என் இதய விழி நீயே -episode 12 2

Advertisement

achuma

Well-Known Member
hi friends , online sodanaigal, exam for my first son, sorry for updating late...
pls read n comments
thanks for previous comments
stay safe:)(y)

என் இதய விழி நீயே

ஆதி வீட்டில் இரவு உணவு முடிந்து, அனைவரும் கூடத்தில் அமர்ந்து இருந்தனர் , அபியின் கண்களில் ஏதோ ஒரு அலைப்புறுதல் , ஆதியால் காண முடிந்தது ...
திவ்யாவுடன் அபி சிரித்து பேசினாலும் அவள் கண்களில் அந்த புன்னகை எட்ட வில்லை ...

அது அது அந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பதற்க்கு ஏற்ப , ஸ்ரீ அபியை அறைக்கு அழைத்து சென்று, அவளிற்கு அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்தாள் ...
அர்ஜுன் ஆதியின் அறையில் அலங்காரம் செய்ய சென்றதற்கு , ஆதி அவன் அறையில் அது போன்று எந்த அலங்காரமும் தேவையில்லை என்று அவன் அண்ணனிடம் கூறினான் ...
அதற்கு சந்தீப் ஆதியை கிண்டலுடன் பார்த்ததற்கு, "என்னடா லுக்கு ! " என்று ஆதி கேட்டதற்கு ,

"இல்லை மச்சி,"

"எப்டியோ எதுவும் நடக்க போறது இல்ல , எதுக்கு ரூம் டெகரேட் , செய்யணும்னு யோசிச்சேன் , வேஸ்ட் தானானு , நீயே எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டியா அதான் ." என்று ஆதியை கண்டு கிண்டலுடன் கூறி மீண்டும் புன்னகைத்தான் .

ஆதி, அர்ஜுன் மற்றும் சந்தீப்பின் கிண்டலிற்கு இருவரையும் முறைத்து , "இவனுங்கள இப்டியே விட்ட ரொம்ப பண்ணுவாங்க ," என்று அவன் அண்ணியை அழைத்தான் ...
"அண்ணி!"
" என்ன ஆதி ?"
" அங்க இன்னும் நம்ம சொந்தக்காரங்க இருக்காங்க, அண்ணா , இன்னும் இங்கயே இருக்காரு , சீக்கிரம் அங்க போயிட்டு, அவங்கள கவனிக்க சொல்லுங்க,"
" ஆஹன்! ," அபிக்கு இங்க புதுசு இல்லையா, நீங்க இங்கயே இன்னிக்கு குழந்தையோட தங்கிட்டா நல்ல இருக்கும், நாளைக்கு காலையில அபி ஊருக்கு போகும் போது அவளுக்கு ஏதாவது தேவையா இருந்தா ,உங்க கிட்ட அவ கேட்க முடியும்ல ,நாளைக்கு காலையில் வரும் போது , உங்களுக்கும், குழந்தைக்கும் தேவையானத, அண்ணா எடுத்துட்டு வர சொல்லி அனுப்பிடுங்க அண்ணி,"
என்று அவன் அண்ணனை ஒர கண்ணால பார்த்து கொண்டே கூறினான் , அங்கு அர்ஜுனிற்கு புசு புசு என்று கோவம் வந்தது ....

அதனை கண்டு ஆதி சந்தீப் இருவரும் சிரித்து கொண்டானர் ...

"அடப்பாவி ! கல்யாண வேலைனு ஒருவரமாவே இவ என்ன கண்டுக்கல, இன்னிக்காவது இவ சிக்குவான்னு பார்த்த , இவன் இப்டி ஆப்பு வெச்சிட்டானே , என்று மதினில், ஆதியை புலம்பி தீர்த்தான் , இவ என்ன யோசிக்கிறா என்று அவன் மனைவியின் பதிலிற்காக , காத்து இருந்தான் அர்ஜுன் ...
"நீ சொல்றதும் சரி ஆதி, நான் அங்க இருந்தா ,அபிய பார்த்துக்க முடியாது , என்னங்க! இன்னும் என்ன வேலை இங்க?"

