என் இதய விழி நீயே - Episode 4

Advertisement

achuma

Well-Known Member
Hi friends,
Hope you all safe..

please find the 4th episode.
I am welcoming your comments..
STAY SAFE, TAKE GOOD CARE..



என் இதய விழி நீயே

அபி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து வெளி காட்சிகளை வேடிக்கை பார்த்தபடி வந்தாள்... அபி அவள் பெற்றோருடன் ரயிலில் வரும்போது எல்லாம் ஜன்னல் அருகில் அமர்வது பிடித்தமான ஒன்று , அவளின் இனிமை காலங்களை அபி நினைத்து பார்த்தபடி வந்தாள் .

"இனி வாழ்க்கைல அந்த கடந்த காலம் போல் நமக்கு நிம்மதினு வருமா?" அவளுக்கு அவளே ஒரு கேள்வி கேட்டுக் கொண்டு வந்தாள் ...

பெங்களூரு ரயில் நிலையத்தில் அர்ஜுன் , அபிக்காக காத்துக்கொண்டிருந்தான் . இரவு 10 மணி ஆகிற்று அபி வந்து சேர்வதற்கு ...

"என்ன மேடம், வி ஐ பி இவ்ளோ நேரம் கழிச்சா வரது ," என்று கேட்டான் அர்ஜுன்.

"நேரம் கழிச்சி வந்தா தான் வி ஐ பி அர்ஜுன் மாமா . வந்ததும் இப்டி கலாய்க்கிறீங்க , டூ பேட் , மாமா, ஸ்ரீ அக்கா, அதி, ஆரவ் எல்லாரும் எப்படி இருக்காங்க.?" என்று கேட்டாள் ...

"நிச்சயம் நல்லபடியா முடிஞ்சிதா ?" என்று பட படவென கேள்விகளை அடுக்கினாள் .

"ஹே ! வெயிட் வெயிட் "

இங்க இவ்ளோ பேசுற , அன்னிக்கி உன் வீட்டுக்கு வந்தா வாயே தொரக்கல , ஹ்ம்ம் ! என்று கேட்டான் .

உடனே அபியின் முகம் மாறிற்று ...

"ஹே சும்மா தான் கிண்டலுக்கு சொன்னேன்" , என்று அபியின் வருத்தம் பொறுக்காது அர்ஜுன் சமாதானம் கூறினான் ...

"எங்க அர்ஜுன் மாமா , நான் அங்க பேச உக்காந்துட்டா உங்களுக்கும் மாமாக்கும் சரியான வரவேற்பு கிடைத்து இருக்காது . எனக்காக நீங்க, அது எல்லாம் தாங்கணும் அவசியம் இல்ல மாமா ...
எனக்காக வந்து இருக்கீங்க ...
அங்க நான் தான பாத்து ஆகணும் , என்று கூறி அபி விளக்கம் கொடுத்தாள் ...

சரி வா என்று இருவரும் மண்டபம் நோக்கி சென்றனர் ...
அபி பெங்களூரின் இரவு அழகினை ரசித்துக் கொண்டு வந்தாள் ...

அபியினை கண்டதும் ஸ்ரீ ஓடி சென்று அணைத்துக் கொண்டாள் ...
" அக்கா எப்படி இருக்கீங்க?" குட்டி தூங்கிட்டானா என்று கேட்டாள் ...

சிவநேசனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு ஸ்ரீ அபியை உணவு உண்ண அழைத்து சென்றாள் ...
அணைத்து உணவு வகைகளையும் அபி ரசித்து உண்டாள் ...

அவள் வீட்டினில் ஏதோ ஒரு பலகார வகைகள் விடுமுறை நாட்களில் அபி செய்வது உண்டு ...
ஆனால் அவள் பெரியன்னை மற்றும் அணு தினேஷ் மட்டும் உண்பதற்கு ...
அபி சிறிது பூசினார் போல் உள்ளதால் லீலா ஏதேனும் அபி ஆசையாக உண்டால், " ஹ்ம்ம்

இப்போவே குண்டா இருக்க , எண்ணெய் பலகாரம் எல்லாம் நீ சேத்துக்காத , உன் அக்கா பாத்து கத்துக்கோ , உடம்ப எப்படி வச்சிக்கணும்னுட்டு , என்று குறை கூறுவார் ...

