என் இதயமே நீ தானே 22

ShanviSaran

Well-Known Member
#1
"ஆனா ஒன்னு விக்கி , ஆக்ரோஷமா , எப்பவும் ஹீரோயின்ட கோபமா காதல சொல்ற ஹீரோவக் கூட நம்பிரலாம் டா,இவன மாதிரி கோபமே படாம மென்மையான ஹீரோவாக்கும் நானுனு சொல்லிட்டு இப்படி பன்னிட்டியே கார்த்தி , உன்னைப்போல ஊமைக் கோட்டான்கள நம்பவே கூடாது சாமி .என்ன ஆனாலும் நீ செய்தது தப்புதான். ஆனா இனி என்ன செய்யறதுனு பார்க்கனும்." என்று விக்ரமிடம் ஆரம்பித்து கார்த்தியிடம் முடித்தான்.

கார்த்தி அருகில் வந்த விக்ரம் " எனிவே நடந்தது நடந்திருச்சு. நான் நாளை காலையில யே கிளம்பனும் டா. கொச்சில ஒரு மீட்டிங் .எப்போ வீட்ல சொல்லி முறையா ஊரறிய கல்யாணம் செய்றேனு சொல்லு , வந்து நிக்கிறேன். ஆல் தி பெஸ்ட் கார்த்தி "

"தேங்ஸ் டா , அதுகெல்லாம் டைம் இருக்குடா பார்ப்போம்"

அன்று இரவு பத்து மணிக்கு திவ்யா அறையில் படித்துக் கொண்டு இருந்தாள். அறைத் தோழி ஐஸ்வர்யா புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டே உறங்கி இருந்தாள்.

" உன் நெஞ்சிலே பாரம். உனக்காகவே நானும்... " திடீரென பாடல் ஒலிக்கக் கேட்டு , சத்தம் வந்த திசையைப் பார்த்தாள். மாலை அவன் அளித்த போனில் தான் பாட்டுக் கேட்டது , ஓடிப்போய் அதை எடுத்தவள், வெறும் எண்கள் மட்டுமே ஒளிர்வதைக் கண்டு யோசைனையோடு ஆன் செய்தாள்.

மறுபுறம் "ஹலோ திவி, நீ தூங்கி இருக்க மாட்டேன்னு தெரியும் , படிப்ஸ் ஆச்சே நீ, எனக்கு ஒரு டவுட் ... அனாடமில… " என்று பேச ஆரம்பித்தவள் திவ்யாவிடம் பாட சம்மந்தமாக சில சந்தேகங்களை கேட்டுக் கொண்டவள் சிலப் பொது விஷயங்களைப் பேசிவிட்டு வைத்து விட்டாள்.

அவளிடம் பேசி முடித்தவள் நேரம் பார்க்க மணிப் பத்தரை , எனவே புத்தகங்களை எடுத்து வைத்தவள் , படுக்க தயாரானாள்.

இப்பொழுது 'கிதார் ' இசையில் அந்தப் பாடல் ஒலிக்கும் சிறு சத்தம் கேட்கவும், போனை எடுத்துப் பார்த்தாள். மெசேஜ் வந்ததற்கான அறிகுறி எனவும் அதை திறந்துப் பார்த்தாள். DK என்ற பெயரில் "சாப்பிட்டியா ஏஞ்சல்" என்று கேட்க்கப்பட்டு இருக்கவும் , முகத்தில் புன்னகைப் பூக்க" சாப்பிட்டேன் அத்தான் " , எனப்பதில் அன்பினாள். "ஓகே நேரம் ஆகிருச்சு தூங்கு, குட்னைட் "

, "ஒரு நிமிஷம் "

"நீங்க சாப்டீங்களா"

"சாப்பிட்டேன்"

"DK னு பெயர் வருது , அப்படினா "

"தெய்வா காசி , பாட்டி தாத்தா பெயர் , நம்ம கம்பெனி பேரே உனக்கு தெரியாதா "

" தெரியாது அத்தான் "

"மினிக் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ ,குட்னைட் "

அவ்வளவுதான் அதன் பின் மெசேஜ் அவனிடமிருந்து இல்லை. ஆனால் மனதில் ஏதோ இதம் பரவுவதை உணர்ந்தவள் நன்கு தூங்கினாள்.

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் 'குட்மார்னிங்' மெசேஜ் செய்தவன், காலைல சாப்பிடாம நிறைய நாள் கிளாஸ் போறியாம் , இனி நான் கேட்பேன். ஒழுங்கா சாப்டுட்டு கிளாஸ் போ''

அவ்வளவு தான் மெசேஜ் , அவன் கேட்கக் கூடும் என்பதற்காகவே காலை சாப்பாடு உண்டு விட்டு கல்லூரி சென்றாள்.

மாலையில் கல்லூரி முடிந்து செளமியை வாசல் வரை விட வந்தவள், கார்த்திக் காத்து கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் செல்லப் போனாள். அவர்களோடு கூடவே வந்த ஐஸ்வர்யா , "செளமி உங்கண்ணன் செம ஸ்மார்ட் டி , ஹீரோ போல இருக்கார் ."