" வீட்டுக்கு மூத்த மகனா போய் அங்க இருக்கிற வேலைய பாருங்க , போங்க!"
" எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு , ஏதாவது தேவைன்னா , நான் உங்களுக்கு போன் பண்றேன்," என்று ஆதியின் செயல் அறிந்து, புன்னகையை அடக்கி கொண்டு , ஸ்ரீயும் ஏதும் தெரியாது போன்று அர்ஜுனை வீட்டிற்கு அனுப்பினாள் ...

அர்ஜுன் ஆதி, மற்றும் ஸ்ரீயை முறைத்து விட்டே சென்றான் ...
தேவை தான் டா உங்க அண்ணனுக்கு , என்று சிரித்து கொண்டான் சந்தீப் , திவ்யாவை ஆதி அழைத்ததும்,

"அய்யய்யோ ! " என்று அலறினான் சந்தீப் ...

"டேய் மச்சி எங்களுக்கு இப்டி ஆப்பு வெச்சிடாத டா , உனக்காக , ஹாஸ்பிடல், நீ வர வரை பார்த்துக்கணும்னு, நான் அங்கேயே இருந்துட்டேன் , இப்போ தான் மச்சி எங்களுக்கு டைம் , உன்ன தெரியாம கிண்டல் செஞ்சு இப்டி சொந்த செலவுலயே ஆப்பு ரெடி பண்ணுவேன்னு தெரிந்து இருந்தா , நான் உன் பக்கமே வந்து இருக்க மாட்டேன் டா , என்று ஆதியிடம் சரண் அடைந்தான் ..."

ஆதிக்கு ஏக குஷி நண்பனின் நிலைமை நினைத்து , ஆனாலும் அவனை விடுவதாக இல்லை ,

"மச்சி , அடுத்த வாரம் உனக்கு நைட் டுட்டி, திவ்யாக்கு டே டூட்டி தான, என்று ஏதும் தெரியாது போன்று சந்தீப்பிடம் கேட்டு, மேலும் அவனை வெறுப்பேற்றினான்...

நண்பனும், ஆதியை கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் , திவ்யா வந்து சேர்ந்தாள் ...
"டேய்! இன்னும் நீ போலையா, டின்னர் முடிஞ்சிது தான , நீ கிளம்பு , நான் இங்கயே இருக்கேன் ..."
"அண்ணியும் இங்க தான் இருக்காங்க, நான் அவங்க கூட இருக்குறேன் , "
"எப்டியோ நாளைக்கு அங்க அபி ஊருக்கு போனும்ல, என்கிட்ட டிரஸ் இருக்கு , நான் ஊருக்கு போயிட்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கே வந்துறேன், "
என்று ஆதி மற்றும் சந்தீப் இருவருக்கும் பேச வாய்ப்பே தராமல் பட பட என்று திவ்யாவே அனைத்தும் கூறி முடித்தாள் ...

ஆதி நான் ஏதும் செய்யவில்லை என்பது போன்று , சந்தீப்பின் முன்னால நல்ல பிள்ளை போல் நின்றான், அவனின் முறைப்பிற்கு...

ஆதியும் சந்திப்பை பார்த்து சிரித்து விட்டே அவன் அறைக்குள் சென்றான்...

சந்தீப், திவ்யாவை யாருக்கும் தெரியாமல் , அவளை ஒரு அறைக்குள் இழுத்து சென்றான் , "ஹே லூசு! ஏன்டா இப்டி கைய இழுக்குற , வலிக்குது விடுடா," என்றாள் ...

அவளின் வாயை பொத்தி , "ஏண்டி, என் நிலைமை உனக்கு எப்படி தெரியுது?" என்று அவனின் கோபத்தினை அடக்க பட்ட குரலில் கேட்டான் ...
திவ்யா சிரிப்பு வந்தாலும், சிரிப்பினை அடக்கி அவள் கணவனை , பார்த்தாள் ...

மனைவியின் கண்களில் தெரிந்த குறும்பில் , "அடிப்பாவி! நீ பிளான் பண்ணி தான் இங்க இருக்கியா ?" என்று அவளின் காதினை பிடித்து திருகினான் ...
"எனக்கு ஸ்ரீ அண்ணி ஆல்ரெடி சொல்லிட்டாங்க பாஸ் , நீங்க அவன ஓட்டுனிங்களா , அவன் உங்க ரெண்டு பேரையும் வெச்சு செஞ்சிட்டான் ... "ஹா ஹா

"உனக்கு சிரிப்பா வருது ," என்று அவனும் மனைவியுடன் சேர்ந்து சிரித்தான்...
" சரி எனக்கு தேவையானத குடு, நான் உன்ன இங்க விட்டுட்டு கிளம்புறேன் , இல்ல உன்ன விட மாட்டேன்," என்று மனைவியுடன் வம்பிழுத்து கொண்டிருந்தான் சந்தீப் ...

