என் இதய விழி நீயே-Episode 14

Advertisement

achuma

Well-Known Member
என் இதய விழி நீயே
அபி ஆதியுடன் மிகவும் ஒருவித பதற்றமும், அவஸ்த்தையுடனும் அவனின் பிடியில் அமர்ந்திருந்தாள் , அதற்கு நேர் மாறாக , அவன் மனதிற்கினியவளின் நெருக்கத்தினை நொடியும் தவறாமல் ரசித்து அமர்ந்து வந்தான் ...

"அர்ஜுன் , டேய் ஆதி நல்லா வாழற டா," என்று அவனின் தந்தை இருப்பதையும் மறந்து , ஆதியை கிண்டலடித்தான் ..
ஊருக்குள் நெருங்கியதும், அபி "மாமா!" என்று சிவநேசனை அழைத்தாள் ...

"இவளுக்கு எது ஒன்னு வேண்டும் நாளும் எங்க அப்பா தான் அழைக்கிறா " என்று மனதிற்குள் சளித்தாலும் , ஏதும் கூறாமல் அவளிற்கு ஒரு முறைப்பே தந்து அமைதியாக வந்தான் ...
ஆதியின் முறைப்பில் , ஏதும் புரியாமல் , அபி "இவன் எதுக்கு இப்டி டெரர் லுக்கு தரானே தெரியலையே , என்று யோசித்தாள் ...
"சிவநேசன் என்ன டா அபி?" என்று கேட்டதற்கு , "இங்க கோவில் போய்ட்டு போகலாம் மாமா , இன்னும் கொஞ்ச நேரத்தில நடை சாத்திடுவாங்க , என்னோட பிரெண்ட்ஸ் இருப்பாங்க , எனக்கு அவங்கள பாக்கணும் ," என்று கூறினாள் ...
"ஆமாம் டா , கோவில் தாண்டி தானே வீடு , நாம போயிட்டே போகலாம், " என்று அவரும் அர்ஜூனுடன் கோவிலுக்கு செல்லுமாறு கூறினார் ...
"ஏன் இதை என்கிட்ட கேட்ட ஆகாதோ?" என்று அவனின் பிடியின் இறுக்கத்தில் அவனின் கோவத்தினை உணர்ந்தாள் அபி ...
அப்பொழுது தான் எது ஒன்று என்றாலும், அவனிடம் கேட்க சொன்னது அபிக்கு நினைவு வந்தது ...
தன்னையே நொந்து கொண்டு , "இல்ல, அங்க மாமா முன்ன இருக்காரு , அவருக்கு சொன்னா உடனே அர்ஜுன் மாமாக்கு தகவல் தருவாரு , அதான் ," என்று இறங்கிய குரலில் இழுத்தாள் ...
"உனக்கு ஒர சாக்கு , வண்டி ஓடுற அர்ஜுன் கிட்ட சொல்லணுமே தவிர , அப்பாக்கு ஏன் சொன்ன?"
"இங்க பாரு , முன்ன தான் எல்லாவற்றிக்கும் அப்பா கேட்ட , இப்போ உனக்கு நான் ஒவொவ்ரு முறையும் ஞாபக படுத்தணும்னு நினைக்கிறாயா , நீ ஏன் கிட்ட எதுனாலும் கேட்கணும்னு ..."
"இல்ல, நானே அதுக்கான உரிமையை உனக்கு புரிய வைக்கட்டுமா ?"என்று அவள் காதுக்கு அருகில் அவனின் சூடான மூச்சு காற்று படும் அளவிற்கு ஒரு வித குழைந்த குரலில் கூறினான் . ஆவனின் வலது கையும் அவளின் தோளை மிகவும் இறுக்கமாக பற்றியது ...