"ஆமா ஐஸு, என் ஸ்கூல் பிரண்ட்ஸ் கூட அப்படி தான் சொல்வாங்க"

செளமியும்' ஐஸ்வர்யாவும் , கார்த்தியைப் பற்றி பேசிக் கொண்டு இருந்ததைக் கவனித்தவள் , கார்த்தி செளமியைக் கண்டதும் காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்ததை கவனிக்க மறந்து விட்டாள். இதைக் கவனித்த செளமி " அண்ணன் காரைக் கிளப்பிட்டாங்க நான் வாறேன் பை" என்று விடை பெற்று சென்று விட்டாள்.

திவ்யாவிற்கு ஏனோ அவனிடம் நேரில் பேசாமல் இருந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் இரவில் அவன் சரியாக பத்தரைக்கு மெசேஜ் போட்டு விட்டான்.

சாப்டியா, ரெஸ்ட் எடு , நல்லா படி இப்படி. அதிலேயே மனம் குளிர்ந்த வள் நிம்மதியாக உறங்கினாள். அடுத்த நாளும் செளமியை அழைக்க தீபக்குடன் வந்திருந்தான். அவன் காரிலேயே அமர்ந்திருந்தான் , தீபக் மட்டும் வெளியே நின்றிருந்தவன்"ஹாய் பார்பி நல்லா படிக்குறியா, "கேள்வி திவ்யாவிடம் பார்வை செளமியிடம்.

"நல்லா படிக்குறேன் அண்ணா"

"நீ நல்லா படிப்பேன்னு தான் தெரியுமே.இந்தா இது என்னோடபோன் நம்பர். எப்ப என்ன வேணும்னாலும் போன் பன்னு சரியா , ஆமா எங்க உன் பிரண்டு பார்வதி , அவங்ககிட்ட ஒன்னு சொல்லனும் கொஞ்சம் வரச் சொல்லேன்"

"இதோ கூப்பிடுறேன்", என்றவள் பார்வதிக்கு அழைப்பு விடுத்தாள். இவளுக்காக உள்ளே காத்துக் கொண்டு இருந்ததால் உடனே வந்துவிட்டாள். கண்கள் காரையே பார்த்துக் கொண்டு இருந்தன. அது கறுப்பு கண்ணாடி என்பதால் இவள் பார்ப்பதைக் கவனித்த கார்த்தி , " ஏஞ்சல், தேடுறியா என்னை , உன் கண்கள் என்னைத் தேடுதுன்னு எனக்கு நல்லா புரியாதுடா இப்போ உன்னைப் பார்த்தேன் என்னால கன்ட்ரோல் பண்ண முடியாது இப்படியே உன்னைப் பார்த்துகிறேன்" என்று ஏக்க மூச்சு விட்டவன், அவர்களைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

தீபக் திவ்யாவிடம் பேசும் வரை ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டு இருந்த செளமினி, அவன் பார்வதியை அழைத்து வா என்றதும் , அவனிடம் பார்வையை செலுத்தினாள். இதைக் கண்டு கொண்ட தீபக் , பார்வதி வந்தவுடன் , "பார்வதி ஒரு நிமிஷம் " என்று சொல்லி கொஞ்சம் தள்ளி நின்றான். பார்வதியும் யோசனையோடு அருகில் சென்று , " பாருங்க தீபக்கத்தான்…."

"வெயிட் வெயிட் தீபக்அத்தானா .. "

"ஆமா செளமிக்கு அத்தான்னா எனக்கும் அத்தான் தானே, அத்தான் சொல்றது பிடிக்கலனா மச்சான்னு கூப்பிடட்டுமா" என்று கேலிப் புன்னகையோடு கேட்டாள்.

"மச்சானா, அதல்லாம் வேண்டாம் அத்தான் னே கூப்பிடு. நான் என்ன சொல்ல வந்தேன்னா, என் தங்கச்சிய நல்லாப் பார்த்துக்க வேண்டிய பொறுப்ப கார்த்தி உன்கிட்ட விட்டு ருக்கிறதா சொன்னான் அவன் சொல்லலனாலும் நீ நல்லா கவனிச்சிப்பனு தெரியும். இப்ப நான் சொல்லப் போறது என்னனா , காதல் ….. "

"என்னது "

"எம்மா தாயே முழுசா கேளு, அப்புறம் பேசு"

"ம் சொல்லுங்க"

"காதல் அப்படினா என்ன, அந்த ஃபீலிங்க்ஸ் எப்படி இருக்கும் , இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிற , என் தங்கச்சிக்கு சாமியாராப் போக ஐடியா கொடுத்த நீதான் அவளுக்கு உலகத்தில கல்யாணம் பன்னியும் சேவை செய்யலாம் அப்படிங்கிற எண்ணத்தைக் கொண்டு வர….. அதுக்காக படிப்புலடிஸ்டர்ப் பன்ன சொல்லல …. உலக வாழ்வு இப்படிதான்னு எடுத்துச் சொல்லனும் ஓகே"

"ம் என்று தலையசைத்தவள்" திரும்பி நடக்கவும் , வேகமாக" பாரு பாரு , இங்க பாரு" என்றான். அவன் அப்படிக் கூப்பிட்டது அவளுக்குக் கோபத்தைக் கிளப்ப அவன் அருகில் வந்து இடுப்பில் கை வைத்து,

"தீபக்கத்தான் , இப்படி பாரு பாருனு கிண்டல் செய்தீங்கனா , திவ்யாவுக்கு காதல் புனிதமானது கிளாஸ் எடுத்தா , செளமிக்கு காதல் ஒரு சாத்தான் , காதல்ல விழுந்திராதனு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுவேன் , பரவாலயா. ஓகேனா சொல்லுங்க.." என்று புருவம் உயர்த்தி அவனிடம் வினவினாள்.

