என் இதயமே நீ தானே 29

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#1
வீட்டினுள் வந்த இருவருக்கும் பால் பழம் கொடுக்கப்பட்டது. அப்பொழுதுதான் அவன் கையை விட்டாள் திவ்யா.தீபக் கின் பெற்றோர் சென்னைக்கு உடனே கிளம்பி விட்டனர்.

திவ்யாவின் பெரியப்பா வீடு அருகில்தான் என்பதால் அவர்கள் அங்கு சென்று விட்டனர்.சென்னை வீட்டுக்கு நிகராக இதை கட்டியிருந்ததால் எல்லோருக்கும் தனித்தனி அறையில் தங்கிக் கொண்டனர்.

சாந்தியிடம் வந்த கார்த்தி "மா மாமாவோட தோப்பும் நான் வாங்கிட்டேன்ல, நான் பசங்க எல்லாம் அங்க போய் பம்பு செட்ல குளிச்சிட்டு அங்கேயே சமைக்க சொல்லிஇருந்தேன். நாங்க அங்க சாப்பிட்டுகிறோம், நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க."

"கை இன்னும் சரியாகலயேப்பா "

"செந்தூர் , தீபக் இருக்காங்க சமாளிச்சுக்குவேன்" என்றவன் , தாத்தா மடியில் அமர்ந்து சொகுசாக விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையிடம் "பாஸ் ' மங்கி ' பார்க்கப் போலாமா "எனவும் இவனிடம் தாவினான் குழந்தை.

வேட்டி சட்டையோடே இருந்தவனை வேறு உடை உடுத்த சொன்னதற்கு குளித்து முடித்து மாற்றிக் கொள்வேன் என்று விட்டான்.

குழந்தைகள் அதனதன் தந்தைமாரோடு சென்று காரில் ஏறிக் கொண்டனர். பெண்கள் மூவருமே பட்டுப்புடவையை மாற்றிவிட்டு வேறு இலகு உடையாக மாற்றிக் கொண்டனர்.பெரிய கார் என்பதால் எல்லோரும் ஒரே வண்டியில் சென்று இறங்கினர்.

அந்ததோப்பைப் பார்த்தவள் கார்த்தியுடன் வந்த அந்த நாளை நினைத்துக் கொண்டாள். அவனைத் தான் பார்த்துக் கொண்டே இருந்தாள். ம்ஹூம் அவன் அவள் புறம் பார்வையைத் திருப்பக் கூட இல்லை.

திவ்யா அவன் பார்க்கிறான் பார்க்கவில்லை எதையும் சட்டை செய்யவில்லை சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் .

கூடவே வந்த செளமினியும் பார்வதியும் அவளைக் கவனித்து விட்டு தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர்.செளமினி"ஏன்டி எங்கண்ணன இந்த லுக் விடுறியே, எப்படி டீ விட்டுட்டுப் போன. அவங்க முகத்துல எல்லாத்தையும் அடக்கி வச்சுட்டு சுத்திட்டு இருந்தாரு தெரியுமா, இந்த நெருப்பு பூச்சி என்னனா , அவனாவாய் திறந்து இதுதான்னு சொல்றவரை நீ வாயத் திறந்து அம்மா அப்பா கிட்ட எதுவும் சொல்லாதனு சொல்லிருச்சு தெரியுமா."

அவனையேப் பார்த்துக் கொண்டு , " காதல்….. காதல் தான் அவரோட என்னைய சேர்த்தும் வச்சது. அதே அதீத காதல் தான் என்னைய அவர்கிட்ட இருந்து பிரிச்சும் வச்சது "

"போடி பெரிய இவ மாதிரி டயலாக் பேசாத , எனக்கு இன்னும் ஆத்திரம் போகல தான். உன்னைய இன்னும் மொத்தனும் போல இருக்கு , அண்ணியா போய்ட்ட , அதனால அண்ணன் பொண்டாட்டி மரியாதைய உனக்குத் தாரேன் ஆமா , இல்ல நீ பன்ன காரியத்துக்கு அன்னைக்கு அடிச்ச அடியெல்லாம் பத்தாது ஆமா".

பார்வதி குறுக்கிட்டு "என்னது அடிச்சியா" என்று திகைத்துப் போய் கேட்கவும்...

" பின்ன இவள அடிக்காம கொஞ்ச சொல்றியா , என்னால எல்லாம் உன்ன மாதிரி வாய் பேசாம அவகிட்ட இருக்க முடியாது. ஆனா என் கை சூப்பரா பேசும்….பார்க்கிறியா " என்றவள் அவள் அண்ணனைப் பார்த்தாள் ,அவன் தண்ணீரில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.

"பாரு , இங்க பாரு நம்ம காதல் மன்னன் ஓடி வருவார்" என்றவள்.

"ஏய் அண்ணா , உன் பொண்டாட்டி என்னை ரொம்ப டென்ஷனாக்குறா , வித் யுவர் பெர்மிஷன் இவள நான் …." என்றவள் , திவ்யாவின் முதுகில் 'நங்' என்று ஒரு அடி வைத்துவிட்டு , "இன்னொன்னு "என்று சொல்லி கையை உயர்த்தும்போதே அவள் கையைப் பிடித்திருந்தான்.

"தீபக் …." என்று கத்தவும் , ஓடி வந்தவன்…." சேமியா விளையாடத, அப்புறம் , உங்கண்ணன் ஒத்த கையிலயும் என்னைப் புரட்டி எடுத்து ருவான்" என்றவன் அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.