அபி அவனின் நெருக்கம், சூடான் மூச்சு காற்று , மேலும் அவனின் தாபமான குரலில் மிகவும் அவஸ்தை அடைந்தாள் ...
"ப்ளீஸ் ! ஏதோ ஊருக்கு வந்த பட படப்பு , அதான் மாமா கிட்ட கேட்டுட்டேன் , இனி உங்க கிட்டயே கேட்குறேன் , யாராவது திடிர்னு திரும்பிட போறாங்க கொஞ்சம் தள்ளி உட்காருங்க " என்று உள்ளே போன குரலில், தலையை நிமிர்த்த முடியாமல் கூறி முடித்தாள் , ஆதியும், அவளின் அவஸ்த்தையை ரசித்து அவளிடம் இருந்து இடைவெளி விட்டு அமர்ந்தானே தவிர, அவனின் மனைவி தோளில் இருந்து அவன் கைகளை எடுக்க வில்லை ...

கோவில் அருகில் வந்ததும் தான் ஆதி அவளை விட்டான் , நிம்மதி பெருமூச்சுடன் அபி அவனிடம் இருந்து சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள் , என்ன முயன்றும் அவளின் பயமும் வெட்கமும் கலந்த முகத்தினை மறைக்க முடியவில்லை ...

அர்ஜுன் அவர்கள் அனைவரயும் இறக்கி விட்டு, கார் பார்க்கிங் நோக்கி சென்றான் , அபி ஸ்ரீயுடன் சேர்ந்து அம்மனுக்கு அர்ச்சனை பொருட்கள் வாங்க சென்றனர் ... அர்ஜுன் வந்ததும், அனைவரும் கோவிலுக்குள் சென்றனர் ...
அபி "இந்த ஊரில் , முக்கியமான கோவில் இந்த அம்மன் கோவில்," என்று புதிதாக ஊருக்குள் வந்த திவ்யாவிற்கு அவளின் ஊரின் பெருமை பற்றி கூறிக்கொண்டிருந்தாள் ...
சிவநேசனும், "ஆமா திவ்யா , பூரணி எப்போ இங்க வந்தாலும் இந்த கோவிலுக்கு வந்துட்டு தான் நாங்க ஊருக்கு போவோம் ..."
"ஸ்ரீ நீயும் இந்த ஊருக்கு புதுசு தான மா , ரொம்ப அமைதியா இருக்கும் மா இந்த கோவில் , நீயும் வந்து நல்லா பாரு," என்று அவரும் கோவிலின் பெருமை பற்றி கூறினார் ...
ஆதி கடைசியாக இந்த ஊருக்கு வந்ததை பற்றி சிந்தித்து கொண்டிருந்தான் ...
அபியின் பெற்றோர் இறப்பிற்கு வந்தது, அதன் பிறகு, அவளை அக்கோலத்தில் காண சகியாது, நாட்டை விட்டே சென்று விட்டான் ...
அதன் பிறகு இன்று அவளின் கணவனாக இந்த ஊருக்குள் ஆதி வருகிறான்...

அவனின் சிந்தனையில் இருந்து வெளி வந்தது , அபியின் ஆர்வம் கலந்த குரலில் ...
"ஹப்பா! ஊரு பெருமை போதும் டீ , என்று திவ்யாவிடம் இருந்து அவளை அருகில் இழுத்து நிறுத்தி கொண்டான் ..."
உடனே அவளின் கைகள் தந்தி அடிக்க ஆரம்பித்தது ...
இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேராக பார்த்தனர் ...
இருவரின் கண்களும் ஒரு நிமிடம் சந்தித்தது, அவனின் ஆழந்த பார்வையின் வேகம் தாளாமல் அபியின் பார்வை அவன் பார்வையின் இருந்து விலகியது , "இவன் இப்டி நம்ம பார்க்காம இருந்தா நல்ல இருக்கும்," என்று நினைத்தாள் ...