அபி எப்பொழுதும் எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவளின் தாழ்வு
மனப்பான்மையே...

லீலாவால் சிறப்பாக அபிக்கு ஒரு குணம் உருவாக்க பட்டதென்றால் இத்தாழ்வு மனப்பான்மையே ...
"நம்ப அக்கா மாதிரி நிறம் இல்ல தான, நமக்கு இந்த லைட் கலர் டிரஸ் தான் செட் ஆகும் ..." என்று அவளுக்கு அவளே கேள்வியும் கேட்டுக்கொண்டு முடிவெடுப்பாள் ...

அபியின் கல்லூரி தோழிகள் அபிக்கு எவ்வளவு எடுத்து கூறினாலும் , அவளின் இக்குணத்தினில் இருந்து வெளி வர இயலவில்லை ...
ஸ்ரீ , "அபி இன்னும் கொஞ்சம் இந்த ஸ்வீட் சாப்பிடு , உனக்கு பிடிக்கும் தான ? "என்றதற்கு "வேணா கா (அக்கா )"
"நான் வெயிட் போட்ருவனோ பயமா இருக்கு, இன்றைக்கு நிறைய சாப்டேன் ," என்றாள் ...
ஹே நீ குண்டு எல்லாம் ஒன்னும் இல்ல ...
தேவி அத்தை இருக்கும்போது கொஞ்சம் பூசின மாதிரி இருந்த , இப்போ நீ வீக்கா இருக்கனு யாரை கேட்டாலும் சொல்வாங்க... "

அதற்குள் அர்ஜுன் "அபியை பாத்தீங்களா அப்பா .
அப்டியே சோர்ந்து போய் இருக்கா "...
தேவி அத்தைக்கு ஏதோ நம்ப பெரிய தப்பு செய்றுமோ தோணுது ...
நீங்க மூணு வருடம் முன்னயே அபி இனி எங்க பொறுப்புன்னு சொல்லி இங்க அழைத்து வந்து இருக்கணும் பா," என்று வருத்தத்துடன் கூறினான் அர்ஜுன்...
அவங்க வீட்ல அபியை சரியாய் பத்துக்குற மாதிரி தெரில...

அர்ஜுன் ! "நீ சொல்றது நடை முறைக்கு ஒத்துவராது பா"...
"அபி மேல நமக்கு அக்கறை இருந்தாலும், சொந்த பந்தங்களுக்கு முன்னாடி நம்மளால எதுவும் செய்ய முடியாது பா ..."

வயசு பொண்ண எப்படி இன்னொருத்தங்க வீட்டுக்கு அனுப்ப முடியும்னு , லீலா பூரணி கேட்கும் போதே சொல்லிட்டாங்க பா ...
அதுவும் இல்லாம அபி அந்த வீட்டு வாரிசு ...
அந்த வீட்ல அபிக்கும் பங்கு இருக்கு ...

பூரணிக்கு மனசு கேட்கல , அதான் , நாங்க அப்பப்போ சென்னை போயிட்டு அபியை பார்த்து வந்துட்டு இருந்தோம்...
இந்த ஒரு வருஷமா தான் என்னால போக முடில ...
அதான் இந்த கல்யாணத்துக்கு அபி கண்டிப்பா வரணும்னு, நான் நேர்ல போயிட்டு அவங்க வீட்டு பெரியவங்கள கேட்டுட்டு வந்தேன் ...
ஆனா ஒன்று மட்டும் உறுதி
அபி எதிர்காலம் லீலா முடிவுல விடமாட்டேன் அர்ஜுன்" என்று கூறினார்...
அபிக்கு சிறப்பான எதிர்காலம் கண்டிப்பா உருவாக்கி கொடுக்கனும் அர்ஜுன் , என்று கூறினார் சிவநேசன் ...

அபி, ஸ்ரீ மற்றும் ஸ்ரீயின் குழந்தை, திவ்யா நால்வரும் ஒரு அறையில் தங்கினார்..


