என் உறவென வந்தவனே 11

Gayus

Writers Team
Tamil Novel Writer
#1
hii.. frds&siss.. en uravena vandhavane epi 11 pottachu.. padithuvittu comments kodukka marakkadhinga.. happy reading :giggle:

அத்தியாயம் - 11

ஒருவரின் மீது உண்மையான...
அன்பும், காதலும் வைத்தால் மட்டுமே...
அவர்களின் சந்தோஷமும்,துக்கமும்...
வார்த்தையால் அல்லாமல்...
உணர்வுகளால் புரிந்துக்கொள்ள முடியும்...


தனு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்க... ப்யூன் வந்து "எஸ்கியூஸ்மி மேடம்... உங்களப் பார்க்க விசிட்டர் வந்திருக்காங்க..."என்று சொல்ல... "ஓகே அண்ணா... நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு விசிட்டர் ரூமிற்கு சென்றாள்... அங்கே ஒரு பெண் கையைக்கட்டிக்கொண்டு திரும்பி நிற்க... "ஹலோ.. மிஸ்... யார் நீங்க..." என்று தனு கேட்க... "முதல்ல நீ யாரு..." என்று திருப்பிக்கேட்டாள் அந்த பெண்... "எஸ்கியூஸ்மி... ஒரு வேல.. நீங்க தேடி வந்தவங்க வேறயாராவதா இருக்கும்... சாரி..." என்று சொன்ன தனு திரும்பிப்போக... "நான்... பார்க்க வந்தது உன்ன தான்..." என்று மீண்டும் அப்பெண் மரியாதை இல்லாமல் பேச... "என்னை பார்க்கவா... அப்புறம் எதுக்கு நீங்க யாருன்னு கேட்டீங்க..." என்று தனு கேட்க... "ஒ.. நான் யாருன்னு உனக்கு தெரியாதுல்ல... அப்போ ஜான் மாமாவ நல்லாத்தெரியும்..." என்று அவள் ஒரு மார்க்கமாக கேட்க... தனு அதிர்ச்சியானாலும் பின் சுதாரித்து "ஜான்.. அவர எப்படி உங்களுக்கு தெரியும்... அவருக்கு நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா..." என்று தனு கேட்டாள்... "இப்போ கேட்டீயே.. இதான்... கரெக்ட்டான கேள்வி... நான் அவர கல்யாணம் பண்ணிக்கப்போறப் பொண்ணு..." என்று சொன்னவளை பார்த்து மிகவும் பொறுமையாக "ஒ... அப்போ நான் யாரு..." என்று ஹேமாவை பார்த்து கேட்டாள் தனு... "ஏய்... இங்க பாரு... உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்... என் மாமாவ விட்டுட்டு ஓடிடு... கேள்வி பட்டேன்... நீ யாரும் இல்லாத அநாதையாமே... உனக்கு ஊர் சுத்த.. என் மாமா தான் கிடச்..." என்று சொல்லி முடிக்கவில்லை தன் கன்னத்தை அழுத்திப்பிடித்திருந்தாள் ஹேமா... பின்ன தனு தான் அவளை ஓங்கி அறைந்திருந்தாளே... "இன்னொரு வார்த்தை பேசுன... அவ்ளோதான்... தஷு எனக்கு மட்டும் தான்.. அவருக்கும் நான் மட்டும் தான் பொண்டாட்டி... புரிஞ்சிதா... வந்த வேல முடிஞ்சிதுல்ல.. நான் கிளம்புறேன்..." என்று தனு சொல்லிவிட்டு நடக்க... "ஏய்... என்னையே அடிச்சிட்டல்ல.. உன்ன என்னப் பண்றேன் பாருடி... இன்னொன்னும் சொல்லிறேன் கேட்டுட்டுப்போடி... மாமா எனக்கு மட்டும் தான்டி சொந்தம் வேற யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்..." என்று ஹேமா சொல்ல... "ம்ம்... உன்னால முடிஞ்சா செஞ்... சாரி.. உன்னால அது முடியாது... எனக்கு க்ளாஸ்க்கு டைம்மாயிடுச்சி பாய்..." என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றாள் தனு....