அர்ஜுன் வந்து ஆதியின் முதுகில் ஒன்று வைத்து "அவள வம்பு பண்ணாம வாடா," என்று அவனை அழைத்து சென்றான் ...
அம்மனின் சன்னிதானத்தில் முன்பு சென்று அனைவரும் நின்றனர் , கோவில் அர்ச்சகர் அபியை கண்டு புன்னகை சிந்தினார் ...
"எப்போ வந்த மா?" என்று கேட்டதற்கு, அபிக்கு அத்தனை நேரம் இருந்த ஒரு நிம்மதி சென்று பயம் வந்து ஒட்டி கொண்டது ," மாமா! அது அது என்று அவள் இழுத்து கூறுவதற்கும் , ஆதி தானாக முன் வந்து , நான் ஆதி , வணக்கம் மாமா, நான் அபியின் கணவன், நேற்று எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுது , அதான் அர்ச்சனை செய்ய வந்தோம் ," என்று மழை போல் பட பட என்று பொழிந்தான் குருக்களிடம் ...

அவர் என்ன, ஏது என்று ஒன்றும் கேட்க வில்லை ...
அம்மனின் சந்நிதி பார்த்து, ஒரு முறை கண்களை மூடி , "அம்பாள் உனக்கு ஒரு நல்ல வழி அமைச்சு குடுத்துட்டு மா , நீ நன்னா இருப்பே ," என்று வாழ்த்தி அர்ச்சனை செய்து அனுப்பினார் ...

பிறகு வெளியில் வந்து அங்கு அமர்ந்தனர் அனைவரும், அபியை தவிர்த்து ...
அவள் அங்கும் இங்கும் தேடியது கண்டு ,"என்ன அபி?" என்று ஆதி அவள் அருகில் வந்து கேட்டதற்கு , "இல்ல என்னோட பிரண்ட்ஸ் இருப்பாங்க , அதான் எங்கன்னு பார்க்குறேன் , என்றாள் ..."
அவனிடம் பதில் கூறினாலும், கண்கள் என்னவோ ஒரு ஆர்வத்துடன் இங்கும் அங்கும் அவள் நண்பர்களை தேடி கொண்டிருந்தது ...
அவன் கேட்ட கேள்வியை மறந்து, அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான் ...
இவன் ஒருத்தன் , என்று அர்ஜுன் சலித்து "என்ன டா? அபி! நீ யாருக்கும் இன்போர்ம் செய்தியா , இப்போ வந்து இருக்காங்களா ? "என்று கேட்டான் ...
"இல்ல மாமா தினமும் இந்த நேரத்துக்கு விளக்கு போட வருவாங்க , நாங்க இங்க விளக்கு ஏத்திட்டு கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு தான் போவோம் ," என்று கூறிய படியே தேடினாள் ...
"ஓஹ் ! பிரெண்ட்ஸ் இங்க பக்கத்து பக்கத்துலயே இருகாங்க போல," என்று அர்ஜுனும் நினைத்து கொண்டான் ...

அபியின் கண்கள் ஒரு இடத்தில் சென்று தானாக அவள் முகம் மலர ஆரம்பித்தது ...
அவளையே பார்த்து கொண்டிருந்த ஆதிக்கும் கண்கள் அவள் பார்த்த இடத்தை நோக்கி சென்றது ...
அங்கு ஒரு வாண்டு சந்நிதியின் பின் மறைவாக நின்று கண்களை பொற்றி கொண்டு ஏதோ கூறிக்கொண்டிருந்தான் ...
அபியும் அங்கு சென்றாள் ...
மற்றவர்களும் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தனர் ...

