என் உயிர்க் காதலே-2

Advertisement

Archanadevi966

Writers Team
Tamil Novel Writer
என் உயிர்க்காதலே-2

கல்லூரி விழாவிற்கு பிறகு இரு நாட்கள் விடுமுறை விட்டிருந்தனர்.
இறுதி வருடம் என்பதால் ப்ரொஜக்ட் இல் தன் கவனத்தை திசை திருப்ப முயன்று அதில் வெற்றி பெற்றாள் சங்கமித்ரா.
நாட்கள் இறக்கை கட்டி கொண்டு பறந்தது.

இப்போது இறுதிவருட முடிவில் கல்லூரி காம்பசில் தேர்வாக தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தாள்.

அன்று ஓர் கார்பொரேட் நிறுவனத்தின் நேர்முகத்தேர்வு அவர்கள் கல்லூரியில் நடைபெற்று கொண்டிருந்தது எனவே கல்லூரி நேரத்திற்கு முன்கூட்டியே தனக்காக காத்திருந்த தன் தோழி தன்யாவையும் Lஅழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.


சிக்னலில் தன் தோழியுடன் அரட்டயடித்தபடி நின்றிருந்தவள் பக்கத்தில் நின்றிருந்த காரின் கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து கொண்டவள் லிப் கிளாஸ் எடுத்து தன் உதட்டிற்கு பூசினாள். பின் தன் முடியை சரி செய்துக் கொண்டிருந்தாள்

.பின் தன் தோற்றத்தில் திருப்தி அடைந்தவளாக ஓர் பறக்கும் முத்தத்தை தன் தோற்றத்திற்கு தந்தாள்.காரின் உள்ளே இருந்தவனின் நிலையோ சொல்லவே வேண்டாம் மூச்சடைத்துப் போயிருந்தான்.

பிரகாஷ் எப்போதும் போல் அலுவலகத்திற்கு தன் காரில் சென்று கொண்டிருந்த போது சிக்னலில் நின்றிருந்த்துக் கொண்டு தன் கார் கண்ணாடியில் தலைமுடியை சரி செய்து கொண்டிருக்க கோபடைந்தவன் கார் கண்ணாடியை திறந்து திட்டலாம் என நினைத்தவன்அப்போதுதான் அவள் முகத்தை கண்டான்

இது அவளல்லவா என முதலில் திகைத்தவன் அடுத்து என்ன செய்ய போகிறாள் என பார்க்க அவள் பறக்கும் முத்தத்தை தர அதை எதிர்பாராதிருந்தவன் பேச்சு மூச்சற்று போயிருந்தான்.
அக்காரின் உள்ளே இருந்து பார்ப்போருக்கு வெளியே இருப்போரை பார்க்க இயலும் ஆனால் வெளியே இருப்பவரால் உள்ளே இருப்போரை காண இயலாது எனவே சங்கமித்ராவிற்கு அவன் என்று தெரியவில்லை.

ஹலோ ஹலோ என கத்தும் சத்தம் கேட்க அதில் கலைந்த பிரகாஷ்

டேய் மச்சான் சொல்லுடா என கூற

என்னடா பண்ற பட்டபகல்லயே நான் லைன்ல இருக்கறது கூட மறந்துட்டு ட்ரீம்சா டா-விமல்

சே சே அதெல்லாம் இல்லடா மச்சான் -பிரகாஷ்

மச்சான் நம்ம முரட்டு சிங்கில்ஸ் டா அதை ஞாபகம் வச்சுக்கோ-விமல்

நம்மளா ஆஆ என பிரகாஷ் இழுக்க

டேய்ய்ய் மச்சான் யாருடா அது -விமல்
சொன்னால் தன் நண்பன் தன்னை போதும் போதும் எனும் அளவிற்கு கேலி செய்வான்
என்பதறிந்தவன்

டேய் மச்சான் ஹலோவ்வ் சிக்னல் கிடைக்கல டா அப்புறம் கூப்பிடறேன்
பை என்றபடி கை பேசியை அணைத்தான்.

