என் கதை 2

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
"தங்கம் எதுக்காக அழறீங்க?" என்று அவளின் அம்மா அவரிடம் கேட்டார். "எல்லோரும் என்னை கேலி பண்றாங்கம்மா. யானைக்குட்டி, கத்திரிக்காய் அப்பிடி இப்பிடினு சொல்றாங்க. "
"இதுக்காக அழறத முதல்ல நிறுத்து . கண்ணை துடைச்சுக்கோ. நீ இப்படி இருக்கிறது உனக்கு பிடிச்சிருக்கா. பிடிச்சிருந்தா மத்தவங்க சொல்றத பத்தி கவலைப்படாத. ஆனா உனக்கே உன்னை இப்படி பார்க்கிறது பிடிக்கலனா நீ உன் உடல் எடையை குறைக்க முயற்சிப் பண்ணு. நான் உனக்கு துணையா இருப்பேன். இப்ப முகம் கழுவிட்டு வெளிய வா. " பூங்குழலி முகம் கழுவிக்கொண்டு வந்ததும் "எங்கே சிரி பார்க்கலாம்" என்ற பூங்குழலியின் அம்மா அவள் சிரித்ததும் தான் அங்கிருந்து அகன்றார். பிறகு திருமண விழா முடிந்ததும் எல்லோரிடமும் விடைப்பெற்று பூங்குழலியின் குடும்பத்தினர் வீடு திரும்பினர். வீடு திரும்பியவர்கள் அவரவர் அறைக்குச் சென்றனர். சிறிது நேரம் கழித்து பூங்குழலியின் அம்மா கனிமொழி அவளது அறைக்குள் சென்றுப் பார்த்துவிட்டு "இரண்டு நாள்ல இந்த அறையவே இப்பிடி குப்பைக்கூடை மாதிரி மாத்திட்ட. முதல்ல எழுந்திரி. இந்த அறையை சுத்தம் பண்ணு. எப்பவும் மொபைல் போன் கையிலயே வச்சிட்டு இருக்கிறது. அப்படி என்ன தான் இருக்கு அந்த போன்ல. அழுக்கு துணியெல்லாம் வாஷிங் மெசின்ல போடு. இந்த அறைய கூட்டு. பட்டுச்சேலையெல்லாம் உணரப்போடு. மேக்கப் சாதனங்கள் எடுத்து டப்பாக்குள்ள போட்டு வை." தேன்மொழி சொல்ல சொல்ல ஒவ்வோரு வேலையாக முடித்தவள் மறுபடியும் போனை எடுத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள். தேன்மொழி தலையிலடித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டார். பூங்குழலி வாட்ஸப்பில் தனது தோழி நித்யாவிற்கு குறுஞ்செய்தி அனுப்ப தொடங்கினாள். "ஹேய் ! இன்னைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாங்க டி. எதாவது அசைன்மெண்ட் கொடுத்தாங்களா? நாளைக்கு தேர்வு எதுவும் இருக்கா?"
"இல்லடி. இன்னைக்கு 'எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி ' தான் நடந்துச்சு. பாடம் எதுவும் சொல்லித் தரல. கல்யாணம் நல்லபடியா நடந்துச்சா?"
"அதெல்லாம் நல்லா தான் நடந்துச்சு. ஆனா என்னைத்தான் எல்லாரும் நான் குண்டா இருக்அகேன்னு கேலி பேசுனாங்க. "
"அவங்க பேசினா பேசிட்டு போறாங்க. இதுக்கெல்லாம் நாம வருத்தப்படலாமா. இருக்கிறது ஒரு வாழ்க்கை. நமக்குப் பிடிச்சத சாப்பிட்டு மகிழ்ச்சியா வாழணும். இது சாப்பிடுற வயசு டி. முப்பது வயசுக்கு மேல நாம நினைச்சாலும் நிறைய உணவ சாப்பிட முடியாது. இதுக்குப் போய் வருத்தப்பட்டுட்டு"
"அப்டீங்கிற"
"ஆமாம்ங்கிறன்"

"சரி டி நாளைக்கு கல்லூரியில பார்க்கலாம்."
"ம். சரிடி"
கண்ணாடி முன்னாடி போய் நின்ற பூங்குழலி தன்னையே பார்த்தாள். "எவ்வளவு குண்டாக இருக்கிறோம். எப்படியாவது உடம்பை குறைக்க வேண்டும். எப்படி குறைப்பது? இனிமேல் சாப்பாடு கொஞ்சம் தான் சாப்பிடணும். அப்புறம் வீட்டு வேலையில அம்மாவுக்கு உதவணும். எப்பவும் சாப்பிட்டுட்டே இருக்கக்கூடாது. வேறென்னா" என யோசித்தவள் "முதல்ல இத ஃபாலோவ் பண்ணுவோம்." என முடிவெடுத்துக்கொண்டாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top