"டேய் விச்சு குட்டி!" என்று அழைத்து அவன் தோள்களை திருப்பி அவனை பார்க்க செய்தாள் ...
குழந்தையும், "ஹே அபி !" என்று உற்சாகம் அடைந்து அபியை கட்டி கொண்டது ...
உடனே அவள் கைகளை தட்டி "என்ன விஷ்வா கூப்பிடுன்னு உனக்கு சொன்னேனா இல்லையா ?" என்று கோவித்து கொண்டான் ...
"ஆமா, இப்போவே ஸ்டைல் போடா , என்ன இன்னிக்கும் கண்ணாம்பூச்சியா ?" என்று கேட்டாள் ...
அபி இவ்வாறு சரளமாக பேசுவது பார்த்து அனைவரும், பழைய அபி மீண்டதாக வேடிக்கை பார்த்தனர் ...
ஆதியோ அந்த விச்சு மேல் செம கடுப்பில் இருந்தான் , "இந்த பொடுசு கூட பேசுற அளவுக்கு கூட என்னோட பேச மாற்றா , " என்று விச்சு மேல் பொறாமை கொண்டான் ...
"டேய்! நான் வேணா உனக்கு உதவட்டா , என்று கேட்டதற்கு , ஆமா பெரிய உதவி , ஏன் என்ன விட்டு போன , இப்போ நானே கண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டேன் என்று பெருமை பட்டு கொண்டான் ,"
" அங்க பாரு ரம்யா டிரஸ் அந்த மரத்துக்கு பின்னாடி தெரிது , பாலா பாரு அந்த தூணுக்கு பின்ன மறஞ்சி இருக்கான்," என்று ஒவொரு பொடுசுகளும் மறையும் லட்சணத்தை அவன் தோழியுடன் கூறினான் ...
அவளும் அதனை கண்டு சிரித்து விட்டு "என் கண்ணுக்கு எதுவும் தெரில , இவன பாரு எப்படி சொல்றான் , இப்படியா இந்த சேட்டைகளும் உடை தெரிவது போல மறைந்து வைக்கணும்," என்று சிரித்து கொண்டிருந்தாள் ...

அது வரை மிகவும் சுவாரஸ்யத்துடன் வேடிக்கை பார்த்த அனைவரும், விசுவின் கண்டுபிடிப்பில், மற்ற குழந்தைகளின் சேட்டையில் சிரித்து விட்டனர் ...
அபி அவர்களிடம் ஒரு குரல் கொடுத்ததும், அனைத்து சிட்டுக்களும், அவள் முன்பு வந்து நின்றனர் ...
அவளை அணைத்து முத்தம் குடுத்து , "எப்போ அபி வந்த? " "ஏன் எங்களிடம் கூறவில்லை?" "இனி இவ்வாறு செய்யாதே, "என்று ஒவ் ஒருவரும் ஒருவகையில் அவளிடம் சண்டை பிடித்தனர் ...
ஆதியும் அவர்களிடம் சென்று, ஹாய் குட்டிஸ் என்றான் ...
பிறகு ஆதி அருகில் சென்று அபி நின்று , சிவநேசனை அழைத்து , "மாமா! இவங்க தான் என்னோட பிரென்ட்ஸ்," என்று அறிமுகம் செய்து வைத்தாள் ...
"என்ன!" என்று, ஆதியும் அர்ஜுனும், ஒரு சேர அதிர்ச்சி அடைந்தனர் ...
மற்றவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது ...
திவ்யா , "அபி நானும் பிரென்ட்ஸ்னு சொன்னதும் நம்ம ஏஜு இருக்கும்னு நினச்சேன் , அனா நீ சான்சே இல்ல போ," என்று சிரித்தாள் ...
அபியும் அசடு வழிந்து, காலேஜ் பிரெண்ட்ஸ் இருக்காங்க , பட் இங்க இவங்க தான்.. பக்கத்துல இருக்காங்க...
இவர்களின் அம்மா , பாட்டி என்று இந்த நேரத்துக்கு விளக்கு போட வருவாங்க , நானும் அப்டியே இங்க வரதுல நாங்க எல்லாம் செட் ஆகிட்டோம் ...

தன்னவளின் குறும்பு இன்னும் அவ்வாறே இருப்பது நினைத்து, ஆதிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்து விட்டது ...