"டேய்! யாரவது வர போறாங்க நீ கிளம்பு டா ," என்று திவ்யா அவனின் செயலில் வெட்க பட்டு கொண்டாள் ...
"யாரும் வர மாட்டாங்க மேடம் , ஆல் பிஸி , சீக்கிரம் கம் ஆன் பாஸ்ட் , "என்றான் சந்தீப் திவ்யாவின் முகம் தன்னால நாணத்தால் சிவந்தது ...

மனைவியின் முகத்தின் நாணம் கண்டு சந்தீப் அவளின் முகம் எங்கும் முத்தம் வைத்து, இறுதியில் அவளின் இதழ் சுவையில் மூழ்கினான் ...
சிறிது நேரம் கழித்தே, விடுபட விருப்பம் இல்லை என்றாலும் அவளின் சிணுங்களில் விட்டான் ...
சந்தீப்பின் நெஞ்சிலே முகத்தை புதைத்து கொண்டாள் அவனவள் ...

"உனக்கு ரொம்ப சேட்டை , அதிகம் ஆயிடிச்சிடி ..." என்று மனைவியை இறுக்கி அணைத்து கொண்டான் ...
அதன் பிறகு , "திவ்யா , நாளைக்கு அங்க பிரச்னை ஏதாவது வந்தா , வந்த என்ன வந்தா , வரும் நீ தான் இவங்க அனைவரையும், பார்த்துக்கணும் ,சரியா , இனியாவது, நம்ம ஆதி லைப் சந்தோஷமா இருக்கனும் என்று நண்பனிற்காக , இருவரும் பேசி கொண்டு இருந்தனர் ...

சந்தீப்பும் அதன் பிறகு மனைவியை அங்கே விட்டு வீட்டிற்கு சென்றான் ...

திவ்யாவின் புன்னகை நிறைந்த முகம் கண்டு, ஸ்ரீ அவளை கிண்டல் அடித்து கொண்டிருந்தாள் ...
இருவரும் சேர்ந்து அபியை அலங்காரம் செய்தனர் ...

இங்கு ஸ்ரீ அபிக்கு ஒரு வழியாக அவளை வழிக்கு கொண்டு வந்து சேலை கட்டி முடித்தாள் , அபிக்கு சேலை அணிவதில் மிகவும் சிரமம் .
அபிக்கு சேலை உடுத்த சரியாக வராது , அவளின் அன்னை இருந்தாள் கற்று கொண்டிருப்பாள்.
எப்பொழுதும் சுடிதாரே அவளிற்கு வசதி , சிறிய வயதிலே , அவளின் அன்னை இறந்ததால் , அவளும் யாரிடமும் சேலை அணிய கற்றுக்கொள்ள வில்லை ,அவளிடம் இருப்பது எல்லாமே சுடிதார் மட்டும் தான்...

"ஐயோ அண்ணி! எதுக்கு இத்தனை சேப்டி பின் ஒரு புடைவுக்கு?" என்று, திவ்ய கேட்டதற்கு, "நீ வேற திவி , காலையில் நான் தான் இவளுக்கு சேலை கட்டி விட்டேன் , சேலை ஒழுங்கா தான் கட்டி விட்டேன், இவ தான் நடக்கும் போதும் இங்க நழுவிடுமோ அங்க விலகிடுமோனு , ஊரு பட்ட பின்ன குத்த வெச்சிட்டா , என்று குறைப்பட்டாள் ..

திவ்யா அதற்கு சிரித்த சிரிப்பில், "நீ எதுக்கு சிரிக்குறன்னு,எனக்கு தெரிது, எனக்கும் அதே தான் , நம்ம ஆதி பாவம் தான்," என்று இருவரும் அபியை கிண்டல் அடித்து கொண்டிருந்தனர் ...

இவர்களின் கிண்டலை ரசிக்கும் மனநிலையில் நம் அபி இல்லை ...

