என் கதை 6

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
"ஹேய் மேம் வந்துட்டாங்க. கிளாஸ் கவனிப்போம். அப்புறம் பேசுவோம்"

அன்றைக்கான வகுப்புகள் எல்லாம் முடிந்து பிறந்தநாள் விழாவிற்கு செல்லும் நேரமும் வந்தது. "ஹேய் நம்ம கல்லூரிப் பக்கத்திலேயே ஒரு உணவகம் ஆரம்பிச்சிருக்காங்க. அங்க போலாம் டி" என்ற ரேணுகாவிடம் "ஆமாம் டி அங்க நல்லாருக்காம். அங்கயே போவோம் டி" என்று கோரஸாக சம்மதித்தனர். எல்லோரும் அங்கே கிளம்பிச் சென்றனர். ஒரு கூட்டம் மட்டும் அதிலிருந்து பிரிந்து ஆர்டர் கொடுத்திருந்த பர்த்டே கேக்கை வாங்க கிளம்பிச் சென்றனர். "எங்க டி போறீங்க " என பிறந்தநாள் காணும் தோழி கேட்க "ரெக்கார்ட் கரெக்ஷன் வாங்கிட்டு வர்றோம் டி" என்றபடி கிளம்பிச் சென்றனர். கடையில் எல்லோரும் பிடித்ததை ஆர்டர் கொடுத்தனர். பூங்குழலி " எத டி ஆர்டர் பண்ணுறது " என குழம்பித் தவிக்க, சுதா தான் "நாம டயடீஷியன் கிட்ட தான் கேக்கணும். ஆனா அப்படி ஒருத்தங்களா இனிமே தான் பார்க்க போகிறோம்ங்கிறதால இப்பத்தைக்கு மைதா மாவு கலந்து செய்த உணவையும் வெள்ளைச் சர்க்கரை சேர்த்து செய்த இனிப்பையும் தவிர்த்திடு. ஃப்ரூட் சேலட் இல்லைனா வெஜிடபிள் சேலட் சேர்த்துக்கோ. பழச்சாறு குடி. இப்படி முயற்சி பண்ணு இன்னைக்கு." என்றாள்.

பூங்குழலியும் "சரி டி. " என்றவள் நெய் தோசையும் fig ஜுஸும் குடித்தாள். அதிலேயே வயிறு நிரம்பிவிட வேறு எதுவும் சாப்பிடவில்லை அவள். அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு கேக் வெட்டி கொண்டாடி அவரவர் வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருளை அந்த பெண்ணிற்கு தந்தனர். இவர்களும் தங்கள் பரிசுப் பொருளை கொடுத்துவிட்டு கிளம்பினர்.



பூங்குழலி சுதாவிடம் விடைப்பெற்றவள் அரசுப் பேருந்தில் ஏறினாள். தனக்குரிய நிறுத்தம் வந்ததும் இறங்கியவள் நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கெதிரில் ஒரு பாட்டி மட்டும் வந்தார். அப்பொழுது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அந்த பாட்டியை கடக்கும்போது வேகத்தை குறைத்தது. பின்னால் அமர்ந்திருந்த நபர் அந்த பாட்டியின் சங்கிலியை பறித்ததும் இருசக்கர வாகனம் மறுபடியும் தனது வேகத்தை கூட்டி பறந்துவிட்டிருந்தது. இதை கண்ட பூங்குழலி பாட்டியிடம் ஓடினாள். பாட்டி அதிர்ச்சி தாங்கமல் தரையில் அமர்ந்திருந்தார்.



இவள் பாட்டிக்கு ஏதேனும் அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே "இந்தாங்க பாட்டி. தண்ணிய குடிங்க." என்றாள். "கவலைப்படாதீங்க பாட்டி. காவல் நிலையத்துல புகார் கொடுத்தா கண்டுப்பிடிச்சு தருவாங்க." என்று தொடர்ந்தவளிடம் பாட்டி " இப்படி வழிப்பறி நிறைய நடக்குறதுனால கவரிங் செயின் தான் இப்பெல்லாம் போட்டுக்கிறதும்மா. நான் அவங்க என்கிட்ட பிடுங்கின அதிர்ச்சில தான் இருக்கேன். இதெல்லாம் சரியாகிடும்மா." என்றார். "உங்களுக்கு அடி எதும் பட்டிருக்கா பாட்டி?" என பூங்குழலி கேட்க "அதெல்லாம் இல்லைம்மா" என்றார். "வீடு பக்கத்திலேயா இருக்கு? நான் வேணா கொண்டு வந்து விடவா?" என்ற பூங்குழலி கேட்க "நான் போயிக்கிறேன் தாயி. நீ வீட்டுக்கு பத்திரமா போ." என்று கூறி விட்டு சென்றார். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக டிவி பார்த்துக்கொண்டிருந்த தனது அன்னையிடம் நடந்த எல்லாவற்றையும் தெரிவித்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top