என் இதய விழி நீயே 29 1

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் , நான் வந்துட்டேன் , உங்களின் விருப்பம் மற்றும் கருத்து, தெரிவித்த அனைவருக்கும், மிக்க நன்றி..
பிரெண்ட்ஸ் அடுத்த பகுதி கொடுத்துட்டேன் ,ப்ளீஸ் , உங்களின் கருத்து மிகவும் தேவை ..


All
be safe dears

என் இதய விழி நீயே 29 1


மூன்று மணி நேர மயக்கத்திற்கு பிறகு பிரேமா கண் திறந்து பார்த்தார் , ஒரு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருப்பது தெரிந்து கொண்டார் ..
அங்கு அபி ஒரு ஓரத்தில் அமர்ந்து இருபது தெரிந்ததும், அவரின் கோவம் அதிகமானது ..

"ஹே, உன்னை யாரு என்னை அட்மிட் பண்ண சொன்னா , உன்னால தான் எனக்கு இந்த நிலைமையே ," திடீர் என்று அமைதியான அறையில் , பிரேமாவின் குரல் கேட்டதும், முதலில் பயந்த அபி, பிறகு, பிரேமா மயக்கம் தெளிந்தது கண்டு, அவரின் அருகில் சென்றாள் ..

அவர் திட்டியதை எல்லாம் விட்டு விட்டு ," இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு?" "ஸ்ட்ரெஸ், bp அதிகம் ஆகிடுச்சு டாக்டர் சொன்னாங்க , நான் போய் நர்ஸ் கிட்ட சொல்லிட்டு வரேன்," என்று வெளியே செல்ல திரும்பினாள் ..

"நில்லு டீ , உன்னால தான் ஸ்ட்ரெஸ் போதுமா , போய்டு இந்த ஊற விட்டு" ..
அபிக்கும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டி நிறைய இருந்தது ..
கம்பெனியில் திடீர் என்று, பிரேமா மயக்கம் அடைந்ததும், ஒன்றும் தெரியாமல் , ஸ்ரீக்கு அழைத்து தகவல் கூறி, ஷோரூமிற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்து விட்டாள் ..

பிறகு, ஆதிக்கு அழைத்தாள் , அவனின் போன் தொடர்பில் இல்லை ..
ஸ்ரீயும், சரனும் அவளின் கூடவே இருந்ததால் , அபி சிறிது பயமின்றி இருக்க முடிந்தது ..

சரண் இவர்களை விட்டு விட்டு , கம்பெனிக்கு சென்று விட்டான், ஏதேனும் தேவை படுமானால் அழைக்குமாறு ..
வெளியே பிரேமா கத்திக்கொண்டிருப்பது ஸ்ரீகும் கேட்டது ..

ஆனால், உள்ளே செல்லாமல், அவர் அபி மீது மட்டும் ஏன் தான், இவ்வாறு இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவே அமைதியாக இருந்தாள் ..
"நான் என்ன ஆண்ட்டி செய்தேன்?"
" என்ன செய்யல்ல , இல்ல தெரியாம தான் கேட்கிறேன், உன்னை யாரு ஆதி கல்யாணத்திற்கு வர சொன்னா?" ..
"ஏன் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும், இந்த கம்பெனி , காம்பெல்க்ஸ் , எல்லா நான் தானே பார்த்துட்டு இருந்தேன், நீ வந்ததும், ஏன் உன் கைக்கு வரணும்..
எல்லாம் உன்னால தான் .."

"ஆண்ட்டி , நீங்க சொல்றதுல ஏதாவது, லாஜிக் இருக்கா நீங்களே சொல்லுங்க , இது உங்க வீட்டு சொத்து இல்லை, இது அடுத்தவங்க பொருள், அதுக்கு ஆசை படலாமா , இதுல என் மேல தேவை இல்லாம கோவம் வேற, " அபிக்கு, பிரேமாவின் உடல் நிலை, அவரின் கவலை இதை எல்லாம் நினைத்தால் பாவமாக தான் இருந்தது ..