போகும் போது பார்வதியைப் பார்த்து கண்சிமிட்டி….திவ்யாவிடம் நாக்கைத் துருத்தி அழகு காட்டி விட்டு சென்றாள்.

பார்வதிக்கும் சிரிப்பு வரவும் , கார்த்தி ஈரத்தோடு சட்டை இல்லாது நிற்கவும் "நான் போய் குழந்தைங்களப் பார்க்கிறேன்" என்று எழுந்து சென்று விட்டாள்.

அவன் ஈரத்தோடு நிற்பதைப் பார்க்கவும் பையிலிருந்து டவலை எடுத்து அவன் உடலை துடைக்கப் போனவளிடம் அதைப் பிடுங்கிக் கொண்டவன் , தானே ஒற்றைக் கையால் துடைக்க ஆரம்பித்தான்.

அவனை ஓர் பார்வைப் பார்த்தவள் , பையிலிருந்து அவனுக்கான உடைகளை எடுத்து அருகில் வந்தாள்.

வேட்டி மட்டுமே கட்டியிருந்தவன் , அவள் உடைகளை எடுத்து வரவும் , அதையும் வெடுக்கென பிடுங்கிக் கொண்டு , 'தீபக்'என்று அழைத்தான்.

செளமியிடம் அவனுக்கான உடைகளை வாங்கி கொண்டு இருந்தவன் , கார்த்தி அழைக்கவும் அருகில் வந்தான் ."தீபக் டிரஸ் பன்ன ஹெல்ப் பன்னு" என்று சொல்லிக் கொண்டே மோட்டார் ரூமினுள் சென்றான்.

பின்னோடே வந்தவன்" டேய் டேய் … அது தான் உன் பொண்டாட்டிய ஊரறிய உலகறிய கூட்டிட்டு வந்துட்ல்ல, தங்கச்சிய ஹெல்ப் க்கு வச்ச மா, அப்படியே ரொமான்ஸ் பன்னமா, (அவனை மேலும் கீழும் பார்த்தவன்) கை சரியாக இன்னும் பத்து நாள் ஆமாடா…. இல்லனா உந்தங்கச்சி, எந்தங்கச்சி ரெண்டு பேரும் டாக்டர்ஸ்தான சீக்கிரமா குணப்படுத்தி விட்டுறுங்கனு சொல்லிரலாம்,, அப்பதான் ....."

"டேய் உளர்றத நிறுத்திட்டு இப்ப நீ எனக்கு ஹெல்ப் பன்னப் போறியா, இல்ல செந்தூர கூப்பிடட்டா ". அவனுக்கு உடை உடுத்த உதவிக் கொண்டே ,

" உண்மையச் சொன்னா உளறலா இருக்கா உனக்கு …. உன் தங்கச்சியே அவ பிரண்ட திரும்பப் பார்த்த நாள்லருந்துதான் புருஷன் என்னையவே கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு , இல்ல….நான் மட்டும் போனை ஒளிச்சு வைக்கலனா … திவி எங்கண்ணன் கிட்ட மனசு விட்டு பேசிருப்பா , அவ போகாம இருந்துருப்பா….. அவள கண்டுபிடிச்சிருக்கலாம் … அப்படியாம் இப்படியாம்னு … என்னமோ இவளால தான் போன மாதிரி புலம்பிட்டு இருப்பா … " என்றவன் கார்த்தி ஒன்றும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்து அவன் முகம் பார்த்தான்.

அவன் தீவிரமாக எதையோ யோசித்து கொண்டு இருக்கவும் , அவனை உலுக்கி " என்ன மச்சான் ஒரே சிந்தனை""அவளுக்கு அந்த போன் தொலைஞ்சதும் வேற போன் வாங்கிக் கொடுத்தேன் டா. ஆனா அதையும் இங்க வச்சிட்டு தான் போனா" என்றவன் வெளியே சென்று விட்டான்.

" என்ன இவன் இப்படி மூஞ்ச வச்சிட்டு திரியுறான்.… இவன் இப்படி இருந்தா சேமியா நமக்கு அண்ணன் பாசத்துல பாயாசம் தர மாட்டாளே...அடே கொஞ்சம் என்னையும் பாருங்க டா" என்று புலம்பிக் கொண்டே உடை மாற்றி வெளியே சென்றான்.

அங்கு அதற்குள் பாண்டியனும் தயாராய் இருக்க , பெண்கள் சாப்பிட எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர். சாப்பிட்டதும் ஆண்கள் அனைவரும் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தோப்பினுள் சென்று விட்டனர்.

பெண்கள் மூவரும் சாப்பிட்டதும் , அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பார்வதி பேசவே இல்லை என்றதும் அவள் அருகில் சென்று அமர்ந்த திவ்யா"ஏன்டி இப்படிப் பன்னுற …. நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கட்டா " என்றவள் அவள் காலைத் தொடப் போகவும் , அவள் கையை தட்டி விட்டு, "போடி … நாம ரெண்டு பேரும் குழந்தையா இருக்கும் போது இருந்தே பிரண்ட்ஸ் … ஒன்னா படிச்சி ஒன்னா வளர்ந்தோம். இன்பம் , துன்பம் நம்ம வாழ்க்கைல மாறி மாறி வந்தாலும் நாம எல்லாத்தையும் பங்கு போட்டுக்கிட்டோமே டி…. உனக்கு ஆதரவா இருக்கனும்னு தானடி நான் சென்னைல படிக்க வந்தேன். ஆனா நீ ….. " என்று அழுத வளைஆதரவாக அணைத்த செளமியும் திவ்யாவும் ,"அழாதே பாரு, நான் இப்ப உன் முன்னாடி தானே இருக்கிறேன்" என்ற திவ்யாவைப் பார்த்தவள் ,

"இந்தப் பாழாப் போன காதல் .. உனக்கும் எனக்கும் வந்துருக்கவே கூடாது. இந்தக் காதலால நானும் நீயும் பட்டது அவமானம் ,வேதனை,பிரிவு ....."

"அப்படி சொல்லாத பாரு"

" என்ன அப்படி சொல்லாத , ஒழுங்கா படிச்சமோ , வேலைக்கு போனமா, அம்மா அப்பா பாக்குற ஒருத்தன கட்டுனமானு இருந்தா எனக்கு இவ்வளவு கஷ்டம் வந்துருக்காது , நீயும் இப்படி கஷ்ட்டபட்டுருக்கமாட்ட..… என்னைய மன்னிச்சுக்கோடி, நான் உங்கண்ணன மனசில வச்சு இருந்தாலதான் , கார்த்தி அண்ணன் மனசில நீ இருக்கேனு உன்னையும் குழப்பி விட்டுட்டேன்.,… நீயும் அண்ணன விரும்புறனு நினைச்சிதான் ஒன்னும் சொல்லாம விட்டுட்டேன். உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சினை , எனக்கு தெரிஞ்சி … நீயும் அண்ணனும் இவ கல்யாணம் வரைக்கும் நல்லவிதமா தான் இருந்த போல இருந்திச்சி …. உனக்கு எதுவும் பிரச்சினை வந்தா என்கிட்ட சொல்லிருக்கலாமேடி , இப்படி வீட்ட விட்டுப் போலாமா"

"தப்புத்தான் நான் அப்படி பன்னிருக்கக் கூடாது தான் .ஆனா 'காதலை' குறை சொல்லாதடி ….அந்த காதல் தான் என்னைய இப்ப வரைக்கும் உயிரோட வச்சிருக்கு... ஏன் உன் காதல் மட்டும் என்ன சாதாரணமானதா எங்கண்ணன் காதலும் பெஸ்ட் தான் தெரியுமா"

"போடி நீ தான் மெச்சிக்கணும் உங்கண்ணன , உண்மையச் சொல்றேன் டி , தாலி கட்டிட்டாரே , மனைவிங்கிற கடமைக்கு குடும்பம் நடத்துவோம்னு , நடத்தி பிள்ளையப் பெத்துருக்கேன் எனக்கே அசிங்கமா இருக்கு தெரியுமா…"

திவ்யாவும் செளமினியும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்துக் கொண்டனர்.

"அது மட்டுமில்ல திவி , நீ போன நாள்ல இருந்து , என்னால தான் நீ போயிட்டியோனு குற்ற உணர்ச்சில நான் அவர அதுக்கப்புறம் தொட விடல" என்றவளின் கன்னத்தில் திவ்யாவின் கை வேகமாக இறங்கியது.

செளமி மட்டுமல்ல பாருவும் திகைத்துப் போய் திவ்யாவைப் பார்த்தனர்.

எப்போதும் அமைதியாக , யாரிடமுமே அன்பை மட்டுமே காட்டும் அவள் முகம் அப்படிச் சிவந்திருந்தது அவளை அடித்ததில் மூச்சு வாங்க காளி ரூபத்தில் நின்றுக் கொண்டு இருந்தாள்.

திவ்யாவின் அருகில் சென்ற செளமினி , "திவி ஏன் டி இவ்வளவு டென்ஷனாகுற,……. பாரு மட்டுமில்ல …. நானும் நானும் கூட... உன் போனை எடுத்து விளையாட்டா மறைச்சு வச்சு ….
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#2
உன்னையும் அண்ணனையும் பேசவிடாம பன்னேன் , அப்புறமும் போன் இருந்திருந்தா உன்னை எங்கே இருக்கேனு கண்டுபிடிச்சிருக்கலாமே , அப்படி இப்படினு ….. நாங்க ஹனிமூன் டிரிப் முடிச்சி வந்தப்போதான் உன்னை யக் காணோம்னு தெரியும் ,அதுக்கப்புறம் எப்படி டி நிம்மதியா குடும்பம் நடத்த முடியும் ..... படிப்ப காரணம் காட்டி அவர நெருங்கவே விடலடி , இத்தனை வருஷமும் எல்லோரும் உன்னைத் தேடிட்டே இருந்தோம். அம்மா அப்பாகிட்டலாம் நீ மும்பய்ல ஏதோ ஒரு இடத்தில வேலைல இருக்கனு சொல்லிட்டோம். ஆனா நாங்க தேடாத இடமில்லை …."

அவள் கையை உதறியவள் தன் தலையை கால்களில் கவிழ்த்து அழ ஆரம்பித்து விட்டாள்.

"ஏன்….ஏன் …. ஏன்டி இப்படி பன்னுறீங்க …. நான் எவ்வளவு பெரிய பாவம் பன்னிருக்கேன் …. நீங்க உங்க உங்க வீட்டுக்காரர் கூட நல்லபடியா குடும்பம் நடத்திட்டு இருப்பீங்கனு நான் கற்பனையிலயே என் அத்தானோட வாழ்ந்துட்டு இருந்தேன் டி.

உனக்குத் தெரியுமா , நீ அவங்க தங்கச்சி தான் , ஆனாலும் முதல்ல என் பிரண்ட் அதனால சொல்றேன். ஒரே ஒரு நாள் நான்தான்டி நான் உங்க அண்ணன்க் கூட சேர்ந்து வாழ்ந்தேன். ஆனா அந்த ஒரு நாளும் காதலோட வாழ்ந்தோம் டி.
உடல்கள் சேர்றத விடு … மனசு எப்போ உங்கண்ணன் இங்க(இதயம் தொட்டுக் காண்பித்தவள்) வந்தாரோ அப்பவே சேர்ந்து போச்சு … அப்போ உடல்சேர நான் ஊரறிய மனைவியா இருக்கனும்னு எனக்குத் தோனலை,, ஒருவேளை பெரியவங்க யாராவது எனக்கு அது தப்புனு சொல்லிக் கொடுத்துருந்தா நான் ஒத்துழைச்சுருப்பேனா எனக்கு தெரியாது.. நான் இல்ல வேண்டாம்னு ஒரு சின்ன எதிர்ப்ப வார்த்தையால இல்லாம செய்கைல காட்டிருந்தாக்கூட அவங்க என்னைய எடுத்துருந்தக்க மாட்டாங்கா ….. அத்தான் அந்தளவுக்கு என்னை விரும்புனாங்க ….

ஆனா உங்கண்ணன் ….. ( அழுது கொண்டே ) எப்படி சொல்லனே தெரியலடி ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க தெரியுமா.. இந்த செயின என் கழுத்துல அவர்தான் போட்டு விட்டார். அப்ப அத சாதரணமா தான் எடுத்துக்கிட்டேன்…….ஆனா பாரு வந்து சொன்னாப்போ தான் அவர் கையால போட்டுவிட்டது தாலிக்கு நிகரானதுனு …

ஆனா அவர் அதுலயும் பல படி உயர்ந்துட்டார் …. ஆமாடி நான் பர்ஸ்ட் இயர் படிக்கும் போதே அவர் எனக்கு தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்கிட்டார்…… நாங்க சட்டப்படி கணவன் மனைவி ….. "

அவள் அப்படி சொன்னதும் , பாருவும் செளமியும் அருகில் வந்து "என்னடி சொல்ற ….. உனக்குத் தெரியாமலா …." என்று பாரு கேட்டதும் , அவளை நிமிர்ந்து பார்த்தவள் "ம், பாட்டியோட நிலம் விஷயமா கையெழுத்துப் போடப் போனேன்ல ,அப்போ நான் கையெழுத்துப் போட்டது , எங்க கல்யாண பத்திரத்துல… அவர் மேல வச்ச நம்பிக்கைல நான் சைன் பன்னேன்னா , என் மேல வச்ச நம்பிக்கைல அவர் கையெழுத்து வாங்கியிருக்கார்.

அந்த உரிமைல தான் அவர் மனைவியா என்னை எடுத்துகிட்டார்….. ஆனா இந்த விஷயம் இப்பதான் எனக்குத் தெரியும்னாப் பார்த்துக் கோ..….

ஒருத்தர் மேல ஒருத்தர் நாங்க வச்ச அந்த நம்பிக்கைதான் எங்களை சேர்த்து வச்சது.

என் உடல் மேல இருக்கிற ஆசை ல அவரு அப்படி அவசரமா முடிவு எடுக்கல… நான் எதையும் உரிமையில்லாம எடுத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சி …. எனக்கு அவர் மனைவிங்கிற உரிமைல எல்லாம் கிடைக்கனும்னு அப்படி ஒரு காரியம் பன்னிருக்கார்.

தீபக் கண்ணாவுக்கும் இந்த விஷயம் தெரியும் டி.சாட்சிக் கையெழுத்து அவர் தானே போட்டார்.

"திவி….இந்த நெருப்பு பூச்சி எங்கிட்ட சொல்லவே இல்லடி, வரட்டும் அந்த பூச்சியப் போட்டு நசுக்கிறேன்." என்று செளமி சொன்னதும் ,

"அதுதான் டி நட்பு மனைவி கிட்டக் கூட சொல்லலப் பார்த்தியா .. ஆனா நான்… அண்ணா அவர் நட்புக்கு தந்த மரியாதைய , நான் அவரோட காதலுக்கு தரலப் பார்த்தியா" என்று அழுதாள்.

"பாரு நீ தான் அவர்கிட்ட சொல்லிருக்க நான் அந்த வேப்ப மரத்தை ரொம்ப விரும்புவேன்னு ….. அவர் எனக்காக இங்க இந்த வீட்டை கட்டியிருக்கார்டி , நான் அவரை விட்டுட்டுப் போனாலும் எனக்காக , நான் திரும்ப வந்துருவேன்ற நம்பிக்கைல தான் கட்டியிருப்பார். அவர் சாதாரண சம்பளம் வாங்குற ஆளா இருந்தாக்கூட எனக்காக அந்த இடத்தைப் பாதுகாத்து தான் வச்சிருந்திருப்பார். ஷாஜகன் 'தாஜ் மஹால் ' அவர் காதலிக்காக கட்டினார் னா, இவர் எனக்காகதான் இந்த வீட்ட கட்டியிருப்பார். "

"திவி .. அண்ணன் உனக்காக இந்த வீடு மட்டும் கட்டலடி.,… ", பாருவின் கையை இறுக்கிப் பிடித்த செளமி "ஆமாடி சென்னை ல ஹாஸ்பிடல் கூட உனக்காக கட்டுனதுதான். நான் கூட பாட்டி தாத்தா பேரை அண்ணன் இப்படி எல்லாத்துக்கும் வச்சுட்டு இருக்காரே ரொம்ப பாசம்னு நினைச்சா ….. Divya Karthi .. திவ்யா கார்த்திய DK ..DK... னு வச்சிட்டு இருந்திருக்கார்… செம 'காதல் மன்னன்' தான் போ..." என்று சிரித்தாள்.

இதைக் கேட்டு ஆச்சரியமடைந்தவள் , "அப்போ என்கிட்ட DK னா பாட்டி தாத்தா பேருனு பொய் சொன்னாரா "

"காதல்ல இதல்லாம் சகஜமப்பா " என்று சொல்லி செளமி சிரிக்கவும் ,

"நான் ஏன் இதெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னா இவர் மட்டும் காதலுக்கு மரியாதை செய்தார்னு நினைக்கிறிங்க… எங்கண்ணன்க கூட உங்களுக்கும் உங்க காதலுக்கும் மரியாதை செய்து இருக்காங்கனு தான் "

"அதெல்லாம் ஒன்னும் இல்ல" என்று பார்வதி சொல்லவும் அவள் அருகில் வந்த திவ்யா

"பாரு அன்னைக்கு எங்கப் பெரியம்மா ஏதேதோ சொன்னதக் கேட்டு முட்டாள் தனமா நான் முடியெடுத்து, மும்பய் போய் என் அம்மா கூடவிருந்த பெரியம்மாவ பார்த்துட்டு அப்படியே வேற எங்கயா து போகலாம்னு முடிவு பன்னிட்டேன்.
ஆனா அது மட்டும் காரணம் இல்ல , அத்தானுக்கு பிரியாக்கவ பாட்டி உடல் நிலைய முன்னிருத்தி கல்யாணம் பண்ணிவைக்க பேசிட்டு இருந்தாங்க , என்னை விட பிரியாக்கா எல்லா விதத்திலும் அத்தானுக்கு பொருத்தம் … நான் இங்க இருந்தா அத்தான் நிச்சியம் அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார். அவரு பெரியவங்க பேச்சை கட்டாயம் மதிச்சி கல்யாணம் பன்னிக்குவார்னு முடிவுக்கு வந்து , நம்ம 'மதர் கேத்தரின் ' கிட்ட அடிக்கடி பேசுவேன் ல அவங்க மூலமா தெரிஞ்ச இன்னொரு 'மதர் விக்டோரியா ' திருவனந்தபுரத்துல இருக்காங்க , அவங்க கிட்ட போகலாம்னு கிளம்புனேன்.

"லூசாடி நீ , பிரியாக்கா கூட வேலை பார்க்குறவங்கள லவ் பன்னியிருந்து இருக்காங்க. இப்படி பேச்சு வந்ததும் அண்ணன் தான் அத்தை மாமாவ கன்வின்ஸ் பன்னி அவங்களுக்கு உடனே கல்யாணம் பன்னி வச்சார். இப்படி நினைப்பியாடி நீ ….அண்ணன் உன்னைய போனாப்போறானு விட்டுட்டு வேற ஒருத்தர கட்டுவார்னு நினைச்சிருக்கியே … உன்னை …."

"இப்ப புரியுது அப்ப புரியலயே …அதான் இப்ப என் மேல கோபமா இருக்கார்… நீ எப்படி அப்படி நினைக்கலாம்னு"

" அண்ணன்..… கோபமா... அதுவும் உன் மேல … போடி… சரி சொல்லு நீ கொடைக்கானல்ல வேலைப் பார்த்துட்டு இருந்தப்ப உன்னைக் கூப்பிட்டு வந்தார்னு தெரியுது. நீ கைனகாலஜிஸ்ட் போர்ட் தயார் பண்ணிட்டு இருக்கார். நீ விட்ட விட்டுப் போனதும், படிச்சியா"

"ம் ஆமாம் செளமி …. முதல்ல வேலை பார்க்கலாம்னு தான் நினைச்சேன்.. அப்புறம் பெரியம்மா இறந்துட்டாங்க அப்படிங்கிற நியுஸ் கிடைச்சதும் , மும்பய் போகாம அத்தானுக்கு தெரியாம திருவனந்தபுரம் கிளம்பிட்டேன். மும்பய்லன யார்க்கும் சந்தேகம் வராதுனு மும்பய்ல இருக்கிறதா சரசு அத்தைக் கிட்ட போன் பன்னி சொன்னேன்.

எனக்கு பாட்டிகிட்ட பேசஅத்தை போனுக்கு போட்டதால அந்த நம்பர் தெரியும். அப்புறம் …. அப்புறம் எனக்கு அத்தான் நம்பர் தெரியும் வேற நம்பர் தெரியாது...

அங்க அந்த மதர் என்னைய டிரஸ்ட் ல ஆதரவற்ற பெண்கள் படிக்க வசதி செய்து தந்தாங்க …. ஆனா ஆனா என் செல்லம் ,….என் அத்தானோட காதல் பரிசு வயித்துக்குள்ள வந்ததும் …. நான் ஆதரவற்றவள் இல்லங்கிற எண்ணம் வந்துருச்சு தெரியுமா…. எனக்கு எல்லாமுமா இருந்தாங்க ….குட்டிவயித்துல வளர வளர அவ்வளவு சந்தோஷம் …. உங்க எல்லாரையும் பத்தி அவன் கிட்ட பேசிட்டே இருப்பேன். அவன் அப்பாவக் கூட … அதான் உடனே ஒட்டிகிட்டான் போல ….. பாரேன் என்னையத் தேடுறதே இல்ல" சந்தோஷமாக கண்ணீர் வடித்துக் கொண்டே சொன்னாள்.

இவளின் கண்ணீர் அவள் தோழிகளையும் தொற்றிக் கொண்டது.

அவன் பிறக்கும் போது உங்கண்ணன் ஞாபகம் ரொம்ப வந்துச்சு … அத்தானுக்கு சொல்வோமானு நினைச்சேன் …. ஆனா அவங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தானு யோசிச்சு சொல்லல .அதுக்கப்புறம் படிச்சு முடிக்கவும் மதர் விக்டோரியா கடவுள் கிட்ட போய்ட்டாங்க. அப்பவும் அவங்க அங்க என்னைப் போல வளர்ந்த ஜோயல் அண்ணா பொறுப்புல விட்டுட்டுப் போனாங்க. குட்டி பிறந்த மூனாவது மாசத்துலருந்து கொஞ்சம் வேலைக்கும் போக ஆரம்பிச்சேன்.

"திவி எனக்குத் தெரிஞ்சி அண்ணன் எப்படி இவ்வளவு நாள் கண்டுபிடிக்க முடியாம இருந்தாரு புரியலடி"

"அவங்க என்னைய திவ்யஸ்ரீ ராஜன்னு தேடியிருப்பாங்க.,… அதுவும் என்னைய மட்டும் தேடியிருப்பாங்க …. நான் திவ்யஸ்ரீ கார்த்திகேயனா இருந்தேன் அதுவும் அவர் குழந்தையோட … அப்புறம் எப்படி ….

அவர்தான் நான் படிக்கும் போது சொல்வார் ….என் உடல் தான் இங்க இருக்கு … என் உணர்வுகள் உன்னய சுத்திதான் இருக்கும்னு... நான் அந்த எண்ணத்துல தான் வாழ்ந்துட்டு இருந்தேன்"

ஆனா அவங்களும் எண்ணம் எல்லாம் என்னைய மட்டுமே வச்சிட்டு வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க ….

காதல் புனிதமானதுடி,எங்க காதல் மட்டுமில்ல உங்களோடதும் தான் , நீயே யோசிச்சுப் பாருடி " என்று பார்வதியிடம் சென்றவள் , "அன்னைக்கு சாகப்போன உன்னை ஊரே எதிர்த்து கல்யாணம் பன்னிட்டு வந்த நாள்லருந்து யோசிச்சு பார் எங்கண்ணன் அருமை உனக்கு புரியும்.

"
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#3
ஊரையே எதிர்த்து உன்னையக் கல்யாணம் பன்னதுக்கு நீ எப்படி பட்ட மனைவியா நடந்து இருக்க….. அப்படியும் அவர் உன்னைப் பொறுத்துக்கிட்டு இருக்கார்.

முன்னாடி நான் ஒன்னும் தெரியாத திவ்யா , ஆனா இப்போ உலகம் எப்படி இருக்குனு தெரியாதா … பொண்டாட்டி இரண்டு நாள் தொடவிடலன வேற பொண்ண தேடிப் போற ஆம்பிள்ளைங்க மத்தியில … என் புருஷன் மட்டுமில்லடி எங்கண்ணன்களும் கிரேட் தான் …..

உனக்கு அவர இப்படி வைக்கிறதுக்கு எது தைரியம் கொடுத்துச்சு… என் புருஷன் என்னைய காதலிச்சு கல்யாணம் பன்னினாரு அவரு என்னைத் தவிர வேற பொண்ணப் பார்க்க மாட்டாருங்கிற நம்பிக்கைதானேடி ….. அப்ப உங்க ரெண்டு பேர் லவ்வும் எதுலயும் குறைஞ்சது இல்ல ஆமா….

எனக்கு சொல்ல எந்த தகுதியும் இல்ல தான் , ஆனா நாத்தனாரா சொல்றேன் ஒழுங்கு மரியாதையா என் ரெண்டு அண்ணன்களையும் சந்தோஷமா வச்சிக்கல இனி நடக்கிறதே வேற... " இப்படியே பேசிக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை தோழிகளுக்கு , இரவும் நெருங்க ஆரம்பித்தது.

"பாரு, இவ நம்ம சாந்த சொரூபி திவ்யா இல்லடி …. சொர்ணாக்கா திவ்யா … "

"ஆமாம்டி உங்களை …." என்று அடித்து விளையாடிக் கொண்டு இருந்த தோழியர்களைப் பார்த்த நண்பர்கள் மூவரும் அசந்து தான் போனார்கள். பின்னே திவ்யா வெளியேறிய நாளிலிருந்து யாருமே இவ்வளவு சந்தோஷமாக அவர்கள் முகத்தைப் பார்த்தது இல்லையே …

தந்தையுடன் நின்றிருந்த குழந்தைகளும் தத்தம் அன்னையரை நோக்கி ஓடினர். அவர்களையும் தூக்கிக் கொண்ட தோழியர் அவர்கள் அருகில் வந்தனர்.செளமி தீபக்கிடம் "அத்தான் கிளம்புவோமா குழந்தைங்க மட்டுமில்ல எங்களுக்கும் டையர்டா இருக்கு.. வீட்ல பாயாசம் வேற செய்ய சொல்லி இருந்தேன் வாங்க போய் சாப்பிடலாம் … " என்று யாரும் அறியாமல் கண் சிமிட்டவும் , தீபக் ஒரு நிமிடம் உறைந்து தான் விட்டான்.

நண்பர்களிடம் திரும்பியவன்" டேய் வாங்கடா வாங்கடா …போலாம்." என்றவன் வேகமாக சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

கார்த்தியிடம் திரும்பிய பாண்டியன்" என்னடா இவன் , பாயாசத்துக்கு இந்தப் பற பறக்கிறான்" சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அருகில் வந்த பார்வதியும் பாண்டியனைப் பார்த்துக் கொண்டே , அருகிலிருந்த தேவாலயத்தைக் காட்டி "அத்தான் அந்த மரம் நான் வச்சதுதான் ….போய்ப் பார்த்துட்டு நாம நடந்து போகலாம் வீட்டுக்கு" என்றதும்,

கார்த்தியிடம் திரும்பிய பாண்டியன் "மச்சான் நீங்க வீட்டுக்குப் போங்க , நாங்க நடந்து வந்துர்றோம்" என்றவன் பார்வதி கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான்.

அவள் சுட்டிய இடம் ,அவர்கள் காதல் வளர்த்த இடமல்லவா … அங்கு அவனது மனைவி இத்தனை வருடங்களுக்கு அப்புறம் அழைக்கிறாள் என்றால்... அந்தக் காதலனால் நம்ப முடியவில்லை …. அவன் பிடித்த கையை அவளும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

திவ்யாவும் கார்த்தி அருகில் வந்தவள் குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு , அவனது கையிடுக்கில் தன் கையை நுழைத்துக் கொண்டு நடந்தாள்.

காரில் ஏறிய செளமி குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டு தீபக்கை காதலுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

" மை டியர் சேமியா ….இப்படிலாம் பார்க்காத டா நான் பாவம்"

"ஏன் ,என் புருஷனப் பார்க்கிறேன். இதுல பயப்பட என்ன இருக்கு அத்தான் "

காரின் வெளியே தலையை விட்டு இங்கும் அங்கும் பார்த்தான்.

" என்ன பார்க்கறீங்க அதான் வந்துட்டு இருக்காங்கள்ல "

"இல்ல இந்த தோப்புல ஏதும் பேய் இருக்கானு பார்த்தேன் … என் பொண்டாட்டி இப்படிலாம் பேச மாட்டாளே"

"ஏய் நெருப்பு பூச்சி உனக்கு பாயாசமும் கிடையாது ஒன்னும் கிடையாது போ"

"அப்பாடி ( வடிவேல் பாணியில் சொன்னவன்) நான் கூட பயந்தே போயிட்டேன் …. நீ என் பொண்டாட்டி தானோனு …. நீ என் சேமியாவே தான் , நீ ஒன்னும் தர வேண்டாம் நானே சேமியா பாயாசம் இனிக்க இனிக்க கிண்டி சாப்பிட்டுக்குவேன் "என்றவனை முகம் சிவக்க கை கொண்டு அடித்துக் கொண்டு இருந்தாள் செளமினி.

இருவரையும் பார்த்துக் கொண்டே காரில் ஏறிய திவ்யாவும் கார்த்தியும் தங்களை அறியாமல் புன்னகைத்துக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

"ப்பா, ப்பா " என்ற குழந்தையின் அழைப்பில் உணர்வுக்கு திரும்பியவர்கள் விடுவரும் வரை அமைதியாகவே வந்தனர்.

வீட்டிற்கு வந்தவர்கள் ஹாலில் சாந்தியும் சீதாவும் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அருகில் சென்றனர்.

பெரிய சோபாவில் அமர்ந்திருந்த சாந்தியின் மடியில் போய் படுத்துக் கொண்ட கார்த்தி அவரது கொண்டையிட்டு இருந்த பின்னலை பிடித்து இழுத்து தன் ஒற்றை .கைக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தான். குழந்தை காரில் வரும் போதே தூங்கி இருந்தான். தூக்கிக் கொண்டு வந்தவள் கையில் அவள் பின்னல்.

அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக பார்த்த திவ்யாவை , தலையசைத்து அருகில் அழைத்தவர் "என்னப் பார்க்கிற என் பேரன் அப்படியே அவன் அப்பா மாதிரி , இவனும் இப்படி தான் குழந்தையா இருக்கும் போது தான் இப்படினா இப்பவும் பாரு" என்று குழந்தையின் தலையை தடவிக் கொடுத்தவர் " இவன மாமா ரூம்ல அவர் கூட படுக்க வச்சிட்டு நீ போய் ரெஸ்டு எடு.

கொஞ்ச நேரம் கழிச்சு சாப்டுட்டு சீக்கிரம் படுத்து தூங்குங்க , காலையில குலதெய்வக் கோவில்ல பொங்கல் வச்சு சாமி கும்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பனும்.

"ம் சரி அத்த" என்றவள் அவன் வருகிறானா என்றுப் பார்த்துக் கொண்டே மாடியேறினாள். அவன் அசைவது போல் தெரியவில்லை.

தன் அறைக்குச் சென்றவள் உடை மாற்றலாம் என்று யோசித்தவள் …பின் குறும்பாக சிரித்துக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். அவன் வருவது போல் தெரியவில்லை என்றதும் கீழே சென்றாள். அங்கு தீபக்கும் செளமினியும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

கார்த்தியிடம் வந்தவள் "அத்தான் வாங்க நாமளும் சாப்பிடுவோம்"

அவனை மட்டும் சாப்பிடுங்க என்றால் வரமாட்டான் என்று தெரிந்தே 'நாமளும் ' என்ற வார்த்தையை இட்டாள். அது சரியாக வேலை செய்தது. வந்து அமரவும் அமைதியாக சாப்பிட்டவன் மாடிக்கு ஏறி சென்று விட்டான்.

"செளமி .. கவின் தூங்கிட்டான் இடையில எழுந்தா குடிக்க பால் எடுத்துட்டுப் போறேன். அம்மாகிட்ட விசுக்குட்டிக் கும் கொடுத்துட்டேன். நீ போய் தூங்கு … குட்னைட்"

" செளமி நான் உன் அண்ணி ., சொன்னது நியாபகம் இருக்குல்ல "

"ம் ….போடி" என்று சிரித்துக் கொண்டே சென்று விட்டாள்.

பார்வதியும் பாண்டியனும் அவர்கள் வீட்டில் தான் இருந்தார்கள். ஆம் காலம் மகனும் மருமகளும் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒருமுறை கீழே விழுந்து காலில் அடிபட்டு படுக்கையில் இருந்த பாண்டியனின் அம்மாவிற்கு உணர்த்தியது. இப்போது இணக்கமாக இருக்கிறார்கள்.

சிரித்துக்கொண்டே தங்கள் அறைக்கு வந்த செளமியை தன் கைகளில் தூக்கிக்கொண்டு படுக்கை நோக்கிப் போன தீபக்கிடமிருந்து திமிறி" இறக்கி விடு இறக்கி விடறா…" என்று இறங்க முற்பட்ட வளை , கட்டிலில் விட்டு அருகில் படுத்து ,

"சேமியா … பாயாசம தாறேன்னு சொன்னியே " என்று முகத்தருகே வந்துக் கேட்டான்.

அவன் கண்களையும் , நெருக்கத்தையும் உணர்ந்தவள்… முகம் சிவந்துக் கொண்டே , அவனை புரட்டி தள்ளி அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டு , அவன் விரல்களில் விரல் கோர்த்துக் கொண்டவள்.

"அத்தான் "
" டியர்"
"நான் பாயாசம் தரலாம்னு இருந்தேன். ஆனா காலையில கோயிலுக்கு போகனும்,,… அதனால தர முடியாதே..… நம்ம வீட்டுக்குப் போய்த்தாறேன்."

" அடிப்பாவி இப்படி ஆசை காட்டி மோசம் பன்றியே… நான் பறந்து வந்த வேகத்தப் பார்த்து பாண்டியனும் உங்கண்ணனும் என்னைய நக்கல் அடிச்சிருப்பானுக .. நான் கிண்டல் பன்னா பரவாலனு வந்தேன் பார்த்தியா"

கேட்ட செளமிக்கு சிரிப்பு வந்து விட்டது .அவள் சிரிப்பதைப் பார்த்தவன் ,, "உனக்கு என் புலம்பல் சிரிப்பா இருக்கா ,, எனக்கு பாயாசம் வேணும், ஸ்வீட்லஸ் பாயாசாமாது" என்று சொல்லிக் கொண்டே அவள் உதடுகளை தன் வசமாக்கிவிட்டான்.

மூச்சுத் திணறவுமே விட்டவன் , அவள் காதினில் "டியர் ஸ்வீட்லெஸ்னு நினைச்சா இப்படி இனிக்குதே என்ன செய்யலாம்" என்று திரும்பவும் முகம் அருகில் வரவும் … குழந்தை சினுங்க ஆரம்பித்து விட்டான்.

அவள் கண்களோடு கண் கலக்க விட்டவன் , என் மகனுக்கு கூட நான் பாயாசம் சாப்பிடுறது பிடிக்கல போல….ம் " என்றவன் சென்னை லப்போய் திகட்ட திகட்ட சாப்பிட்டுக்கிறேன். "

எழுந்தவள் "சாரி அத்தான் " என்றவள், பின் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள் "ஐ லவ் யூ நெருப்பு பூச்சி " என்று விட்டே குழந்தையிடம் சென்றாள்.

வேப்ப மரத்தில் இருந்து வந்த காற்று பால்கனியில் நின்று கொண்டு இருந்த கார்த்தியின் உடலை தழுவிச் சென்றது. சிலுசிலு காற்றில் இரவை ரசித்துக் கொண்டு இருந்த கார்த்தியின் முதுகில் மெல்ல நடந்து வந்த திவ்யா தலை சாய்ந்து , அவன் முன்புறம் கை கொண்டு இறுக அணைத்தாள்.

ஒரு நிமிடம் உடல் சிலிர்த்தவன் மறு நிமிடம் உடல் விறைக்க அசையாது நின்றிருந்தான்.

"அத்தான் ப்ளீஸ் மன்னிச்சிருங்க .. நான் செய்த தப்புக்கு என்னைய அடிக்கக் கூட செய்ங்க ….இப்படி பேசாம இருக்காதிங்க … எனக்கு எனக்கு தாங்க முடியல அத்தான் ப்ளீஸ்" என்று கண்ணீர் விட்டாள்.

அவள் கண்ணீரைத் தன் முதுகில் உணர்ந்தவன் , அவள் கைகளைப் பிரித்து எடுத்து விட்டு அமைதியாகச் சென்று படுத்துக் கொண்டான்.

ஒற்றைக் கையை கண்களின் நெற்றியின் மீது வைத்து மடக்கி கண்களை மூடிக்கொண்டான்.

கண்ணீரைத் துடைத்தவள் … "அத்தான் உங்ககிட்ட இப்படி அழுது கரைஞ்சா முடியாது போல ….செளமி சொன்னது போல அதிரடி சொர்ணாக்கவா மாறிடனும் போல …. இதோ வாறேன்"

திவ்யா கார்த்தியின் மெளன விரதத்தை எப்படிக் கலைத்தாள் அடுத்த பதிவில் நட்பூக்களே ....
 
Advertisement

New Episodes