அந்தநேரம் பார்த்து காரில் fm ல்

எங்கிருந்தாய் நான் மண்ணில்

பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான் கொஞ்சம்

வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி

எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய்

வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என்

உயிரெல்லாம் சத்தம்

அடி எனக்காக நீயும் வந்தாய்

என்ற பாடல் ஒலிக்க

சற்று முன் நிகழ்த்தவற்றை நினைத்தவன் தானும் அப்பாடலோடு இணைந்து அவளை நினைத்து

எங்கிருந்தாய் நான் மண்ணில்

பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான் கொஞ்சம்

வளர்ந்திடும்போது

பாடினான்.
அவள் பெயரென்ன என யோசித்தவன் ஹா சங்கமித்ரா தான் மித்து பாப்பா
என அழைத்து பார்த்து கொண்டான்.

ஒருவாறாக அலுவலகம் சென்றடைந்தவன் அலுவலக பணிகளில் மூழ்கினான்

சங்கமித்ரா கல்லூரியை அடைந்தவள் தன் முறைக்காக காத்திருந்தாள். பின் அவள் முறை வரும்போது உள்சென்றவள் அவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தாள். அவளின் பதிலில் திருப்தி அடைந்தவர்கள்
சம்பளம் பற்றி கூறினார்

பின் 5வருடங்கள் வேலையை விட்டு விலகாமல் இருக்க ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என கூறினர் சிறிது யோசித்தவள் தன் பெற்றோரிடம் கேட்டு சொல்வதாக கூறிவிட்டு அனுமதி கேட்டு கிளம்பினாள்.

வெளியே வந்தவள் தன் தோழிகளிடம் செல்ல

ஹே என்ன ஆச்சுடி மித்ரா என கேட்க

இல்லப்பா 5வருடம் ஒப்பந்தம் கையெழுத்து போடணும் னு சொன்னாங்க வீட்ல
கேட்டுட்டு சொல்ரேன்னு சொல்லிருக்கேன்-சங்கமித்ரா.

அந்நேரம் பார்த்து அவள் தோழி தன்யா

ஹே மித்து வந்துட்டயா
பயங்கரமா பசிக்குது வாடி கேன்டீன்க்கு போகலாம்

அனைவரும் சிரிப்புடன் நோக்க

தினிமூட்டை நீயெல்லாம் திருந்தவே மாட்டாயா டி -சங்கமித்ரா

மித்து நம்ம கேன்டீன் ல பிரியாணி வாசம் வா வா னு கூப்பிடுத்து டி என கூற

என்னது பிரியாணியாஆஆஆ

என அனைவரும் கோரசாக கூற

ஆமா பிரியாணியா

இன்டெர்வியூவா நீங்களே முடிவு பண்ணிகோங்க நீ வாடி போகலாம் என சங்கமித்ரா வை அழைத்தாள்

தன் தோழியுடன் சென்று உண்டுவிட்டு வந்தவள்

நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பிக்க

ஹே நம்ம காங் ல யாரெல்லாம் லவ் மேரேஜ் கை தூக்குங்க பாக்கலாம் என அவள்
தோழன் பாரதி கேட்க

அதில் சில பேர் கை தூக்க

சங்க்மித்ராவின் மனதில் அவன் உருவம் நீண்ட நாட்களுக்கு பிறகு நினைவிற்கு வந்தது

என்ன மித்ரா அரேஞ்டு மேரேஜா என கேட்க

தெரியவில்லை என கூற

அந்நேரம் பார்த்து தன் அன்னையிடம் இருந்த அழைப்பு வந்தது
மணி ஆறு மணி ஆகியிருந்தது.நேரம் போனதே தெரியாமல் நண்பர்களுடன் அரட்டை யில் ஈடுபட்டிருந்தவள் தன் அன்னை கிளம்பி வருமாறு திட்டுவாங்கிக் கொண்டு நண்பர்களிடம் கூறி கொண்டு கிளம்பினாள்.தன்யா வும் அவளுடன் சென்றாள்