அவள் சொன்னதில் பதறியவன்" அடப்பாவி பிரண்டு காதலவாழவைப்போம்னு வந்தா , என் காதல தொலைக்கவச்சுருவாப் போலவே " என்று புலம்பிக் கொண்டவன் , "ஐயோ அப்படி எல்லாம் பன்னிராதிங்க பார்வதி மேடம், நீங்க திவ்யாவுக்கு பாடம் எடுத்தாப் போதும் " என்றான்.

"ம் அது " என்று அவனிடம் சொல்லிவிட்டு "நாங்க வாறோம்" என்று கிளம்பி விட்டார்கள்.

தீபக் அருகில் வந்த செளமினி, "பார்வதிட்ட அப்படி என்ன தனியா பேசுனீங்க" என்றாள்.

குறும்புடன் "காதலிக்க கத்துக் கொடு"னு சொன்னேன் "என்று சொல்லி கார்த்தி அருகில் போய் அமர்ந்து கொண்டான்.

செளமினியும் அவனை முறைத்துக் கொண்டே பின்னால் ஏறிக் கொண்டாள்.

ஆனால் இதுவே தொடர்ந்து கொண்டு இருந்தது. தினமும் தவறாமல் மூன்று வேளையும் மெசேஜ் அனுப்புவதும் , கல்லூரி வாசலில் இவளைக் கண்டபின் செளமியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதும் கார்த்திக்கு வளமையாயிற்று. நேரில் பேசிக் கொள்ளவே இல்லை. போனில் பேசவும் இல்லை அவளாக அழைக்கவும் மனம் வரவில்லை.

இந்நிலையில் அந்த மாதக் கடைசியில் தீபாவளிக்காக அவளைக் கல்லூரியிலிருந்து அழைத்துப் போக சாந்தியும் கார்த்தியும் அனுமதி வாங்கி இருந்தனர். பார்வதியை அழைத்துப் போக சரசுவும் வந்திருந்தார். அவர் இவர்களிடம் "அக்கா நான் இவள இப்படியே ஊருக்கு கூட்டிட்டுப் போறேன் .தீபாவளி முடிந்ததும் கூட்டிட்டு வாறேன்" என்றவர், திவ்யாவிடம் திரும்பி" திவ்யா மா உன்னையும் அழைச்சிட்டுப் போகலாம்னுதான் நினைச்சேன் அக்கா தான் இந்த வருஷம் திவ்யா எங்க கூட இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க."

"இந்தா டா உனக்கும் சேர்த்து தான் புதுப் பாவாட தாவணி வாங்குனேன்.வருஷா வருஷம் அப்படி தானே நானும் உன் பாட்டியும் வாங்குவோம். அதான் இப்பவும் வாங்கிட்டேன். சட்டைத் தைச்சி வச்சுருக்கேன் போட்டுக்கோ."

என்றவர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கிளம்பி விட்டார்.பாட்டியின் ஞாபகங்கள் வரவும் மனம் சோர்ந்த வளை செளமியின் பேச்சு திசை திருப்பியது.

வீட்டுக்கு வந்தவளை பாட்டி, சீதா என எல்லோரது அன்பும் பாசமும் மற்றவற்றை மறக்கடித்தது.

செளமினியோ ஒரு படி மேலேயே அவளிடம் பாசத்தைக் கொட்டியவள் , அவளை தன்னறையில் தன்னுடன் தான் தங்கவேண்டும் என்று அவள் அறைக்கே அழைத்துச் சென்று விட்டாள்.

"திவி முன்னாடி நீ எப்படியோ இப்போ என்னோட பிரண்ட்,என்னோட கிளாஸ்மேட் அதனால நீ என் கூட தான் தங்கனும். இல்ல நான் வரலனு சொன்னா என் கூட பேசாத " என்று கோபித்துக் கொள்ளவும் திவ்யாவால் மேற்கொண்டு மறுக்க முடியவில்லை.

கார்த்திக்கு தன் தங்கையை நினைத்து அவ்வளவுப் பெருமிதம். விடிந்தால் தீபாவளி , வீடே ஜொலித்தது.
 

ShanviSaran

Well-Known Member
#2
திவ்யாவுக்கு இப்படி மெத்தையில் படுத்துப் பழக்கமில்லாததால் தூக்கமே வரவில்லை , புரண்டுக் கொண்டே இருந்தவள் எப்பொழுது உறங்கினாள் என்று தெரியவில்லை.

அதிகாலையில் சாந்தி வந்து இருவரையும் தட்டி எழுப்பவும் எழுந்தவள் , வெளியே இன்னும் இருட்டாக இருப்பதைப் பார்த்து விட்டு "அத்தை இவ்வளவு காலையில யே எழுந்து குளிச்சிட்டிங்களா, பாட்டிக்கூட உங்களப் போல தான் ….. "

அவள் பேசுவதை இடைமறித்தவர் " வாங்க ரெண்டு பேர்க்கும் எண்ணை வச்சு விடுறேன். குளிச்சிட்டு சாமி கும்பிட்டு புது ட்ரெஸ் போட்டுக்கலாம். "

"மா , இன்னும் கொஞ்சம் நேரம் … ப்ளீஸ் " சொல்லிக் கொண்டே போர்வையை இழுத்து மூடித் தூங்க முயன்றாள் செளமினி.