அவரிடம் பொறுமைகவே பேசினாள் , அவரின் கவலை எல்லாம் தேவை இல்லாதது, என்று புரிய வைக்க முயற்சித்தாள் , இனியாவது, அவர் மாறுவார் என்ற நம்பிக்கையில் ..

"உனக்கு என்ன தெரியும், நான் வாழ்ந்த வழக்கையை பற்றி..
நீ, உங்க அப்பா அம்மா, இருந்த வரைக்கும், நல்லா தானே இருந்தே?"
"ஏன்னா , நீ அவங்களுக்கு, ஒரே பொண்ணு, என்னை மாதிரியா , மூணு பொண்ணு, நான் கடைசி, என் அக்கா ங்களுக்கு போக தான் எனக்கு, ஒரு உடை கூட" ..
"கூலி வேலை செய்து தான் எங்க அப்பா எங்களுக்கு சாப்பாடு போடுவாரு, இருக்கிற சாப்பாடு, நாங்க மூணு பேரும் சாப்பிட்டதுக்கு அப்பறம் தான் எங்க அப்பா அம்மா சாப்பிடுவாங்க" ..

"படிப்பும், ஏதோ ஒரு ஸ்கூல், என்னோட முதல் அக்கா தலை எடுத்ததும் கொஞ்சம் கஷ்டம் தீந்தது ..
அப்பவும் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை "..

"எனக்கு எப்பவுமே, நிறைய ஆசை , ஆனா என்னோட இளமை காலம் எல்லாம் இப்படி ஏழ்மையிலேயே போய்டுச்சு" ..
"அப்பறம் இரண்டு அக்காவும், கொஞ்சம் வீட்டை ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தும், அவங்க அவங்க கல்யாண் வயசு , நெருங்கி அப்படியே ஒவொருவரும் ஒரு வாழக்கைனு , அமைச்சு கொடுத்தார் எங்க அப்பா "..

"அந்த வாழ்க்கை எங்க அக்காங்களுக்கு வேணும்னா பெருசா இருக்கலாம் , ஆனா எனக்கு வெறும் மாசம் சம்பள காரண தானே கல்யாணம் செய்து இருக்காங்கனு தான் தோணுச்சு" ..

"எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை இருக்க கூடாதுனு நான் ரொம்ப உறுதியா இருந்தேன் ..
கடைசில, மளிகை கடை வைத்து இருக்கிறவருக்கு என்னை கல்யாணம் செய்து கொடுத்தா , எனக்கு எப்படி இருக்கும்.."

"அதுவும், அப்பா ரெண்டு புள்ளைன்னு, மூணு பேரும் ஒரு கடையையே வெச்சி நடத்திட்டு வந்தா , எனக்குன்னு என்ன இருக்கு சொல்லு" ..
"உங்க அத்தை மட்டும், அம்மா வீட்டுக்கு வருவா, நகை நட்டோட , நான் வெறும் கழுத்தோட இருக்கும் போது , இவளை அப்படியே சீரும் சிறப்புமா பார்க்கும் போது , எனக்கு பத்திட்டு வரும்" ..

"உன் மாமனார் தான் கொஞ்சம் லோனுக்கு ஏற்பாடு செய்து,, இந்த குடும்பத்துக்கு உதவுனாரு"..
அப்படியே கடையும் பெருசா ஆச்சு..

"எனக்கு அப்போ தான் நிஷா பொறந்தா" ..
ஆனாலும், எனக்கு அந்த வருமானம் பத்தலை , அது ஏன் தப்பு இல்லை ..
இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு பிடிக்கலை , அதுக்கு நான் காரனும் இல்லை , என்னோட ஏழ்மை தான் காரணம்..

"எனக்கு ஒரு எண்ணம் இருந்துச்சு , மாமனார் வீட்டுக்கு உதவுற, சிவநேசன் மேல எனக்கு ஒரு ஆசை வந்துச்சு ", "என்ன?" அபி இந்த வார்த்தையில் அங்கே காது பொத்தி கொண்டு அமர்ந்து விட்டாள் ..

