என் உயிர்க் காதலே-3

Archanadevi966

Writers Team
Tamil Novel Writer
#1
என் உயிர் காதலே - 3

நேற்று இரவு முழுவதும் தூங்காததால் இமைகள் கனக்க அதிகாலையில் தான் ஆரம்பித்தாள் சங்கமித்ரா.ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசதியாக போயிற்று

சிவநாதன் செய்தித்தாளில் உலகநடப்புகளை ஆராய்ந்துக் கொண்டி ருக்க பார்வதி காபி தயாரித்துக் கொண்டிருந்தார்,அப்பொழுது கொட்டாவி விட்டபடி

"அம்மா காபி" என்றபடி தன் தந்தையின் அருகில் அமர்ந்த சூர்யா

தன் தாய் கொடுத்த காபியை பருகியபடி ஹங்கமா வில் ஷின்சான் பார்த்துக்கொண்டிருந்தான்.

கடிகாரம் ஒன்பது மணியைக் காட்ட

தன் தந்தையையும் தாயையும் பார்த்தவன் எங்கே தன் அக்காவை காணோம் என்று யோசித்துக் கொண்டிருக்க

என்னங்க - பார்வதி

சொல்லு பார்வதி - சிவநாதன்

இல்ல மித்ரதான் எப்போதுமே நமக்கு முன்னாடி எழுந்திரிப்பா இன்னும் வரலேயே?

அதானே என தந்தையும் மகனும் கூற மூவரும் அவள் அறையை நோக்க அப்போதுதான் சொர்க்க வாசல் கதவு திறந்தது. உடனே பார்வதி அவளுக்காக காபி தயாரிக்க சென்றார்.தந்தையும் மகனும் தான் விட்ட வேலையைத் தொடர்ந்தனர்.

"குட் மார்னிங்" என்றபடி தன் தம்பியின் அருகே அமர்ந்தவள்

தன் தம்பி ஷின்சான் பார்த்து கொண்டிருக்க

"எப்போ பார்த்தாலும் ஷின்சான் கொஞ்சமாவது வளருடா என திட்டியபடி தன் தம்பி வாயை பிளந்தபடி பார்ப்பதை பொருட்படுத்தாமல் வேறு சேனலை மாற்றியிருந்தாள் அதில்

"சகாயனே சகாயனே

நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

சகாயனே சகாயனே

என்னை நீ ஏன் பறித்தாய்



உன் எண்ணங்கள் தாக்க

என் கண்ணங்கள் பூக்க

நீ வயதுக்கு வாசம் தந்தாய்"







என்ற பாடல் ஒலிக்க அதை அவள் ரசித்து கொண்டிருந்தாள்
அவள் அருகில் இருந்தவர்களோ ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பதுபோல் பார்த்தனர். ஏனெனில் காலையில் எழுந்ததும் தன் தந்தையை செய்தி கூட பார்க்க விடாமல் ஷின்சான் பார்பவள் அல்லவா அவள்.

தன் தாய் காபி கொண்டு வந்து கொடுக்க கையில் வாங்கி வைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க பார்வதி அவள் தலையில் கொட்டினாள்.

"ஒழுங்கா காபிய குடிடி" என திட்டிவிட்டு போனார்

அடுத்ததாக

"உன்ன இப்ப பாக்கனும்

ஒன்னு பேசனும்

என்ன கொட்டித் தீக்கனும்

அன்ப காட்டனும்"


என பாடல் ஒலிக்க

"அடுத்து நாம எப்போ மீட் பண்ணுவோம்"என்று அவன் கேட்டதும் தன் கூறிய பதிலும் நினைவில் வந்தது

"சே என்ன இது கண்டதும் காதலா இதெல்லாம் தப்பாச்சே"என அவள் தன் தலையில் குட்டி கொள்ள

"பின்னே இல்லையா" என அவள் பெண் மனம் கேட்டது.காபி குடித்து விட்டு தன் அறைக்குள் சென்றவள்

தன் மொபைலை எடுத்து பார்க்க யாரும் அழைக்கவில்லை என்று காட்ட குளித்து விட்டு வந்து உணவருந்தினர்.

சங்கமித்ராவை விட்டுவிட்டு வந்த பிரகாஷ் விடியற்காலையில் தான் உறங்கினான்..