ஆட்டோவில் ஜானின் வீட்டிற்கு வந்த ஹேமா நேராக தான் தங்கியிருக்கும் அறையினுள் சென்று கதவை அடைத்தவள்.. கண்ணாடி முன்பு நின்றாள்... கன்னம் சிறிதாக வீங்கியிருக்க... அதை தடவிக்கொண்டே.. நேற்று நடந்த நிகழ்வை நினைத்தாள் தன் தோழியின் மேரேஜ் ரிசப்ஷனுக்காக ஸ்கூட்டியில் சென்றுக்கொண்டிருந்தவள்.. ஜான் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிய... அங்கே செல்வதற்காக வந்தவள்...ஜான் ஒரு பெண்ணை ஏற்றி செல்வதை பார்த்து "என்னை காலேஜ்ல ட்ராப் பண்ண சொன்னா ஆட்டோல போக சொல்வார்.. இப்போ என்னடான்னா... ஒரு பொண்ண கூப்டிட்டுப் போறாரு... இந்தப் பெண் யாராக இருக்கும்... அவ யாருன்னு தெரிந்தே ஆக வேண்டும்.." என்று அவர்களை பின் தொடர்ந்தவள்... நன்றாக தெரிந்துக்கொண்டாள்... அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள்... என்று... அதன் விளைவு தான் அடுத்த நாள் ஜானின் வீட்டிற்கு வந்ததும்.. இப்போது தனுவைப் பார்த்து வந்ததும்... "என்ன நடந்தாலும்... உன்ன மாமாவ கல்யாணம் பண்ண விடமாட்டேன்டி... ராஜ் மாமா.. எப்படி நீங்க தனுவ இந்த வீட்டுக்கு மருமகளாக்கொண்டு வரப் போறீங்கன்னு நானும் பார்க்கிறேன்..." என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு தனது அன்னைக்கு போன் செய்து பேசினாள்...

இங்கே... தனுவிற்கு ஒரே குழப்பமாக இருக்க... பாடம் எடுக்க முடியாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலுக்கு சென்றவள்... தஷுவிடம் இதைப் பற்றி "சொல்லலாமா வேண்டாமா..." என்று ஆராய்ச்சி செய்ய... கடைசியில் "தன்னால் அவர்களுக்குள் பிரச்சனை வர வேண்டாம்... என்று அவனிடம் சொல்ல வேண்டாம்... என்று முடிவெடுத்தாள்..." சிறிது நேரம் புரண்டு படுத்தவள் தூங்க முயற்சிக்க... முடியவில்லை... மணியைப் பார்க்க.. ஒன்று என காட்ட... "அவருக்கு கால் பண்ணிப்பார்ப்போமா.." என்று நினைத்தவள் முயற்சிக்க... மூன்றாவது ரிங்கிலேயே எடுத்தவன்... "சொல்லு பேபி...என்ன இப்போ கால் பண்ணிருக்க... ஸ்கூல் போலயா..." என்று அடுத்தடுத்து ஜான் கேள்வி கேட்க.. "அய்யோ... கொஞ்சம் பேசவிடுங்க தஷு... நீங்க என்ன பண்றீங்க..." என்று அவள் கேட்க... "நானா... கம்பெனியோட முக்கியமான மெயில்ஸெல்லாம் செக்கிங் அண்ட் ரிப்ளையிங்... பண்ணிட்டுருக்கேன்... டுடே ஹெட் ஆபீஸர் மாயா லீவ்... அதான் டபுள் வொர்க்..." என்று அவன் பெரிய விளக்கம் சொல்ல... அவனின் சோர்வு குரலிலேயே தெரிய... "சாரி... டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... கன்ட்டின்யூ யுவர் வொர்க் தஷு..." என்று சொல்லிவிட்டு கட் செய்யப் போக... "ஏய்.. வச்சிடாதடி..." என்று அவன் கத்தும் சத்தம் கேட்டு மீண்டும் மொபைலை காதில் வைத்து "சொல்லுங்க..." என்று இவள் சொல்ல... "நீ கேட்டதும் நான் பதில் சொன்னேன்ல... நான் கேட்டதுக்கு பதில் ம்ம்... அதுவும் உன் வாய்ஸே... சரியில்லையே..." என்று உண்மையைக் கூறியவனை இப்போதே கட்டிக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிடலாம்... போலத்தோன்றியது... இருந்தாலும் எதுவும் சொல்லாமல் "கொஞ்சம் ஹெட்டேக்கா இருந்துச்சி... அதான் பர்மிஷன் போட்டு ரூமுக்கு வந்துட்டேன்..." என்று சமாளித்தாள்... "என்னாச்சி...டேப்ளட்(tablet) போட்டீயா... முதல்ல எதாவது சாப்டீயா..." என்று அவன் கேட்க... "ம்ம்... இப்பதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி சாப்டேன்... இப்போ டேப்ளட் சாப்படனும்..." என்று இவள் சொல்ல... "ம்ம்... சாப்டு ரெஸ்ட் எடு.. நான் ஆபீஸ் முடிந்ததும் வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்... ஓகே..." என்று ஜான் சொல்லவும்... அவள் "அதெல்லாம் வேண்..." என்று சொல்லி முடிக்கவில்லை... "போறோம்.. அவ்ளோதான்..." என்று கட் செய்துவிட்டான்... "ஏனோ... அழுகை வருவதுபோல் இருக்க... அழுதபடியே தூங்கியும் போனாள்..." அவள் மனதின் ஆழத்தில் வெளியில் வர முடியாத படி மூழ்கிப்போனான் ஜான்தஷ்வந்த்...