"இன்னைக்கு மட்டும் டா"

"முதல்ல திவிக்கு தேய்ச்சு விடுங்க , அப்புறம் நான் "

" இவகேட்க்க மாட்டா , வாம்மா அத்தை முதல்ல உனக்கு தேய்ச்சு விடுறேன்" என்றவர் அவள் கூந்தலைப் பிரித்து எண்ணை தேய்த்து விட ஆரம்பித்தார்.

செளமினியையும் எழுப்பி எண்ணை வைத்தவர்' சீக்கிரம் குளித்து பூஜை அறைக்கு வர சொல்லி விட்டுக் கிளம்பினார்.

முதலில் குளித்து விட்டு வந்தவள் , பால்கனிக்குச் சென்று கூந்தலை காய வைத்துக் கொண்டு இருந்தாள். வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே துவட்டிக் கொண்டு இருந்தவள் பார்வை அருகில் இருந்த மற்றொரு பால்கனி பக்கம் போகவும் முகம் சிவந்தவள் , சட்டென்று திரும்பி உள்ளே சென்று விட்டாள்.

உள்ளே சென்றவள் இதயம் வேகமாக துடிக்கவும் , வெட்கப்பட்டு, ஆம் முதன் முதலில் கார்த்தியைக் கண்டு வெட்கம் வந்ததை உணர்ந்தவள் முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள்.

மருத்துவக் கல்லூரி மாணவி தான். இந்த நான்கைந்து மாதங்களில் எத்தனையோ ஆண்களின் உடலை , ஆடையற்றுக் கூடப் பார்த்து இருக்கிறாள். அப்பொழுது எல்லாம் வராத ஒரு புது உணர்வினை , கார்த்தியின் மேலாடை இல்லாத வெற்றுத் தோள் தந்தது.

இத்தனைக்கும் கார்த்தி ஒரு ஷார்ட்ஸ் அணிந்து இருந்தான். தன் உடல் முழுவதும் எண்ணைத் தடவி , உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருந்தான். இப்படி பார்த்ததற்குத்தான் திவ்யாவிற்கு இந்த நிலை .

தன் கூந்தலை விரிய விட்டு இருந்தவள் , அந்த நுனிக் கூந்தலை எடுத்து சுருட்டி சுருட்டி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள் .

குளித்து முடித்து குளியலறைக் கதவை திறந்துக் கொண்டு வந்த செளமினி ,திவ்யாவின் செய்கையை விசித்திரமாகப் பார்த்து "திவி என்னாச்சு டி, சும்மாவே நீ ரோஸ் கலர்ல இருப்ப , இப்ப என்னடானா உன் முகம் புல்லா ரெட்டிஷ் ஆ இருக்கு , எண்ணை வச்சது ஒத்துக்காம ஜுரம் வந்துருச்சா,இப்படி முடிய வேற பிச்சுக்கிட்டு இருக்க "

அவளது குரல் கேட்டு திடுக்கிட்டவள் "ஒன்னுமில்ல செளமி முடி காய்ஞ்சுருச்சாப் பார்த்தேன்" என்றவள், "சீக்கிரம் ட்ரையர் போடு , அத்தை கீழ வரச் சொன்னாங்க." என்றவள் செளமினிக்கு உதவி செய்து தயாராகி கீழே பூஜை அறை வந்தார்கள்.

அங்கு சாமி கும்பிட்டு சாந்தி எடுத்து தந்த ஆடைகளை வாங்கிக் கொண்டு மாடி நோக்கி நடந்தாள்.
செளமி சாந்தியிடம் ஏதோ வாயாடிக் கொண்டு இருந்தாள்.

இவள் மேலே ஏறவும் , கார்த்தி கீழே இறங்கவும் சரியாக இருந்தது. வரும் போதும் ஷார்ட்ஸ் , டீ ஷர்ட் அணிந்து இருந்தான். திவ்யாவுக்குத்தான் அவன் முகம் பார்க்க முடியவில்லை. அவனைப் பார்த்ததும் திரும்பவும் முகம் சிவக்க ஆரம்பித்து விட்டது.

எனவே பார்வையை கீழே வைத்து மேலே ஏற ஆரம்பித்தாள் .அவன் தான் அவளைத் தவிர பார்வையை வேறு எங்கும் திருப்ப மாட்டானே , அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அவள் முகம் இப்படி சிவந்ததைப் பார்த்து ,

"அட , ஏஞ்சல் முகம் என்ன இப்படி சிவப்பா இருக்கு , நிச்சியம் எம் பொண்டாட்டி என்னைப் பார்த்து வெட்க்கப்பட்டு சிவக்க மாட்டா , ஒருவேளை நான் பேசி ஒரு மாசம் ஆகுதே , இதுல கோபத்துல சிவந்துருச்சோ……ம் …. மேடம் க்கு நான் பேசுனா என்ன , பேசாம இருந்தா என்ன ….. புக்குள்ளேயே மூழ்கி கிடப்பா…. அப்போ ….. "

வேகமாக படி இறங்கி வந்தவன் , "மா திவ்யா முகமெல்லாம் சிவந்து போய் இருக்கு , அவளுக்கு உடம்பு சரியில்லயா" என்று உள்ளூர பதற்றம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் யரோ ஒருவரை விசரிப்பது போல் கேட்டான்.

