என் இதய விழி நீயே 18

Advertisement

achuma

Well-Known Member
என்ன திட்டுங்க பிரென்ட்ஸ் , சரியாய் ஏபி குடுக்க மாட்டுறேன்னு , சாரி ,பிரென்ட்ஸ், இனி ஞாயிறு , செவ்வாய் வியாழன் ,கரெக்டா அப்டேட் கொடுக்குறேன் ...
இந்த ஒரு முறை என்ன போனா போடுதுனு விட்டுடுங்க ...

rendu update kudukkuren be safe
bye:)(y)


புயல் அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது அங்கு லீலாவின் வீட்டில் ...

அந்த சூழ்நிலையிலும் கமலா தினேஷிற்கு, அபியின் திருமண தகவல் அனுப்பி வைத்தாள் ...

ராமமூர்த்தி லீலாவை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார் ...

லீலாவிற்கு அது மேலும் கடுப்பை கிளப்பியது ....

அனு அவளின் அம்மாவை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் அறைக்கு சென்று விட்டாள் ...

அவ எப்படி வாழலாம், என்றே லீலாவின் சிந்தனை ஓடியது ...

அவளுக்கு நல்ல வாழக்கை கிடைத்து விட்டதே என்று வயிற்று எரிச்சலில் புலம்பி கொண்டிருந்தாள் ...

அனைவரும் வீட்டிற்கு செல்லும் வரை யாரும் ஒருவருடன் ஒருவர் பேச கூட வில்லை . ஆதி மட்டும் அபியின் கைகளில் மிகவும் அழுத்தமாக பற்றியவாறு அவளின் அருகினில் அமர்ந்து வந்தான் ...
அந்த அழுத்தம் அபிக்கு ஆறுதலா அல்லது அவனிற்கே ஆறுதல் தேவைப்பட்டதா என்று தெரியாத அளவிற்கு அவனின் நிலை ...

நெஞ்சினிலே ஏதோ ஒரு பெரிய பாரம் ஒன்று ஏற்பட்டது போன்று அனைவரின் நிலையும் இருந்தது...

போகும் போது இருந்த நிலை அங்கு யாருக்கும் இல்லை ...

அர்ஜூனால் வண்டி ஓட்ட இயலாது என்று கூறியதால் , திவ்யாவே அந்த சூழ்நிலையினை கையில் எடுத்துக்கொண்டாள் ...

திவ்யாவே வண்டி ஓட்டிகொண்டு வந்தாள் ...

க்ரிஷ்னகிரி அருகினில் ஓர் ஹோட்டலில் வண்டி நிறுத்தி ஆரவ்க்கு மட்டும் பால் வாங்கி குடுத்தாள் .

பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்தும் ஆளுக்கு ஒரு மூலையில் சென்று ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தனர்

ஸ்ரீக்கு அழுகையை அடக்கும் வழி இன்றி விசும்பி கொண்டே இருந்தாள் ...

தெரிந்தே அபியை இக்கட்டில் விட்டு விட்டோமோ என்று மிகவும் வருந்தினாள் ...

அவளின் பெற்றோரிடம், வேண்டியதை கேட்டு , பிடித்ததை உண்டு, விரும்பியவனை கைபிடித்து , என்று அனைத்தும் தனக்கு கிடைத்ததே, அபியையும் , தன்னுடனே வைத்திருந்தால் இவ்வாறு அவளுக்கு இன்னல்கள் ஏற்பட்டிருக்காதே என்று அர்ஜுனிடம் புலம்பினாள் ....

ஸ்ரீ யின் புலம்பல்களை கேட்ட பின்பே அனைவரும் சற்று நடப்பிற்கு வந்தனர்....

அதுவரை அபி , பற்றிய சிந்தனையில் இருந்தனர் ...

ஆதியின் அருகில் அபி அமைதியாக அமர்ந்து இருந்தாள் ...

சிவநேசன் அபியின் அருகில் சென்று, அவளின் முன் நின்று, இரு கை கூப்பி மன்னிப்பு கூறினார் ...
"அபி , என்ன மன்னிச்சுடு மா , உன்னோட வீடு, உன் பெரியப்பா, அப்படினு தான் , அவங்க உன்ன நல்லா பார்த்துப்பாங்கனு , உன்ன விட்டு வெச்சேன் ...

ஆனா , உனக்கு இவ்வளவு கொடுமை நடக்கும் தெரிந்து இருந்தா , உன்ன அங்க விட்டு இருக்க மாட்டேன் மா ...

எனக்கு மன்னிப்பு இருக்கா , எனக்கே தெரியல , என்று அவரும் அழுதார் ..."

சிவநேசன் கை கூப்பியதுமே, பதற்றம் அடைந்த அபி அவரின் கைகளை பிடித்து கொண்டு, வேண்டாம் மாமா என்று கூறினாள் ...

"மாமா உங்க மேல எந்த தவறும் இல்ல , நான் வரேன் என்ன அழைச்சிட்டு போங்கன்னு, ஒரு வார்த்தை சொன்னா நீங்க என்ன அழைச்சிட்டு போய் இருக்க மாட்டிங்களா ..."

"எனக்கு இது பழகிச்சிடுச்சு மாமா , எனக்கு என்ன வருத்தம் என்றால் , உங்கள மரியாதை இல்லாம பேசிட்டாங்க , நீங்க யாருனு தெரிந்தும், அவங்க உங்களுக்கு மரியாதை கொடுக்கலை , அது தான் எனக்கு வருத்தமா இருக்கு ...

அதுக்கு நான் தான் மன்னிப்பு கேட்கணும் மாமா ....
நடந்த எதையும் மாற்ற முடியாது, அதனால , இந்த விஷயத்தை இதோட விடுங்க மாமா ...
ப்ளீஸ் ," என்றாள் ....

அதுவரை மின்சாரம் பாய்ந்தது போன்று உறைந்து நின்ற ஆதியை ,சிவநேசன் அழைத்தார் ...
ஆதி , சிவநேசன் அழைத்ததும், அவரின் பக்கம் திரும்பி நின்று என்ன என்பது போன்று பார்த்தான் ...

உண்மையில் அபியை விட அவனிற்கே ஆறுதல் தேவை , அவனின் நிலை அவ்வாறே இருந்தது ...

அங்கு லீலாவிடம் சண்டை போட்டாலும் , அபிக்கு சரியான உணவு கொடுக்காதது , அவளின் காலுக்கு சூடு வைத்தது , இன்னும் அங்கே இருந்தால் , அவளின் நிலை, இதை பற்றிய பயமே அவனிற்கு இருந்தது ...

சிவநேசனின் அழைப்பே ஆதியை நடப்பிற்கு கொண்டு வந்தது ...

"இனி அபியை நீ தான் பார்த்துக்கணும் பா, பத்திரம் " என்றார் ...
ஆதிக்கு , அவ்வார்த்தை , இனியாவது அபியை பார்த்துக்கொள் , என்பது போன்று இருந்தது ...

"ஹ்ம்ம்," என்று மிகவும் இறங்கிய குரலில் கூறினான் ...

திவ்யாவினால் , ஆதியின் நிலை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடிந்தது ...
உடனே சந்தீப்பிற்கு அழைத்து அனைவர்க்கும் உணவு வாங்கி வருமாறு கூறினாள் ...

சந்தீப்பின் பைக் சத்தம் கேட்டதும், திவ்யா வீட்டிற்கு வெளியே சென்று, அவன் வண்டியில் இருந்து இறங்கும் முன்னே அவன் தோல் சாய்ந்து கதறி அழுதாள் , அதுவரை வீட்டில் இருப்போரை பார்த்தவள் , அவளின் கவலையை யாருக்கும் காட்டாமல் , அனைவரையும் தேற்றுவதிலே இருந்தாள் ...

சந்தீப் வந்ததும் இனி அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில், அவளின் மன பாரம் அனைத்தும், அங்கு சென்று வந்தது முதல், அபியின் வாழ்க்கை அங்கு எப்படி இருந்தது வரை அனைத்தும் கூறி முடித்தாள் ...

சந்தீப் , ஏதேனும், சொல்லாமல் திருமணம் நடந்தை பற்றிய பிரெச்சனையாக இருக்கும் , சமாளிக்கலாம் என்பது வரையே அவன் நினைத்தது...

ஆனால் அபி , அவள் பெரியன்னையின் கொடுமை , இது அனைத்தும் கேட்டதும், அவனிற்கு ஆதி மீதே கோவம் வந்தது ...

காதலிக்கும் பெண் என்று தெரிந்தும், அவளை இக்கட்டில் விட்டு சென்றது , இவனின் வருத்தமே பெரிது என்று இருந்தது, அனைத்தும் ஒருசேர ஆதி மீதே கோவம் கொண்டான் சந்தீப் ...

"நம்ம எவ்ளோ ஜாலியா இங்க இருந்து இருக்கோம், சந்தீப், அந்த பொண்ணு, இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா , இது தெரியாம இவங்க பேமிலி என்ன பெரிய பேமிலி பிரெண்டுனு சொலிக்கிறாங்க ...
அபி யாருக்கும் சொல்லல தான் , அங்கிள் கூட ரொம்ப வருத்த பட்டாரு, ஏன் அபி எதுவும் சொல்லலன்னு ,"ஆனாலும் எனக்கு இவங்க மேல கோவம் தான் ...
அங்க அந்த லேடி சரியான சைக்கோ சந்தீப் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top