ராஜ் தன் மனைவியிடம் ஜான், தனுவின் காதலை மறைத்து... தனுவைப் பற்றி மட்டும் சொல்ல... கொஞ்சம் அதிர்ச்சியானவர்..."என்னங்க சொல்றீங்க... அந்த பொண்ணு அநாதையா... என்னால நம்பவே முடியல... நேத்து கோவில்ல அந்த பொண்ணோட முகத்துல அப்படியோரு சந்தோஷம் இருந்துச்சி... ஆனால் அந்த சந்தோஷத்துக்கு பின்னாடி இப்படியோரு சோகமா..." என்று சொன்னவரிடம்... "இப்போ.. நீ எந்த முடிவும் எடுக்க வேண்டாம்... கொஞ்சம் டைம் எடுத்து சொல்லு... உன் முடிவு தான் என்னோட முடிவும்... நான் விசாரிச்ச வரைக்கும் அந்த பொண்ணு ரொம்ப தங்கமானப் பொண்ணும்மா... அவ்ளோதான் சொல்லிட்டேன்..." என்று சொல்லிவிட்டு ராஜ் தங்களின் அறைக்கு சென்றுவிட்டார்...

இங்கு நடந்தவைகளை பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த சரோ "அம்மா... யாரப்பத்தி அப்பா சொல்லிட்டுப் போறார்..." என்று கேட்க... "ம்ம்.. உங்க அண்ணனுக்கு ஒரு பொண்ண பார்க்கலாமேன்னு விசாரிக்க சொல்லியிருந்தேன்... அத பத்திதான் சொல்லிட்டு போறார்..." என்று சொன்னவரிடம்... "என்கிட்ட.. ஒருவார்த்தை சொல்லாம நீங்களே முடிவு பண்றீங்களோ... அதெல்லாம் எனக்கு தெரியாது... அண்ணனுக்கு பொண்ண நான் தான் செலக்ட் பண்ணுவேன்..." என்று சரோ சொல்ல... இதுவரை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை தன் அறையில் கதவின் ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஹேமாவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் அண்ணி தன்னை பற்றி தான் சொல்ல போகிறாள்... என ஆர்வமாக ஒட்டுக்கேட்டபடியே இருந்தாள்... ஆனால் சரோ கேட்டதோ "அந்த பொண்ணோட போட்டோ இருக்காமா... நீங்க பேசிட்டுருந்ததப் பார்த்தா ரொம்ப அழகுன்னு தெரியிது... அப்பா சொல்றபடி பார்த்தா நல்லவங்கன்னும்... தெரியுது... இருந்தாலும் ஒரு தடவ போட்டோ பார்த்துட்டா திருப்தியா.. இருக்கும்..." என்று சொல்ல...ஹேமாவுக்கு கோவம் தலைக்கேறியது மீண்டும் கதவை சுற்றிவிட்டு சரோவை சரமாரியாகதிட்டிக்கொண்டிருந்தாள்... சகந்தலா "இருடிமா... அவசரப்படாத.. நாங்க இன்னும் கன்ஃபார்ம் பண்ணல..." என்று சொல்லிவிட்டு சென்றவரை... "ஏன்மா.. பொண்ணு அநாதைங்கறதால யோசிக்கிறியா..." என்று சரோ கேட்க... ஒரு நிமிடம் நின்றவர்... "ஆமாம்..." என்று தலையாட்ட... "ஏன்மா...இன்னும் அத மறக்கலையா... எல்லாருமே ஒரே மாதிரி இருக்கமாட்டாங்கமா..." என்று சொன்னவளிடம்... "எனக்கும் தெரியும்... இருந்தாலும் ஒரு சின்ன பயம்..." என்று சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்றுவிட்டார்...