"அபி! நீ இன்னும் இந்த சுட்டீங்களோட விளையாடு வதை விட மாட்டியா?" என்று அர்ஜுனும் அவளை கிண்டல் அடித்தான் ...
அபி அனைவரிடம் அசட்டு முழிப்பு முழித்து வைத்தாள் ...

அம்புஜம் மாமி வந்ததும் அவளை கண்டதும், கூடவே சிவநேசன் இருப்பதை கண்டு வேகமாக அங்கு வந்து," எப்படி இருக்கீங்க?" என்று கேட்டார்...
சிவநேசனும் "நல்ல இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க, உங்க கணவர் எப்படி இருக்கார்?" என்று நலம் விசாரித்தார் ...
மாமியும், "அபி ஆர்டர், அவங்க பெரியப்பாவ போய் பார்த்துட்டு வரணும்னு , அதான் அவர், காலையில் கொஞ்ச நேரம் ராமா மூர்த்தியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வருவார் , நாங்க நல்ல இருக்கோம் ..."என்று பதில் அளித்தார்...

"கல்யாணம் முடிஞ்சி இங்க வந்து இருக்காரே, கேட்டா தவறா எடுத்துப்பாரோ?" என்று , அமைதியாக நின்று இருந்தார் அம்புஜம் மாமி ...
பிறகு சிவநேசனே , அபிக்கு சங்கடம் வராமல் , "மாமி! நேற்று என் மகன் ஆதிக்கும் அபிக்கும் திருமண முடிந்தது," என்று கூறினார் ...
மாமிக்கு ஒரு நிமிடம் , உடல் அதிர்வு ஏற்பட்டது , பிறகு அம்மன் சந்நிதி நோக்கி கை எடுத்து கும்பிட்டு , "அபி குட்டி! உனக்கு இந்த அம்பா ஒரு வாழ்க்கை அமைத்து குடுத்துட்டா டீ ..."
"தேவி -பூரணி, ஆசை நிறைவேறிடுச்சு ,எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு இப்போ , அந்த அடங்க பிடாரி கிட்ட இருந்து நீ தப்பிச்சே ..."
"எனக்கு உடம்பே புல்லரிக்குது டீ," என்று ஆனந்த கண்ணீர் சிந்தினார் , அபியை கட்டி கொண்டு நெட்டி முறித்தார் ...
"ஆதி! ரொம்ப நாள் ஆச்சு பா உன்ன பார்த்து, நல்ல வளந்துட்டே , சந்தோஷம் ,அபிக்கு தாய் வீடு நான் இருக்கேன், அவளுக்கு இனியாவது நிம்மதி கிடைக்கணும் பா , உன்னால தான் முடியும், ..."
"நல்லா பார்த்துக்கோ பா என்று," அழுக ஆரம்பித்தார்.
ஆதிக்கு லீலாவின் மேல் கோவம் இன்னும் அதிகமானாலும், மாமியிடம், "நான் நல்லா பார்த்துப்பேன் மாமி ," என்று வாக்கு குடுத்தான் ...

என்ன ஏது என்று மாமி, அவளிடமும் மற்றவர்களிடமும் எதுவும் கேட்க வில்லை ...
அத்தனை நேரம் இது பற்றிய சிந்தனையில் இருந்த அபி அவர் முன்பு சென்று "மாமி! அது என்ன நடந்துச்சுனா," என்று கூறுவதற்குல், அம்புஜம் மாமி , "நீ எதுவும் சொல்ல தேவையில்லை , நான் உனக்கு அப்போவே சொல்வேன் இல்ல , உனக்கு ஒரு நல்ல இடம் காத்துட்டு இருக்குனு, அது நிஜம் ஆகிடுச்சு பார்த்தியா," என்று மகிழ்ச்சி அடைந்தார் ...
"டீ! அபி! இனி அங்க, எந்த தேவையில்லாத சிந்தனை இல்லாம உன் குடும்பத்தை பாரு , இனி இது தான் உன் குடும்பம்," என்று அங்கு நிற்போரை பார்த்து கை காட்டி கூறினார் ...
அதுவரை அனைத்தும் கேட்டு கொண்டிருந்த சிறுவர்களில் 12 வயது உள்ள ஒரு பையன்ஆதியிடம் சென்று , "அங்கிள்!" என்று அழைத்தான் ...
"ஹ்ம்ம்! அவங்க அபி, நான் அங்கிளா? என்று, அவனும் ,சிறுவர்களுக்கு சமமாக அமர்ந்து என்ன?" என்று கேட்டான் ...