"அண்ணா நானும் அதான் அவட்டக் கேட்டேன் , ஒன்னும் இல்லனு சொல்லிட்டா, தொட்டுப் பார்த்தா உடம்பும் நார்மலா தான் இருக்கு. அம்மா பாட்டுக்கு எண்ணைய நல்லா தேய்ச்சு விட்டாங்க. உடம்புக்கு ஒத்துக்காமப் போயிடுச் சோனு பயந்துட்டேன்"

"அதெல்லாம் எண்ணை ஒன்னும் செய்யாது , போய் சீக்கிரமா புது ட்ரெஸ் போட்டுட்டு வாங்க" என்று சொன்னவர் , கார்த்தியை றிறுத்தி வைத்து , " கார்த்தி , காலையிலயே கிளம்பனுமா , அங்க பார்த்துக்கிறதுக்கு யாரும் இல்லையா "என்று கண் கலங்கினார்.

இவர்களை கவனித்துக் கொண்டிருந்த வேலு அருகில் வந்தவர் "சாந்தி , பிள்ளைய குழப்பாதனு எத்தனை தடவை சொல்வேன். அவன் இன்னும் நிறைய சாதிக்கனும், இப்படி அழுது அவனை கஷ்டப்படுத்தாத … "

"உங்களுக்கு தாய் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு தெரியாது எவ்வளவு வளர்ந்தாலும் என் கண்ணுக்கு அவன் குழந்தைதான்.."

"மா , இப்போ டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்திருச்சு , டெய்லி உங்கள பார்த்துகிட்டே பேசப் போறேன். மூனு வருஷம் மூனு நிமிஷமா போயிடும். உங்களை மாதிரி மினியும் டென்ஷன் ஆகக்கூடாதுன்னு தான் அவ கிட்ட ஊர்க்குப் போறத சொல்ல வேண்டாம்னு சொன்னேன் .இப்ப அவ கிட்டயும் எப்படி சொல்றதுனு யோசிக்கிறேன். ம்... என்ன செய்யலாம்"

"அது பிறகு யோசிக்கலாம் போய் புது டிரெஸ் போட்டுட்டு வா" என்று வேலு அனுப்பி வைத்தார்.

சரசு அளித்து விட்டுச் சென்ற மெரூன் நிற பாவாடை தாவணியில் தேவதை என ஜொலித்தாள் திவ்யா.செளமினியும் வட இந்திய பணியிலான காக்ரா சோளி ஆடையை தாவணிப் போல் கட்டியிருந்தாள்.

கீழே வந்தவர்கள் சாந்தி தந்த பூவைத் தலையில் சூடிக் கொண்டு , வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

புது ஆடை உடுத்தி வந்தவன் சாந்தியின் அருகில் நின்று கொண்டு இருந்தவளை ரசித்தவாரே அவரிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கியவன்.

"மா நான் போய் பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு வாறேன். எல்லாம் பேக் செய்துட்டேன்."

"அண்ணா காலேஜ் எடுத்துட்டுப் போக நல்ல பேக் (Bag ) வாங்கிட்டு வா , இப்போ பட்டாசு கொளுத்தலாம் வா"

"மினிமா ரகுவ துணைக்கு வச்சு பட்டாசு போடு , னைட் மொட்ட மாடில போடும் போது நான் வாறேன் , இப்போ வெளியப் போய்ட்டு வர லேட்டாகும்"

திவ்யாவிடம் திரும்பி"ஹாப்பி தீபாவளி திவ்யஸ்ரீ" என்று விட்டு நகர்ந்து விட்டான்.

அவள் பதிலுக்குக் கூட காத்திருக்கவில்லை. பின்னே காதலி என்ற போதே பித்துப் பிடித்து திரிந்தவன் , மனைவி என்றான பின் அவளை இப்படி அழகு பொம்மையாக பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

அவளைப் பார்க்க பார்க்க என்ன என்னவோ தோன்றும் எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வரவே கிளம்பி விட்டான்.

அவளோ "அத்தானுக்கு என் மேல கோபமோ , பேசவே மாட்டிக்கிறாங்க , என் பேர் இது தான் சொல்லும் போதெல்லாம் கூப்பிடாதவங்க இப்போ இப்படி கூப்பிட்டுப் போறாங்க" என்று உழன்றுக் கொண்டு இருந்தாள்.

வேலுவும் சாந்தியும் உறவினர்களுக்கும் , நிறுவன ஊழியர்களுக்கு எல்லாம் தீபாவளி பரிசுப் பொருள் தரக் கிளம்பி விட்டனர்.

திவ்யாவிற்கு பட்டாசுப் போடுவது எல்லாம் பழக்கமில்லை என்பதால் தோட்டத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

எல்லோரும் வீடு திரும்ப இரவாகி விட்டது. தீபக்கும் பிரியாவும் வந்து இருந்ததால் , இளையவர்கள் எல்லாம் மொட்டை மாடி சென்று பட்டாசுக் கொளுத்தலாம் என கிளம்பி விட்டனர்.

திவ்யா அனைத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.இரவு உணவை அனைவரும் மாடிக்கே வருவித்து சாப்பிட்டு சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடினர்.