சங்கமித்ரா வின் வண்டி நடுவழியில் மக்கர் செய்ய அந்நேரம் பார்த்து மழை பலமாக பிடித்துக்கொள்ள ஓர் ஓரமாக தன் தோழியுடன் ஓதுங்கியவள் தன் தந்தைக்கு போன் செய்ய கை பேசியை எடுக்க அவர்களை உரசியவாறு ஓர் கார் வந்து நின்றது.

யாரென அவள் நோக்க காரின் கண்ணாடியை திறந்தவுடன் இவன் அவனல்லவா (பிரகாஷ்)என திகைத்தாள்.

ஹாய் ஏதும் ப்ராப்ளமா நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் உங்க வீட்ல ட்ராப் பண்ண வா என பிரகாஷ் கேட்க

இல்லை பரவாயில்லை நாங்க போயிக்கிறோம் தாங்கஸ் என சங்கமித்ரா கூற

ரொம்ப மழையா இருக்கு அதான் என கூற

யோசித்தவாறு தன் தோழியை நோக்கியவள்
ரொம்ப யோசிக்காதடி ஆபத்துக்கு பாவமில்லை என தன்யா கூற

இருவரும் பின் சீட்டில் அமர்ந்துக்கொண்டனர்
சென்றுக்கொண்டிருக்கும்போது
தான்யா அவனுடன் வளவளத்து கொண்டே வர

மீண்டும் தான்யா ஆச்சரியம் குறையாதவளாய்

சார் என்னால நம்பவே முடியவில்லை எவ்ளோ பெரிய ஆள் நீங்க எங்களுக்கு லிப்ட் குடுக்குறிங்க என கேட்க

இதில என்னங்க இருக்கு எல்லாம் ஒரு மனிதாபிமானம் தான் என பிரகாஷ் கூற

சங்கமித்ராவின் பார்வையோ வெறும் மனிதாபிமானம் தானா என்று கேட்க
தன் காரின் முன் கண்ணாடியில் அவள் செய்கைகளை கவனித்து கொண்டிருந்தவன்

இவ மனசில என்ன இருக்கு என

நினைத்தவன்

என்னங்க நீங்க பேசிட்டே வரிங்க உங்க பிரண்ட் பேசமடந்தையா
என பிரகாஷ் கேட்க

அந்த பேசாமடந்தை எங்கே என்பதுபோல் தான்யா தேட

மித்ராவோ அவனை முறைத்து உதட்டை சுளிக்க

அப்போது பார்த்து fm ல் நேரம்காலம் தெரியாமல்

இதழை சுளிக்காதே

இயங்காமல் போவேன்

இடையை வளைக்கதே இடிந்தே

நான் சாய்வேன்

அடியே சிரிக்காதே இன்றே

உடைவேன்

ஐயோ நெளியாதே அழுதே

விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே

உயிரை நீ வெளியேற்றினாய்

என பாடி வைக்க

அவன் பார்வையில் முகம் சிவந்தவள் கண்ணாடி வழியே திரும்பி கொண்டாள்

தான்யாவை அவள் வீட்டில் இறங்கும் இடம் வர

பை டி மித்து வீட்டுக்கு ரீச் ஆகிட்டு கால் பண்ணு என கூறி கொண்டு கிளம்பினாள்

பிரகாஷ் சங்கமித்ராவிடம்

ஏங்க உங்க வீடு எங்க இருக்கு என கேட்க
வழியை கூறிவிட்டு கண்மூடியவாறு அமர்ந்திருந்தவளை கண்டவன்
இந்த ஏரியா க்கு காலேஜ் பஸ் இல்லையா- பிரகாஷ்

