித்தாள். நாளை செல்வதற்கு தயாராக வேண்டுமல்லவா??


யார் இவர்கள்?

அந்த நவநாகரீகத்தின் அடையாளமாய் ஹாலில் நின்றிருப்பவள் பெயர், நிரல்யா. அவள் இவ்வளவு நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர், அவளது தந்தை மாணிக்கவாசகம்.
அமெரிக்காவில் வசிக்கும் எண்ணற்ற இந்திய வம்சாவளிகளில் இவர்களும் அடக்கம். குடும்பத்துடன் தன் தொழிலை விரிவாக்க அமெரிக்கா வந்தார் மாணிக்கவாசகம். இப்போது அமெரிக்கா மட்டுமல்லாது, பல ஐரோப்பிய நாடுகளிலும் கொடிகட்டிப் பறக்கிறது இவரது தொழில்.


நிரல்யா, அவர் பாசமும் நேசமும் வைத்திருக்கும் ஒரே பெண். விழித்திருக்கும் போது என்ன? உறக்கத்திலும் ‘உனக்கு முக்கியமானது இந்த உலகத்தில் என்ன?’ என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் அவரிடம் இருந்து வரும் பதில், ‘நிரல்யா’ என்பதே! அவர் மனைவி இறந்த பிறகு அவர் வாழ்வின் பற்றுகோலே அவர் மகள் தானே!


ஆம்... நிரல்யாவின் தாயார் அவளது சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அதன்பின், அவளை கவனித்துக்கொள்ளவென்று ஒரு தாதியை நியமித்துவிட்டு தன் தொழிலை மேம்படுத்துவதில் மூழ்கிவிட்டார் அவர். மனைவியைப் பிரிந்த துக்கம் ஒரு காரணமென்றாலும், தன் மகளுக்கு அவள் விரும்பும் அனைத்தையும் தர வேண்டும் என்னும் சராசரி தந்தையின் ஆசையும் ஒரு காரணம்.


ஆனால், தாயிடம் இருந்து கிட்டாத அன்பை தந்தையிடம் இருந்து எதிர்பார்த்த அந்த பிஞ்சின் மனம் அவருக்குப் புரியவில்லை. தந்தை தன் மீது கொண்டுள்ள பாசமும் அவளுக்கு தெரிய வழி இல்லாமல் போனது எப்போதும் அவர் தொழில் தொழில் என்று நாடு நாடாக அலைந்து கொண்டிருந்ததால்.


அன்னையும் இல்லை, தந்தையும் அருகிலில்லை. அந்த அன்பை தன்னை வளர்க்க வந்தவளிடம் தேடியது குழந்தை. நிரல்யாவைப் பார்த்துக்கொள்வதை தன் உத்தியோகமாய் மட்டுமே கொண்டிருந்த அந்த பெண்ணிடம் இருந்து அது கிட்டாமல் போகவே, அதனைத் தன் நட்புகளிடம் தேடிக் கொண்டாள்.


அமெரிக்காவிலேயே பல காலமாக வாழ்ந்து வந்து அந்நாட்டின் பிரஜைகளாக க்ரீன்கார்டிலும் கலாச்சாரத்திலும் மாறிப்போன அந்நண்பர்களின் சாயல் இவள் மீதும் படர ஆரம்பித்ததன் விளைவு, கம்யூனிடி காலேஜில் படிக்கும்போதே டகீலாவை கையில் ஏந்திவிட்டாள். இதனை நண்பர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு மாணிக்கம் எடுத்த முடிவுதான் அவளை இனியும் இங்கே வளர விடவேண்டாம் என்பது.
******

நெல்லித்துரை, கோயம்புத்தூர்

“அய்யா!” என கூவிக்கொண்டே அந்த நடுத்தர வயது இளைஞன் வயல் வரப்பில் ஓடி வந்து அந்த நெடியவனின் முன் நின்றான்.


“என்ன வீரண்ணே? எதுக்கு இப்படி வெக்கு வெக்குன்னு ஓடி வரீங்க?” என கேட்டவனிடம்,


“நம்ம பெரியய்யா உங்கள வரச்சொன்னாங்க. அத சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேனுங்க” என பதிலளித்தான் வீரண்ணன் எனப்பட்டவன்.


“சரிப்பா… நான் போய் அவரைப் பார்க்கிறேன்” என விரைந்தான்.


அந்த பெரிய பண்ணை வீட்டின் முன் வந்து நின்ற ராயல் என்ஃபீல்டு வண்டியிலிருந்து இறங்கியவன் நேரே ஆசாரத்தில் அமர்ந்திருந்த பெரியவரிடத்தில் சென்று நின்றான்.


“அப்பா!”


“வாய்யா ராசா! உன்ற கிட்ட சில விஷயம் சொல்லனும்னு தா சொல்லியுட்டேன். நம்ம ஒறம்பற வந்தா தங்குற ரூம் ரெண்டு ரெடி பண்ணி வைக்கச் சொல்லுய்யா… இன்னும் ரெண்டு நாளில தேவைப்படும். எல்லாம் சுத்த பத்தமா இருக்கோனும். அப்புறம், உன்ற பொறந்தவ வந்தா… திருப்பியும் ஏதோ சீராடிருப்பா போல இருக்கு உன்ற மச்சானோட… என்னிடம் எதையும் சொல்ல மாட்டா வேற… நீயே கொஞ்சம் பதமா பேசிப்பாரு…” என்று அவனுக்குக் கேட்குமாறு கூறியவர், ‘இந்தப் புள்ளயோட எப்பப்பாரு ஏதாவது அக்கப்போறாவே இருக்கு… அதுக்குன்னு அப்படியேவா விட முடியும்?’ என நொந்துகொண்டார், அந்த ஊரையே கட்டி ஆளும் தலைவர்.


“நா பாத்துக்குறேனுங்… நீங்க வெசனப்படாதீங்…” என்று உள்ளறையை நோக்கிச் சென்றான், கதிர்நிலவன்.


பெரியசாமி, அந்த ஊரில் மதிப்புடையவர்களுள் ஒருவர். அவரது மனைவி பர்வதம்மாள், அண்டை மாநிலத்திலிருந்து வரும் காதலனை சந்திக்க மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து பாய்ந்து வந்த பவானி ஆற்றின் வேகத்திற்கு பலியானவர். அவர்களுக்கு ஒரு மகன், மற்றும் மகள். மகளை தன் மனைவியின் அண்ணன் மகனுக்கே அவள் உரிய வயது வந்ததும் கட்டிக்கொடுத்துவிட்டார். மகன் கதிர்நிலவன். தந்தையும் தமக்கையும் அவனுக்கு மிகவும் பிரியமானவார்கள்.


அவன் பெயரைப் போலவே எப்பொழுது காய்வான், எப்போது குளிர்விப்பான் என்பதை அறிபவர் யாருமிலர். அவன் மட்டுமே அறிந்த ஒன்று அது. அவன் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றென்றால் அது அவச்சொல். அதனை அவன் தன் வாழ்நாள் முழுவதும் சுமக்க வைக்க காலம் காத்துக்கொண்டிருக்கிறது.

தொடரும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''என் காதல்
தீ''-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லேகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top