கார்த்திக் அருகில் வந்த தீபக் "என்ன மச்சான் , தலை தீபாவளி சூப்பராப் போச்சு போல , தங்கச்சிக்கு என்ன கிப்ட் டா கொடுத்த " என்று கண் சிமிட்டிக் கேட்டான்.

"போடா மாப்ள வெறுப்பேத்தாத "

"டேய் நான் நிஜமா தான் சொல்றேன். நீ பார்பிக்கிட்ட ஊர்க்குப் போறதையே சொல்லலப் போல இருக்கு. உன் தங்கச்சிக்கு தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்சிருக்கும். திடீர்னு கிளம்பினா என் தங்கச்சி என்ன ரியாக்ஷன் தாராப் பாரு ,அதை வச்சு மறக்க முடியாத கிப்ட் ஒன்னு கொடுத்துட்டுப் போ , மூனு வருஷமும் உன்னைய மறக்க முடியாதபடி " என்று சொன்னவன், எல்லோரிடமும் விடை பெற்று தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவர்களை வழியனுப்பி விட்டு பாட்டி அறைக்குச் சென்றுப் பேசிக் கொண்டு இருந்தார்கள். பாட்டி சாந்தியிடம் "எம் பேரனையும் பேத்தியையும் கல்யாண கோலத்துலப் பார்க்க ஆசைப்படுறேன் . ரெண்டு பேரும் பிடி கொடுக்க மாட்டிகிறாங்க. நான் இன்னும் எவ்வளவு நாளு இருப்பேனோ தெரியல , அதுக்குள்ள என் ஐயாவ குடும்பமா பார்க்கனும், எனக்கு அது போதும் "

"அத்தைநல்ல நாள் அதுவுமா இப்படி எல்லாம் பேசாதீங்க , என்ன நடக்கனும்னு இருக்கோ அதுதான் நடக்கும். இவன் தங்கச்சி படிச்சு முடிச்சு கல்யாணம் பண்ணி தந்த பிறகுதான் குடும்பமா நிப்பேன்றான், அவளும் இன்னும் படிக்கப் போறாளாம், எல்லாம் கூடுற நேரம் வரும் பார்ப்போம், மனச குழப்பாம தூங்குங்க'' .

"அம்மா பாட்டி பிரியா அண்ணியவா சொல்றாங்க. சூப்பர் அவங்க எனக்கு அண்ணியா வந்தா ரொம்ப சந்தோஷம் "

"ஓ, அத்தானுக்கு பிரியா அக்காவ தான் கல்யாணம் பன்னப்போறாங்களா, ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க , ஜோடிப் பொருத்தமும் சூப்பர்" என்று நினைத்தவளுக்கு மகிழ்ச்சியும் , வருத்தமும் சேர்ந்த கலவையான உணர்வுகள் ஆட்க்கொண்டது.
 

ShanviSaran

Well-Known Member
#3
" சரி சரி அதெல்லாம் நடக்கும் போது பார்த்துகலாம். அண்ணன் காலையில யே கிளம்பனும் , சீக்கிரம் போய்த் தூங்குங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

தன் அறைக்குச் செல்லுமுன் செளமினி அண்ணனிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறி அவளை அனுப்பி விட்டு கார்த்தி அறைக்குள் சென்றாள்.

அங்கு இருந்த பெட்டிகளின் எண்ணிக்கையைக் கண்டு மலைத்தவள்" அண்ணா ஒரு மாசம் இருந்துட்டு வரதுக்கு இவ்வளவா "

அவளைப் பார்த்து சிரித்தவன்"தேவைப்படுது மா, நீ இன்னும் துங்கப்போகல "

"ம் எனக்கு ரொம்ப தூக்கம் வருது.காலையில நீ கிளம்பும்போது என்னால எந்திரிக்க முடியாது , அதான் இப்பவே சொல்லிட்டு , நான் சொன்ன திங்ஸ் லிஸ்ட உன்கிட்ட கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன். இந்தாண்ணா … ஹாவ் … எனக்கு தூக்கம் வருது பைண்ணா."

"மினிமா நல்லா படி, உனக்கு என்ன வேணுமோ ஒரு போன் போடு சரியா நேரத்தக்கு சாப்பிடு , உன் பிரண்டையும் பார்த்துக்கோ."

"இரு இரு இதோ போய்ட்டு ஒரு மாசத்துல வரப் போற, அதுக்கு ஏன் இவ்வளவு பேசுற "

" அம்மா அழுதுட்டே இருப்பாங்க , நீ தான் சமாளிக்கனும் , அதான்டா"

"ஓகே ஓகே டன்" என்று பெருவிரல் காட்டி விட்டு ஓடி விட்டாள் "

அவள் சென்ற சிறிது நேரத்திற்கலாம் அறைக்கு வந்த அவன் பெற்றோர் வந்து சிறிது நேரம் பேசி விட்டுச் சென்றனர்.

நன்கு தூங்கிக் கொண்டு இருந்தவளின் காதுகளில் " உறவுகள் தொடர் கதை... " பாடல் ஒலிக்க கேட்டு போனை எடுத்துப் பார்த்தாள்.'DK ' என்ற எழுத்துகள் ஒளிர்வதைக் கண்டவள் , உடனேஆன் செய்து காதில் வைத்தவள், "அத்தான் " என்றாள்.