இப்போ இது எல்லா தேவையா என்பது போன்று, ஸ்ரீயிடம், அவள் எவ்வளோவோ எடுத்து கூறியும், இவ்வாறு அலங்காரம் செய்கிறார்களே, என்று, பொம்மை போன்று அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டிருந்தாள் ...

பிறகு பூஜை அறையில் ஆதி மற்றும் அபியை அங்கு பூரணியின் படம் முன்பு இருவரும் வணங்கி எழுந்தனர்... அதன் பிறகு சிவநேசனிடம் ஆசி பெற்றனர் இருவரும்...
சிவநேசன் ஆரவை தூக்கி கொண்டு அவரின் அறைக்குள் சென்று விட்டார்...

ஆதி அதன் பிறகு அவன் அறைக்கு சென்றதும், ஸ்ரீ, அபியை சமையல் அறையில் அழைத்து சென்று ஒரு பிளாஸ்கில் பால் ஊற்றி அவளிடம் குடுத்து அனுப்பி வைத்தாள் ...
திவ்யா தான் அபியை கிண்டல் அடித்து அவளை ஒரு வழி ஆகி விட்டாள் ...

என்ன தான் கணவன் என்றாலும், ஒரு ஆணின் அறையில் செல்வதற்கு, பெண்களுக்கே உரிய படபடப்பும், நடுக்கமும் தானாக வந்து அபிக்கு ஒட்டி கொண்டது, அறையின் வாசல் வரை சென்றவளுக்கு, உள்ளே நுழைய தயக்கம் , அங்கு ஸ்ரீ திவ்யா உடன் இருந்த வரை தெரியாத ஒரு பயம் , அவர்கள் சென்றதும், அழையா விருந்தாளி போல் பயம் வந்து ஒட்டி கொண்டது ...

ஆதியும் அபி என்ன தான் செய்கிறாள் , என்பது போன்று, அமைதியாக அவளின் செயலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ...

நேரம் சென்றதே தவிர , அவள் அறைக்குள் நுழைவது போல் தெரியவில்லை என்ற உடன் ,

"அபி!" என்ற ஆதியின் ஆழ்ந்த குரலில் , திடுக்கிட்டு அபி தன்னவனை கண்டாள் ...

"இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே இருக்குறதா உத்தேசம் ?" என்றான் ...

இதற்கு மேலும் நேரம் கடத்த முடியாது என்று தெரிந்து கொண்டவள் , அமைதியாக அறைக்குள் சென்று, அந்த அறையை பார்க்க ஆரம்பித்தாள் ...

பெரிய கட்டில் , wardrobe (அலமாரி ), ஒரு நாற்காலி, மற்றும் மேசை , அந்த அறையின் பின் வாசல் வழி ஒரு பாலகனி, என்று அதிக பொருட்கள் இல்லாமல் நேர்த்தியாக இருந்தது, அறையின் கதவு பக்கம், பூரணியின் புகைப்படம், அதில் பூரணி புன்னகை முகம் கண்டு சிறிது நேரம், அபி அந்த புகைப்படத்தையே பார்த்து நின்றாள் ...

ஆதியும், அபியின் பக்கம் வந்து அவன் அன்னையின் படம் பார்த்து நின்று கொண்டான் ...

எத்துணை நேரம் அவர்கள் நின்றார்களோ , பாலகனி வழியாக வந்த சில்லென்ற காற்றில் ஆதி தன்னுறவு பெற்று, அபியின் தோள்களில் அவன் கை போட்டான்.
அபி மின்சாரம் பாய்ந்தது போன்று அவனிடம் இருந்து விலகினாள் ...

அது வரை இருந்த இலகு தன்மை நீங்கி ஆதிக்கு கோவம் வந்தது ...

"இவ என்ன என்னனு நினைக்கிறா?" அவனின் காதல் அவள் உணரும் வரை , அவளின் விருப்பமும் அவளின் காதலும், கிடைக்கும் வரை இருவரின் மனமும் இணைந்த பிறகே , வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறான் .
ஆனால் யாரோ மூன்றாம் மனிதனை போல் அவனிடம் இருந்து அபி விலகுவது, "அவனிற்கு தன் மீது அவள் வைத்த நம்பிக்கை இவ்வளவு தானா ?" என்று ஆத்திரமே வந்தது...