ஆபீஸில் ஜான் வேலைகள் அனைத்தையும் முடிக்க எட்டாகிவிட... வேகமாக வெளியே வந்தவன்... தன் வண்டியை ஸ்டார்ட் செய்து தனுவின் ஹாஸ்டலுக்கு சென்றான்... இறங்கி ஹாஸ்டலின் உள்ளே சென்று வார்டனிடம் "தனுஸ்ரீ அவங்ள பார்க்கனும்... கொஞ்சம் வர சொல்லமுடியுமா மேம்..." என்று கேட்க... "ம்ம்... நீங்க யாரு அவங்களுக்குன்னு சொன்னபிறகு தான்... அவங்ககிட்ட சொல்லி வர சொல்ல முடியும்... மிஸ்டர்..." என்று வார்டன் சொல்ல... "இப்பத்திக்கு சொல்லனும்னா... அவங்களோட லவ்வர்... இன்னும் கொஞ்ச நாள்ல எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம்... இப்போ கூப்பிடமுடியுமா... மேம்..." என்று சிரித்துக்கொண்டே கேட்டவனிடம்... "ம்ம்... ஓகே மிஸ்டர்..." என்று அவர் இழுக்க... "ஜான்... ஜான்தஷ்வந்த்..." என்று அவரிடம் சொன்னான்... தனுவின் மொபைல் எண்ணிற்கு அழைத்தவர்... அவள் எடுக்கவில்லை என்றதும்... பக்கத்து அறையில் உள்ள ஷீபாவுக்கு அழைத்து... விஷயத்தை சொல்ல... ஷீபா , தனுவின் அறை திறந்து இருக்கவும் உள்ளே சென்று பார்க்க... உறங்கிக்கொண்டிருந்தாள் தனு... எழுப்புவதற்கு முயற்சி செய்ய உடம்பெல்லாம் சூடாக இருந்தது... மெதுவாக அவளை எழுப்பி உட்காரவைத்து... "என்ன... தனு உடம்பு சரியில்லைனா... சொல்லமாட்டியா... சாப்டதும் டேப்ளட் தரேன் போட்டுட்டு ரெஸ்ட் எடு... அய்யோ... சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேன்... வார்டன்... உனக்கு கால் பண்ணாங்களாம்... நீ அட்டண்ட் பண்ணல... உன்ன பார்க்க விசிட்டர் வந்திருக்காங்களாம்... கீழ வர சொன்னாங்க..." என்று சொல்லிவிட்டு செல்ல... "என்னை பார்க்கவா..." என்று யோசித்தவள்... "அய்யோ.. தஷு வரேன்னு சொன்னாரே..." என்று வேகமாக எழ முயற்சி செய்தவள் முடியாமல் மெதுவாக கண்ணாடி முன்பு சென்று... விரித்துவிட்ட கூந்தலை அப்படியே முன்பக்கம் கொண்டுவந்து பின்னியவள்... சேலையை சரிசெய்துகொண்டு கீழே இறங்கி சென்றாள்...
 
Gayus

Writers Team
Tamil Novel Writer
#2
கீழே வந்தவளை நோட்டமிட்டவன்... "பேபிமா... கொல்றியேடி..' என்று மனதிற்குள் சொன்னவன்... அவளின் கண்களை பார்த்தவன் அதில் அதிக சோர்வு தெரிய... அவள் நடையிலும் வித்தியாசம் தெரிந்தது... "என்னாச்சி தனு..." என்று அவளின் நெற்றியில் கைவைக்க... சூடாக இருக்கவும்... "என்னடி.. இப்படி சுடுது... கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு..." என்று கோவமாக கேட்டவனிடம்... "ஒன்னும் இல்ல தஷு... நாளைக்கு சரியாகிடும்..." என்று சொன்னவளை முறைத்தவன்... நேராக வார்டனிடம் சென்று 2 ஹவர்ஸ் பர்மிஷன் கேட்க... "எதுக்கு மிஸ்டர் ஜான்..." என்று அவர் கேட்க... அவளின் நிலையை எடுத்து சொல்ல... "ஓகே... பட் ஓன்பதரை மணிக்குள் வந்துவிடுங்கள் ஜான்..." என்று சொன்னவரிடம்... "ம்ம்... ஓகே..." என்று சொல்லிவிட்டு தனுவிடம் சென்று "வா.. போகலாம்..." என்று சொல்ல.. "எங்க..." என்று அவள் கேட்க... "சொன்னாதான் வருவியா... ஹாஸ்பிட்டல் போறோம்..." என்று அவளின் கையை பிடித்து... நடந்துகொண்டே சொன்னான்... பைக்கில் இருவரும் சென்றுகொண்டிருக்க... ஜான் "தனு... நான் ஒன்னு கேட்பேன்.. உண்மையை சொல்லனும்...' என்று சொல்ல... அவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டே "ம்ம்.. கேளுங்க..." என்று சொல்ல... "நீ... எதுக்காக அழுத..." என்று கேட்க... அதிர்ச்சியானவள் "இவன்... என்ன அப்படியே நேரில் பார்த்தது போல் கேட்கிறான்... அய்யோ.. இப்போ என்ன சொல்லி சமாளிப்பது..." என்று மனதிற்குள் நினைத்தாள் தனு....


-தொடரும்.....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes