என் இதய விழி நீயே 17

Advertisement

achuma

Well-Known Member
late update kudukuraen sorry

next is here

pls read friends

takecare all






அதுவரை வாயே திறக்காமல் இருந்த அபி, " எனக்கு பெரியப்பா இங்க விட்டுட்டு போக பயமா இருக்கு," என்று அவளையும் அறியாமல் உளறி கொட்டியதிலே அங்கு என்ன நடந்து இருக்கும் என்று ஓரளவு , ஆதி மற்றும் சிவநேசனால் , புரிந்து கொள்ள முடிந்தது ...

பிறகு ஆதி அங்கு ஒரு ஓரத்தில் அபியை மற்றும் சிவநேசனை அழைத்து சென்று அவன் லீலா மிரட்டியதை பற்றி கேட்டதில் அபி , அவரின் பேச்சிக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் , வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் பெரியப்பவை எங்கேனும் ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறினாள் ...



அதனாலே சிவநேசன் அழைத்ததற்கு கூட இங்கு இருப்பதாக கூற வேண்டியாதாயிற்று , என்று கூறினாள் அபி ...( என்ன ஒரு சைக்கோ புத்தி லீலாவிற்கு ) அபி.

ஏதோ ஆதி எப்போவும் கூட இருபேன் என்றது அபிக்கு தனி தைரியம் வந்து விட்டது...அதனாலே அனைத்தும் கூறி விட்டாள் ...
சே இப்படியும் ஒரு பொம்பளையா என்று தான் இருவருக்கும் தோன்றியது ...
"இங்க பாரு அபி அவர் உயிர்க்கு எந்த ஆபத்தும் வராது, இவங்க வெறும் வாய் பேச்சுன்னு இப்போ புரியுது, உன்ன இங்க இருக்க வெச்சு கொடுமை படுத்த நினைத்து இருக்காங்க , உன் கிட்ட ஒரு சைக்கோ போல பிஹேவ் செஞ்சிருக்காங்க" ...


"எங்களுக்கு இப்டினு ஒரு குறிப்பு குடுத்து
இருக்கலாமே டா ", என்று சிவநேசன் மிகவும் வருந்தினார்.

அதற்குள் அம்புஜம் மாமி அந்த வீட்டிற்குள் வந்தார் ....
அங்கு உடைந்து கிடந்த தொலைக்காட்சி பார்த்து, "ஏண்டி இன்னுமா நீ உயிரோட இருக்க , இந்நேரம் டிவி பார்க்காமா , போய் சேர்ந்து இருப்பியே ," என்று அவரின் கணீர் குரலில் லீலாவை பார்த்து நக்கலடித்தார் ...


இந்த மாமி எங்க இங்க, நம்மள சும்மாவே குறை சொல்லும் , இப்போ சொல்லவே வேண்டாம் ...

"எனக்கு நடந்து எல்லாம் எதுவும் தேவையே இல்ல , ஒரு பொறுப்பு இல்லாத பொம்பளை கிட்ட இருந்து ஒரு பொண்ண ஆண்டவன் காப்பாத்தி இருக்கான் , அனுவை அவங்க அண்ணன் பார்த்துப்பான் , இப்போ நீ என்ன என்ன செய்றேனா , அபிக்கு அவ பெத்தவங்க சேர்த்து வெச்ச நகை பொருள் எல்லாம் நீ ஒழுங்கா கொடுத்துடு ..


உன்ன அப்போவே ஒரு பொண்ணுக்கு கொடுமை பன்றேன்னு போலீஸ்ல புடிச்சி குடுத்து இருப்பேன் , இதோ இந்த பசங்க முகத்துக்குகாக பொறுமையா போய்ட்டேன் என்று அனு மற்றும் தினேஷ் பற்றி நினைத்தாக கூறினார். ...

"என்ன... என்ன நகை, அது எல்லாம் இல்ல", என்று லீலாவின் தடுமாற்றத்திலே அவரின் தவறு அனைவருக்கும் தெரிந்தது ...

அதற்கு மாமி, "இந்த வீடு , அபிக்கும் பங்கு இருக்கு , அப்புறம் நகை, ஒவ்வொரு மாதமும் தேவி என்னை தான்

நகை சீட்டு கட்ட கடைக்கு அழைச்சிட்டு போவா" ...

"புருஷன் வீடு செலவுக்கு குடுக்குற காசுல தேவையான செலவு மட்டும் செய்துட்டு, அதுல அபி படிப்புக்கு, அவ கல்யாணத்துக்குனு, வேங்கடமும், தேவியும் அவளுக்கு எல்லாமே சேர்த்து வெச்சிருக்காங்க" ...

"என் பொண்ணுக்கு எந்த குறையும் இருக்க கூடாது மாமி, அவளுக்கு ராணி போல வாழ்க்கை கிடைக்கனும்னு, தேவி எப்பவும் சொல்லுவா" ...

அபி அவளின் பெற்றோர் நினைத்து அழுது கொண்டே இருந்தாள் ...
ஆனா அவங்க போனதும் நீ அவளை பண்ற பாடு இருக்கே, எனக்கு உன்ன உண்டு இல்லனு பண்ணனும் தோணும்,...


இனி அவளுக்கு விடிவு காலம் வந்துடுச்சு ...

ஒரு பொம்பள எப்படி இருக்கணும்னு தேவி உதாரணமோ, எப்படி இருக்க கூடாதுனு, நீ உதாரணம் ...

உன் கணவனுக்கும், உன் புள்ளைகளுக்கும் நீ அவங்களுக்காக வாழ்ந்தது இல்ல ...

"லீலா உன் பிள்ளைகளுக்காக கூட வாழ மாற்றியே, தினேஷ் ஏதோ வேளைக்கு போறான் வரான் , அனு அவளுக்கு கல்யாணம் வயசு, அது பற்றி ஏதாவது யோசனை இருக்கா, எங்கயாவது விசேஷம்னா , மொத ஆளா , அடுத்தவங்க நகையை போட்டு கிளம்பிற" ...

"ஒரு பிடிப்போடு வாழ்க்கை இல்லாம , பிள்ளை சம்பதனை, வடிச்சு போட அபி , இதான் உன் வாழ்க்கை ," என்று இவ்வளவு நாட்கள் லீலாவின் மீதான எண்ணங்கள் அனைத்தும் மாமி கேட்டு விட்டார் ...

"நான் இப்டி தான் , என்ன பற்றி இதுக்கு மேல பேசனா நல்ல இருக்காது...
ஹே இதோட போடி வெளிய, உன்ன தலை முழிகியாச்சு , நகை அது இதுனுட்டு , அதான் உனக்கு சாப்பாடு போட்டதுக்கு சரியாய் போச்சு , போய் தொலை," என்று அபியை கூறினார் ...

" என்னது சாப்பாடு போட்டீங்களா , அவ ஒரு வேல பழைய சோறு மட்டும் தானே தினமும் போடறீங்க," என்று அது வரை அமைதியாக இருந்த கமலா அறையில் இருந்து வெளி வந்து கேட்டார் . இது அனைவர்க்கும் அடுத்த அதிர்ச்சி மாமி உட்பட ...


"என்ன டீ கமலா சொல்ற , ஆமா மாமி , இங்க ராமா மாமாக்கு கச்சல்னு ஒரு நேரம் வந்து பார்த்துட்டு போன அப்போ, அவரு தண்ணி கேட்டார்னு, சமையல் அறை வந்தேன்"...

"அப்போ அபிக்கு இவங்க பழைய சோறு குடுத்து, தினம் இதை போடறதுக்கு, ஒழுங்கா வேலைய செஞ்ச்சிட்டு காலேஜ் கிளம்புன்னு திட்டிட்டே குடுத்தாங்க" ...


"நான் ஏதாவது கேட்டு இவங்க கோவம் திரும்பும் அபி மேலயே காட்டுவாங்கனு அமைதியா வெளில வந்துட்டேன் ...
அப்போவே எனக்கு இவங்கள ஒன்னும் செய்ய முடிலயேன்னு , எனக்கு செம காண்டு ...


இது அனைத்தும் சேர்த்து வைத்து தான் தினேஷிடம், அன்று பொரிந்து தள்ளினாள் கமலா ...

ஆதிக்கு , உயிரே போய்ய் விடும் அளவிற்கு துடித்து விட்டான், தன் மனதில் ராணியாக வாழும் தேவதியின் நிலை நினைத்து ...

இனி பொறுப்பதற்கில்லை என்று, என் அத்தை மாமா உழைப்பு, அவங்க பெண்ணிற்கு சேர்த்து வைத்த பொருட்கள் அனைத்தும் தருமாறு கேட்டு கொண்டான் ...


அவ்வாறு இல்லை என்றால், இங்கு இருக்கும் இவர்களையே சாட்சியாக வைத்து போலீஸிடம் லீலாவை மாட்டி விடுவதாக மிரட்டினான் ... மேலும் அபியின் பேரிலும் வீட்டிற்கு பங்கு வருமாறு கேஸ் போட்டுவிடுவேன் வேறு பயம் காட்டினான் ...

ராமமூர்த்திக்கு லீலாவால் எந்த பிரெச்சனையும் வரக்கூடாது என்று ஒரு காகிதத்தில் கையெழுத்து வாங்கினான் , லீலாவிடம்...


ஆதி ஒரு பெண்மணியிடம் இவ்வாறு நடப்பான் என்று இது வரை நினைத்ததில்லை ...

லீலாவிற்கு எப்பக்கமும் செல்லும் நிலை இல்லாமல் போயிற்று ...
லீலா அணைத்து நகைகளும் சிவநேசனிடம் குடுத்து விட்டாள் ...

"ஆதி , அபி எனக்கு வர பொண்ணுகிட்ட இது எல்லாம் எதிர்பார்ப்பவன் நானில்லை உனக்கே தெரியும்....


அதற்குள் மாமி இடை புகுந்து, அவங்க உழைப்பு யாருக்கு போகணுமா அவளுக்கு வந்து சேர்ந்து இருக்கு, இங்க உன்ன யாரும் தப்ப நினைக்கில பா , அதுவும் இல்லாம பூரணி வளர்ப்பு, எப்படினு எங்களுக்கு தெரியும்"....

அபி அழுகையை நிறுத்து, இனி உனக்கு சந்தோஷம் மட்டும் தான் வாழ்க்கையில இருக்கனும், உனக்கு தோணும் போது உங்க பெரியப்பா வந்து பார்த்துட்டு போடி, யார் என்ன பண்ண முடியும், நாங்க எல்லாம் இங்க தான் இருக்கோம் ...
பார்த்துக்குவோம் சரியா ", என்று மாமி அபியை சமாதானம் செய்தார்.


கமலாவும் தான் பார்த்து கொள்வதாக கூறினார் ...
அதுவரை லீலாவின் மீது அதிர்ச்சியில் இருந்த அனு , அவளே முன் சென்று, அபியிடம் கை குடுத்து வாழ்த்து கூறி நானும் அண்ணனும் , இங்க பார்த்துப்போம் , என்று புன்னகையுடன் வாழ்த்தினாள் ...

இருக்கும் வரை அபியின் மதிப்பு அங்கு அனுவிற்கு தெரியவில்லை , அவள் செல்லும் நேரம், ஏதோ ஒரு வகை பாசம், சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள் தானே , ஒரு வலி ஏற்பட்டது ...


"இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு," என்று மாமி மகிழ்ச்சை அடைந்தார் ... கமலா மாமி மற்றும் அனு அவர்களை வழி அனுப்பி வைத்தனர் ...

ஆதி அபியின் கைகள் கோர்த்து அழைத்து சென்றான் ...
அங்கு பெங்களூரு நோக்கி சென்றனர்...
யாரும் ஏதும் கூறும் நிலையில் இல்லை ...
அபி அவ்வீட்டில் அவ்வளவு பொறுமையுடன் அணைத்து கொடுமையும் சகித்து வாழ்ந்தாள் என்பதே அனைவர்க்கும் சொல்ல முடியா வருத்தம் ....
ஆதியின் நிலை கேட்கவே வேண்டாம்...
அவனின் கையாலாகாத நிலை நினைத்து அவனிற்கே அவன் மீதே வெறுப்பு வந்தது ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top