"பொறுமையா போகலான்னு பார்த்தா , இவ என் பொறுமைக்கு சோதனை வைக்கிறாளே," என்று நொந்து கொண்டான் ...

"இங்க என்ன பாருடி ", என்று அவளிடம் கோவத்தில் கத்தினான் ...
அவளும் பயத்துடன், கைகள் நடுங்க அவனின் உயரத்திற்கு அவள் தலையை இமிர்த்தி பார்த்தாள் ...

"நான் உன் புருஷன் தான ?" என்று அவள் கழுத்தினில் அவன் கட்டிய தாலியை வெளி எடுத்து காட்டி கேட்டான் ...
அவளும் அவனிடம் இருந்து மேலும் இரண்டு அடி பின் சென்று நின்றாள் ...
உடனே அவளின் கைகளை அழுத்தமாக பிடித்து அவளின் அருகில் சென்று நின்று கொண்டே அவளிடம் பேச ஆரம்பித்தான் ...
அவளிற்கு அதன் பிறகு எங்கு இருந்து அவன் கேள்விக்கு வாய் திறந்து பதில் பேச முடியும்.

"நான் இல்லன்னுனு சொன்னானா"

"என்னவோ அப்டியே பயந்து ஓடுற, மத்தவங்க கிட்ட நல்லா பேசுற தானா , என்ன பார்த்த எப்படி தெரிது ?"
"அவர்களும் நீயும் ஒன்னடா ,"

"ஏதோ ஒரு சிட்டுவேஷன் , மேரேஜ் நடந்துடுச்சு , ஆனாலும் இந்த லைப்ல நீயும் நானும் இனி ஒண்ணா தான் ட்ராவல் செய்யணும் ..."
"அதுல உனக்கு ரொம்ப வருத்தமோ..."

"சோ இப்டி பக்கத்துல வரும் போது இப்டி ரியாக்ட் பண்ணாத"
"பண்ணாம ? "
என்று மனதினில் நினைத்து அவளின் பெரிய கண்களை மேலும் அகலமாக விரித்து அவனை பார்த்தாள் ...

இப்டி முட்டை கண்ண முழிச்சி பாக்காதடி , என்று ஆதி அவனின் கோவத்தை விட்டு அவளின் முழிப்பில் சிரித்து விட்டான் ...

"நம்ம இரண்டு பேரின் மனசும் இணையமா நம்ம இரண்டு பேருக்கும் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது சரியா, சோ இப்போ இதை பற்றி கவலை இல்லாம ரிலாக்ஸா இரு ... "என்று குழந்தைக்கு எடுத்து சொல்வது போல் கூறினான் ...

"நான் இவ்வளவு பேசுறேன், நீ வாயே திறக்காத ,"
"நான் பேசலனு உனக்கு தெரியுமா," என்று மனதிலே அவனிற்கு கவுண்டர் குடுத்து கொண்டாள் ...
"நான் எங்க இருந்து பேசுறது, நீ என் கைய விடு டா... வாய திறந்தா காத்து தான் வருது ... நீ பக்கத்தில வந்த மட்டும் தான் இப்டி ...

"நாளைக்கு காலையில சீக்கிரம் ஊருக்கு போகணும் , நீ ரெஸ்ட் எடு , வேற டிரஸ் இருந்த போட்டுக்கோ அங்க ட்ரெஸ்ஸிங் ரூம் இருக்கு என்று அங்கு இருந்து வேறு ஒரு சிறிய அறையை காட்டினான் ...

"இன்னும் ஒரு சுடி தான் இருக்கு நாளைக்கு அது தான் போடணும் , வேற டிரஸ் இப்போ மாத்துன , நாளைக்கு என்ன பண்றது?" என்று நினைத்து, ஏதும் கூறாமல் எல்லா பக்கமும் மண்டையை ஆட்டி வைத்தாள் ...

"உங்க பெரியப்பா கண்டிப்பா நம்ம மேரேஜ்க்கு ஆசிர்வாதம் பண்ணுவார் , நீ இனி அங்க வீட்டை பற்றி கவலை படாத , அங்க நடக்க போறத பற்றி, நினைச்சிட்டு இருக்காதா சரியா, என்றான் ...
"அட போடா , அவர் ஆசீவாதம் எப்பவும் எனக்கு இருக்கும், பெரியம்மா என்ன சொல்வாங்களோனு எனக்கு பயமா இருக்கு, அவங்க என்ன வேணும்னா சொல்லட்டும், ஆனா உங்க யாரையும் எதுவும் சொல்வாங்களோனு, நானே பயந்து கெடக்குறேன்..."