காலையில் காபி குடித்து கொண்டிருந்தவனுக்கு அலைபேசியில் யாரோ அழைக்க

"ஹலோ" - பிரகாஷ்

"சார் நான்தான் மேனேஜர் விக்ரம் பேசறேன்"

"சொல்லுங்க விக்ரம் என்ன விஷயம்"என பிரகாஷ் கேட்க

"சார் அது வந்து இங்க ராவ் மெட்டிரியல்ஸ் தீர்ந்து போச்சு சார். ஆறு மாசத்துக்குள்ள கஸ்டமர் க்கு இந்த புல்டிங் கம்ப்லீட் பண்ணி சாவி கையில தரணும் சார் அதான்" என கூற

"எவ்ளோ அலட்சியமா இப்போ அதுவும் இந்த ஷார்ட் timeல் சொல்றிங்க முன்னாடியே சொல்றத்துக்கு என்ன அதுக்குத்தானே உங்களுக்கு மேனேஜர் போஸ்டிங் குடுத்திருக்கு" என பிரகாஷ் கோபத்துடன் கேட்க

"சாரி சார் இந்த ஒரு தடவை மட்டும் எக்ஸ்க்யூஸ் பண்ணுங்க சார் பிளிஸ்" என கேட்க

சரி இந்த ஒரு தடவை மட்டும்தான் அடுத்த தடவை இதே மாதிரி ஏதாவது சொன்னா உங்க மேனேஜர் போஸ்டுக்கு நான் காரண்ட்டி இல்லை மிஸ்டர் விக்ரம்" என்றபடி அழைப்பை துண்டடித்வ்ன் குளித்து விட்டு கிளம்பியவன் தன் தாய் தந்தையிடம் விபரத்தை கூறிவிட்டு கிளம்பினான்.

எப்போதுமே ஒரு ஆர்டருக்கான ராவ் மெட்டிரியல்சை ஒரு வருடத்திற்கு முன்பே தேவையான அளவு ஆர்டர் செய்து விடுவார்கள்.
இந்த முறை சரியான அளவு ராவ் மெட்டிரியால்ஸ் ஆர்டர் கொடுக்கவில்லை அதுதான் பிரச்சனை.

எனவே பர்மா, இங்கிலாந்தில் ராவ் மெட்டிரியல்ஸ் ஆர்டர் கொடுத்து அதிக பணமும் செலவழித்து ஓர் வாரத்தில் ராவ் மெட்டெரியல்ஸ யை வரச் செய்தான்.அங்கே புல்டிங்கிற்கு சென்றடைந்தவன்
வேலையும் மெதுவாக நடைபெறுவது போல் தோன்ற

தினமும் பில்டிங்க்கிற்கு வந்து போவான்
வேலையும் துரிதமாக நடைபெற்றது.
புல்டிங் முடிந்தவுடன் சரி பார்த்து விட்டு திருப்தி அடைந்தவன்
தன் கம்பெனி மேனேஜெரிடம் சாவியை நாளை கஸ்டமரிடம் நல்ல நேரம் பார்த்து சாவியை ஒப்படைக்குமாறு கூறி விட்டு சென்றான்



கல்லூரிப் பேருந்தில் சென்று கொண்டிருந்த சங்கமித்ரா,போகும்போதும் வரும்போதும் அவள் கண்கள் தன் எண்ணம் நிறைந்தவனை தேட எப்போதும் போல் ஏமாற்றமும் கவலையும் மட்டுமே மிஞ்சியது.

இது எதையும் அறியாத பிரகாஷ் ஆறுமாதமாக வேலை வேலை என அலைந்தவன் தன் வீட்டிற்கு வந்ததும் உறங்க சென்று விட்டான்.உணவும் அவனது அறைக்கே சென்றுவிட்டது.

எப்போதும் சங்கமித்ரா இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது ஆனால் இந்த ஆறு மாதத்தில் கல்லூரியிலும் சரி வீட்டிலும் சரி அமைதியையே கடைபிடித்தாள்
அவள் நண்பர்கள் ஏதேனும் பேசி அவளை வம்பிழுப்பார்கள் அவர்கள் முயற்சி அவளுக்கு புரிந்தாலும் ஏனோ அவள் தன் கூட்டை விட்டு வெளியே வர முயலவில்லை
வீட்டிலோ சூர்யா தன் அக்காவின் நிலையை பார்த்தவன் அவளிடம் வம்பிழுக்க வேண்டாம் என்று அவனே அவளுக்காக பாட்டு சேனல் யை மாற்றினான்

நேரம் காலம் தெரியாமல்

"எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதை தவணை முறையில்

நேசிக்கிறேன்"

என பாட துவங்க

கண்ணீருடன் அப்பாடலை வெறித்தாள்

ஏனடா இதைப் போட்டோம் என்னதான்

ஆச்சு என சூர்யா யோசித்து நொந்து

போனான் மேலும் சங்க்மித்ரா அழுது

பார்த்ததே இல்லை எனவே தன்

அக்காவை கவலையுடன் நோக்கினான்.
 

Advertisement

New Episodes