ஸ்ரீ, அபி மற்றும் திவ்யா இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் ...
திவ்யா" எனக்கு ஆதி காலேஜ் டேஸ்ல இருந்து உங்க பேமிலி தெரியும், ஆனா இவங்கள இது வரைக்கும் பார்த்த தில்லையே ? ரொம்ப கிளோஸ்ன்னு வேற சொல்றீங்க ? " என்று ஸ்ரீயிடம் கேட்டாள் ...

இந்த கேள்வியை நீ அபியை தான் கேட்கணும் , ஹோசூர்க்கு பூரணி அத்தையும், தேவி அத்தையும் அவங்க அவங்க பசங்கள அழைச்சிட்டு வந்துடுவாங்க ...
நிஷா எப்பவுமே அந்த விடுமுறை நேரத்துல அவங்க பாட்டி வீட்டுக்கு போய்டுவா ...
நான், அபி, அர்ஜுன், ஆதி ஒன்னா தான் விளையாடுவோம் ... நல்லா ஊரு சுத்துவோம் ...
இவ தான் திடீர்னு வரது இல்ல ...
அர்ஜுன் படிக்குற காலத்திலேயே அவங்க அப்பா பிசினஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு , ஆதி ஸ்டடிஸ்ன்னு யூ எஸ் போய்ட்டான் .


நான் தான் விடுமுறைல பொழுது போகாம நேரத்தை ஓட்ட வேண்டியதா போய்டுச்சு , என்று புலம்பினாள் ஸ்ரீ.
அபி என்ன என்று கூறுவாள் , பிரேமா வர வேண்டாம் என்று கூறிய காரணத்தை கூறவா முடியும், என்று அபி அந்த நாட்களுக்கு சென்றாள் ...


எப்பொழுதும் விடுமுறை தினங்களில் தேவி மற்றும் பூரணி ஒன்றாக வருவார்கள் ...
குழந்தைகள் அனைவரும் தேவியின் அன்னை வீடு அல்லது பூரணியின் அன்னை வீடு என்று நேரம் கழிப்பர் ...

பூரணி வந்தால் பிரேமா ஏனோ நிஷா அவள் பாட்டி வீட்டுக்கு சென்றாலும் பிரேமா அவள் அன்னை வீட்டுக்கு செல்ல மாட்டாள் ...

தேவிக்கு பிரேமாவின் ஏளன பார்வை தெரிந்தாலும் பூரணிகாக பொறுத்து போவாள் ...

பூரணி அண்ணிகளுடன் நேரம் கழித்தாலும் தேவியின் வீடே கதி என்று இருப்பது, ப்ரேமாவால் பொறுத்து போக இயலவில்லை ...

ஒரு நாள் அபி அர்ஜுன் அதி மற்றும் ஸ்ரீயுடன் பூங்காவிற்கு சென்று திரும்பும் சமயம், பிரேமா அபியை அழைத்தாள் ...

என்ன ஆண்ட்டி ? அபி கேட்க, பிரேமா திட்ட ஆரம்பித்தாள்.

"ஹே! தேவி தான் பூர்ணிய கைல வச்சி இருக்கானா நீ அதுக்கும் மேலயும் இருப்ப போலயே ."

"சும்மா சும்மா இங்க வராத , எங்க வீடு குழந்தைங்களோட விளையாட ஒரு தகுதி இருக்கு ..."

இந்த வார்த்தைகள் கேட்ட பின்பு அபிக்கு மிகவும் வலித்தது.

அப்பொழுது அபிக்கு புரிந்தும் புரியாத வயது ...

அர்ஜுன் ஆதி ஸ்ரீ யாரும் அபியிடம் எந்த பாகுபாடும் இன்றி பழகுவர்.

அதிலும் அனைவரிலும் அபி சிறிய பெண் என்பதாலும் , பூரணியின் பிரியத்திற்கு உரியவள் என்பதாலும் , அபி அனைவரிடத்திலும் செல்லம் ...

இது எதுவும் பிரேமாவிற்கு பிடிக்காது ...