"இனி அபி உங்களுடன் சென்று விடுவாளா?" என்று அழுவது போன்று கேட்டான் ...
அபிக்கும் அழுகை வந்து விட்டது ...
"டேய்! கிருஷ்ணா! நீ பெரிய பையன் தான டா , நீ தான் இவங்க இங்க வரும் போது என்ற பிரச்னை இல்லாம பார்த்துக்கணும், நீயே அழுதா எப்படி?" என்று அபியே அவனுக்குஆறுதல் கூறினாள் ...
ஆதிக்கும் குழந்தைகளின் தவிப்பு புரிந்து வருந்தினான்...
கிருஷ்ணாவும், மற்ற நண்பர்கள் அழுவது கண்டு அவர்களை அடக்கி, அவனின் கண்ணீர் துடைத்து கொண்டு, "அங்கிள் , இன்னும் 30 நிமிடம் மட்டும் இங்க இருங்க,"
" ப்ளீஸ்!"
" நாங்க இப்போ வந்து விடுவோம் ," என்று ஆதியிடம் கேட்டு கொண்டான்...
ஆதியும் சரி என்றான், பிறகு அக்கூட்டத்தின் தலைவன் அனைவரையும் அழைத்து ஏதோ கூறினான் , அனைவரும் அவ்விடம் விட்டு வெளி சென்றனர் ...
ஆதியம் அபியின் கண்ணீர் பொறுக்காது , அவளின் சிந்தனை திசை திருப்ப , " தென் அபி மேடம், இன்னும் உங்க பிரென்ட்ஸ் வேற யாருக்காவது தகவல் தரனுமா?" என்று பிரென்ட்ஸ் என்ற வார்த்தையில் அழுத்தம் குடுத்த கூறினான்.

அபிக்கும் அவன் கிண்டல் புரிந்து , அவனை முறைக்க , மாமியின் முறைப்பு அவளை அடக்கியது ...
ஆதிக்கு அது மேலும் , சிரிப்பு வந்து விட்டது ...
அரைமணி நேரத்தில் அணைத்து பொடிசுகளும், அந்த இடத்தில அவர் பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தனர்.
ஒவொருவரும் அபி ஆதி தம்பதியினரை வாழ்த்தி , "இப்போ தான் அபி கோவில்ல இருந்து போனோம்,"
"இவன் வந்து தகவல் சொல்றான்","ரொம்ப சந்தோஷம் அபி," நீ நிம்மதியா இருக்கணும்எங்களுக்கு திடீர்னு , ஒன்னும் புரியல அனா இங்க வந்து பார்த்ததும் , ஜோடி பொருத்தம் நல்ல இருக்கா , மனசு நெறஞ்சு போச்சு எங்களுக்கு என்று ஒவொருவரும் ஒன்று கூறினார். . அபிக்குக்கும் சரி அவள் குடும்பத்தினருக்கும் சரி என்ன சொல்வது என்று புரியவில்லை , யாரும் எந்த கேள்வியும் கேட்க வில்லை அபியிடம் ... அம்புஜம் மாமயில் இருந்து, இந்த குழந்தைகளின் அன்னைமார்கள் , மாற்று கோவில் குருக்கள் வரை யாரும் அபியை சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் அவளை வாழ்த்தியது அபிக்கு ஒரு இனிய அதிர்ச்சி...
எத்தனை நல்ல உள்ளங்களின்நட்பு எனக்கு கிடைத்து இருக்கு ...
ரொம்ப நன்றி அம்மா என்று அம்மனை மனதார வனங்கினாள்...
பிறகு"இந்தா அபி!என்று, கிருஷ்ணா ஒரு அழகிய பரிசு திருமண வாழ்த்தாக குடுத்தான் ...
அதி என்ன இருக்குனு ஊருக்கு போய் பாரு அபி என்று அதி அபி இருவரின் கையிலும் குடுத்தான் ...
கிருஷ்ணாவின் தாய் ,"அபி!அவங்க சேவிங் பாக்ஸ்ல இருந்து எல்லா குட்டிகளும் காசு எடுத்து உங்களுக்கு கொடுக்குறாங்க மா ,"வாங்கிக்கோ டா , என்று கூறினார் ... மற்ற அன்னையர்களும் அதே கூறினார் ...
அங்கு உள்ள மற்ற ஸ்ரீ திவ்யாக்குமே கண்ணீர் வந்து விட்டது ...
ஆதிக்கு தன்னவளின் நல்ல மனதிற்கு கிடைத்த நட்பினை நினைத்து மிகவும் பெருமை பட்டான் ...