அவளின் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய, அவளின் சிவநேசன் குடும்பத்தை பற்றி மட்டும் லீலா ஏதும் தவறாக கூறி விட கூடாது என்பதில் அபி கவலை அடைந்தாள் ...

"நாளை ஈவினிங் இங்க வந்துடனும், , அதனால அங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது, உடனே அங்க இருந்து கிளம்புரோம்னு , தப்ப நினைக்காத "
" இல்லனா மட்டும் மாப்பிளைனு உனக்கு எங்க பெரியம்மா விருந்து வைப்பாங்க பாரு ..."

"நான் எவ்வளோ பேசுறேன், வாய திறடி"...
"கை ........ கை விடுறீங்களா," என்று ஒரு வழியாக திக்கி திணறி பேசிவிட்டாள் ...

"ஓஹ்! மேடம்னுக்கு , நம்ம தொடுகை டிஸ்டர்ப் பண்ணுதோ," என்று ஏக குஷி ஆதிக்கு , ஆனாலும், அவளை தொந்தரவு செய்யாமல் , கையை விட்டான் ...

"அபி போய் படு , எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் தூங்க லேட் ஆகும்," என்று கட்டிலை காட்டினான் ...
அபி ஏதும் கூறாமல் ஒரு தலையனை , மற்றும் ஒரு போர்வை எடுத்து கீழ போட்டு படுக்க சென்றாள் ...

"அபி இங்கயே படு, இந்த ஊரு கிளைமேட் ரொம்ப சில் ..."
"ஆரம்பத்தில் தெரியாது, ஆனா திடிர்னு கோல்டு ஆகிடும்..." என்றான் அக்கறையாக ...
"அபி இல்ல வேண்டாம்," என்று அங்கேயே படுத்தாள் ...

அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைப்பதற்கு அவனிற்கு ஒரு நொடி கூட ஆகாது , ஆனாலும் அவளின் மன குழப்பம் புரிந்து , ஏதும் கூறாமல் அவள் தூங்கட்டும் என்று விட்டு விட்டான் ...

அபியும் புது இடம் , கண்களை மூடி , நேரத்தை ஒட்டி கொண்டே நள்ளிரவு தாண்டிய பிறகே உறங்கினாள் ...
அது வரை பாலகணியில் லேப்டாப் வைத்து வேலை செய்து கொண்டிருந்த ஆதி அவளின் சீரான மூச்சினை பார்த்து விட்டே அவள் தூங்கியதை உறுதி படுத்தி கொண்டு , ஒரு போர்வை எடுத்து , அபி படுத்து இருக்கும் இடத்திலே, சிறிது இடை வேளி விட்டு அவனும் படுத்து கொண்டான் ...

அவளை பார்த்து கொண்டே படுத்தவனுக்கு , பல நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் ...

பொக்கிஷத்தை இழந்து நிம்மதி இல்லாமல், அலைபாய்ந்த மனதில், பல வருடம் கழித்து மீண்டும் அவன் கைகளிலே வந்து சேர்ந்தது போன்று , நிம்மதியாக உறங்கினான் ...

சுந்தரத்தின் வீட்டிலே கண்களில் கொலை வெறியுடன் , இவர்களை பழி வாங்க துடித்துக்கொண்டிருக்கும் பிரேமாவை பற்றி அறியாமல் ...
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னுமா இந்த பிரேமா மூதேவி திருந்தலை?
நிஷாதான் டெல்லி போயிட்டாளே
இவள் ஆதியை எப்படி பழி வாங்குவாள்?
ஒருவேளை குழந்தை பிறந்ததும் அபியை துரத்தி விட்டுட்டு நிஷாவை ஆதிக்கு கல்யாணம் செய்ய இந்த கேடுகெட்ட பிரேமா நினைக்கிறாளோ?
அப்போ குழந்தையை என்ன செய்வாள்?
இந்த பீடைதான் இப்படின்னா அபிக்கு நல்ல வாழ்க்கை கிடைத்த வயிற்றெரிச்சலில் அந்த லீலா பெரியம்மா பீடை என்ன செய்யுமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top