என் உறவென வந்தவனே 9

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
hii... frds&siss... en uravena vandhavane epi 9 pottachu... happy reading :giggle:



அத்தியாயம் - 9

எங்கே உனை கூட்டிச்செல்ல....
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல....
என் பெண்மையும் இளைப்பாறவே....
உன் மார்பிலே இடம் போதுமே....
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே....
மெதுவாக இதயங்கள் இணைகிறதே....
உன் கைவிரல் என் கைவிரல்
கேட்கின்றதே....

தன் வீட்டின் முன்பு நின்று காலிங்பெல்லை அழுத்தினான் ஜான்... அவனின் அப்பா வந்து கதவை திறக்க... "அப்.." என்று சொல்ல வந்தவனை வாய்மேல் விரல் வைத்து "ஷ்ஷ்..." என்று சொன்னவர் ஹஸ்கி வாய்சில் "உங்க அம்மா.. அங்க கிச்சன்ல கோவமா எல்லாத்தையும் போட்டு உடைக்கறாடா...சீக்கிரம் போய் அவள சமாதானம்படுத்து... சத்தம் தாங்க முடியல... அப்புறம் முக்கியமான விஷயம் தம்பி... சமாதானம் படுத்துறங்கற பேர்ல என்னை நடுவுல இழுத்துவிட்றாதடா..." என்று சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டார்...

"அய்யோ... என்ன.. அப்பா இப்படி சொல்லிட்டுப்போறார்..." என்று ஒரு நொடி யோசித்தவன்... நேராக சமையல் அறைக்கு சென்றவன்... "அம்மா..." என்று கத்தியவன்... அவர் ஏதோ சொல்வதற்கு முன்பாக "அம்மா.. ரொம்ப பசிக்குது அம்மா... என்ன திட்டுவதாக இருந்தாலும்... சாப்பிட்ட பிறகுதிட்டு..." என்று சொல்லிவிட்டு சமையல் கட்டின் மேடையில் ஏறி அமர்ந்துகொண்டான்...
"ஏன்டா... இவ்வளவு பசியோட.. ட்ராவல் பண்ணி வறியா...நீ..." என்று சொல்லிக்கொண்டே தோசைக்கல்லை அடுப்பில் வைத்தவர்..
வேகமாக தோசை வார்க்க ஆரம்பித்தார்... ஐந்து தோசை சாப்பிட்டவன்... அதற்கு மேல் சாப்பிட முடியாமல்... "போதுமா..." என்று சொல்ல... "டேய்... இன்னும் இரண்டு மட்டும் சாப்பிடுடா..." என்று சகுந்தலா சொல்ல... "நோமா... நான் போய் ரெஸ்ட் எடுக்குறேனே... வேணும்னா அப்பாக்கு ஊத்திக்குடுமா..." என்று சொல்லிக்கொண்டே ஹால் வரை சென்றவனை முறைத்தார் ராஜ்... "ம்கும்... இப்போதான் இரண்டு தோசை ஊத்திக்கொடுத்தேன் அவருக்கு... அதுக்கே ஆயிரத்தெட்டு குறை சொல்லிக்கொண்டே சாப்பிட்டார்..." என்று சொல்லிவிட்டு சமயலறையில் புகுந்துகொண்டார் சகுந்தலா...(பிள்ளைகளுக்கு பசி என்றால் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பின்னுக்குப் போய்விடும் என்பது எப்போதும் உண்மையே... )"இது எனக்கு தேவையா.." என்பது போல் ஜானைப்பார்த்து முறைத்தார் ராஜ்... ஜான் அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான்... ராஜ் மனதில் "என்ன.. பையன் முகத்துல லைட்டு ப்ரைட்டா எறியுது..ம்ம்... அவன் தூங்கி எழுந்தப்பிறகு கேட்டுக்குவோம்..." என்று நினைத்துக்கொண்டார்...