பிறகு, குழந்தைகளுக்கு அவர்களின் பொருட்கள் என்றாலே ஒரு பொறாமை பாதுகாப்பு உணர்வு தானாக வரும், அதிலும் அவர்களுக்கு என்று குடுத்த சேமிப்பு பணத்தில் அபிக்கு வாங்கி கொடுத்தார்கள் என்றால் , அதற்கு மேல் அபியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை , அவர்களின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர்களை அணைத்து கதறி அழுதாள் ...
ஆதி அர்ஜுனிடம் ஏதோ கூறினான் ...
அர்ஜுனும் குழந்தைகளின் கணக்கு எண்ணிக்கை பார்த்து அவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்க சென்றான் ...
பிறகு விச்சு"அபி உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு, சொன்ன, இப்போ இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டியே , என்று ஆதியை முறைத்து கொண்டே , அபியிடம் கேட்டான் ..."திவ்யா உனக்கு competetion செமயா இருக்கு"என்று கிண்ட அடித்தாள்..

சொல்லு அபி ,"இனி யாரு எனக்கு கோவில் பிரசாதம் வாங்கி குடுப்பா, விளையாட்டல்ல ஹெல்ப் செய்வா"என்று அழுக ஆரம்பித்து விட்டான் ...

ஆதிக்கும் கொழு கொழுகண்ணத்துடன் கண்களில்துறு துறுப்புடன் பேசும் விஷ்வா திடீர் என்று அழுகவும் ஒரு மாதிரி ஆகி விட்டது ...
விச்சு குட்டி!"உங்க அபிய நான் நல்லலா பார்த்துப்பேன், இங்க பக்கத்துல இருக்க பெங்களூரு ,நீங்கலீவு கிடைத்ததும் அங்க வந்துடுங்க , சரியா , நீங்க இப்டி அழுதா , உங்களுக்கு பிடிச்ச அபியும் அழுறாங்க பாருங்க, அவங்க அழுதுட்டே ஊருக்கு வரது , நல்லா இருக்குமா சொல்லுங்க , என்று கூறியதும், என்ன புரிந்ததோ அந்த சிட்டிற்கு , சரி அபி அழுகாத , நானும் ஊருக்கு வரேன், நீ என்னோட அங்க வந்ததும் விளையாடு ...என்று பெரிய மானிடர் போல் அபியின் கண்களை துடைத்து விட்டான் ...
மற்ற பெரியவர்களும் அழுகை வந்தது ...