சிறிது நேரம் சத்தமே இல்லை , மறுபடியும் "அத்தான் " என்று அழைத்தாள்.

"ஏஞ்சல் , மொட்ட மாடில உனக்காக வெயிட் பன்றேன் வா"

சொல்லிவிட்டு வைத்து விட்டான். நேரம் பார்த்தவள் மணி இரவு இரண்டு என்பதை அறிந்தவளுக்கு இந்நேரம் ஓர் இளைஞனை சந்திக்க செல்ல வேண்டுமா என்ற எண்ணமெல்லாம் இல்லை.' என் அத்தான் கூப்பிட்டு விட்டார் நான் போகிறேன்.' என்ற எண்ணம் தான். வேகமாக எழுந்தவள் அருகில் இருந்த துப்பட்டாவை எடுத்துப் போட்டுக் கொண்டு , மெதுவாக கதவை சாத்திவிட்டு மாடிக்கு ஏறி விட்டாள்.

படி முடியும் இடத்தில் கதவை திறந்து கொண்டு சுற்றிப் பார்த்தவள் , அந்த வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த மாடித் தோட்டத்தில் போடப்பட்டு இருந்த ஓர் இருக்கையில் கார்த்தி அமர்ந்திருப்பதைப் பார்த்து , அருகில் வந்து நின்றாள்.

கலைந்த தலையோடும் , கசங்கிய உடையோடும் வந்தவளைப் பார்த்தவன்" உன்னைப் பார்க்காம எப்படி இருக்கப் போறேன் தெரியலடா , ஆனா கட்டாயம் நான் போகனுமே"

" என்ன அத்தான் இந்த நேரம் இங்க கூப்பிட்டு இருக்கிங்க "

"ஏன் பயமா இருக்கா"

"நீங்க இருக்கும் போது எனக்கு ஏன் பயம் ,சொல்லுங்க அத்தான், என் கூப்பிட்டிங்க "

அவளது அந்த பதிலில் மனம் குளிர்ந்தவன்" நான் வெளிநாடு போறேன் தெரியுமா"

"ம் தெரியுமே காலையில கூட சொல்லிட்டு இருந்திங்களே .."

"ஓ … மினி சொன்னாளா , ( புன்னகைத்து கொண்டவன்) நல்லா படி, அப்படியே கொஞ்சம் டைம்க்கு சாப்பிடு சரியா. உனக்கு என்ன அவசரம்னாலும் தீபக்குக்கு போன் பன்னு , அவன் எல்லாம் பார்த்துக்குவான்." என்றவன் , தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய கிப்ட் பேப்பர் சுற்றப்பட்ட பெட்டியை தந்தவன்,

"சின்ன தீபாவளிகிப்ட் , பிடிச்சிருக்கா பாரு … வெயிட் வெயிட் இப்போதான் உன் கிட்ட காசு இருக்குல்ல, எதுனாலும் எனக்கு கிப்ட்டா தந்துரு"

மகிழ்ச்சியோடு தலையசைத்து அதனை திறந்துப் பார்த்தவள் இதய வடிவிலான பெண்கள் தலையில் மாட்டும் ஹேர் கிளிப் பார்த்து விட்டு "அத்தான் ரொம்ப அழகா இருக்கு , இப்பவே போட்டுக்கிட்டா"

"போட்டுக்கோ"

அதை எடுத்து தன் நீளப்பின்னலின் அடியில் போட்டுக் கொண்டு "தேங்ஸ் அத்தான் " என்றாள்.

"தேங்ஸ் இருக்கட்டும் , உனக்கு வேற ஏதாவது வேணுமா சொல்லு , உடம்பு ஏதும் சரியில்லயா"

"இல்லயே நல்லாதான் இருக்கேன், நீங்க தான் எனக்கு தேவைப்படும் நினைக்கிறது எல்லாம் முதல்ல யே வாங்கி தந்துருவீங்களே , ஆனா ஒன்னு கேட்கலாம்னு நினைச்சேன், கேட்கட்டுமா"

" என்னனு சொல்லு ஏஞ்சல்"(நீ கேட்டு இல்லனு எப்படி சொல்வேன்)

"அத்தான் ஊர்ல அந்த வீட்டஇடிச்சிட்டு பெரிய வீடு எதுவும் கட்டுவீங்களா"

" இருக்கலாம் , ஏன் "

"அப்படிக் கட்டும் போது வீட்டு முன்னாடி இருக்கிற வேப்ப மரத்தை மட்டும் ஒன்னும் செய்யாம கட்டுவீங்களா"

"இது தானா , ஓகே அப்படியே பன்னிரலாம், இந்த சின்னப் பாப்பா ஊஞ்சல் ஆடுன மரம் அப்படி தானே , பார்வதி சொன்னா "

"போங்கத்தான் நான் ஒன்னும் சின்னப் பாப்பா இல்ல" என்று சிணுங்கியவளின் முகம் சிவப்பதைக் கண்டவன்.

" ஏஞ்சல் இரு என்ன உன் முகம் எல்லாம் இப்படி சிவக்குது, காலையில கூட இப்படிதான், உனக்கு உடம்பு ஏதும் சரியில்லா யா"

காலை நிகழ்வை நினைத்தவள், தன் பின்னலை கையில் சுருட்டிக்கொண்டே "இல்லத்தான் அது... அது .."