தனு தனது அறைக்கு வந்து ப்ரஷ்ஷாகிவிட்டு... படுக்கையில் விழுந்தவள் போனை பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தாள்... தன் அம்மாவிடம் இருந்து தப்பித்த ஜான் அறைக்கு சென்று கதவை மூடியவன்... அப்படியே படுக்கையில் கவிழ்ந்து போனை எடுத்து அவளுக்கு கால் செய்ய... உடனே அட்டண்ட் செய்தவளை நினைத்து சிரித்துக்கொண்டான் ஜான்... "ஹலோ..." என்று அவள் சொல்ல... "பேபி... சாப்டியா..." என்று அவன் முதலில் கேட்க... "இல்ல... கொஞ்ச நேரம் கழித்து சாப்டுக்குவேன்..." என்று சொன்னவளிடம் "பேபி... பசி வந்தாதான் சாப்பிடுவியா...ம்ம்.. பசி இல்லனாலும் கரக்ட்டான டைமுக்கு.. அட்லிஸ்ட் கொஞ்சமாவது சாப்பிடனும்... இப்போ நீ போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்பியாம்... நானும் கொஞ்ச நேரம் தூங்குவேன்..." என்று சொன்னவனிடம் "இப்போ உங்களுக்கு தூங்கனும்... அவ்வளவுதான போய் நல்லா தூங்குங்க..." என்று தனு சொல்ல... "இல்ல.. எனக்கு இப்போ நீ சாப்பிடனும்..." என்று இவன் சொல்ல.... "சரி... சாப்டு வந்து.. நல்லா தூங்கிட்டு அதன் பிறகு பேசறேன்..." என்று இவள் சொல்ல... "குட் கேர்ள்..." என்று இவன் சொல்ல..." நான் வைக்கிறேன்..." என்றுஇவள் சொல்ல... "ம்ம்..." என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டு படுத்துவிட்டான்... இவளும் அவன் சொன்னபடி சாப்பிட்டு முடித்து படுத்துக்கொண்டாள்....

இப்படியே இரண்டு நாட்கள் போனில் பேசியவர்கள் நேரில் பார்த்து பேசவேண்டும் என்று நினைக்க... ஜான் "பேபி... நீ ஸ்கூல் முடிஞ்சதும் வெளியேவெயிட் பன்னு நான் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்..." என்று சொல்ல... தனு "ம்ம்..ஓகே தஷு..." என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்...

ராஜ் தன்னுடைய மூளையை எவ்வளவு கசக்கியும் தன் மகனின் சந்தோஷம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் போனது.. அவனிடமே கேட்கலாம் என்றால் "கையில் சிக்கமாட்டின்றானே..." என்று புலம்பிக்கொண்டிருந்தார்... ஆனால் இன்று மாலையே அதற்கான காரணம் தனக்கு தெரிந்துவிடும் என்று அவருக்கு தெரியவில்லை... அதோடு வேறு ஒருவருக்கும் தெரிந்தால்....

மாலையானதும் பள்ளி முடிந்து வெளியே வந்தாள் தனு...அப்போது மோனிஷாவும் வர... தனு அவளை கண்டு கொள்ளாமல் நிற்க... மோனிஷா "என்னடி... அதிசயமா இங்க நின்னுட்டு இருக்கா... இவ்வளவு நேரம் ஹாஸ்டல் வாசல் வரைக்கும் போயிருப்பாளே..." என்று தன் தோழியிடம் சொல்ல... அவள் பேசுவது தனுவிற்கு நன்றாக கேட்டது.... இருந்தும் பானுவிற்காக அமைதியாக நின்றிருந்தாள்... தனுவின் பொறுமையை சோதிக்காமல் ஜான் தனது டூவீலரில் வந்து நின்றான்... "சாரி..தனுமா கொஞ்சம் வொர்க் அத முடிக்க லேட்டாகிவிட்டது..." என்று சொல்ல... தனுவும் சிரித்துக்கொண்டே "ஓஓ...அதான் நீங்க... வெளியே வெயிட் பன்னுன்னு போன்லேயே முன்னெச்சரிக்கை பண்ணீங்களா..." என்று சொல்ல அவனுக்கு அவளின் பேச்சு உடனே புரியவில்லை... நிதானமாக புரிந்தவுடன்... "இங்க வா..." என்று அழைத்தவன்... அவள் வந்ததும் "பேபி... இப்பவே பொண்டாட்டி மாதிரி பேசற... சரி சரி ஏறு லேட்டாச்சினா சந்நிதி மூடிடுவாங்க..." என்று அவன் சொன்னதிலேயே கோவிலுக்கு தான் அழைத்து செல்வான்... என்று நினைத்தவள்... அவனின் பைக்கில் சென்றாள்... இங்கு நடந்ததை பார்த்த மோனிஷா திறந்த வாய் மூடவில்லை...