ஆதி அனைவரிடமும் பொதுவாக அபியை எந்த குறையும் இல்லாமல் தான் பார்த்து கொள்வதாக வாக்கு அளித்தான் ...
பிறகு பெரியவர்களும் ஓவொருவர் ,அபி தீடிர்னுதும் எங்களு ஒன்னும் புரியல , உன்னோட அக்காவை நான் கொடுக்குறது வாங்கி டா என்று ஒரு பெண் வெளி குங்கும சிமிழ் குடுத்தாள் , மற்றும் ஒருவர்நேற்று மார்க்கெட் போன்னேன் , இந்தா இந்த புடவை வாங்கினேன் , உனக்கும் பிறந்த நாள் வருதுல , அப்போ தரலாம்னு எதுத்து வெச்சேன் , இந்த என்று ஒரு சுடி செட் பரிசு அளித்தாள் ...மற்ற பெண் மணிகள் பணம் கொடுத்தனர்..
உனக்கு தோணும் போது இங்க வந்து விடு அபி, உனக்கு ஒரு அக்கா வீடு இருக்குனு மறக்காதா என்று ஆள் ஆளுக்கு ஒன்று கூறினர் ...

குருக்கள் கூட அவர் மனைவிக்கு அழைத்து விஷயம் கூறியதும் ஒரு பரிசூட வந்து சேர்ந்தார் ...
பிறகு அம்பாள் பாதத்தில் அபிக்கும் ஆதிக்கும் , புடவை மற்றும் பேண்ட் ஷர்ட் , பூஜை செய்து கொடுத்தனர் ...
தம்பி டிரஸ் அளவு தெரியாது, அதான் நீங்க தைத்துபோடணும், என்று கூறிய வாறு பரிசு கொடுத்தார் ...
ஆதி அபியை அழைத்து அவளுடன் சேர்ந்து பரிசு வாங்கி கொண்டான் ...
அனைவர்க்கும் நன்றி கூறி,அபியை பார்க்க அனைவரும் வருமாறு அவனின் தொலைபேசி எண் மாற்று வீடு முகவரி கூறினான் ...
ஒரு மருத்துவனாக இருந்து அனைவரிடமும் தன்மையாக பழகிய ஆதியை அனைவர்க்கும் பிடித்து விட்டது ...
அர்ஜுனும் அங்குள்ள குழந்தைகளுக்கு என்று , கிரிக்கெட் மட்டை, பந்து, மேலும் இனிப்பு வகைகள் , பென்சில் செட்ஸ், மேலும் குழந்தைகள் விளையாடும் பொருட்கள் சிலது வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்தான் ...
மாமி,சிவநேசன்நீங்க முன்ன போங்க , நான் பூஜை முடித்து , ஏன் ஆத்துகார அழைச்சிண்டு அங்க வரேன், கண்டிப்பா லீலா பிரெச்சனை பன்னுவோ , நான் இருந்தா கொஞ்ச அடங்குவா , அதான் ..."
என்றார்...
சிவநேசனும் அனைவரிடமும் விடை பெற்று அங்கிருந்து சென்றனர் ...
அபிக்கு யாரும் இல்லை என்ற உணர்வு போய் , நமக்கு அக்கா அண்ணா என்று நட்பின் பேரில் இத்தனை சொந்தம் இருக்கிறது என்று ஒரு வித உணர்ச்சி பிடியில் இருந்தாள் ...
அனைவரும் வீடு நோக்கி சென்றனர் ...
 

banumathi jayaraman

Well-Known Member
அபியின் மீதான குழந்தைகளின் அன்பு சூப்பர்
உன்னுடைய லவ்வை அவளிடம் நீ சொன்னால்தானே அபிக்கு தெரியும், ஆதி பையா
அபிக்கு ஆதி கிடைத்த பொறாமையில் லீலா என்ன பிரச்சனை பண்ணுவாளோ?
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, சரண்யா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top