"சித்தி , ஆவேசத்துடன், அறைக்குள், ஸ்ரீ நுழைந்தாள் , முதலில் பயந்தாலும், பிரேமா பிறகு, அலட்சியமாக, என்ன தப்புனு , கேட்கிறேன்,"
" உன் சித்தப்பா எனக்கு எங்கேயேவாது, பொருந்துரா, என் அழகு என்ன , போயும் போயும் பிச்சைக்கார குடும்பத்தில கொடுத்தாங்க "..

"எனக்கு எப்பவுமே பூரணி மேல பொறாமை, அந்த வாழ்க்கை எனக்கு கிடைத்து இருந்தா , அப்டினு என்னால நினைக்காமல் இருக்க முடியல, இப்படி நினைக்க போய் தான், கடைசில, சிவநேசனையே நினைக்க ஆரம்பிச்சிட்டேன்"..

"அவன் என்னவோ, பூரணி தான் அவன் உலகம்னு, அவன் பொண்டாட்டிய அப்படி தாங்குறான்"..
"என் அழகு எல்லாம் அவன் கண்ணுக்கு தெரியாமயே போய்டுச்சு".
அப்படி அவன் மட்டும் மயங்கி இருந்தனா ,எவ்வளவோ பணம் நகைன்னு, நான் அனுபவிச்சி இருப்பேன் .."
"இந்த வீட்டுக்கு தெரியாம அவன் எப்படியோ வளைக்க பார்த்து, எதுவும் வேலைக்கு ஆகல,ஹம்ம"..

"உன் சித்தப்பா கூடயும் ஒன்றி வாழ முடியாம நான் படுற பாடு எனக்கு தான் தெரியும் "..
"ஒவ்வொரு முறையும், வேற வழி இல்லாம சிவநேசனை அண்ணனு கூப்பிட் ற வேதனை எனக்கு தான் தெரியும்," என்று அழுக ஆரம்பித்தாள்..
உன் மாமியாரும், உன் அம்மாவும், அப்போவே சம்மந்தி கனவு காண ஆரம்பிச்சிட்டாங்க , அது எப்படியோ தெரிஞ்சி, அது இல்லாம, செய்தேன்..
ஆதிக்கு, உன் மேல விருப்பம் தெரிஞ்சி, உன்னை அங்க வர விடாம செய்தேன் ..

"கொஞ்ச நாளுல , உன் மாமியாரும் போய் சேர்ந்துட்டா , அப்பவும், அந்த ஆளு,அவன் பொண்டாட்டி போட்டோ முன்னாடியே கதியேனு கடந்தான், என்ன திரும்பி கூட பார்கலேயே," என்று அவரின் கேவலமான ஆசையை , வருத்தமாக இருவரிடமும் கூறிக்கொண்டிருந்தார் ..
அந்த ஆள நெனச்சி,என் இளமை காலம் தான் பழ போச்சு , உன்

சித்தப்பாவோடயும் சேர்ந்து வாழ முடியால , அதான் வீட்டுல இருக்க பிடிக்காம, அப்படியே சமூக சேவைன்னு, உன் சித்தப்பாக்கு டிமிக்கி குடுத்து அந்த கருப்பன் மூஞ்சிய பார்க்காம போய்டுவேன் வெளியே "..
"நிஷாக்கு ஆதியோட கல்யாணம் நடந்தா கூட, அவளுக்கு இந்த பிசினெஸ் எல்லாம் விருப்பம் இல்லை , சரி நான் பார்க்க ஆரம்பிச்சா , அப்டியே என் கைக்கு வர மாதிரி நான் செய்து இருப்பேன்..
கடைசில நடுவுல நீ வந்து எல்லா நாசமா போச்சு ," என்று இறுதியில் அவ்வளவு ஆவேசத்துடன் ன் கத்தினார் ..