ஜானின் வீட்டில் சகுந்தலா கோவிலுக்கு கிளம்ப... "ஏங்க.. நீங்களும் வாங்களேன் கோவிலுக்கு போயிட்டு வருவோம்..." என்று அழைக்க.. ராஜ் ஏதோ யோசனையிலேயே இருக்க... "என்னங்க ...என்னாச்சு உங்களுக்கு.." அவர் தோளில் கை வைக்க.. "ஒன்னும் இல்லம்மா... எல்லாம் நம்ம பையனப்பத்திதான்..." என்று அவர் சொல்ல... "நானும் அவனுக்காகதாங்க கோவிலுக்கு போறேன்....நீங்களும் வாங்க... தஷ்வந்தோட ஜாதகம் பார்த்துட்டு வரலாம்..." என்று சொல்ல... "ம்ம்... சரி போகலாம்... நீ கோவில்னு சொன்னதும் தான் நியாபகம் வருது கம்மிங் சண்டே... ஜோவியல் பாதர் வர சொன்னார்..." என்று சொல்ல... "ம்ம் போலாம்ங்க..." என்று சொல்லிவிட்டு இருவரும் பெருமாள் கோவிலுக்கு சென்றனர்...

ஜான் கோவிலின் வாசலில் வண்டியை நிறுத்த.. தனு இறங்கி நின்று அவன் வண்டியை பார்க்கிங்கில்விட்டு வரும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்... "தனு பேபி... கோவில் வாசல்ல வச்சி என்ன பார்வ இது..." என்று சொல்ல... சின்னதாக சிரித்தவள்... எதுவும் சொல்லாமல் அவன் கையோடு தன் கையையும் இணைத்து நடந்தாள்... அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்...

கடவுளை தொழுதுவிட்டு இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர்... "தனு... அப்படி என்ன வேண்டுன.. அவ்வளோ நேரமா... ரொம்ப பலமான வேண்டுதலா..." என்று ஜான் கேட்க... "ம்ம்..." என்று சொல்ல... "மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா... ம்ம்னு ..." என்று ஜான் அலுத்துக்கொள்ள... "இதுக்கே இப்படி பண்றீங்களே... நம்ம வாழ்நாள் முழுக்க இந்த ம்ம்ம...நீங்க கேட்கணுமே... அப்போ என்ன பண்றீங்கன்னு பாக்குறேன்..." என்று தனு சொல்ல... "தனுமா... நமக்கு கல்யாணமாகிட்டப் பிறகு... எதுக்கு பார்த்துகிட்டே இருக்கப்போறேன்... நேரா ஆக்ஷன் தான் பேபி..." என்று சொல்ல... அழகாக முகம் சிவந்தவள்... "நான்கூட பரவால... கோயிலுக்கு வெளியே தான் உங்கள சைட்டடிச்சேன்.... ஆனா நீங்க கோவிலுக்கு உள்ளயே இப்படி பேசுறீங்க தஷு..." என்று சொன்னவள்... "ஆமா.. உங்க பேர் ஏன் ஜான்தஷ்வந்த்னு வச்சாங்க... "என்று ஆவலாக கேட்டாள்...

"அது... அம்மா கிறிஸ்டியன் அப்பா இந்து... ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்கல... வீட்டவிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... அதான் அம்மா அவங்க அப்பாவோட நியாபகமா ஜான் என்ற பெயரையும் சேர்த்து ஜான்தஷ்வந்த்னு வச்சிட்டாங்க..." என்று சொன்னவனிடம்... "அப்போ நம்ம லவ்வுக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது..." என்று தனு சந்தோஷமாக சொல்ல... "ம்ம்.. அப்படியும் சொல்லலாம்... பார்க்கலாம்..." என்று ஜான் சொல்ல.. இருவரும் பேசியபடியே அமர்ந்திருந்தனர்...

சகுந்தலாவும் ராஜும் கோவிலின் உள்ளே நுழைந்தனர்...சாமியை தரிசித்துவிட்டு.. கோவிலை சுற்றிவர ஆரம்பித்தனர்... ராஜ் முன்னே நடக்க... சகுந்தலா ஒவ்வொரு சாமியையும் வணங்கிக்கொண்ட வந்தார்... ராஜ் எதர்ச்சையாக திரும்ப ஓரிடத்தில் ஜானும் தனுவும் பேசி சிரித்துக்கொண்டிருக்க... தனுவை உற்றுப்பார்த்தவர்... "ஹய்.. அந்த பொண்ணு... அடப்பாவி... கண்டுபுடிச்சிட்டானா... ம்ம் எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல..." என்று நினைத்தவர் வேகமாக திரும்பி "சகுந்தலா வருகிறாரா..." என்று எட்டிப்பார்த்தவர்... அங்கே அவர் இல்லை என்றதும் ... நேராக ஜானிடம் சென்றவர்... "ஹலோ... எஸ்க்யூஸ்மி .." என்று அவன் தோளில் கை வைத்து அழைக்க.... "யாரது..." என்று திரும்பிய ஜான் அவரை பார்த்ததும் எழுந்து நின்றவன்... "அப்பா..." என்றுசொல்ல...
தனு "அப்பாவா..." என்று அதிர்ச்சியானாள்...


- தொடரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top