" என்னனு சொல்லு ஏஞ்சல்"

"நீங்க காலைல பால்கனில எக்சர்சைஸ் பன்னிட்டு இருந்திங் கல்ல"

"ஆமா அதுக்கென்ன "

"நீங்க சட்டை இல்லாம உடம்பு முழுசும் எண்ணைத் தேய்ச்சு இருந்தீங்களா….. எனக்கு எனக்கு உங்கள அப்படிப் பார்த்ததும் வெட்கமா போயிருச்சு அத்தான் " என்று சொல்லி முடித்தவள், தன் கைகளைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

அவள் சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டு இருந்தவன் , ' வெட்கம்' வந்தது அத்தான் என்ற வார்த்தைக் கேட்டு , சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து விட்டான்.

"என் மனைவிக்கு என்னைப் பார்த்து வெட்கம் வந்துருச்சா.….. " , அவள் அருகில் சிரித்துக் கொண்டே வந்தவன் ,

"ஏஞ்சல் நீ டாக்டருக்குத்தானப் படிக்கிற "
அவன் அப்படிக் கேட்டதும் கைகளை மெல்ல விலக்கி அவன் முகம் பார்த்தவள், "ஏன் அத்தான் "

" இல்ல தினமும் எத்தனை பேரை சட்டை இல்லாம பார்த்திருப்ப , ஏன் நேக்ட் பாடி (நிர்வாண உடல் ) யாக் கூட பார்த்திருப்ப அப்பல்லாம் உனக்கு வெக்கம் , கூச்சம்' எல்லாம் வந்துச்சா "

"இல்லயே , அவங்கள எல்லாம் பார்க்கும் போது அப்படித் தோனலயே " என்று சிறு பிள்ளையாய் யோசித்தவளை ,

"ஏஞ்சல் , உன் பாட்டி உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டுப் போகும் போது என்ன செய்வாங்க"

"ம்... எனக்கு தேவையானது எல்லாம் தந்துட்டு , எனக்கு முத்தம் கொடுத்துட்டு போவாங்க அத்தான் " என்று பாட்டியின் நியாபகத்தில் மென் குரலில் கூறியவளின் அருகில் சென்றவன் , அவள் முகத்தினை தன் கரங்களில் தாங்கி , அவள் கண்களைப் பார்த்து நின்றவன் , "ஏஞ்சல் நீ தூங்கும் போது எல்லாம் உனக்கு முத்தம் தந்துருக்கேன், அது உனக்குத் தெரியாது , இப்ப நான் தர்றது உனக்குத் தெரியனும் " என்று நினைத்தவன்,
தன் காதலிக்கு , தன் மனைவிக்கு, எந்த உறுத்தலும் இல்லாமல் , அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் தந்தான்.

உடனேயே அவளை விட்டு விலகியவன்" என்னைப் பார்த்து வெட்கம் ஏன் வந்ததுனு யோசி ஏஞ்சல், உனக்கு பதில் கிடைச்சா , அந்த பதிலை பத்திரமா வச்சு நான் மூனு வருஷம் கழிச்சு திரும்பி வந்து உன்னை நேர்லப் பார்க்கும் போது சொல்லு, நான் வாறேன் ஏஞ்சல்"

என்று அவள் கன்னம் தட்டிச் சொன்னவன் , கையினை எடுக்க மனமில்லாது எடுத்தவன் மாடிப்படியில் இறங்கி சென்று விட்டான்.

அவனது இதழ் தன் நெற்றியில் அழுந்தவுமே திகைத்தவள், அவன் சொன்ன மூன்று வருடம் கழித்து நேரில் பார்ப்போம்... என்ற வார்த்தையில் ஸ்தம்பித்து விட்டாள்.

"அத்தான மூனு வருஷம் கழிச்சி தான் பார்க்க முடியுமா " , திகைத்தவள் , அவனைக் காணப் படியிறங்கி மூச்சு வாங்க ஓடினாள்.

ஆனால் அதற்குள் எழுந்து தயாராகி இருந்த வேலுவும் , சாந்தியும் அவனை விமான நிலையத்தில் விடத் தயாராய் இருந்தனர்.

மாடியில் இருந்து ப் பார்த்துக் கொண்டு இருந்தவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

கீழிருந்து கண்களால் தலையசைத்து விடை பெற்றவனுக்கு , தலையசைத்து விடை கொடுத்தவளின் கண்கள் மழையைப் பொழிந்தது' .

பாட்டியின் இறப்பின் போது தான் அனாதையாகி விட்டோம் தனக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் மூளை மரத்துப் போகச் செய்தது.
இப்போது ….. புரியவில்லை அவளுக்கு……

திவ்யாவிற்கு புரிந்ததா யோசித்தவளுக்கு விடை கிடைத்ததா … அடுத்தப் பதிவில் நட்பூக்களே...
 

MeenaTeacher

Well-Known Member
#10
Beautiful, the gestures of love , starting from the ring tone, the daily thoughtful and affectionate messages, Karthik watching her from the car without her knowledge, she turning pink on seeing him exercise, her unbreakable trust on him ( going to him even in the middle of night without giving it a thought), accepting to him innocently that he turned her pink, his lovable gift and to top it it all, the lovable kiss on the forehead and her tearful send off...Mam you have given us an awesome Episode..
 

Advertisement

New Episodes