ஸ்ரீக்கு அவள் சித்தப்பாவை நினைத்து, மிகவும் வருத்தமாக இருந்தது ..
"ச்சீ, நீயெல்லாம் என்ன ஜென்மம் , இப்படி அடுத்தவங்க பொருளுக்கு ஆசை பட்டதும்,இல்லாம மனசுல இவ்வளவு விஷத்தை வெச்சி இருக்கியே ..உன்னை பற்றி நான் இப்போவே எல்லாம் சொல்றேன்னா இல்லையா பாரு.

"என்ன ஸ்ரீ , மரியாதை இல்லாம போச்சா , ஆசை படுறதுல என்ன தப்பு சொல்லு , என்னை பற்றி சொல்லுவியா போ, போய் சொல்லு, என்னனு சொல்லுவே, உன் மாமனார் மேல ஆசை, அவர் சொத்து மேல கண்ணுனு ,

உங்க சித்தப்பா கிட்ட சொல்லுவியா , தரலாமா சொல்லு," என்றார் அவ்வளவு நக்கலாக ..
ஆமா ,, எப்படி சொல்லுவாள் , விஜயன் எவ்வாறு தங்குவார் இதனை எப்படி ஸ்ரீ யால் சொல்ல முடியும்..
ஸ்ரீயின் அழகுரல் , அபியை,அதுவரை, அதிர்ச்சியில் இருந்து அவளை திரும்பி பார்க்க வைத்து ..

"அக்கா , இந்த மாதிரி தேவையில்லாத பிறவி முகத்தை பார்த்து பேசுறது எல்லாம், நமக்கு, தான் பாவம், என்ன செய்ய முடியும்னு பார்க்கலாம் வாங்க அக்கா , இங்க இருக்கிறதே வேஸ்ட் ," என்று அபி தான் ஸ்ரீயை , அமைதி படுத்தி அழைத்து சென்றாள் ..

"அக்கா ஆதியும் சந்தீப்பும், அந்த மற்ற ஒர்க்கர்ஸ் பார்க்க போய் இருக்கிறதா இப்போ தான் சரண் சொன்னாரு, அவங்க கிட்ட இருந்து, ஏதாவது கண்டு பிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்," வாங்க..
இந்த கம்பெனி, விஷயத்துல அவர்கள் பற்றி நம்ம வீட்டுல சொல்ல முடியும் , என்று ஸ்ரீயை அழைத்து சென்றாள்..

ஆதியும் சந்தீப்பும், சந்தோஷை பற்றி விசாரிக்க சொல்லி இருந்து டிடெக்ட்டிவ் , அவனை பற்றி சொல்லிய தகவலில், அவனும் மற்ற ஆட்களும் ( பிரேமா வேலைக்கு வைத்த ஆட்கள் ), போலீஸிடம் மாட்டினர் ..
பிறகு ஆதியும் சந்தீப்பும் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மீண்டும் போலீசிடம் இருந்து வந்த அழைப்பில் , ஆதி அங்கு சென்றான் .

"ஹாய் சார் , ஜஸ்ட் நொவ் வீட்டுக்கு போனோம், அதுக்குள்ள , உங்க கால்," என்றான் ஆதி போலீசிடம் ..
" ஹம்ம, காலையில் , ஒரு பொண்ணு கிட்ட வம்பு செய்தது, என்ஜின் திருடுறதுனு தான் நீங்க கம்ப்ளைன்ட், இருந்துச்சு, பட் நீங்க சந்தோஷ் எச் ஆர் பற்றியும் , நீங்க விசாரிச்சு வெச்சதை பற்றியும் சொன்னதும், எங்களுக்கும் டவுட் வந்து இவனுங்கள விசாரிச்சா ,நம்ம எதிர்ர்பார்ததை விட , ரொம்ப பயங்கரமான ஆளுங்க சார் இவங்க"..