நம்ப தகுதிக்கு இவர்கள் நிகர் அல்ல என்னும் எண்ணம் உள்ளவள் ...

ஆகையால் சிறு பெண் என்றும் பாராமல் விஷ வார்த்தைகளால் அபியின் மனதை பிரேமா காயப்படுத்தினாள் ...

அதன் பிறகு அபி தேவி பூரணியின் நட்பில் தன்னால் கலங்கம் தேவை இல்லை என்று கருதி , ஊருக்கு வருவது குறைத்து கொண்டாள்.

பாட்டி வீட்டுக்கு வந்தா , இவங்களோட நேரம் கழிக்காம இருக்க முடியாது,
இவங்க எங்கயாவது ஊரு சுற்ற அழைத்தாலும் தவிர்க்க முடியாது , என்று யோசித்தாள்.

அதன் பிறகு வரும் விடுமுறைகளில் , அபி கம்ப்யூட்டர் கோர்ஸ் , சேர்ந்து கொண்டாள் ...

தேவி மட்டும் ஊருக்கு சென்று வந்தாள் ...
சிறிது காலத்தில் அவர் அவர் வேலை, பிள்ளைகளின் மேல் படிப்பு என்று தேவியும் பூரணியும் வரும் வாய்ப்பு குறைந்து போயிற்று ...

நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் , ஊருக்கு கிளம்பிடனும் ...
நம்ப பிரேமா ஆண்ட்டி கண்ல மட்டும் படவே கூடாது , என்று இறைவனுக்கு அவசர வேண்டுதல் ஒன்று வைத்தாள் அபி.

"ஹே அபி ! என்ன யோசிக்கிற ?"

ஒன்னும் இல்ல கா , "எனக்கு கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணனும் ஆசை அதான் , லீவ்ல அதுல சேர்ந்துட்டேன் ...

அப்டியே பொழுது போய்டுச்சு , இங்க வர முடில , அம்மாவும் இங்க வரது குறைந்து விட்டது , தாத்தா பாட்டியும் இல்ல ...
இங்க வர வாய்ப்பும் குறைந்தது ...

பூரணி அத்தை அம்மாவுக்கு லெட்டர் போடும் போது எல்லாம் நானும் உங்க எல்லார் பற்றியும் கேட்டு தெரிஞ்சுக்குவேன் ...

போன் இருந்தாலும் லெட்டர் போல வராதுனு அம்மாவும் பூரணி அத்தையும் லெட்டர் எழுதுறது தான் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

"வாசிப்பு என்பது இனிமையான ஒன்று சொல்வாங்க"...
உங்க எல்லாரையும் நானும் கேட்பேன் தெரியுமா," என்று கூறினாலள் அபி.திவ்யாவிற்கு அபியின் இனிமையினா பழகும் குணம் மிகவும் பிடித்து போயிற்று...

அதன் பிறகு மூவரும் விடியும் வரை பேசினர் ...

அபிக்கு அசதி இருந்தாலும், பிறகு சந்திக்க இயலாது என்று அவர்களுடன் நேரம் கழித்தாள் ...

அனைவரும் எதிர்பார்த்த திருமண நாளும் இனிதே விடிந்தது ...

"மாங்கல்யம் தந்துனா நேநா"
என்று ஐயர் மங்கள வாக்கியம் முழக்க , தேவர்களின் ஆசியுடன் , பெரியவர்களின் வாழ்த்துடன் "ஆதி அபியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் "....

ஆதி அபி திருமணம் இனிதே நிறைவடைந்தது ...

அபி இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை என்ன நடந்து என்று கண்களில் நீருடன் நினைத்து கொண்டிருந்தாள்...
 

banumathi jayaraman

Well-Known Member
அபியை ஆதி கல்யாணம் செஞ்சுக்கிட்டானா?
சூப்பர்
திடீர்னு எப்படி பெண் மாறியது?
நிஷா என்ன ஆனாள்?
பிரேமாவின் எண்ணத்தில் மண் விழுந்ததா?
அபியின் திருமணம் தெரிந்து லீலாவதியும் பிரேமாவும் என்ன செய்யப் போறாங்க?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top