காலேஜ் பஸ் எல்லாம் இருக்குங்க இன்னைக்கு கேம்பஸ் இன்டெர்வியூ அதான் சீக்கிரமே ஸ்கூட்டி ல போய்ட்டேன் என கூற

ஒஹ் அப்படியா செலக்ட் அகிட்டீங்களா -பிரகாஷ்
செலக்ட் அகிட்டேன் ஆனா 5வருஷம் பாண்ட் போட்டாங்க சோ வேணாம் னு விட்டுட்டேன்
(நல்ல வேலை நாம தப்பிச்சோம் என நினைத்தவன் )

பரவாயில்லை விடுங்க அடுத்த இன்டெர்வியூ ல் பார்த்துக்கலாம் என கூற
ம்- சங்கமித்ரா
அப்பறம் மித்து பா என அரம்பித்தவன் அவளது அகன்ற விழிகளை கண்டு சாரி மித்ரா
உங்க சொந்த ஊர் கோயம்புத்தூரா -பிரகாஷ்

ம் ஆமா உங்களுக்கு -சங்கமித்ரா

எனக்கும் இதே ஊர்த்தாங்க உங்க குடும்பம்?- பிரகாஷ்

அப்பா சீனியர் என்ஜினீயரா ஒரு mnc கம்பெனில வேலை பாக்கிறார்
தம்பி சூர்யா பண்னிரண்டாம் வகுப்பு படிக்கிறா அம்மா housewife நான் mba பண்ணிட்டு இருக்கேன் என கூற

சூப்பர் ங்க என்று புன்னகைத்தான்

உங்க பேமிலி?- சங்கமித்ரா
என் பேமிலி என் அப்பா அருணாச்சலம் அம்மா மீனாட்சி தங்கச்சி சஹானா பத்தாம் வகுப்பு படிக்கிறா நான் பாரின் ல mba முடிச்சுட்டு எங்க அப்பா பிசினஸ் ah நிர்வாகம்ல பண்ண ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன் என கூற

அதற்குள் அவள் வீட்டுக்கு பக்கத்தில் வந்துவிட

ஓகேங்க தாங்கயூ என
கூறிவிட்டு இறங்கி செல்ல

ஏங்க என பிரகாஷ் கூப்பிட

சங்கமித்ரா திரும்பி பார்க்க

இனி எப்போ மீட் பண்ணுவோம் - பிரகாஷ்

தெரியல என உதட்டைபிதுக்கி சைகையால் கூறிவிட்டு செல்ல முயல

பதில் சொல்லாம போனால் என்ன அர்த்தம்? என அவன் கத்த

தெரியலனு அர்த்தம் என அவள் மயக்கும் புன்னகையுடன் கூறிவிட்டு செல்ல

தன் வீட்டிற்குள் செல்லும் முன் தன்னை பார்ப்பாளா என அவன் நோக்க
அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவள் திரும்பி பார்க்க ஓர் பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு அவன் செல்ல
அதை எதிர்பாராதவள் முகம் சிவக்க வீட்டிற்குள் ஓடினாள்.

இருவருக்குமே அன்று உறங்கா இரவாகியது

பிரகாஷ் மந்தகாச புன்னகையுடன் தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்க அவன் காரில்
உண்மை சொன்னால்

நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

உண்மை சொன்னால்

நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா

பெண்கள் மேலே மையல்

உண்டு

நான் பித்தம் கொண்டது

உன்னில் மட்டும்

நீ முத்த பார்வை பார்க்கும் போது

என் முதுகு தண்டில் மின்னல்

வெட்டும்

வீசாதே மழை மேகம் எனக்கு

என் ஹார்மோன் நதியில்

வெள்ளப்பெருக்கு

வா சோகம் இனி நமக்கெதுக்கு

யார் கேக்க நமக்கு நாமே

வாழ்வதற்கு

என பாடல் ஒலித்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top