"இவங்க நாட்டுக்கு புறம்பான செயல்ல இருக்காங்க , பொண்ணுங்கள, கிட்னாப் பன்றது, அவங்கள வெளி நாட்டுக்கு கடத்துறது , இந்த மாதிரி செய்துட்டு இருக்காங்க"..
"அவங்கள பிளாக்மெயில் செய்து பணம் சம்பாரிக்கிறது , இந்த மாதிரி , வெளி உலகத்துக்கு, அவங்க சாதாரண ஆளுங்கள தெரியணும்னு, உங்க கம்பெனி சூஸ் செய்து அங்க வேலை பார்க்கிறாங்க..

இவங்க எல்லாரையும் வேலைக்கு எடுத்தது , எச் ஆர் சந்தோஷ் தான் , அவர் தான் இவங்குளுக்கு ஹெட் , மறந்தும், பிரேமா தான் அந்த சந்தோஷை உள்ளே விட்டது என்று சந்தோஷ் போலீசிடம் கூறவில்லை ..

"ஓகே சார் சந்தோஷ், எப்படி இங்க வந்தாரு," என்று ஆதிக்கும் குழப்பம்..
"அவனை நாங்க எல்லா விதத்திலும் விசாரிச்சிட்டோம் சார் , உங்க கம்பெனி, நல்ல பேருல இருக்கிறதால , இதுக்குள்ள வந்தா பிரெச்சனை இல்லனு, இங்க ஜாயின் செய்துட்டு , அவங்க ஆளுங்களையும் உள்ள வர வெச்சிட்டான் .."

"நாங்க சைபர் கிரைமுக்கு , தகவல் சொல்லிட்டோம், அவங்கள இன்னைக்கு ஈவ்னிங் , ஹாண்ட்டோவேர் செய்திடுவோம் ," என்றார் ..

இவங்க எல்லாம் நாளையில் இருந்து வேலைக்கு வேணாம்னு தான் இருந்தேன், ஏதோ ஒரு சந்தேகம்,அதான் அந்த எச் ஆர், அப்பறம் இவங்க , எல்லார் பேர்லயும் உங்களுக்கு கம்ப்ளெயிண்ட் செய்தேன், பட் இவ்வளவு மோசமலாம் நான் நினைத்து பார்க்கல," என்றான் ஆதி..
எனிவே , ஆதி, எப்படியோ இதனால் , நீங்க நாட்டுக்கு நல்லது செய்து இருக்கீங்க," என்ற பாரட்டலில் , அவரிடம் இருந்து விடைபெற்றான்..
வீட்டினுள் வந்ததும், அபியிடம் அனைத்தும் கூறிவிட்டான் ஆதி..

ஸ்ரீ அப்படியே கலங்கிய முகத்துடன் அமர்ந்து இருப்பது கண்டு அப்பொழுது தான் அவளின் அருகினில் சென்று, "அண்ணி , என்னாச்சு , உடம்பு ஏதும் சரில்லையா , என்று அவளின் நாடி பிடித்து பார்த்தான் "..

ஸ்ரீ அவனை நிமிர்ந்து பார்த்து, "ஆதி , என்ன எதுவும் கேட்காத, ஆனா இதுக்கும் பிரேமா , உன் சின்ன அத்தைக்கும் சம்மந்தம் இருக்கு , என்னனு கண்டுபிடி, உங்க அண்ணனை அங்கேயே இருக்க சொல்லிடு, இங்க வர வேண்டாம் , நானே எனக்கு தோணும்போது வீட்டுக்கு போறேன் ," என்றதோடு அறைக்குள் சென்று விட்டாள் ..

அபி குழந்தைக்கு , சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தாள் , ஏதும் பிரேமாவை பற்றி கூறாமல் ..
எங்கு அர்ஜுனிடம், தன்னையும் மீறி ஏதேனும் கூறி விடுவோமோ, என்று அவளின் வீட்டிற்கு செல்லாமல் , இங்கு ஆதி வீட்டிலே இருந்து கொண்டாள், ஸ்ரீ ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top